Blog Archive

Monday, May 18, 2020

அவ்வையார்

வல்லிசிம்ஹன்


(1954 இல் )பார்த்தது.இன்றோடு அவ்வையார் கதை சொல்வது முடிகிறது.
குழந்தைகளின் தமிழ் இன்னும் மேலே வளர்கிறது.

சொல்வதற்கு முன் படத்தையும், 
நீதி நெறி, மூதுரை உட்பட பல 
பாடல்களையும்
படித்து, காண்பது வழக்கமாகிவிட்டது.
எத்தனை உன்னதமான படம் இந்தப் படம்!!!
ஆரம்பத்திலிருந்து முடிவு வரை தூய தமிழ்.

அந்தக் காலத்து உடை.
தம்பதிகளின் ஆதர்சம்.
கே பி சுந்தராம்பாளின்  அற்புத பிரசன்னம்.
கணீர் குரல். எல்லோரிடமும் காட்டும் வாத்சல்யம்.
நம் அசோகன் கூட ஒரு சோழ அரசனாக வருகிறார்.
வள்ளல் பாரியாக வருபவர் எம் கே ராதா என்று நினைக்கிறேன்.
சந்த்ரலேகா படத்தில் ஹீரோ ஆக வருபவர்.
நகைச்சுவை மன்னன் சாரங்கபாணிக்கு இரண்டு வாய்ப்பு.
சுந்தரிபாயின் கட்டுக்கோப்பான நடிப்பு.
அதிசயமான ஆங்காரம். நொடியில் மாறும் முக பாவங்கள்.
முதல் தடவை சிறுமியாகப் பார்த்த போது கிடைத்த அதே 
ஆச்சர்ய அனுபவம் இப்போதும் கிடைத்தது தான்
அதிசயம்.

இந்தப் படம் இப்பொழுதும் நமது தொலைகாட்சி 
திரைகளில் வரலாமாய் இருக்கும்.
இந்த பக்தியும், அந்த விநாயகரும், யானைகள் வந்து மோதி சுவை உடைத்து தெய்வீகக்கனை  மீட்கும் காட்சியும்,
பொறுமை என்னும் நகை அணிந்து பாடலையும்,
மயிலேறும் வடிவேலனையும் என்னால் மறக்க முடியவில்லை.

கடைசியில் கைலாசம் செல்லும் அவ்வை ய்ப்பிராட்டியோடு நாமும் சிவா பார்வதி தரிசனம் தத்ரூ பமாகக் காண்கிறோம்.

மாபெரும் காதுகளை இயல்பாக அமைத்து,
நம்மைப் படத்தோடு ஒன்றா வைத்த திரு எஸ்.எஸ். வாசனுக்கும்,
அவர் நடிக்க வைத்த அத்தனை உத்தம நடிக நடிகையருக்கும் 

பாடல்கள் எழுதிய கவிஞர்களுக்கும்,
இசை  அமைத்த M. D. Parthasarathy
P. S. Anandaraman
Mayavaram Venu


According to S. Theodore BaskaranAvvaiyar was perhaps the height of the trend for films celebrating Tamil culture and language: "A story woven around episodes from the life of the legendary poetess Avvaiyar whose works are considered to be one of the glories of Tamil literature. Every Tamil child is initiated into the language and culture through her poems. The film is dedicated to Mother Tamil and opens with a song praising Tamil Nadu. Avvaiyar herself symbolizes Mother Tamil and her deity

இதைவிட நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்.

இந்தப் படத்தையும்   ஸ்ரீ தி கே ஷண்முகம் நடித்த அவ்வையாரையும் 
ஒத்துநோக்கி சிலர் எழுதினார்கள்.
எண்ணப் பொறுத்தவரை இரண்டுமே உன்னதம்.
இது சினிமா, அது நாடகம். அவ்வளவே வித்தியாசம்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான படம்...

கோமதி அரசு said...

ஜெமினியின் ஒளவையார் காட்சி அமைப்பு பிரம்மாண்டம்.
நடித்தவர்கள் எல்லோரும் அருமையாக நடித்து இருப்பார்கள்.

பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கும்.



மாதேவி said...

நல்ல படம்.

Bhanumathy V said...

அவ்வையார் படம் எங்கள் அப்பாவுக்கு மிகவும் பிடித்த படம். தொலைகாட்சியில் ஒளிபரப்பும் பொழுதெல்லாம் மிகவும் ரசித்து பார்ப்பார். நீங்கள் சொல்வது போல் யானைகள் மோதி கதவை திறக்கும் காட்சி பிரமிப்பூட்டும். தொழில்நுட்பம் அத்தனை வளராத காலத்திலேயே எப்படி எடுத்தார்கள்? என்று ஆச்சர்யமாக இருக்கும்.