வல்லிசிம்ஹன்
சக்தி வாய்ந்த வார்த்தைகள்.
60களில் வந்த இன்னோரு மறக்க முடியாத படம்
போலீஸ்காரன் மகள். ஏற்கனவே
மேடையில் பார்த்த நினைவு.
சஹஸ்ர நாமம் போன்ற நடிகர்கள்
இப்போது இல்லையே என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
முத்துராமன் ,பாலாஜி,விஜயகுமாரி என்று
எல்லோருமே நன்றாக நடித்திருப்பார்கள்.
வசனம் அழுத்தம் திருத்தமாக அழகுத் தமிழில்
பேசப்படும்.
கண்ணீரில் முடிந்தாலும் மணமாலை சூட்டிய
மகளாக விஜயகுமாரி வெளியேறுவதைப்
பார்த்து ஆறுதல் அடைந்த இளம் வயது:)
புஷ்பலதாவைப் பார்த்து பாலாஜி
பாடும் பாடல். பி பி ஸ்ரீனிவாசன் குரலில்
அமுதாகக் கேட்கும்.
அடுத்த பாடல் விக்கிரமாதித்தன் படத்தில் வரும்
நடிகை பத்மினியின் பாடல்.
அதுவும் சுசீலாம்மாவின் குரலில்
ஒலிப்பதுதான்.
நம் திண்டுக்கல் தனபாலன் இரண்டு நாட்களுக்கு
முன் இட்ட பதிவில் காதலனைப் பிரிந்து காதலி அவதியுறும்
நிலமையை அழகாகக் குறள் வழிக் கோலங்களாக
விவரித்திருப்பார்,.
இன்னும் அந்த அதிசயத்திலிருந்தே மீள முடியவில்லை.
இந்தப் பாடலைக் கேட்டதும்
அதே எண்ணத்தைப் பிரதிபலிப்பது
போலிருந்தது.
''சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு.
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு''
5 comments:
பாடலை நமக்குக் கொடுத்தவர் திரு ஆத்மனாதன். இசை
திரு.எஸ் ராஜேஸ்வர். இனிமை இனிமை.
அருமையான பாடல் அம்மா...
முன்பு நெஞ்சொடுகிளத்தல் அதிகாரத்திற்காக இந்த பாடலை தேர்ந்தெடுத்தேன் :-
https://dindiguldhanabalan.blogspot.com/2015/07/O-my-soul-PART-2.html
இரண்டு பாடல்களும் கேட்டு ரசித்தேன் மா.. முதல் பாடல் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
பாடல்கள் கேட்டேன் அருமையான தேர்வு.
அன்பு தனபாலன்,
உண்மையாகவா. பாரப்பா.!!!!
நானும் படித்திருப்பேனே. நினைவலைகளில் இருந்து
சில பாடல்களைத் தேர்ந்தெடுக்கிறேன்.
ஏற்கனவே இந்த இசையைப் பற்றி
திரு மதன் அவர்கள் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்திருந்தார்.
ஒலி அலைகள் நம் காதில் ஒலித்துக்
கொண்டிருக்குமாம்.
ஒரு தேவையான நேரத்தில் நம்மை வந்து சேருமாம்.
உங்கள் பதிவுகளில் என் கடந்த காலங்கள்
உயிர் பெறுகின்றன.
மிக மிக நன்றி மா.
Post a Comment