Blog Archive

Thursday, January 14, 2021

கனுவும் என் தம்பிகளும்

வல்லிசிம்ஹன்
 என்றூம் மனத்தில் நின்றுவிடும்.
திருமங்கலம், நாங்கள் இருந்த காலத்தில் ஒரு அழகான கிராமம்
என்று சொல்லவும் முடியாத நகரம் என்ற நிலைக்கு மாற முயன்று
கொண்டிருந்த காலம்.
ஜாதி, மதம், இதெல்லாம் இல்லாத நிலையில்
அனைத்து நண்பர்களும் உண்டு.
அங்கிருந்த அத்தனை குடியிருப்புகளுக்கும் சென்ற நினைவு
இருக்கிறது.
அங்குவிலாஸ் புகையிலை கிடங்கை
ஒட்டி,
அவர்கள் கட்டிய நல்லதொரு வீட்டில் குடி இருந்தோம்.
அம்மா மட்டுமே எப்பொழுதும் வீட்டில் இருப்பார்.
பெரிய தம்பி அந்த வயசிலியே படிப்பே கதி.
அவனுக்காக மதுரைத் தாத்தா ஆர்டர் செய்து மதுரையிலிருந்து
வந்த மேஜையில் என்னவோ எழுதிப்
பழகிக் கொண்டிருப்பான். எட்டு வயதில் என்ன இருக்கும் எழுத
எனக்குத் தெரியாது.
அவன் மேஜையில் சரஸ்வதி அம்மா படம், ராம பட்டாபிஷேகம்
இருக்கும்.
நானும் பார்ப்பேன். முதலில் அந்த நாற்காலியில்
உட்கார்ந்ததும்
நாற்காலியைத் தொட்டுக் கும்பிடுவான். மேஜையைத் தொட்டுக்
கண்ணில் ஒத்திப்பான்.
அப்பா வாங்கித் தந்த விஞ்ஞானப் புத்தகங்கள் எளிய
ஆங்கிலத்தில் இருக்கும்.
நான் புரட்டிப் பார்த்து விட்டு, விளையாடப் போய் விடுவேன்.
நம்ம குழுப் பெண்கள் ஒரு பத்துப் பேர் இருப்போம்.
உப்புக்குச் சப்பாணியாக எதிர் வீட்டு மாதவனைச் சேர்த்துக் கொள்வோம்:)))

இவ்வளவு தோழிகளும் விளையாட மொட்டை மாடி
தாராளமாகப் போதும். ஏன் எனில் அங்கிருந்து அடுத்தடுத்த வீடுகளுக்குத் தாவுவது
எளிது.:)
இப்போது கற்பனையில் மகிழ்ந்து கொள்கிறேன்.சின்னவன் மிகச் சின்னவன். அம்மா அவனுக்கு 
அ ' நாவை எழுதப் பழக்கியது இன்னும்  நினைவில்.

பள்ளியில் நான் கையை நீட்டி அம்மை வாக்சின் 
போட்டுக் கொண்டபோது,
சின்னத் தம்பி பள்ளிக்கு அடுத்த வீட்டுக்குப்
போய் விட்டான்.

அப்படியும் விடாமல் அவர்கள் எங்கள் வீட்டுக்கே
வந்து கையில் அந்த சக்கிரங்களைப்
பதித்து,
அவனுக்கு ஒத்துக் கொள்ளாமல்
ஒரு மாதம் சிரமப் பட்டதும் ஒரு கதை.
பாவம் குழந்தை ,முகம் சுளிக்காமல் 
பொறுத்துக் கொள்வான்.



பாட்டு, படிப்பு,விளையாட்டு, கோவில்,ஆற்றங்கரை
அவ்வப்போது பழங்கா நத்த விஜயம்,
பாட்டி தாத்தா,மாமாக்கள், சென்னைப் பாட்டியும் அவளது கை முறுக்கு
சீடை என்று சென்ற காலம்.



இனிய இளமைப் பருவம்.நினைவுகளைப் போற்றுவதில்
தவறேதும் இல்லை. 
நினைக்காவிடில்  நன்றி மறந்தவர் ஆவோம்.

13 comments:

ஸ்ரீராம். said...

