பிடித்த பாடல்களையும்,
எனக்கும் சிங்கத்துக்கும் பிடித்த பாடல்களையும் பகிர்ந்து வருகிறேன்.
அவருக்கு மிகவும் பிடித்த பாடகர் ,இந்திப் படங்களின்
பாடல்களின் அரசர் (அவரைப் பொறுத்தவரை}
கிஷோர் குமார் தான்.
கணக்கில்லா இசைத்தட்டுகள். பயணம் போகும்போகும் போது கேட்க வண்டியில்
கேட்க காசெட்கள்.
எங்கள் வண்டியின் கதவையும் திறந்து,
அந்த ரேடியோ திருடியவர் யாரோ:(
பிறகு தொலைக்காட்சி சானல்களில் கேட்டு மகிழ்ந்தார்.
மகன் வாங்கிக் கொடுத்த த்ரீ இன் ஒன்
எங்கள் இசைத்தாகத் தணித்தது.
அவருக்குப் பிடித்த எத்தனையோ பாடல்களில்
சிலவற்றைப் பதிகிறேன்.
8 comments:
ஆஹா... எனக்கும் மிகவும் பிடித்த பாடகர் கிஷோர். சமீபத்தில் எங்கள் குடும்பக் குழுமத்தில் ஏ கியா ஹுவா பாடலை ஒருவர் பாட, நான் அதே படத்தில் வரும் குச் தோ லோக் கஹேங்கே பாடல் பிடிக்கும் என்று எழுத, அப்புறமான உரையாடல்களில் நான் அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை பாடி அனுப்ப, அவர் முழுப்பாடலையே பாடி எனக்கு அனுப்பினார்!
அன்பு ஸ்ரீராம்,
அன்பு சகோதரி கமலா கிட்ட சூன்னேன். எங்கள் ப்ளாக் இருப்பது
மனதுக்கு இதம் என்று.
நம் நட்பு எப்பொழுதும் நிலைத்திருக்கணும்.
கிஷோர் குரல் தனிதான். வெர்சடைல்.
குச் தோ லோக் கஹேங்கே
மிக மிகப் பிடித்த பாடல்.
உங்கள் குடும்பமும் அவ்வாறே அமைந்தது நன்மை.
பிடித்தது என்றால் ஆயிரம் பாடல்கள்
பதிவு செய்ய வேண்டும் ராஜா:)
பாடல்கள் அருமை :)
பாடல்கள் மிக பிடித்த பாடல்கள்
கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.
வணக்கம் சகோதரி
பழைய ஹிந்தி திரைப்பட பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. கேட்டு ரசித்தேன்.முன்பெல்லாம் இந்த மாதிரி பழைய ஹிந்தி பாடல்களை கேட்டு ரசித்திருக்கிறேன். அன்றைய காலங்களை தங்கள் பதிவு நினைவூட்டியது. அதன் பினனர் வந்த சூழ்நிலைகளில் தமிழ் பாடல்கள் கேட்பதை அரிதாகி விட்டது. அதற்கான நேரங்களும் குறைந்து விட்டது. இன்றைய பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பு தேனம்மா,
நல் வரவு. பாடல்கள் பிடித்ததா:)
அன்பு கோமதிமா. எல்லாம் 50 வருடங்களுக்கு முற்பட்டவை.
நமக்குப் பிடித்திருப்பதில் அதிசயமே இல்லை.
நன்றி மா.
அன்பு சகோதரி கமலாமா,
நான் இசையைக் கேட்டே என் சங்கடங்களை மறக்கப்
பழகினேன்.
நாட்களைக் கடக்கும் படகாக திரைப் பாடல்கள் உதவின மா.
இப்போது அதிகமாக கேட்கிறேன்.
உங்களுக்கும் இவை பிடித்ததில் எனக்கு
இன்னும் மகிழ்ச்சி. நன்றி மா.
Post a Comment