வல்லிசிம்ஹன்எத்தனை பாசம் இந்த அன்னப் பறவைகளுக்கு!!
எத்தனை பொறுமை.
தண்ணீரில் இறங்க மறுக்கும் அந்தக் கடைசிக்
குஞ்சுவுக்கு தான் பயம்.
பொறுமையாக அதற்குக் குரல் கொடுத்துக் கொண்டே
வரும் அம்மா அப்பா இருவருக்கும் அவ்வளவு சர்வ நிச்சயமாகத்
தெரியும் அந்தக் குட்டி எப்படியும் நீந்தும் என்று.
கம்பீரமாக சுற்றி வருகின்றன.
இந்த அன்னங்களை நான் லண்டனில் பார்த்திருக்கிறேன்.
நெல்லுக்குள்ளே உண்வையும்,
நெருப்பினில் ஒளியையும் வைத்த இறையை
நம்பும் பறவைகள். நமக்கும் அவனே துணை,
14 comments:
பாசப்பறவைகள்.
கடைசி வரை நன்றாக வந்தது வீடியோ. இம்மாதிரி அன்னங்களை இங்கே ஹூஸ்டனிலும் பார்த்திருக்கேன். குட்டிக் குஞ்சுலு வீட்டுப் பக்கம் இருக்கிற சின்னக் குளக்கரைக்குப் போய் இவற்றுக்கு உணவு கொடுத்துவிட்டு வரும். அதுக்கு ரொம்பப் பிடித்த விளையாட்டு இது. விஷமம் தாங்கலைனா டக் பாண்டுக்குக் கூட்டிப் போக மாட்டேன்னு சொன்னா சரியாயிடும்.
அந்தச் சின்னக் குஞ்சு ரொம்பவே பயப்படுகிறது. ஆனாலும் பெற்றோர் அதை விட்டு விட்டுப் போகாமல் காத்திருந்து அழைத்துச் செல்கின்றன. பொறுப்பு மிகுந்த பெற்றோர்.
மிகவும் அழகு... ரசித்தேன்...
அழகான காணொளி
பறவைகள் தாய் தந்தையுடன் கூடவே நீந்துவது அழகு , ஒரு குஞ்சு மட்டும் எப்போது இறங்கும் என்று ஆவலாக பார்க்க வைத்த காணொளி.
அன்பு ஸ்ரீராம்,
பாசமும் பொறுப்பும் நிறைந்த பெற்றோர்.
அன்பு கீதாமா,
அத்தனை சமத்து குட்டி குஞ்சுலு.
அதற்கு இந்த மாதிரி ரசனை இருக்கிறதே அழகு.
அப்பா அன்னமும் அம்மா அன்னமும்
எத்தனை அழகாக நடந்துக்கறதுமா.
பார்க்கப் பார்க்க அதிசயம்.
பேசாத குறைதான்.
அதற்காக அந்தக் கடைசி
குட்டியை இழுத்துத் தண்ணீரில்
போடவில்லை.
அதுதானாக வரும் வரை பொறுமை காட்டுகின்றன.
மனிதர்கள் கற்க வேண்டிய பாடம்.
அன்பு தனபாலன் ,
இனிய காலை வணக்கம்.
வளமுடன் வாழ்க.
அன்பு கோமதி மா. அந்தக் குட்டிதான் எப்படி தயங்குகிறது!!!!
பொறுமையாக அதன் வழியே போக விட்டு,
அது தாவி குதித்ததும்
அப்படியே நீந்த ஆரம்பிக்கின்றனர் தந்தையும் தாயும்.
எவ்வளவு பாடம் இவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டும்!!!!!. நன்றி மா..
வணக்கம் சகோதரி
மிகவும் அழகான காணொளி. அன்னப்பறவைகளின் அன்பு, பாசத்தை நானும் கண்டு களித்தேன். எவ்வளவு பெற்ற பாசம், பொறுப்பு மிகுந்த கடமையுணர்ச்சி.. இந்த பறவைகளுக்கு..பார்க்கப் பார்க்க வியப்பூட்டுகிறது.மிகவும் நன்றாக காணொளி யினை எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். மனிதர்கள் இவைகளிடமிருந்து. பாசத்தையும், அன்பையும் தகுந்த முறையில் கற்றுக் கொள்ள வேண்டும். பகிர்வுக்கு ரொம்ப நன்றி சகோதரி. நடுவில் கொஞ்ச நாட்கள் தங்கள் பதிவுகளுக்கு வராததற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். ஏதேதோ கால நேரமின்மைகள். இனி நானும் தொடர்கிறேன். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு கமலாமா, இதென்ன வரமுடியாத்தற்கு வருந்திக் கொண்டு! இந்த நோய்த்தொற்றுக் காலங்களில் நாம் சாதாரணமாகவே இயங்குவது சிரமமாக இருக்கிறது. முடிந்த போது நண்பர்களின் வலைப்பூவைப் பார்ககிறோம் .வருந்தாதீர்கள் மா.
நானும் அதிக வேலைகளுக்கு ஏற்ப என் பின்னூட்டங்களை இடுகிறேன்.
நிறைய எழுத முடியாததால் கிடப்பில் போட்ட பதிவுகளே அதிகம். காணொளிகள் இடுவது சுலபமாக இருக்கிறது. இந்தக் காணொளியும் நான் எடுத்தது இல்லைமா. எனக்கு யூ டியூபில் வரும் இணைப்புகள் தான்.
இவற்றை வலையேற்றுவது சுலபமாக இருக்கிறது. அதே போலப் பாடல்களும். மிக மிக நன்றி தங்கள் அன்புக்கு. நாம்தான் எங்கள் பளாக் எனும்
அருமையான குழுவில் கட்டுண்டு இருக்கிறோமே. அதறகே கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.இந்த நாள் நல்ல நாளாகட்டும்.
இறைவனின் படைப்பே விந்தைதான்!
துளசிதரன்
வல்லிம்மா ஹையோ பார்த்து ரசித்து முடியலை. அம்மாவும் அப்பாவும் குழந்தைகளை எப்படி அழகா கூட்டிப் போகின்றன. அதிலும் ஒன்று மட்டும் கொஞ்சம் ஸ்லோவா தண்ணில இறங்கத் தயங்கினாலும் அம்மாவும் அப்பாவும் என்ன நம்பிக்கையுடன் நடை போடுது அதோடு. அதுவும் பாத்தீங்களா குதிக்காம கரை தண்ணீரில் இறங்கும் இடம் ஸ்லைடிங்க் வந்ததும் மெதுவாக அதில் இறங்கி ஸ்லைட் ஆகுது!
நம்மிலும் கூடக் நீச்சல் கற்க நினைக்கும் குழந்தைகள் சிலர் ஒரே பாய்ச்சலில் பாய்ந்துவிடும் சிலர் படிக்கட்டு வழியாக மெதுவா இறங்கி தண்ணில கால் வைத்து கொஞ்சம் கொஞ்சமா இறங்கி தண்ணி இடுப்பளவு வந்ததும் நீஞ்ச முயற்சி எடுப்பாங்க அது போல!!!!
ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன் மா...ஹையோ அது எப்ப இறங்கும் எப்படி இறங்கப்போகுதுன்னு பார்த்து அதோட டெக்னிக் பார்த்து வியந்து போய் ரசித்தேன்...
மகனுக்கும் எங்கள் குடும்ப இயற்கை/செல்லங்கள் ஆர்வலருக்கும் அனுப்பணும்...
கீதா
மிக்க நன்றி அம்மா காணொளிக்கு!! இயற்கை நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிறது
கீதா
Post a Comment