வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.
இன்று பதிவிடும் பாடல்
மூங்கிலிலான வீடு எண் 54
இந்தப் பாடலை முதலில் பசுமலையில் இருக்கும் போது
கேட்ட ஞாபகம்.
உடனே பிடித்துவிட்டது.
பிறகு எங்கள் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள்
கழித்தே பிலிப்ஸ் ரேடியோவும்,
ரெகார்ட் சேஞ்சரமும் Record Changer.
வாங்கினோம்.
சேலத்தில் ஹெச் .எம்.வி ஸ்டோர்ஸ். என்னும் கடையில் 6
ரெக்கார்டுகள் வாங்கினோம்.
அதில் முதலில் கண்ணில் பட்டது
நம்பர் 54 House with the Bamboo door!!!!
என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.
சிங்கத்துக்கு இந்தப் பாட்டு முன்பே
தெரியுமாம்.
என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம்
என்று பாடியபடி வீடு வந்து சேர்ந்தோம்.
மகள் பிறந்து 30 நாட்களான நேரம்.
அம்மாவின் சுணக்கத்தையும் மீறி நான் வெளியே
போய் வந்தேன்.
1968 மே வாங்கிய நேரம் இசை வெள்ளம்
வீட்டில் நிரம்பியது. தமிழ் ,இந்தி,ஆங்கிலம் என்று எங்கள்
சம்பளத்தைச் செலவிட்டோம்:)
அதற்காக ஒரு அழகான ரேடியோக்ராம் பேட்டியும் தன கையாலேயே செய்தார்.
வீடு முழுவதும் உளி சத்தம், குழந்தைகள் அழும்,சிரிக்கும் சத்தம்
முழங்க வாழ்வு ஆரம்பித்தது.
இந்தப் பாடல் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலிலும் வரும்.!!!!!
எல்லோரும் நலமாக இருக்கப் பிரார்த்தனைகள்.
இன்று பதிவிடும் பாடல்
மூங்கிலிலான வீடு எண் 54
இந்தப் பாடலை முதலில் பசுமலையில் இருக்கும் போது
கேட்ட ஞாபகம்.
உடனே பிடித்துவிட்டது.
பிறகு எங்கள் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள்
கழித்தே பிலிப்ஸ் ரேடியோவும்,
ரெகார்ட் சேஞ்சரமும் Record Changer.
வாங்கினோம்.
சேலத்தில் ஹெச் .எம்.வி ஸ்டோர்ஸ். என்னும் கடையில் 6
ரெக்கார்டுகள் வாங்கினோம்.
அதில் முதலில் கண்ணில் பட்டது
நம்பர் 54 House with the Bamboo door!!!!
என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை.
சிங்கத்துக்கு இந்தப் பாட்டு முன்பே
தெரியுமாம்.
என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம்
என்று பாடியபடி வீடு வந்து சேர்ந்தோம்.
மகள் பிறந்து 30 நாட்களான நேரம்.
அம்மாவின் சுணக்கத்தையும் மீறி நான் வெளியே
போய் வந்தேன்.
1968 மே வாங்கிய நேரம் இசை வெள்ளம்
வீட்டில் நிரம்பியது. தமிழ் ,இந்தி,ஆங்கிலம் என்று எங்கள்
சம்பளத்தைச் செலவிட்டோம்:)
அதற்காக ஒரு அழகான ரேடியோக்ராம் பேட்டியும் தன கையாலேயே செய்தார்.
வீடு முழுவதும் உளி சத்தம், குழந்தைகள் அழும்,சிரிக்கும் சத்தம்
இந்தப் பாடல் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலிலும் வரும்.!!!!!
HOUSE OF BAMBOO
(William Crompton, Norman Murrells)
Andy Williams
Also recorded by:
Earl Grant
Number fifty-four,
The house with the bamboo door,
Bamboo roof and bamboo walls,
They've even got a bamboo floor!
You must get to know - Soho Joe,
He runs an Espresso,
Called the House of Bamboo.
It's-a made of sticks.
Sticks and bricks,
But you can get your kicks
In the house of bamboo.
In this casino, you can drink a chino,
And it's gotcha swingin' to the cha cha
Dance the bolero in a sombrero.
An’ Shake - like a snake!
You wanna drop in when the cats are hoppin'.
Let your two feet move-a to the big beat;
Pick yourself a kit - ten and listen to a platter
That rocks - the juke-box!
I'm-a telling you, when you're blue,
Well there's a lot to do
In the House Of Bamboo.
You’ve got to know - Soho Joe,
He runs an Espresso,
Called the House of Bamboo.
