Blog Archive

Monday, May 18, 2020

TAMIL OLD--Parakkuum paravaiyum neeye(vMv)--KAVITHA

வல்லிசிம்ஹn

Nambiyar hero. Jamunaraani  singer. a wonderful song. thank you sri. Janarthan KB.

14 comments:

ஜீவி said...

அட! நம்பியார் கதாநாயகர்!

சிரிக்கும் பொழுது கன்னத்தில் குழி விழுந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். ராஜசுலோச்சனாவுக்கு எப்படியோ தெரியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நம்பியார் நல்ல ஹேண்ட்சம் ஜீவி சார். ஜமுனாராணியின் குரலுக்காக இதை ஜனார்த்தன் சார் எழுதி இருந்தார். அவருக்காக இந்தப் பாடத்தைப் பதிவிட்டேன். நன்றி சார். கன்னக்குழி யாருக்கு? :)

ஜீவி said...

நம்பியாருடன் ஜோடி சேர்ந்து ஆடிப்பாடுவது ராஜசுலோச்சனா தானே?

வல்லிசிம்ஹன் said...

ஓ!ஆமாம் சார். அவருடைய மகள்கள் இங்கே தான் இருக்கிறார்கள்.
அதிர்ஷ்டசாலியாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

ஸ்ரீராம். said...

நம்பியார் இன்னும் ஓரிரு படங்களிலும் கதாநாயகராய் நடித்திருக்கிறார் என்று நினைவு. திகம்பர சாமியார் படத்தில் 12 வேடங்களில் நடித்திருந்தார் என்றும் நினைவு. எண்ணிக்கை முன்னே பின்னே இருக்கலாம். ஆனால் நவராத்திரி சிவாஜியை விட அதிகம் என்றே ஞாபகம். முன்னோடியும் கூட.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,,
நல்லவராக சில படங்கள் மக்களைப் பெற்ற மகராசி.
பாக்யராஜ் படம். திகம்பர சாமியார் கதை படித்திருக்கிறேன்.
படம் பார்த்ததில்லை. உங்களுக்கு நிறைய விவரம் தெரிந்திருக்கிறது.
முன்பே சொல்லி இருப்பேன். அவர் நம் மெரினாவில் நடக்க வரும்போது கூட அவரைப்
பார்த்தால் கொஞ்சம் பயமாக இருக்கும்:)
பிறகு தினம் பார்த்துப் பார்த்து அவரை நமஸ்காரம் சொல்லும் அளவிற்கு முன்னேறினேன்:)
எத்தனை நல்ல மனிதர்.எத்தனையோ பேருக்கு
ஐயப்ப பக்தர்களுக்கு வழி காட்டி இருக்கிறார்!!!.

கோமதி அரசு said...

இந்த படம் இப்போது கொஞ்ச நாட்களுக்கு முன் பார்த்தேன் சன் லைப்பில். இரண்டு ராஜசுலோச்சனா, நம்பியார் நன்றாக நடித்து இருப்பார். திகம்பர சாமியாரில் நம்பியாரின் நடிப்பு நன்றாக இருக்கும் எத்தனை வேடம் போடுவார் மனுஷன்!

இதில் இன்னொரு பாடலும் நீங்கள் முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள் அக்கா, "மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி" பாடல்.

ஏகாந்தன் ! said...

ரொம்ப நாளைக்கப்புறம் இதைக் கேட்க நேர்ந்தது, உங்கள் பதிவினால். நல்ல பாட்டு. ஆண்குரலில் யார் பாடியது என ஏன் குறிப்பிடவில்லை? PB Srinivas, Jamuna Rani ஜோடியோ!

Thulasidharan V Thillaiakathu said...

நம்பியார் கதாநாயகனாக நடித்த படம் இல்லையா? பாட்டு கேட்டு ரசித்தேன் .
துளசிதரன்


அம்மா இந்தப் படம் பற்றியும் தெரியாது பாட்டும் இப்போதுதான் கேட்கிறேன் முதல் முறையாக. நம்பியார் கதாநாயகனாக நடித்த படம் என்பதும் தகவல். நம்பியார் போலவே இல்லை டக்கென்று இருவர் நினைவுக்கு வந்தனர். தெலுங்கு நடிகர் பெயர் ம்ம்ம் நாகேஸ்வரராவ்? மற்றொருவர் மலையாள நடிகர் ப்ரேம் நசிர் கண்ணாடி அணிந்து வந்தால் எப்படி அப்புறம் சோபன் பாபு...ஹா ஹா ஹா சிரிக்காதீங்க அம்மா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஆண் குரல் நம்பியாருக்குப்ப் பொருந்திப் போகிறது போல் இருக்கு

கீதா

மாதேவி said...

இப்பொழுதுதான் கேட்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. வெகு தாமதமாக பதில் சொல்கிறேன் மன்னிக்கணும்.

அத்தனை விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்.
எனக்கு நேற்று சொன்ன வார்த்தை இன்று நினைவில்லை.
நீங்கள் என் பழைய பதிவை
நினைவு வைத்திருக்கிறீர்கள்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன் ஜி.
இது ஜமுனாராணியின் பிறந்த நாளை ஒட்டி வந்த பதிவில் வந்த பாடல்.
அதனால் அவரைக் குறிப்பிட்டிருந்தேன்.
கூடப் பாடுவது P.B.Srinivas. நன்றி உங்கள் வருகைக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, தங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து சிரித்து விட்டேன்.ஹாஹா.
நல்ல கற்பனை உங்களுக்கு.
ஆல் இன் ஆல் ஒரு ஹீரோ நம்பியார்.