Blog Archive

Saturday, July 25, 2020

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

Pal Bhar Mein Yeh Kya Ho - Swami 1977 Songs - Shabana Azmi - Vikram - La... வல்லிசிம்ஹன்

மழைப் பாடலாக எங்கள் ப்ளாக் ஸ்ரீராம்
பஹேலி படப் பாடல் லிங்க் கொடுத்ததும்
சரசரவென்று மழைப் பாடல்கள் மனதில் பூத்தன.
அதில் ஒன்றுதான் ஸ்வாமி படத்தில்
ஷபானா ஆஸ்மி பாடும் இந்தப் பாடல்.

மிக உயர்ந்த கதையும் நடிப்பும் கொண்டது.
விருப்பம் இல்லாத திருமணத்தில் 
தன்னை உட்படுத்திக்கொள்ளும் பெண்
கணவனின் மகிமையைப் புரிந்து கொள்கிறாள்.
அதற்குள் நடக்கும் நிகழ்வுகள் மிக இதமான சங்கீதம்.
கிரிஷ் கர்னாடின் தேர்ந்த கௌரவம்.
ஷபானாவின் மூடி மறைக்கத் தெரியாத
உள்ளடங்கிய சினம்.
அவரது புக்ககத்தாரின் புரிதல் எல்லாமே
புதுமையாகவும் அற்புதமாகவும் இருக்கும்.
நான் மிக ரசித்த படம்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/jKMc4xogQ9k" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

இந்தப் பாடலின் வரிகளுமிசையும்
மிக அருமை.
என் சுவாசக் காற்றே படம் வெற்றியோ தெரியாது.
ஆனால் இந்தப் பாடல் வெற்றி பெற்றது.
ஸ்ரீராம் குறிப்பிட்டிருந்த பாடல்.
ஒரு விகல்பம் இல்லாத மழைப் பாட்டு.
இத்தனை சினேகமான காதலர்களை
நான் இதுவரை பார்த்ததில்லை.
இசை அமைத்த ரவீந்த்ரஜெயின் என்றும் மனதில் இருக்கிறார்.
இந்த பாரதிராஜாவின் படம் நான் மிக ரசித்தேன்.
பேசத்தெரியாத ரியா சென்னுக்குக் குரல் கொடுத்தது யாரோ.

மனோஜ் நடிப்பும், ரேவதியின் கலங்கிய முகமும், மணிவண்ணனின்
வில்லத்தனமும் தெலுங்குப் பின்னணியில்
படைக்கப் பட்ட கதையும்
வைரமுத்துவின் கவிதையும்,
ரஹ்மான் அவர்களின் இசையும் மிகச் சிறப்பு.


17 comments:

ஸ்ரீராம். said...

கொடுத்திருக்கும் பாடல்கள் அத்தனையும் சிறப்பு.  ஸ்வாமி பாடலில் லதாவின் குரல் அப்படியே இழையும்.   இதை நான் முதலில் கேட்டது ஒரு மலையாள படத்தில்!  

தஞ்சாவூரில் ஒரு காப்பிக்கடை உண்டு.  காசு போட்டால் பாடும்.  அதில் சிலர் ஹிந்திப் பாடல்களும் போட்டுக் கேட்பார்கள்.  டீ குடிக்க, வடை சாப்பிட வருபவர்கள் 25 காசு போட்டு அவர்கள் விருப்பப் பாடலை ஒலிக்க விடலாம்.  அப்போது கேட்டேன்.  அப்புறம் விவித்பாரதியில் ஹிந்திப் பாடலும் கேட்டேன்.


அரவிந்தசாமியின் மழைப் பாடலில் மழைக்கு கருப்புக்குடை கருப்புக்கொடியாக காட்டமாட்டோம் என்கிற வரி ரசிக்க வைக்கும்!

சோனா கரே ஜில்மில் ஜில்மில் பாடல் அடிக்கடி நான் கேட்கும் பாடல்.  படம் பார்த்ததில்லை.  அந்த அகியோங்கோ ஜரோகோன் சே பாடல் என் செல்லிலேயே இருந்தது!  இப்போதுதான் இல்லை!

ஸ்ரீராம். said...

ஸ்வாமி படத்தில் நான் மிக விரும்பிக் கேட்கும் இன்னொரு பாடல் கே ஜெ யேசுதாஸ் பாடும் கா  கரூன் சஜ்னி...

Geetha Sambasivam said...

ஸ்வாமி எனக்கும் பிடித்த படம். நாவலில் மனைவி கணவனை விட்டுப் பிரிந்து விடுவாள். ஆனால் திரைப்படத்தில் கணவனைப் புரிந்து கொண்டு ரயில் நிலையம் வரை போனவள் திரும்பிக் கணவனோடு வாழ வருவாள். அந்தப் பேச்சு வார்த்தை ரொம்பப் பிடிக்கும். ஹேமமாலினியின் அம்மா ஜெயா சக்கரவர்த்தி எடுத்த படம்னு நினைவு. எத்தனை முறை பார்த்திருப்பேன்னு சொல்ல முடியாது. பாடல்களும் பிடித்தமானவையே. கொடுத்திருக்கும் பாடல்கள் எல்லாமே கேட்டிருக்கேன், தமிழ்ப்படப் பாடலைத் தவிர்த்து. பாரதிராஜாவின் இந்தப் படம் வந்தது தெரியும். பார்த்தது இல்லை.

