Blog Archive

Monday, June 01, 2020

நல்ல மனம் வாழ்க

வல்லிசிம்ஹன்
எல்லோரும்   நலமாக இருப்போம்.

நல்ல மனம் வாழ்க 


R. Raghupathy, retired manager of Hindustan Levers – Ponds Ltd and longtime resident of Luz Church Road passed away in a city hospital on Friday night.
He had contracted the corona virus.
His wife is Prof Sudharani Raghupathy, leading Bharatanatyam dancer in her time and well-known guru.
Born April 1, 1942, he hailed from the old Tanjore region.
Besides his wife, he is survived by sons KSR Sidhartha and KSR Anirudha.
Home address – Sir KS House, 123, Luz Church Road, Mylapore.

எங்கள் சிங்கத்தின்  உற்ற தோழர்.
ஏணியில் ஏறி இவர் செடிகளை சீர் படுத்துவதை பார்த்துக் கண்டிப்பார்.

என்னிடம் வந்து ரேவதி,
அவனை  நல்ல வார்த்தை சொல்லி உள்ளே அழைத்துக் கொள்ளேன்.

எப்பவுமே கேட்கமாட்டான். இப்போ வயது  வேறு 
சேர்ந்து கொண்டது.

இது தினம் நடக்கும் வாக்குவாதம். எங்கள் வீட்டு வழியே தான் அவரது 
நடக்கும்  பாதை.

இவரது உடல் கண்டு ''சிம்முடு '' என்று அலறியது இன்னும் என் காதில் 
ஒலிக்கிறது.

அவர்கள்  ஒன்று விட்ட சகோதரர்கள் போலவே 

சிறு வயதிலிருந்து கூடி விளையாடிய தோழமை க டைசிவரை 
இருந்தது.

கடந்த  6 வருடங்களாக  நாங்கள் ஐப்பசி மாதம்  என் கணவருக்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்ய வரும்போது வீட்டுக்கு வரும் 

வீட்டுக்கு வரும் முதல் மனிதர் அவர்தான்.

உள்ளே வந்ததும் இவர் படத்தைப் பார்த்து 
எப்படிடா இருக்கே?  என்பார்.
எங்கள் குழந்தைகளை வெகுவாக மெச்சிக் கொள்வார்.

அம்மாவைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் 
என்று சொல்லி மற்ற உறவினருடன் இருந்து 

திதி அன்று கலந்து கொண்டு உணவைப் பாராட்டி சாப்பிட்டுவிட்டுச் செல்வார்.

இந்தக் கொடிய தொற்று அவரை எப்படிப் பற்றியதோ தெரியவில்லை.
வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்றுதான் செய்தி.

யாரும் பக்கத்தில் இல்லாமல்,  மருத்துவமனையில் 
இறைவனடி  அடைந்திருக்கிறார்.

நிதானமாகத் தான் இந்த செய்தியை ஜீரணிக்க முடியும்.

எங்கள் அன்பு ரகு , என்றும் அமைதி பெறுக.



16 comments:

வல்லிசிம்ஹன் said...

மைலாப்பூர் டைம்ஸ் வெளியிட்டிருந்த குறிப்பு
ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கிறேன். நன்றி.

நெல்லைத்தமிழன் said...

பின்னணிச் செய்தியை இப்போதுதான் அறிகிறேன்.

வருத்தத்துக்குரிய செய்திதான். (சுதாராணி ரகுபதி பற்றிப் படித்திருக்கிறேன்)

அருகில் யாரும் இல்லாத காரணம் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு என்பதாலா?

குடும்ப நண்பரை இழந்து வருத்தமுறும் உங்களுக்கு என் ஆறுதல்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இவர் என் கணவரின் அத்தை பையன்.
இருவரும் ஒன்றாக மரமேறி, கிரிக்கெட் விளையாடி
வளர்ந்தவர்கள். கொரோனா என்பதால்
அனுமதிக்கப் படவில்லை உறவினர்கள் என்று அறிந்தேன்.
இன்னும் சுதாவிடம் பேசவில்லை.
அவர் மகனுக்கு மட்டும் செய்தி அனுப்பி இருந்தோம்.
நன்றி மா.

ஸ்ரீராம். said...

மிகவும் வருத்தமான செய்தி.  யாரே ஆறுதல் சொல்ல முடியும்?  சுதாராணி ரகுபதி  கேள்விப்பட்டிருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

வருத்தமான செய்தி...

வெங்கட் நாகராஜ் said...

வருத்தமான செய்தி. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓ வல்லிம்மா, மிகவும் வருத்தமான செய்தி, இப்படிப்பட்டவருக்கு, கடசி நேரம் அஞ்சலி செய்யக்கூட முடியாத நிலைமையாகிப்போனதே.... அவர் இப்போ சிங்கப்பாவைச் சந்தித்து உங்கள் நலன்பற்றி எல்லாம் சொல்லியிருப்பார் என ஆறுதல் படுவோம்.

கோமதி அரசு said...

செய்தி கேட்க வருத்தமாய் இருக்கிறது.
சுதாராணி அவர்கள் நடனம் பார்த்து இருக்கிறேன்.
உங்கள் சொந்தம் , கணவரின் நட்பு குடும்பத்தினர்களிடம் அன்பும் பாசமும் உள்ள நல்ல மனிதர் இழப்புக்கு அஞ்சலிகள்.

ராமலக்ஷ்மி said...

வருத்தம் அளிக்கும் செய்தி. ஆழ்ந்த அஞ்சலிகள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள். சுதாராணி அவர்களைப் பற்றி நானும் அறிந்திருக்கிறேன். தன் மனைவியின் கலைப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர் என்பதும் அவர் மேல் கூடுதல் மதிப்பைத் தருகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், மிகவும் நல்ல மனிதர். சிங்கத்துக்கு
இளையவர் .அமைதியடையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் சுதாராணிக்கு ஆதரவு கொடுத்து உயர்த்தியவர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
உண்மைதான். அத்தை மகனும் மாமன் மகனும் சேர்ந்திருப்பார்கள். அருமையாகச் சொன்னீர்கள். நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு தனபாலன்.
நன்றி அன்பு வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
காலனுக்கு தர்ம ராஜன் என்று சொல்வார்கள்.
பணம் கோடி இருந்தும் கொரோனாவுக்கு
சுனாமி போல பலியாகிறார்கள்.
நன்றி மா. அந்தக் குடும்பம் அமைதி அடையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,

சுதாவும் பங்களூருக்காரர் தான்.
எங்கள் திருமணத்துக்கு ஆறு மாதங்கள் முன் அவர்கள்
திருமணம் நடந்தது.
இது அதிர்ச்சியாகத் தான் வந்துவிட்டது.

மற்றவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.
நன்றி ராஜா.

மாதேவி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.