Blog Archive

Saturday, January 02, 2021

புத்தியைத் தீட்டு

 அனைத்து நலங்களும் நம்மைச் சேரட்டும்.
நாலு சுவர்களுக்குள் எது நடந்தாலும் நமக்குள் இருக்கட்டும்
நல்லம்மா.
இந்த வீட்டைத் தாண்டி நாம் வேறு  இடம்
தேடி ஓட முடியுமா சொல்லம்மா............

வாழ்க்கையில் என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
நமக்கும் கீழே உள்ளவர் கோடி
 நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு//

காலமகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கிக் கவலைப் பட்டு என்னய்யா...
நாங்கு பக்கம் வாசல் உண்டு செல்லையா
அதில் நமக்கும் ஒரு வழி இல்லையா சொல்லைய்யா.//

எல்லாமே திரைப்படக் கவிதை வரிகள்.
எத்தனை உண்மைகள் எத்தனை ஆறுதல்கள்.

நான் கேட்டு வளர்ந்த பாடல்கள்.
வாழ்வுக்கு ஏதாவது ஆதாரம் வேண்டும் ,
கடவுள் நம்பிக்கை வேண்டும்
நல்லோர் உறவு வேண்டும்
இதமான நட்பு வேண்டும்....

அனைத்துலகமும் நலமாக இருக்க வேண்டும்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
இந்த வரிகளை நம்பும் திறன் வேண்டும்.


8 comments:

ஸ்ரீராம். said...

அர்த்தமுள்ள வரிகள்.  அழகான பாடல்கள்.  மனதை வருடும் மெட்டுகள்.

Geetha Sambasivam said...

அனைவருக்கும் பிரச்னைகளைத் தாங்கும் மனோபலம் அதிகரிக்கவும், ஆரோக்கியம் பெருகவும் பிரார்த்திப்போம். நம்மால் முடிந்தது அது ஒன்று தான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இந்த நாளும் வரும் நாட்களும் சிறக்கட்டும்.
நல்ல பாடல்கள்.
அர்த்தமுள்ளவை. உங்களுக்கும் பிடித்ததில் மிக மிக மகிழ்ச்சிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்.
அனைவரும் நலமோடு இருக்க வேண்டும். இன்று கீதா ரங்கனுடன் பேசும்போதும் அவரும் இதையே சொன்னர்.
நல்ல வேளையாக நமக்கு
நல்ல நட்புகள் அமைந்ததால் நம் வாழ்வும் ஓடுகிறது,
பிரார்த்திப்போம். நமக்கு வேற வழியில்லை.
நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவு பாடல் மனம் கவர்ந்த உண்மை வரிகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
வளமுடன் இருங்கள் அம்மா.
ஆமாம் இந்தப் பாடல் திண்டுக்கல்லில்
அடிக்கடி காதில் விழும்.
சிறு வயதில் பெற்றோர்கள் வார்த்தைகளுக்கு
எத்தனை முக்கியமோ
அத்தனை சிறப்பு கண்ணதாசன் பாடல்களுக்கும் கொடுத்துக்
கேட்டதால்
நான் கொஞ்சமாவது உரம் வாங்கிக் கொண்டேன்.
மிக நன்றி மா.

துரை செல்வராஜூ said...

மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்..
பொருள் பொதிந்த வரிகள்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
இனிய காலை வணக்கம்.
பழைய பாடல்களுக்கு இந்த நெகிழ்வு உண்டு.
மிக நன்றி மா.