சென்னையில் இருக்கும் போது
இந்தக் குயில்கள் தினம் நம் மாம
ரத்தின் கிளைகளில்
ரத்தின் கிளைகளில்
வந்து உட்காரும்.
தென்னை மரங்கள் இரண்டிலும் ஊஞ்சாலாடிக் கொண்டு பேசும்
கிளிகள் கூட்டமாக வந்து போகும்.
இதோ இன்றுடன் இங்கு வந்து
ஒரு வருடப் பூர்த்தி.
இன்னும் அந்த சாலை மும்முரமும்,
பல வியாபாரிகளின் குரல்களும் எப்போதாவது விசாரிக்கும்,''அம்மா
ஈயம் பூசலியா''வும்
''ஐயா இருந்த அரிவாள் கத்தி எல்லாம் சாணை
பிடிப்பாருங்க. நீங்க அந்த அருவாமணையைக் கூடத் தீட்டறதில்லை''
என்று வருந்தும் சாணைபிடிப்பவரும்,
பழைய பேப்பர் எடுப்பவர்''அம்மா நீங்க பேப்பர்
போடறதைக் கூட நிறுத்தீட்டீங்களா''
என்று பார்த்துப் பேசிப் பழகும்
காயலான் கடைக்காரருக்கும்
என்ன பதில் சொல்வது என்று விழிப்பேன்.
அந்த விதத்தில் தனிமையே இல்லாத ஊர்
நம்ம ஊர்.
10 comments:
குயிலின் கீதம், கிளியின் குரல், எனக்கு இங்கு வந்த பின் கேட்கவில்லை, காதுகளும் ஏங்குகிறது. தினம் எல்லாவிதமான பறவைகளின் ஒலி கேட்கும் ஆலயமணியின் ஓசை கேட்கும் ஊரில்.(அய்யனார் ஆலயமணி ஓசை கேட்கும், பள்ளிவாசல் அதிகாலை பிரார்த்தனை கேட்கும், தேவலாய வசனமும் மணி யோசையும் கேட்கும் )
அவை எல்லாவற்றையும் இப்போது கேட்கமுடியவில்லை.
ஆனால் இங்கும் பறவைகளின் ஒலி கேட்கிறது. அதிகாலை இல்லை நங்கு விடிந்தபின் வருகிறது.
வெயில் அதிகமானல் வர மாட்டேன் என்கிறது.
நீங்கள் பகிர்ந்த மலரும் நினைவுகளும் காணொளிகளும் அருமை.
கிளி வளர்ப்பவர் வீட்டில் இன்னும் நிறைய பறவைகள் இருக்கு போல!
அன்பு கோமதிமா,
நம் வீட்டில் மாமரத்தில் குயில் கூவும் .எதிர்வீட்டிலிருந்து இன்னோரு குயில் பதில் கொடுக்கும்.அப்படியே உயர்ந்து. கொண்டே போகும்.! நல்ல இசைக் கச்சேரி. மைலாப்பூரிலும் பள்ளி வாசலில் ஓதுவது கேட்கும் .காலை 4 மணிக்கு. அமைதியான நேரங்களில். சாந்தோம் சர்ச் மணியோசை கேட்கும். நாம் தனியாக இல்லை என்ற உணர்வு. இருக்கும். பார்ககலாம்.
அந்தக் கிளி சுத்தி சுத்தி எல்லாம் பார்ககிறது. வாத்து, கோழி சேவல் எல்லாமே இருக்கிறது. பண்ணை வீடோ என்னவோம்மா!
வாழ்க நலமுடன் அன்பு கோமதி.
வல்லிம்மா எனக்கும் இந்த குரல்கள் எல்லாம் கேட்க ஆசையா இருக்கு .5;30க்கு mosqueபாங்கு சத்தம் 6 மணிக்கு மார்கழி கோயில் இல் வரும்பாட்டு சத்தம் சர்ச் மணி சத்தம் ,தயிர்க்காரர் கீரைக்காரர் சத்தம் ,ரெயில் சத்தம் கொக்கரக்கோ சேவல் சத்தம் அணிலும் கிலியும் மைனாவும் குயிலும் எழுப்பும் சத்தம் ,,,இப்படி தேடுகிறேன் தேடிட்டே இருக்கிறேன் நானும்
அன்பு ஏஞ்சல்
இந்த ஊரின் அமைதி என்னை சும்மா இருக்க விடுவதில்லை.:)
நடுவில் விசைக்காற்று வந்தால் அதுவும் பயமாக இருக்கும். இன்னும் கொஞ்ச நாட்களில் ஊஞ்சல் பறவைகள் மைனாக்கள் வரலாம்.
பனி நாட்களில் இவைகள் எங்கு தான் போய் விடுமோ.?
உங்க ஊரில் இருக்கும் நாட்களில்
கொஞ்சம் ஜன்னலைத் திறந்து வைக்கலாம். பஸ்வண்டிகள் ,குழந்தைகள் சத்தம் கேட்கும்.
நம் ஊரை நம்மை விட்டு எடுக்க முடியாது.!!!
மலரும் நினைவுகள். இங்கு இந்தச் சத்தங்கள் இங்கேயே இருந்து பழகும்போது தொல்லையாக நினைக்கத்தோன்றும். ஆனால் அவை இல்லாத இடத்தில் இருக்கும்போது இவை இழப்பாகத் தெரிகின்றன. எவை ஒன்றும் இழந்த பின்தான் அதிகம் உரைக்கிரது.
பேசும் படத்தில் கமலஹாசன் சரியான இரைச்சல் ஊழல் பகுதியில் வாசிப்பார். ஒரு நட்சத்திர விடுதியில் தூங்க வாய்ப்பு ஏற்படும். அங்கு அவருக்குத் தூக்கம் வராது. பழைய திட்டத்துக்கு வந்து டேப்ரெக்கார்டரில் அந்த இரைச்சல்களை டேப் செய்துகொண்டு நட்சத்திரவிடுதி அறைக்குச் சென்று போட்டுக்கொண்டு தூங்கிப்போவார்!
அருமை
உண்மைதான் ஸ்ரீராம்.
அங்கே இருக்கும் போது ,பல்லவனையும் தண்ணீர் கொண்டு வரும் லாரிகளையும்
பற்றி சொல்லிக் கொண்டே இருப்பேன்.:)
இங்கு ஒரு மாற்றம். இழப்பதைப் போற்றுவது எல்லாக் காட்சிகளுக்கும் பொருந்தும்!!
அன்பு ஸ்ரீராம்,
பேசும்படம் எனக்கும் மிகப் பிடித்த படம்.
அந்தக் குடிகாரர் எப்படித் தெளிந்துவிடுவார் இல்ல?
ஆமாம் சத்தம் சிலசமயம் ஒரு பாதுகாப்புக் கொடுக்கும்.
ஏதோ சந்தர்ப்பம் வாய்த்து சென்னை திரும்பினால்,
அதையும் ஞொய் ஞொய் என்று
புகார் கொடுப்பேன்:)))))))))
அன்பு ஜெயக்குமார்,
மிக நன்றி மா.
Post a Comment