Blog Archive

Wednesday, July 01, 2020

எல்லோரும் வாழ வேண்டும்.

வல்லிசிம்ஹன்

இந்த டீக்கடையில பாட்டு  ஒண்ணு போட்டாத்தான்
வந்த சனமும் போயிரும்மின்னு
இன்னோர்  கடை போட்டேனே.

அந்தக் கடையில
ஆலாப் பறந்தாலும்.. ஏன்
 இன்னும் ஒரு ஈ கூட வரலியே:)
இன்னும் ஒரு ஈ கூட இங்கே வரலியே!

இது என் சொந்த வரிகள் தான். மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை.!!!!!

பேயத்தேவரின் கதை கள்ளிக்காட்டு
இதிகாசம் என்னையும் எழுதவைக்கிறது.
வைரம் பாய்ந்த வரிகள்.
பாராட்டாமல் இருக்க முடியுமா!!
சந்தடி சாக்கில் நம்ம பதிவுக்கும் விளம்பரம்.:)))))

உன்னை நம்பி நெத்தியிலே பாட்டின் மெட்டு
போட்டுக் கொள்ளலாம்:)


15 comments:

நெல்லைத் தமிழன் said...

என்ன அருமையான பாடலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். மனசுல பாடல் வரிகள் ஓடுது.

அப்போல்லாம் சிவகுமாரைப் பத்திச் சொல்வாங்க. வருஷத்துக்கு 2 படமாவது சில்வர் ஜுபிலி கொடுப்பார். ஆனா எந்த 2 படம்னு அவருக்கும் தெரியாது, அவரை வச்சுப் படம் எடுக்கறவங்களுக்கும் தெரியாதுன்னு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
சிவகுமார் படப் பாடல்கள் எல்லாமே
அனேகமாக நன்றாக இருக்கும்.
நன்றாகவும் நடிப்பார். சுமித்ராவும் நல்ல நடிகை.
சிட்டுக்குருவி ஒரு மாறுபட்ட படமாக அப்போது தெரிந்தது.

சுசீலாவின் இந்தப் பாட்டு மனதை
அழ வைத்துவிடும்.
எத்தனை வேண்டுகோல் இந்த வரிகளில்.
அருமை சிறப்பு என்று அடுக்கிக் கொண்டே
போகலாம். நன்றிமா.
நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுக்கப் பார்க்கிறேன்.
அடி இதயத்திலிருந்து வர வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

இந்த டீக்கடைல பாட்டு போட்டா
வந்த சனமும் போயிரும்மின்னு
இன்னோரு கடை போட்டேனே.

அந்தக் கடையில
ஆலாப் பறந்தாலும்.. ஏன்
இன்னும் ஒரு ஈ கூட வரலியே:)

இது என் சொந்த வரிகள் தான். மண்டபத்தில் யாரும் எழுதித்தரவில்லை.!!!!!//

ஹை அம்மா நீங்க சூப்பரா எழுதியிருக்கீங்களே! நான் ஏதோ சினிமா பாடல்னு நினைச்சேன் முதல்ல...அம்மா கலக்கறீங்க.

இந்தப் பாட்டு செம பாட்டு வல்லிம்மா

இதே ராகத்துல உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வெச்ச பிள்ளை..பாட்டையும் இதோடு லிங்க் செய்துவிடலாம்

உங்கள் வரிகளுக்கு இந்த பாட்டின் மெட்டைப் போட்டுப் பாடிப் பார்க்கிறேன் வல்லிம்மா...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
உங்க மெட்டுக்குச் சில வார்த்தைகளைப்
போட்டு சேர்த்துவிட்டேன்.
நானும் பாடிப்பார்க்கிறேன்.
விஸ்வனாதன் ராமமூர்த்தி மாதிரீயீயீயீய்:))))
நன்றி ராஜா.

ஸ்ரீராம். said...

உங்க பாட்டு சூப்பர்.  உன்ன நம்பி நெத்தியிலே பாடல் இளையராஜா-சுசீலா காம்பினேஷனில் ஒரு அற்புதம்.

Geetha Sambasivam said...

நல்ல பாடல், ஆனால் படம் பார்த்ததில்லை. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் பார்த்திருக்கேன். அந்தப் பிரபலமான பாடலும் பிடிக்கும். உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி

நெல்லைத்தமிழன் said...

இடுகையின் மேல் உள்ள படம் எனக்கு திருக்குறுங்குடி வட்டப்பாறை வளாகத்தை (இராமானுஜர் வடுக நம்பி) நினைவுபடுத்துகிறது

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நன்றி ராஜா. எனக்கு மிகவும் பிடித்த பாடல். இப்படி எத்தனை பாடல்களைச் சொல்லப்
போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.:)சுசீலாம்மான்னா
சுசீலாதான். என்ன குரல்!!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. இது சிட்டுக்குருவின்னு ஒரு படம். சிவகுமார் இரட்டை வேடம். வித்யாசமா நடிச்சிருப்பார்:)
ரோசாப்பூ ரவிக்கைக்காரி மிக இயற்கையா எடுத்த படம். அப்படியே
கொங்கு பாஷையில் நன்றாக இருக்கும். முடிவுதான் சோகம்.
உச்சி வகிடெடுத்து
மனசை என்னவோ செய்யும்.

வல்லிசிம்ஹன் said...

அச்சு அசல் அதேதான் அன்பு முரளிமா.
இந்தத் தோட்டத்தைப் பராமரிக்கும்
ரங்க ராமானுஜந்தான் எங்களை
அழைத்துச் சென்று ஸெவை செய்து வைத்தார்.
திருக்குறுங்குடியில் அவர் அகத்தில் தான்
எங்களுக்கு மதிய உணவு.
பேருபகாரி.
வேளுக்குடி கூட அவர் அகத்து மாடியில் தங்கி இருந்தாராம்.

Kavinaya said...

வல்லிம்மா, நல்லாருக்கீங்களா? நல்ல பாடல். இடுகையின் மேல் உள்ள படம் அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மீனா, நலம் கண்ணா!. எவ்வளவு வருடங்கள் ஆகிறது. மிக மிக மகிழ்ச்சி. நாங்கள்
பகவத் சங்கலபத்தில் இங்கு மகள் அவள் குடும்பம் நலம் இல்லிநாய் குறைந்து வருகிறது. சீக்கிரமே எல்லா
மக்களும் நலமடையவேண்டும் படத்தில் இருப்பது எங்கள் சொந்த ஊர் திருக்குறுங்குடி மா.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... உங்க பாட்டு நல்லா இருக்கும்மா....

உன்னை நம்பி நெத்தியில பாட்டு பிடித்த பாடல்களில் ஒன்று.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான இனிமையான பாடல் அம்மா...

கோமதி அரசு said...

பாடல் இனிமை கேட்டேன். மேலே உள்ள மல்லிகை தோட்டம் மிக அழகு.