எவ்வளவு சுவாரஸ்யமான நினைவுகள் அம்மா...    உங்கள் பெரிய தம்பி எட்டு வயதில் இருக்கைகளை தொட்டு வணங்கி என்று தொடங்குவது ஆச்சர்யம்.  மொட்டை மாடியிலிருந்து அடுத்தடுத்த வீடுகளுக்கு தாவுவது அதைவிட சுவாரஸ்யம்.  சின்ன வாசில் பெரிய வாலாக இருந்திருப்பீர்கள் போல!  ஹா..  ஹா..  ஹா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அவனுக்கு இயல்பாகவே படிப்பில் அத்தனை ஆர்வம்.
பக்தி என்றே சொல்லலாம்.
இன்னும் அந்தக் காட்சி என் கண்ணைவிட்டு அகலவில்லை.
எங்கள் தந்தைதான் காரணம் என்று நினைக்கிறேன்.
எல்லாப் பொருட்களுக்கும் உயிர் உண்டு,
அதை மதித்தால் உன்னுடன் கூடவே வரும் என்று சொல்வார். நான் வானொலியை
அதன் குமிழ்களை வேகமாகத் திருகும் போது
கடித்து கொள்வார்.:)

ஓ ஆமாம் அப்போது வால்தான்.
அடக்கி வைக்க அம்மா முயலுவார்.
படிப்பு நிறைய ஆனதும் நானே
அடங்கி விட்டேன்.:))))

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள்...

KILLERGEE Devakottai said...

பழைய நினைவுகள் மனதுக்கு இதமாகும்.

KILLERGEE Devakottai said...

பழைய நினைவுகள் மனதுக்கு இதமாகும்.

Geetha Sambasivam said...

மதுரையில் மேலாவணி மூலவீதி, தானப்ப முதலி அக்ரஹாரம் போன்ற தெருக்களின் வீடுகளிலும் இப்படித் தாவித் தாவிச் சென்று விடலாம். அந்த நினைவுகள் எல்லாம் எனக்குள்ளும் இருக்கின்றன. திருமங்கலத்தில் உறவினர்கள் இருந்தார்கள். அக்ரஹாரத்தில் பெரிய கூடத்தில் ஊஞ்சல் போட்ட வீடு. அதில் ஆடிக் கீழே விழுந்து அடிபட்டுக் கொண்ட நினைவு இருக்கு.

Geetha Sambasivam said...

உங்கள் தம்பிகளைப் போல் எனக்கு அண்ணா, பின்னர் தம்பி! இரண்டு பேருமே கொஞ்சம் அடக்கம் தான். நான் தான் கொஞ்சம் ரௌடித்தனமோ? இஃகி,இஃகி,இஃகி!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்.
வந்து ,படித்து கருத்தும் இட்டதற்கு மிக நன்றிமா.
என்னவோ பழைய நினைவுகளில்
நல்ல சுகம் இருக்கிறது நன்மைதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
இனிய பொங்கல் திரு நாள் எல்லா வளத்தையும் கொடுக்கட்டும்.
மிக நன்றி மா.

Geetha Sambasivam said...

எங்கே என்னோட கருத்து? ஃபாலோ அப் கருத்துகள் வருகின்றன! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுவும் கணினி செய்யும் மாயமோ? :))))))

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை இனிமையான நினைவுகள். சிறு வயது நினைவுகள், படிக்க ஆனந்தம் வல்லிம்மா.

தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
தெரு வீடுகள் ஒன்றை ஒன்று ஒட்டி இருந்ததால்
கைப்பிடிச் சுவர் குள்ளமாகத் தான் இருக்கும்.

இந்தத்தாண்டல் எனக்குப் பள்ளியில்
மெடல் எல்லாம் வாங்கித் தரவில்லை.:)

நீங்களும் என்னை மாதிரி என்பதில்
படு சந்தோஷம்.
உங்கள் அண்ணா தம்பியும் சாதுவா. சரிதான்.!!!!!!
என்ன இனிமையான வருடங்கள்.

கடவுளுக்கு நன்றி. இப்போது நம்மை சேர்க்கும்
இணையத்துக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
வாழ்வுக்கு இனிமை சேர்ப்பவை நல்ல நினைவுகளே..
அவற்றைப் பதிவில் எழுதுவதே சுகமாக இருக்கிறது.
நீங்கள் வந்து படித்ததும் இன்னும் நன்மை.
நன்றி மா.