Side view of the house. |
வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.வீட்டுக்கு வெளியே வைக்கப் பட்டிருக்கும்
காமிராப்
படங்களைக் காண்பதே என் மகிழ்ச்சி.
இன்னும் அரைமணி நேரத்தில் பால் வண்டிகள்,
வேக நடை பழகுபவர்கள் , செல்லங்களை
நடைக்கு அழைத்துச் செல்பவர்கள்
என்று காலை வேளை ஆரம்பிக்கும்.. இன்று மழை இல்லை.
நல்லதுதான்.
40 ஆண்டுகளுக்கு முன் ஒரு இஞ்சினீயரிங்க் (Popular Mechanics)
சம்பந்தமான புத்தகத்தை சிங்கம் தருவித்துக் கொண்டிருந்தார்.
அதில்பிற்காலத்தில் தொலைபேசியில் பேசுபவர்களை
நேரில் பார்த்துப் பேசலாம். என்று வந்தது,.
இப்போது நாம் வீடியோ அரட்டையில் பார்த்துத்தான்
பேசுகிறோம்.
அதே போல், மானசீகமாக நாம் நினைக்கும் இடத்துக்குப்
போகும் வழியும் கிடைக்கலாம்.
நான் நம்புகிறேன்.
21 comments:
அப்படியும் நடக்க வாய்ப்புண்டு.
மனம் தினம் தினம் விரும்பிய இடத்திற்கு போகிறது அக்கா மானசீகமாய். நாம் வெகு காலம் பழகிய இடங்களுக்கு அன்போடு பழகிய, நம்மோடு வாழ்ந்த மனிதர்களை தேடி ஓடி கொண்டே இருக்கிறது . அவர்களிடம் பேசி கொண்டுதான் இருக்கிறது.
உங்கள் நம்பிக்கை உண்மைதான்.
சாய் பாடல் பிடித்த பாடல்.
ஓம் சாய்ராம்!
எந்த ஊர் போனாலும், நம் நினைவுகள் நம்ம வீட்டில்தான்..இல்லையா வல்லிம்மா? வீட்டை அடைந்தாலே அக்கடான்னு இருக்கும்.
மனம் செல்லும் வேகத்திற்கு ஈடு இணை கிடையாது...
சென்னையில் நேற்றும் மழை இல்லை. இன்றும் இல்லை. நல்ல வெய்யில்!
முன்னர் சொன்ன சில விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இப்போது நடைமுறையில் இருபப்தைப் பார்க்கும்போது அப்போது இதை எல்லாம் நினைத்துப் பார்த்திருப்போமா என்று தோன்றும்.
சாய் பாடலை ரசித்தேன்.
உங்கள் உடல்தான் சிகாகோவில். மனமெல்லாம் வீட்டில்/சென்னை வீட்டில் தான்! :(
அன்பு முனைவர் ஐயா,
வணக்கம்.
ஆமாம் அதுவும் சாத்தியப் படும்.
நன்றி ஐயா.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. தாங்கள் கூறுவது உண்மைதான். தற்சமயம் மனதின் பயணத்திற்கு உதவும் கால்கள் நினைவுகள்தான். அவை நம்மை எங்கெல்லாம் பயணிக்க ஆசைப்படுகிறோமோ அங்கே கொண்டு பத்திரமாக சேர்த்து, அதுவும் சேர்ந்து சந்தோஷபடும். இந்த நவீன விஞ்ஞான உலகத்தில் நீங்கள் நினைப்பது போல என்றேனும் ஒரு நாள் எந்த வாகன உதவியுமின்றி நேரடியாகவே பயணிக்கும் சக்தியும் வரலாம். அந்த காலத்தில் வீட்டில் லேண்ட் லைன் ஃபோன் வசதி வந்த போது, இப்படியெல்லாம் நேரடியாக உறவு, நட்புகளை பார்த்தெல்லாம் பேசுவோம் என கனவிலும் நினைக்கவில்லையே..!பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கோமதிமா,
ஸாயி ராம்.
இருக்கும் இடம், இல்லாத இடம்
என்று மனம் போய் வருகிறது.
இந்தத் தொற்று காலத்தில் நிறைய சிரமப் பட்டிருப்போம்.
இங்கே இருப்பது பாதுகாப்பு என்று பசங்க சொல்கிறார்கள்.
நானும் விவாதம் செய்ய விரும்பாமல்
அடங்கி விடுகிறேன்.
பாடல் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சிமா.
வாழ்க வளமுடன்.
அன்பு முரளிமா,
நம் வீடு நமக்கு ஒரு அடைக்கலம் கொடுத்த இடம்.
நம் நம்பிக்கைகள் வளர்ந்த இடம்.
துன்பம் அனுபவித்தாலும் அது நமக்கு ஆதாரம்.
