வீட்டின் நிறங்கள்.
கோடையின் கடுமை இருந்தாலும்
மரங்கள் தங்கள் கடமையைச் செய்ய மறக்கவில்லை.
மாமரம் பூத்து முடிந்து
மாங்காய் காய்க்க ஆரம்பித்து விட்டது.
வீட்டைச் சுற்றி எல்லோருக்கும்
கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்.
யாருக்குமே ஊறுகாய் மாங்காய்
வேண்டாமாம்:)
பழுத்த பிறகு எடுத்துக் கொள்கிறோம் என்கிறார்கள்.
மாங்கோ ஜாம் மிக நன்றாக வரும்.
செய்முறை கீழே.
முற்றிய மாங்காய்,,,,,பாதி பழுக்கும் நிலையில். 6
அதன் தோல் சீவி ,
கதுப்புகளை மிக்சியில் அரைத்துக் கொண்டு
வைத்துக் கொள்ளணும்.
2, கதுப்புக் கலவையின் எடைக்கு பழுப்பு சர்க்கரை அல்லது வெள்ளை
சர்க்கரை
எடுத்துக் கொள்ளவும்.
3, பொதுவாக நான் கெமிக்கல் கலப்பதில்லை.
4,எங்கள் வீட்டு மாங்காய் அளவுக்கு
அரை கிலோ சர்க்கரை தேவைப்
படும்.
5, கொதிக்கும் வென்னீரில் மாங்காய்க் கலவையைப் போட்டு
அது வெந்ததும்,
6,தண்ணீர் இறுத்துவிட்டு சர்க்கரையைச் சேர்க்க வேண்டும்.
7,கொஞ்சம் ஏலப் பொடி, குங்குமப்பூ
சேர்த்து
8, நல்ல சூட்டில் சுருள சுருள வதக்கி
9, கடைசியாக வாசனைக்கு இரண்டு டீஸ்பூன் நெய்யும்
சேர்த்து இறக்கி விடலாம்.
போக வர எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக எடுப்பார்கள்.
அதற்காக குட்டி கிசான் பாட்டில்களில்
தனித்தனியாகச் சேர்த்து வைப்பேன்.:)
8 comments:
படங்கள் அழகு.
உங்கள் வீட்டு மாங்காய் ஜாம் செய்முறையு அருமை.
எல்லோரும் பழமாக எடுத்து கொள்ளட்டும்.
உங்களை இனிமையாக நினைத்துக் கொள்வார்கள்.
வணக்கம் சகோதரி
தங்கள் வீட்டு மாமரங்கள் படங்கள்,பழுத்து இருக்கும் மாங்காய்கள் என அனைத்துப் படங்களும் நன்றாக உள்ளது.சென்னை வீட்டிலா? மாம்பழ ஜாம் செய்யும் முறை அழகாக சொல்லியுள்ளீர்கள். நாவூறுகிறது. அதென்னமோ இப்போதெல்லாம் மாம்பழங்கள் அதிகமாக நாங்கள் சாப்பிடுவதில்லை. ஒன்றிரண்டு துண்டங்களை தவிர நிறைய எடுத்துக் கொண்டால் ஏதேனும் பிரச்சனை வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கோமதிமா,
வாழ்க வளமுடன்.
நம் வீட்டு மரத்தைப் படம் எடுத்து அனுப்பி இருக்கிறார்
அருணாச்சலம் அவர்களின் மகன் தேவா.
பதிவில் இருக்கும் மாமரம் கூகிள் உபயம்.
மஞ்சள் மலர்கள் சொரியும் மரம் போன தடவை
பூக்கவில்லை. இந்த வருடம் கண்ணுக்கும் குளிர்ச்சி,
நிழலும் இருக்கிறது.
கிணற்றில் தண்ணீர் இருக்கிறது. கடவுள் கிருபைதான்.
மாம்பழம் அவ்வளவு இனிக்காது. நார்க்காய்.
