Blog Archive

Friday, October 30, 2020

பிரிவோம் சந்திப்போம் இசைப் படம்


பிரிவோம் சந்திப்போம் படம் என்னை
மிகவும் கவர்ந்தது. காரணம் அதன் அடிப்படை

உறுத்தாத அன்பான குடும்பப் பின்னணி.பாடல்கள்
அனைத்தும் மிக ரசித்தவை.
நடிப்பும் இயல்பு.
சினேகாவின் உழைப்பு பளிச்சிடும்.

அருமையான இனிமையான குரல்கள்.

8 comments:

கோமதி அரசு said...

எனக்கும் பிடித்த படம்.

பெரிய குடும்பத்தில் எப்போதும் கல கல என்று சத்தம் இருக்கும் வீட்டிலிருந்து வந்து அமைதியான திருவெண்காடு ஊர் என்னை பயபடுத்தியது ஆரம்பத்தில். 7 மணிக்கு ஊர் அடங்கிவிடும்.

இந்த பட கதாநாயகி போல்தான் இருந்தேன், பறவைகளின் சத்தம் சுவற்றுக் கோழி சத்தம், செடி, கொடிகளுடன் என்று பேசிக் கொண்டு இருந்தேன்.
அப்புறம் பள்ளிப்படிப்பு அந்த ஊர் மக்களுடன் நட்பு அந்த ஊரை விட்டு வர மனமில்லை.

மாயவரத்தை விட்டு மதுரை வந்த புதிதில் இப்படித்தான் இருந்தது இப்போது பழகி விட்டது.

நீங்கள் பகிர்ந்த காட்சிகள் எல்லாம் அருமை. நகரத்தார் சமூகம் திருமண சடங்குகள் அழகாய் காட்டி இருப்பார்கள்.

ஸ்ரீராம். said...

நான் இந்தப் படமும் பார்த்ததில்லை.  பாடல்களும் கேட்டதில்லை.  பாடல்கள் இப்போதுதான் கேட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
இனிய காலை வணக்கம்.
நான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லி விட்டீர்கள்.
திருமணமாகி,
அந்தப் பெரிய வீட்டில் அத்தனை குடும்பத்தினரும் இருந்தது அவ்வளவு மகிழ்ச்சியாக
இருந்தது.
புதுக்கோட்டை வந்ததும் எல்லோருக்கும் கடிதங்கள்
அனுப்பிக் கொண்டே இருந்தேன்.

இவருக்கு அவ்வளவு நெருக்கம் வேண்டாம்.
இறுதி நாட்களில் அக்காக்களுடன் அத்தனை
நேரம் செலவழித்து மகிழ்ந்தார்.

என்னதான் மனதில் தோன்றியதோ.!!!
அதுவும் இந்தப் படத்தில் தான் எத்தனை படிப்பினை மா.
மிகவும் ரசித்துப் பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்று.
மிக மிக நன்றி மா,.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இனிய காலை வணக்கம்.

பாடல்கள் இசை வித்யாசாகர்.
கேட்டீர்களா பிடித்ததா ஒன்றும் சொல்லவில்லையே,.
நேரம் இருக்கும் போது கேளுங்கள்.:)

ஸ்ரீராம். said...

இப்போதுதான் கேட்கிறேன், கேட்டேன்.  நன்றாய் இருந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

இருமுறை பார்த்துள்ளேன் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். நன்றி ராஜா.
அபூர்வமாகத்தான் இது போல நல்ல படங்களைப்
பார்க்க முடிகிறது.
பாசிடிவ்!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,

என்ன ஒரு அழகான படம். இப்படி ஒரு திரைக்கதை
அமைத்து அழகாகப் படம் வடித்தவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

அலுக்காத வசனம். நானும் முடிந்த போது பார்த்து விடுவேன்.
நன்றி மா.