வல்லிசிம்ஹன்
நவராத்திரி ஆரம்பித்து மூன்று நாட்களும் கடந்து விட்டன.
முந்தின வருடம் பண்டிகை இல்லை.
இந்த வருடமும் குறைக்க வேண்டாம் என்று மகள்
அரங்கேற்றிய தெய்வ வடிவங்கள்.
தீம் கொலு எல்லாம் வைப்பதில்லை. வித விதமாக எல்லோரும் ஏற்பாடு செய்வது வியக்க வைக்கிறது.
உண்மையில் மனம் நிறைய பாராட்டத் தோன்றுகிறது.
சின்ன வயதில் சோப்பு வைத்து விளையாடி
புளி ரசம் செய்தது போல இப்பொழுது கொலு வைக்க
முடியாது.
ஆனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்ட நிலையிலும்
அனைவரும் ஆர்வமாகச் செயல் படுவது நன்மையே.
இதில் நட்புகள் நேருக்கு நேர் காணவில்லை என்றாலும்
ZOOM, GOOGLE MEET, MICROSOFT MEET என்று
கொண்டாடுகிறார்கள்.
சிலர் இல்லங்களில் யாரோ ஒருவர் நஷ்டப்பட்டதனால்
அவர்களால் கொண்டாட முடியாத இந்த நாட்களில்
செய்யப் பட்ட சுண்டல், மற்றும் பலகாரங்களை அவர்கள் வீட்டு வாசலில்
வைத்து விடுகிறோம்.
கண்ணாடி வழியே கை காட்டிவிட்டு வந்து விடுகிறோம்.
இந்த ஊரில் தொற்று அதிகரித்திருப்பதை உணரும் பொழுது
இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
தேர்தல் அமர்க்களம் காதைத் துளைக்கிறது.
மனம் அவதி படாமல் இருக்க இணையமே துணை
என்று ஆகும் நிலை.
கடவுளர் தரிசனம், நட்புகள் பதிவுகள்,
வாட்சாப் பகிர்வுகள்
என்று நல்லதை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து மாறி வரும் கால நிலை, தலை நோவு அதிகரிக்கக் காரணமாகிறது.
கதவைத் திற காற்று வரும் என்பதெல்லாம் நடக்காது.
குளிர், இல்லாவிடில் கிருமி என்ற பயம்
அனைவரையும் உள்ளே விரட்டுகிறது.
எல்லாம் மாறட்டும்.
எதோ ஒரு படத்தில் சரண்யா சொல்வது ''ஆடி போயி ஆவணி வந்தா எல்லாம் டாப் ஆகும் ''என்று எதிர்பார்ப்போம்.:)
அனைவரும் நலமுடன் இருக்க என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
🔅🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
10 comments:
வணக்கம் சகோதரி
நீங்கள் கூறுவது போல் இப்போதுதான் நவராத்திரி ஆரம்பித்தது போல் இருந்தது. ஆனால், நாட்கள் நிமிடமாய் பறக்கிறது. உங்கள் வீட்டுக் கொலுவும் மிக அழகாய் உள்ளது. இந்த வருடம் தொற்றினால், வந்த /வருகின்ற எல்லா விஷேடங்களும்,எல்லோர் வீட்டிலும் இயல்பாக கொண்டாட முடியாமல், விடவும் முடியாமல் ஏதோ சென்று கொண்டிருக்கிறது. நீங்களும் பத்திரமாக இருங்கள். அனைவரும் நலமாக இருக்க நானும் பிரார்த்தித்துக் கொண்டேயிருக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கமலாமா,
வணக்கம். இந்த நாள் இனிய நாளாக ஆகட்டும்.
நீங்கள் சொல்வது போல நாட்களும், வாரங்களும் நகர்கின்றன.
திரும்பிப் பார்ப்பதற்குள் தீபாவளி வந்து விடும்.
காலம் யாருக்காகக் காத்திருக்கும்?
நாமும் அதனுடன் உருள வேண்டிய கட்டாயத்தில்
இருக்கிறோம்.
எல்லா நாட்களும் கவலை இல்லாமல், நோயில்லாமல்
கடக்க வேண்டும். நல் வாழ்த்துகள் அம்மா.
நலமுடன் இறைவன் நம்மை வைத்திருப்பான்.
எல்லாம் நலமாகும் என்று நம்புவோம் அம்மா.
//தேர்தல் அமர்க்களம் காதைத் துளைக்கிறது.//
அங்கேயுமா? வர வரத் தமிழ்நாட்டை விட மோசமாப் போயிடும் போலே!
உங்க பெண் வைச்சிருக்கும் கொலு நன்றாக இருக்கிறது. இந்த வருஷம் பண்டிகை இல்லைனாலும் நவராத்திரியைக் குறைக்க வேண்டாம்னு தான் சுந்தரகாண்டம் படிச்சுட்டு வீட்டுக்கு வருபவர்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்கலாம்னு பண்ணிட்டு இருக்கேன். நல்லபடி நிறைவேறணும்.
இங்கும், வருகின்ற மூன்று மாதம், மேலும் கவனமாக இருக்க வேண்டும் அம்மா...
உண்மையே அன்பு தேவகோட்டைஜி,
நம்பிக்கைதான் நம்க்கு நல் வழிகாட்டும். பத்திரமாக இருங்கள்.
அதியேன் கேட்கிறீர்கள் அன்பு கீதாமா. இன்னும் 14 நாட்கள்
இருக்குஇறது,.
இந்த மட வாத்து அலறு அலறு என்று அலறி அனைவரையும் இழி செய்கிறது.
என்ன ஆகப் போகிறதுன்னு தெரியவில்லை.
நீங்கள் சுந்தரகாண்டம் படிப்பது மிக மகிழ்ச்சி.
நானும் சென்னையில் இந்த ஒன்பது நாட்கள்
விளக்கு பூஜையும் ,சுந்தர காண்டமும்
படிப்பேன்.
மன நிறைவைக் கொடுக்கும் ராம நாமம்.
அனைவரும் நோய் நொடி இல்லாமல்
நலமாக இருக்க வேண்டும்.
அன்பு தனபாலன். உண்மைதான் ராஜா.
மிகக் கவனம் தேவை.
நீங்களும் நலமாக இருக்க வேண்டும்.
குடும்பத்துக்கு என் அன்பு.
மகள் வைத்து இருக்கும் கொலு அழகு. நம் மன ஆறுதலுக்கு கொலு உதவுகிறது.
பேரன்கள், பேத்தி வந்து பாடினார்கள் காணொளியில்.
இந்த காலத்தில் வசதியாவது இருக்கே ! குழந்தைகளை பார்க்க என்று மனம் இறைவனுக்கு நன்றி சொல்கிறது.
வரும் நாட்களை மூன்று தேவியரும் நலமாக வைத்து இருக்க வேண்டும்.
கவனமாக இருக்க வேண்டிய நாட்கள் தான் மா. நல்லதாகவே நடக்க வேண்டும்.
Post a Comment