ஊறுகாய்க்கும், இது போல ஜாமுக்கும் நல்லது...
அன்பு கமலாமா,
நலமே வாழ்க.
பதிவில் உள்ள படம் கூகிள் ஆண்டவன் உபயம்.
மற்ற இருபடங்களும் வீட்டைப் பார்த்துக் கொள்பவர் அனுப்பியது.
மாங்காய் நன்றாகக் காய்த்திருக்கிறது என்று செய்தி
அனுப்பினார். வீட்டுக்கு வெளியே இருக்கும்
சிசி டிவி காமிராவில் நானும் பார்த்தேன்.
இந்த ஊர் மாம்பழம் நானும் சாப்பிடுவதில்லை. 17 வருட
சர்க்கரை அனுமதிக்காத விஷயங்களில்
பழங்களும் உண்டு.
அங்கிருக்கும் வரை ஊறுகாய் நிறையப் போடுவேன் மா.
தங்கள் சொற்கள் என்றும் வளமானவை.
பின்னூட்டம் ஊட்டம் கொடுக்கிறது. நன்றி மா.
வீட்டைப்பார்த்துக் கொள்பவர் நலமாக இருக்கிறாரா? எங்கள் அலுவலக தோழி மாங்காய் தந்தார். சென்ற மாதம் அம்மா திதிக்கும், அப்புறம் தொக்கு போடவும் உதவியது.
இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.
காலம் சென்ற அருணாச்சலத்தின் மகன் தேவா
தான் இப்போது இரவு பார்த்துக் கொள்கிறார்.
தேவாவின் அம்மா ராணி பகல் வேளையில்
முடிந்த போது கண்காணிக்கிறார்.
இந்த மாங்காயும் தொக்கு போட அமைப்பாக இருக்கும்.
நன்றி மா.
நல்ல படங்கள் அனுப்பி வைத்திருக்கார் உங்க வீட்டைப் பார்த்துக்கொள்பவர். எங்களுக்கும் இப்படி ஒரு ஆள் கிடைச்சிருந்தால் என்னும் நினைப்பும் வருது. உங்கள் ஜாம் செய்முறையும் நன்றாக இருக்கிறது. ஆனால் மாங்காய்/பழக் கதுப்புக்களை நான் நெய்யில் நன்றாக வதக்கிவிட்டுப் பின்னர் சர்க்கரை/வெல்லம்/நாட்டுச் சர்க்கரை எதானும் சேர்ப்பேன். இப்படி வெந்நீரில் வேக வைத்தது இல்லை. ஒரு முறை அதையும் பார்க்கிறேன். நன்றி.
அன்பு கீதாமா,
அந்தப் பிள்ளை ராத்திரி மட்டும் அங்கே வருகிறது.
அவனுக்கு நல்ல மொபைல் ஃபோனும்,அவன் மகனுக்குப்
படிப்புக்கு உதவியாக ஒரு ஐபாடும் மகன் வாங்கிக் கொடுத்தார்.
அவ்வப்போது படம் அனுப்புவார்.
வீட்டுக்குள் இருக்கும் நரசிம்ஹர் தான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறார்.
இந்த மாங்காய் ,பல் கொட்டும் புளிப்பு.
அதனால வேகவைத்து தண்ணீரை வடித்து விடுவேன்.
இரண்டு வாரம் வாக்கில் நன்றாக இருக்கும்.
இரண்டு மூன்று தடவை இந்த மாதிரி செய்வேன்.
உங்கள் வீட்டுக்கும் ஆள் கிடைத்திருந்தால்
நன்றாக இருந்திருக்கும்.
பகவான் என்ன எல்லாமோ செய்து நம்முடன்
விளையாடுகிறான்.
சகித்துக் கொண்டு குழந்தைகள் நலத்துக்காக
மேலே நடக்க வேண்டியதுதான்.
Post a Comment