நாங்கள் குடியிருந்த எல்லா இடங்களிலும் பெருமாளும் கூடவே
வந்து கொண்டிருந்தார்.
இப்போது அவர் அங்கே. நானும் இங்கே இருக்கிற
நரசிம்ஹருக்கு கண்டருளப் பண்ணுகிறேன்.
அன்பு தனபாலன்,
ஆமாம்.
''வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசல்" தான் நினைவுக்கு வருகிறது.
நல்லவை நடந்தேறட்டும். நன்றி மா.
அன்பு ஸ்ரீராம்.
எல்லாமே சாத்தியம் தான். எங்கோ ஒளிந்திருக்கும் ரகசியங்களைக்
கண்டு பிடிக்க வேண்டும்.
நடக்க வழி உண்டு. நன்றி மா.
அன்பு கீதாமா,
நான் இப்படி நினைப்பது கூடத் தவறாக இருக்கலாம்.
மனதை ஒட்ட வைப்பது கடினமாக
இருக்கிறது.
சுதந்திரம் இல்லையே. நன்றி மா.
பழகிய இடங்களை மறப்பது அத்தனை சுலபம் கிடையிது. ஆனால் உங்கள் குழந்தைகள் சொல்வதுதான் சரி. பெரிய வீட்டில் நீங்கள் தனியாக இருப்பது அத்தனை உசிதம் கிடையாது.
வணக்கம் சகோதரி
பதிவு அருமை. இதற்கு முன் இந்தப்பதிவுக்கு ஒரு கருத்து போட்டிருந்தேன். அது பயணம் செய்யும் போதே ஏதோ ஒரு பறவை தூக்கிச் சென்று விட்டது. ஹா.ஹா.ஹா..அதில் என்ன குறிப்பிட்டேன் என மறந்து விட்டது. இந்த விஞ்ஞான யுகத்தில் நீங்கள் சொல்வது போல் எல்லாமே நடக்கலாம். படங்கள் அனைத்தும் அருமை. இந்த பகிர்வுந்தான். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
நினைவுகள் எப்போதுமே இனிமைதான் வல்லிம்மா. இப்போது வீடியோ மூலம் பார்க்கக் கிடைப்பது வரப்பிரசாதம் தான். பல வருடங்களுக்கு முன் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத டெக்னாலஜி இப்போது.
நீங்கள் உங்கள் வீட்டினை காமேரா மூலம் பார்ப்பது சந்தோஷம் தரும் விஷயம்.
துளசிதரன்
அம்மா இப்போ வெர்ச்சுவலா நாம் நினைக்கும் இடத்துக்கும் கூடப் போக முடியும் அந்த டெக்னாலஜியும் வந்துகொண்டே இருக்கிறது. அல்லது வந்துவிட்டதோ? பார்க்க வேண்டும்.
கேமரா மூலம் இப்ப உங்கள் வீட்டினை பார்ப்பது எத்தனை பெரிய விஷயம் இல்லையா அம்மா.
சாயி பாடலை மிகவும் ரசித்தேன் அம்மா...கண்ணை மூடிக் கொண்டு கேட்டேன். மிக்க நன்றி அம்மா
கீதா
பதிவு அருமை. தாங்கள் கூறுவது உண்மைதான். தற்சமயம் மனதின் பயணத்திற்கு உதவும் கால்கள் நினைவுகள்தான். அவை நம்மை எங்கெல்லாம் பயணிக்க ஆசைப்படுகிறோமோ//////////ஆமாம் அன்பு கமலாமா.
கண்டிப்பாக நடக்கும். மனதின் கால்கள் நினைவுகள்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எத்தனை அருமையான வாக்கு.
சிலசமயங்களில் ஏன் இப்படி நாமும் சலனப்பட்டு ,மற்றவர்களையும் நினைக்க வைக்கிறோமோ
என்று தோன்றும்.
கையாலாகாத்தனம் பதிவிடச் சொல்கிறது என்று
நினைக்கிறேன்.
இப்போது இருக்கும் இடத்தை நோகவில்லை.
எத்தனையோ பாதுகாப்பு இந்த இடத்தில். அன்பும் பண்பும்
மிக்க மகளும் மாப்பிள்ளையும்.
அன்பு மிக்க தோழமை.!! உங்களைப் போல்.
இரண்டு தடவை வந்திருக்கிறது உங்கள் பின்னூட்டங்கள்.
நன்றி மா.
உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.
மிகவும் பிடித்து இருக்கிறது சில சமயங்கள் கமெண்ட் கொடுப்பது போவதில்லை ஏதும் தவறுகள் செய்து இருப்பேன் ஈமெயிலில் வருவதை சரிவர பதில் எழுதுவதில் ஏதோ தவறுகள் செய்கிறேன் என்று தோன்றுகிறது அன்புடன்
அருமை அன்புடன்
Post a Comment