Blog Archive

Wednesday, April 08, 2020

புளிப்பொங்கல் மறுபாகம்

வல்லிசிம்ஹன்

நலம் நலமறிய ஆவல்.  புளிப்பொங்கல்  மறுபாகம்

பிள்ளையாரே போற்றி
தேவையான பொருட்கள் ,
பச்சரிசி குருணை ஒரு  கிண்ணம், ஒன்றுக்கு மூன்று  
அளவில்   தண்ணீர், புளிக்கரைசல் அவரவர் விருப்பம்.,
உப்பு, 
தாளிக்க,
கடுகு ,சிவப்பு மிளகாய் ,இஞ்சி, மஞ்சள்பொடி,
வறுத்த வேர்க்கடலை ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு 

கொஞ்சம் புளி ,கரைத்து  ,அவரவர் ருசிக்கு ஏத்தவாறு .
உப்பு,
தாளிக்க கடுகு, 2 சிவப்பு மிளகாய், வேர்க்கடலை  வறுத்தது ,
கட லைப் பருப்பு, பெருங்காயம். சீரகம்

நல்ல கனமான வாணலி
அதை அடுப்பில் ஏற்றி,  இரண்டு மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
விட்டு,

எண்ணெய் காய்ந்ததும் ,
கடுகு,கடலைப் பருப்பு, வேர்க்கடலை ,மிளகாய்,சீரகம் போட்டு 
கடுகு வெடித்து மற்றவை சிவந்ததும்,
தண்ணீர் மூன்று கப் வீட்டுக் கொதித்து வரும்போது புளிக் கரைசலையும் விடவேண்டும்,

உடனே, குருணையை   கை ,கையாகப் போட்டு,கட்டி தட்டாமல் 
கிளற வேண்டும்.

உப்பு சேர்த்ததும்,
 நல்ல தடிமனான மூடியைப் போட்டு 
மூடிவிட்டால் வேலை முடிந்தது.
பத்து நிமிடங்களில்  சிம்மரில்  வைத்து,கருவேப்பிலையை அலம்பி 
உப்புமாவுடன் சேர்த்து மீண்டும் மூடிவிட்டால்,
நன்றாக வேகும்.

காந்தல்  வேண்டுமென்றால் இன்னும் 
கொஞ்ச நேரம் வைத்திருக்கலாம்.
ருசித்து மகிழ்க .
+++++++++++++++++++++++++

இந்த விநாயகர் மனம் வைத்தால் , மஹாபாரதம் எழுதிய கையால் ,
அந்தத் தந்தக்  கொம்பு துணை இருக்க நிறைய 
எழுதலாம்.




15 comments:

வல்லிசிம்ஹன் said...

VINAAYAGA CHARANAM.

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்பு.

செய்து பார்க்கலாம் இந்த நாட்களில்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு குறிப்பு அம்மா... நன்றி...

KILLERGEE Devakottai said...

சுருக்கமான செய்முறை.

ஸ்ரீராம். said...

முன்னர் அடிக்கடியும், இப்போது அவ்வப்போதும் செய்வதுண்டு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு வெங்கட்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தேவகோட்டை ஜி.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தனபாலன்.

எல் கே said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா

Geetha Sambasivam said...

அருமையான குறிப்பு. இஞ்சி, சீரகம் சேர்த்தது இல்லை. மற்றவை உண்டு. கீழே இறக்கியதும் வறுத்த வெந்தயப் பொடி கொஞ்சம் சேர்த்துக்கிளறுவேன். நல்லெண்ணெயில் தாளிப்பேன். தொட்டுக்கக் கத்திரிக்காய் சுட்டுத் தயிரில் போட்டுப் பிசைந்த பச்சடி.

கோமதி அரசு said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா, வாழ்க வளமுடன்.
வணங்கி கொள்கிறேன்.

புளிப்பொங்கல் குறிப்பு அருமை. செய்து பார்க்கத் தூண்டும் குறிப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

ஆஹா வல்லிம்மா ஜூப்பரோ ஜூப்பர்!!! நம் வீட்டில் மிகவும் பிடிக்கும்.

தாளிக்கும் போது கொஞ்சம் வெந்தயம் போடுவதுண்டு. அப்புறம் இறக்கும் முன் வறுத்த வெந்தயம் ப்ளஸ் பெருங்காயப் பொடி போட்டு கிளறி வாசனை வந்ததும் இறக்குவது அப்படிப் பண்ணினா ஜீரகம் இஞ்சி போடாமல்.

மாமியார் நீங்க செஞ்சது போலத்தான் செய்வார் ஜீரகம் இஞ்சி போட்டு/செஞ்சா சோ அப்படிச் செஞ்சா நான் வெந்தயம் போடாமல் செய்வதுண்டு...

அம்மா கொஞ்ச நாளாச்சு செஞ்சு...நாளைக்கு செஞ்சுடுவேன். தாங்க்யூ அம்மா...ட்ரூலிங்க்! உங்க குறிப்பு பார்த்து...

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
தாமதமாகப் பதில் சொல்வதற்கு மன்னிக்கவும்.
எல்லோருடைய அன்பு மிகுந்த வாழ்த்துகளுடன் ,இறை வழிபாட்டுடனும்
நேற்று கழிந்தது.
உண்மையிலியே இந்த அன்புக்குக் கடமைப் பட்டிருக்கிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

எல்லாச் சமையலிலும் இஞ்சியும் ,மஞ்சள்பொடியும்
இப்போது கலந்து கொள்கிறோம்.
வெந்தயம் சேர்த்திருந்தால் உண்மையிலியே
புளியோதரை மாதிரி ஆகி இருக்கும்.
நமக்கெல்லாம் இரண்டு வழி சமையலும் தெரிந்திருப்பது
எவ்வளவு நன்மை. நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா சாம்பசிவம், கீதாமா
வெந்தயம் சேர்க்காமல் விட்டுவிட்டேனே.
அருமையாக இருந்திருக்கும்.
அம்மா சமைத்ததில் கவனிக்க மறந்த விஷயம்.
இரும்பு வாணலியில் காந்தலை மட்டும் மறக்காமல் எடுத்து சாப்பிடுவேன்:)
நன்றி கீதா மா..