Geetha Sambasivam said...

நல்ல ரசனையான பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நான்கு பாடல்களுமே இனிமையான பாடல்கள்.

இரண்டாவது பாடல் காணொளிக்கு பதிலாக அதன் Code மட்டும் பதிவில் வந்திருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பாடல்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

தமிழ்ப்பாட்டு வரவே இல்லையே. ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் பாட்டு கேட்டிருக்கிறேன் அந்தப் படம் வெற்றியடையவில்லை.

ஹிந்திப்பாடல்கள் ரசித்தேன் அம்மா இப்பத்தான் கேட்கிறேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சின்ன சின்ன மழைதுளிகள் பாட்டும் பிடிக்கும். நல்ல ரிதமிக் பாடல்

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
இணையத்தடை இருந்ததால்
உடனே வர முடியவில்லை.
நீங்கள் சொல்லி இருக்கும் அத்தனையும் நம் சிந்தனைகளையும்
பிரதிபலிக்கிறது.
நீங்கள் தஞ்சாவூரிலியே, ஜூக் பாக்ஸ் கேட்டது அதிசயமாக இருக்கிறது.
இசை எப்படி எல்லாம் நம்மை இழுக்கிறது பார்த்தீர்களா.
ஸ்வாமி மிக நல்ல படம். அத்தனை இயற்கையாகப்
படம் எடுப்பது ,இப்போது முடியுமா தெரியவில்லை.

கா கரூன் சஜினி;;;;;;;; ஆயேனா Bபாலமு.
சிலர் அப்போது திரு.யேசுதாசின் இந்தி உச்சரிப்பை
கொஞ்சம் மறுத்ததும் நினைவில்.
ஆனால் அவர் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டதுதான் நிஜம்.

கோமதி அரசு said...

பாடல்கள் தேர்வு அருமை.
கேட்டு மகிழ்ந்தேன்.
முதல் பாடலில் பசுமையும், நீரோடையும்,ஷபானா ஆஸ்மியும் அழகு.

வல்லிசிம்ஹன் said...

சோனா கரே ஜில்மில்
மிக அழகான பாடல் ஸ்ரீராம். துளி கூட
முகம் சுளிக்க இடம் இல்லை.
நன்றி மா.

கோமதி அரசு said...

இரண்டாவது பாட்டும் அருமை.
வானவில் கண்டு கோபத்தை மறந்து மகிழ்ச்சியாக பேசுவது அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நான் புத்தகம் படித்ததில்லைமா.
படம் பார்த்ததும் மனதில் ஒன்றிவிட்டது.
இதே வகையில் மேலும் சில படங்கள் வந்தாலும் இந்தப் படம் போல ஈர்க்கவில்லை.

எல்லாமே இயற்கையாக நடக்கும்.
இந்தக் கால படங்களைப் போல படபடவென்று காட்சிகள் மாறாமல்,
வங்காள நடையில் சீராகச் செல்லும்.
கிரிஷ் கர்னாடின் நடிப்பில் கௌரவம் மிளிரும்.

புத்தகத்தில் நாயகி பிரிந்து விடுவாளா.?
அது இயற்கையாக இருந்திருக்கும்.
அந்த முடிவை மாற்றி எடுத்ததற்கு இயக்குனரின்
துணிவைப் பாராட்ட வேண்டும்.
மிக நன்றி கீதாமா. நல்ல பாடல்களை நீங்கள்
ரசிப்பதுதான் இன்னும் மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் ,
அந்தப் பாட்டை இப்போது இணைத்து விட்டேன்.
இணையம் வந்து வந்து போகிறது.
இங்கே இது போல நடந்ததில்லை.
ஏதோ மெயிண்டினென்ஸ் வேலை
நடக்கிறது என்று சொன்னார்கள்.
பொதுவாக ஆட்குறைப்பு , ஆட்கள் வராமல் போவது எல்லாமே நடக்கிறது.
பார்க்கலாம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் மிக நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாரங்கன் மா. இப்போது இணைக்க முடிந்தது.
இரண்டு தமிழ்ப் பாடல்களும்
மிக இனிமை.

காதுகளுக்கு எது ருசியோ அதைக் கேட்க வேண்டும். நம் அனிருத் வரதராஜன் போல:)

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நீங்கள் தந்துள்ள மழைப் பாடல்கள் அனைத்தும் அருமை. ஹிந்தி பாடல்களை கேட்டதில்லை. இப்போது கேட்டு ரசித்தேன். தமிழ் பாடல்கள் இரண்டும் அடிக்கடி கேட்டுள்ளேன். இப்போதும் அதையும் கேட்டு ரசித்தேன். கருத்தில் சகோதரி கீதா சாம்பசிவம் சொன்ன படக்கதை மாதிரியேதான் மோகன், ரேவதி நடித்த மெளன ராகம் கதையும் வருமில்லையா? அத்தனை பாடல்களும் பனதுக்கு குளிர்ச்சி... பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.