In this casino, you can drink a chi no,
Let your two feet move-a to the big beat;
Pick yourself a kitten and listen to a platter
That rocks
I'm-a telling you, when you're blue,
Well there's a lot to do
In the House Of Bamboo.
Number fifty-four,
The house with the bamboo door,
Bamboo roof and bamboo walls,
They've even got a bamboo floor!
In the House Of Bamboo.
(Contributed by Bill Huntley - June 2009)
| |
16 comments:
பாடல் நல்லாயிருக்கு அம்மா...
நினைவுகள் சங்கீதம்.
கேளொலி கேட்டேன் அம்மா.
உங்க அனுபவத்தை ரசித்து எழுதியிருக்கீங்க.
அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் இல்லையேன்னு இருக்கு.
தலைப்பில் உள்ள போட்டோ என்னென்று புரியவில்லை. கடல் அலைகள் போன்றும் உள்ளது. அதே சமயம் ஏதோ வீழ்ந்த மரத்தின் வேர் போன்றும் உள்ளது. அது என்ன என்று விளக்குவீர்களா?
மஹாபலிபுரத்தில் இதே மாதிரி ,மூங்கில் கழிகளால் ஆன
காஃபி கடை ஒன்றை ஐரோப்பியர் ஒருவர் நடத்தி வந்தார்.
இப்பொழுது இருக்கிறதா என்று தெரியவில்லை. இது 1978இல்.
அந்தக் கடை பெயரும் ஹௌஸ் ஆஃப் பாம்பூ.
கடற்கரைக் கோவில்கள் போகும் வழியில்
இருந்தது.
அன்பு தனபாலன்.,
இங்கே வந்து படித்து ,கேட்டு
ரசித்ததற்கு மிக நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி,
நினைவுகளில் வாழ்வது ஒரு தனி சுகம்.
மிக நன்றி மா.
அன்பு ஜயச்சந்திரன் ஜெயக்குமார் ஐயா,
இந்தப் படம் அலைகள் தான்.
சுருண்டு வரும் அழகும் வீர்யமும் பிரமிக்க வைக்கும்.
இது நான் எடுத்த படம் இல்லை.
பாலித்தீவுகளில் பார்த்திருக்கிறேன்.
மிக நன்றி மா.
//வீடு முழுவதும் உளி சத்தம், குழந்தைகள் அழும்,சிரிக்கும் சத்தம் //
மலரும் நினைவுகள் அருமை அக்கா.
பாடல் கேட்டேன் நன்றாக இருக்கிறது.
ஆங்கிலப் பாடல்கள் கேட்டதே இல்லை.
அன்பு கோமதிமா,
உண்மையில் மிக சந்தோஷமாக இருந்த நேரங்கள்.
குழந்தைகளோடு குழந்தைகளாக நாங்கள்
வளர்ந்து கொண்டிருந்தோம்.நன்றி மா.
நல்லது ஸ்ரீராம். இசைக்கு மொழியில்லை என்பது
என் கருத்து:)
நினைவுகள் இனிமை.
பாடல் கேட்டு ரசித்தேன் மா... நன்றாக இருக்கிறது மா...
மூங்கில் வீடு - அசாமில் இப்படி வீடுகள் பார்த்திருக்கிறேன்.
அன்பு வெங்கட்,
மனதை ,செய்திகளிலிருந்து
விலக்கி வைக்கவே யூ டியூப்
பக்கம் வந்து விடுகிறேன்.
கடமை தவறாத மக்களாக நீங்கள்,ஸ்ரீராம், தனபாலன்
கீதாமா எல்லோரும் கேட்பது நல்ல உற்சாகம்.
நன்றிமா.ஆமாம். இங்கும் அதுபோல இருக்கின்றன.
முக்கியமாக தென் மாவட்டங்களில்.
இந்தப் பதிவுக்குப் போட்ட க்மென்ட் வேறு புதிய பதிவுக்குப் போய்விட்டது என்று நினைக்கிறேன்...எப்படி இப்படி நிறைய பதிவுகளை மிஸ் செய்தேன் தெரியலை
கீதா
அன்பு கீதா ரங்கன்,
உங்கள் மேல் தவறு இல்லை.
பாடல்கள் மேல் எனக்கு இருக்கும் பற்று, காலை,மதியம் இரு வேளைகளி நான் விரும்பும் பாடல்களைப் பதிந்து செய்திகளின் பிடியிலிருந்து விடுபட
ஆவலில் நிறைய பதிந்துவிட்டேன்.
இத்தனைக்கும் இசைக்காகவே இன்னோரு பதிவும்
திறந்தாச்சு:)
மன உளைச்சலுக்கு இதெல்லாம் வடிகால்.
நிதானமாகப் பார்க்கலாம். நோ வொர்ரீஸ்:)
Post a Comment