வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
புளிப்பொங்கல்
எளிதான புளிப்பொங்கல் இன்றைய மாலை டிபன் .
ரொம்ப நாள் ஆசை.
பாட்டி செய்கிற மாதிரி வரவில்லை. பாட்டி கைக்குப் புளி
நிறைய அளவுக்கு வரும்.
இங்கே வயிற்றுக்கு அத்தனை புளிப்பு ஆகாது.
எல்லோருக்கும் வெளியே போய் விளையாட ,நடக்க முடியாததால்
உப்புசம் , உறக்கம், களைப்பு
அலுப்பு எல்லாம் தான் மேலிடுகிறது.
பஜ்ஜி. போண்டா எல்லாம் தடா. மாதத்துக்கு ஒரு தடவை
அதிகம்.
எனக்கு மாலை ஏதாவது பலகாரம் செய்தெ ஆகவேண்டும். சேமியா ,
ரவை, இட்லி,தோசை அலுத்து,
சுசி ருசியாக ஏதாவது செய்யலாம் என்று யோசித்தவுடன் ,
அம்மா செய்யும் புளிப்பு பொங்கல் நினைவுக்கு வந்தது .
அம்மா, பாட்டி கைப்பக்குவம் வரவில்லை என்றாலும்,
நன்றாகவே இருந்தது.
பதிவிலும் பகிர்ந்து கொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்து பப்லிஷ் பட்டனையும் அழுத்திய பிறகு,
வியூ செய்தபோதும் பதிவில் இருந்தது.
இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால்
காயப் , போயி போயிந்தி.
பிறகுதான் நான் பவுர்ணமி ஸ்பெஷலாகப் பிடித்த பாடலை வீடியோ போட்டிருப்பது நினைவுக்கு வர
மீண்டும் இதோ எழுதுகிறேன்.

8 comments:
பகிர்ந்த பாடல் பிடித்த பாடல், கேட்டு மகிழ்ந்தேன்.
புளிப்பொங்கல் மிக அழகாய் இருக்கிறது பார்க்க சுவையும் அருமையாக இருந்து இருக்கும்.
எல்லோரும் நீங்கள் செய்ததை ரசித்து உண்டார்களா? அது தானே உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
புளிப்பொங்கல் - அம்மா செய்து தருவார்கள். நான் செய்வதில்லை.
ஹிந்திப்பாடலின் தழுவல் ஆயினும் நல்ல பாடல். சோகரசம் தூக்கலாய் இருக்கும்!
அன்பு கோமதி,
வாணலியில் காந்தல் கூட மீதி இல்லை. ரசித்து ருசித்துச் சாப்பிட்டார்கள்.
தினப்படி உப்புமா செல்லாது.
இதற்குப் பொங்கல் என்று சொல்லி சொல்லி,
தேங்காய்த் துகையலும் சேர்த்துக் கொடுத்ததும்
எல்லோருக்கும் பிடித்தது..
நீங்கள் சொல்வது போல செய்தால் மட்டும் போதாது.
எல்லோரும் சாப்பிட்டாலே
நமக்குத் திருப்தி. மிக நன்றி மா.
அன்பு வெங்கட் ,
இனிய காலை வணக்கம்.
ஸ்ரீரங்கம் வந்த பிறகு சாப்பிடுங்கள்.
நேற்றே வந்து தேடினேன். பதிவே இல்லைனு வந்ததே!
அன்பு ஸ்ரீராம், இந்திப் பாடலும்
கொஞ்சம் சோகமாகத்தான் இருக்கும்.
படத்தின் முடிவு தெரிந்ததால் மகிழ்ச்சியே.
இந்தப் பாடலின் வரிகள் மனதை அசைக்கின்றன.
நிறைய தம்பதிகளின் எண்ணங்களும் இதை ஒட்டியே
இருக்கும்.
நாம் சொல்லிக் கொள்வதில்லை. இந்தப்
படத்தில் பாடலாக வந்து விட்டது.
எழுதியவர் யாரென்று பார்க்கவில்லை. ஆயிரம் பொன்
கொடுக்கலாம். நன்றி மா.
உண்மை கீதாமா. பதிவிட்ட அடுத்த கணம் காணாமல் போனது.
ஏன் என்றே புரியவில்லை.
என் பதிவில் வீடியோ பதிவேற்றம் செய்தால்
சொற்கள் காணாமல் போகின்றன.
Post a Comment