Blog Archive

Thursday, July 16, 2020

ஒவ்வொரு நாள் ஒரு ஆசை, ஒரு நினைவு.

வல்லிசிம்ஹன்
இன்று நிலவரங்களைப் படிக்கும் போது

 இந்த கிருமித் தொற்றுக்கு  பணம் படைத்தவர்கள்
இல்லாதவர்கள் யாரும்
விலக்கு இல்லை  என்று தோன்றுகிறது.

இறைவன் அனைவருக்கும் நலம் அளிக்க வேண்டும்.

ஆடி மாதப் பிறப்பு 
சமயபுரம் அம்மா நம்மைக் காப்பாள்.

10 comments:

ஸ்ரீராம். said...

மூன்றுமே மிக இனிமையான பாடல்கள்.  முதல் பாடலின் சாயலில் இன்னும் இரண்டு பாடல்கள் சொல்கிறேன்.  காட்சி அமைப்பில் சரஸ் படத்தில் கல் கி ஹஸி முலாகாத் கேலியே, சங்கர்லால் படத்தில் இளங்கிளியே இன்னும் விளங்கலியே, அப்புறம் இதே பாடலின் தமிழ் வடிவம் ராஜா திரைப் படப்பாடல்.

காட்சி அமைப்பில் என்னை மிகக்கவர்ந்த பாடல்களில் ஒன்று பிளாக்மெயில் பாடல்.  கிஷோர் குரலுக்கு குறைவா என்ன?  அதுவும்தான்.

எஸ் டி பர்மன் இசையில் ஒரு மெலடி தேரி பிந்தியாரே....   

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
உண்மைதான். ஒரு பாடலைத் தொற்றி இன்னோரு பாடல்
தோன்றும்.
நீங்கள் சொன்ன படப் பாடல்களையும்
பார்க்கிறேன்.
ராஜா படம் கோவையில் பார்த்தோம்.
சிவாஜி ஜெயலலிதா:)
ப்ளாக் மெயில் படப் பாடல் சிங்கத்துக்கு
மிக மிக மிகப் பிடிக்கும்.

அமிதாப் பச்சன் உடல் நலம் பெறட்டும்.
நல்ல மனிதர். எல்லாவற்றுக்கும் விடிவு உண்டு.
நீங்கள் வந்து ரசித்துக் கேட்பதே எனக்கு மகிழ்வு.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

மூன்று பாடல்களுமே இனிமையான பாடல்கள். மீண்டும் கேட்டு ரசித்தேன் மா.

KILLERGEE Devakottai said...

நல்ல பாடல்கள் அம்மா.
கொரோனாவுக்கு ஜாதி, மதம் தெரியாது உலகை காப்பது இறைவன் கையில்...

Geetha Sambasivam said...

எல்லாமுமே இனிமையான பாடல்கள். அதிலும் தேரி பிந்தியாரே! மிக மிக அருமையான பாடல். நல்ல தேர்வு.

கோமதி அரசு said...

பாடல் கேட்டு மகிழ்ந்தேன் அக்கா.
அமிதாப் பச்சன் உடல் நலம் அடைவார் விரைவில், அவர் மன தைரியமாய் இருப்பதாக செய்திகள் சொல்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்பா.
மிக நன்றி ராஜா. மனம் அலை பாயாமல் இருக்க
இசை துணை வருகிறது மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
ஆமாம் அதற்குப் பாகுபாடு தெரியாததே ஒரு
அதிசயம் தான்.
எப்பொழுதும் இறைவன் காப்பான்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இனிய காலை வணக்கம்.
1973 இல் இந்தப் படம் வந்து அதன் பிறகு
அவர்கள் திருமணமும் நடந்தபோது நாங்கள்
திருச்சியில் இருந்தோம்.
மிக மிக இனிமையான படம். இனிமையான
பாடல். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
ஆமாம் அவர் நலம் பெறட்டும்.
எத்தனையோ செய்திகள்
காதில் விழுகிறது.
இது பிரபலமானவர்களைப் பற்றியது.
உயிர் எல்லாம் சமம்தானே.
அனைவரும் நலம் பெறட்டும். நன்றி மா.