Blog Archive

Monday, April 19, 2021

A Close Encounter of the Elephant Kind

😁😂😥😥😥😥?????

9 comments:

ஸ்ரீராம். said...

"பயங்கர" சுவாரஸ்யம்!

வல்லிசிம்ஹன் said...

😁😁😁😁😁😁😁😁ஆமாம் ஸ்ரீராம். நல்ல யானை தான்.:)

வெங்கட் நாகராஜ் said...

அதன் இடத்தில் நாம் சென்று இருக்கிறோம் என்பதை அந்த மனிதர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

காட்டுக்குள் செல்லும்போது மிகவும் கவனம் தேவை என்பதை நானும் எனது வனப் பயணங்களில் உணர்ந்திருக்கிறேன்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

பிரமாண்டமான யானையாக உள்ளது. அவர்கள் அருகில் வந்து நிதானமாக உலவும் போது எனக்குத்தான் நெஞ்சில் "திக்""திக்" உணர்வு எழுந்தது. ஆனால் அது நல்ல யானை... ஏதும் சேதம் ஏற்படுத்தாமல் ஈ, காக்கையை ஓட்டி விட்டது போன்று ஓடி விட்டது.:) ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharan said...
This comment has been removed by a blog administrator.
வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நீங்கள் சொல்வது எவ்வளவு பெரிய
உண்மை.
அவர்கள் இடத்தை நாம் ஆக்ரமித்தும்
கூச்சல் கூப்பாடு இல்லாமல்
இவ்வளவு பெரிய யானை

வந்து விட்டுப் போகிறது.
பாவம் அதுக்கு என்ன பசியோ.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் கமலாமா.,
ஆமாம் பா. எவ்வளோ பெரிய யானை. பார்த்த உடனே ஒரு
பயம் வந்தது.
பாவம் அதற்கு தன் பலம் தெரியாது.
தெரிந்திருந்தால் மனிதர்களைக்
கண்டுக்காமல் விடாது!!!

அங்கிருந்தவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள்.
மற்ற காம்ப்பில் இருப்பவர்களும்
சேர்ந்து விரட்டி இருக்கிறார்கள்.
காட்டில் நம் சாம்ராஜ்யத்தை நிறுவ முயற்ச்சித்தால்
இப்படி எல்லாம் தான் நடக்கும்.
மிக மிக நன்றி மா.

கோமதி அரசு said...

ஒற்றை யானை வருகை பயம் என்பார்கள். ஆனால் அந்த யானை தொந்திரவு செய்யாமல் போனது நல்லது. எல்லோரும் வயதானவர்களாக வேறு இருக்கிறார்கள். கூடாராத்தை மட்டும் சேதப்படுத்தி போனதே!
காரில் பின்னால் போய் துரத்தியது நல்ல திரில்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி
என்றும் வாழ்க வளமுடன் அம்மா.

ஒற்றைக் கொம்பன் என்றும் சொல்வார்கள்.
தன் குழுவிலிருந்து சண்டையிட்டுப்
பிரிந்த ஆண் யானை எல்லோரிடமும்
பகைத்துக் கொள்ளுமாம்.
இந்த யானைக்குப் பசி போலிருக்கிறது.
பாவம் தேடித் தேடிப் பார்க்கிறது.
என்ன ஒரு மென்மை அதன் துதிக்கைக்கு!!!
சட்டென்று மேலே பட்டால் நமக்குத் தான் வலிக்கும்:)
பயமாகத்தான் இருந்தது பார்க்க.!!!!!!