Blog Archive

Wednesday, April 29, 2020

காய்கறி தோசை.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

காய்கறி தோசை.

Vegetable utappam recipe in tamil|How to make vegtable utappam ...

இன்றைய மாலை டிபனுக்கு மாமியார் செய்யும் காய்கறி தோசை 

செய்தேன் .

52 வருடங்களுக்கு முன்  ,இரண்டாவது  பிரசவத்தின் போது 
ஒரு மாதம் வந்து இருந்தார்.
மகன்  வேலைக்குப் போகும் முன்  அவசரமாகச் செய்து கொடுப்பார்.
அவரும்  மறுப்பு சொல்லாமல்  சாப்பிட்டுக் கிளம்புவார்.

வெறும் அரிசி மாவு மட்டுமே தேவை.

கூடவே,  ஆழ்வார் பாடினது மாதிரி, நன்றாக வதக்கிய 
பச்சைப் பட்டாணி, பீன்ஸ், உ.கிழங்கு,காரட், கொத்தமல்லி,
ப.மிளகாய்   எல்லாம் கலந்து 
அரிசிமாவில் வெண்ணெய்,உப்பு,  வெந்நீர், விட்டு 
மெத்தென்று   பிசைந்து கொள்வார்.

அப்படியே உருட்டி தோசைக்கல்லில்  தட்டி 
சுற்றிலும்  நல்லெணெய் ,நெய்  கலந்து 
இருபுறமும்  வேகவிட்டு முறுமுறு  என்று எடுத்துச் சூடாக மகனின் தட்டில் 
பரிமாறுவார்.
பார்க்கவே அழகாக இருக்கும்.

வெங்காயம்  கிடையாது:)

நீங்களும் செய்து பார்க்கலாம்.


27 comments:

வெங்கட் நாகராஜ் said...

படத்தில் பார்க்க நன்றாக இருக்கிறது.

செய்து பார்க்கலாம் - ஒரு நாள்! :)

குறிப்பிற்கு நன்றிம்மா...

Geetha Sambasivam said...

காய்களை வதக்கிக்கொள்ள வேண்டாமா? ஒருநாள் செய்து பார்ப்போம்.

ஸ்ரீராம். said...

வெறும் அரிசி மாவு என்றால் சற்று முரடாக இருக்காதோ அம்மா?  ஆனால் படத்தில் பார்க்க வெகுவாகக் கவர்கிறது.

Jayakumar Chandrasekaran said...

இதைத்தான் நாங்கள் பிட்ஸா தோசை என்று பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்போம்.

 Jayakumar

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அருமை அம்மா...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

KILLERGEE Devakottai said...

பிட்சா போல தெரிகிறதே...

கோமதி அரசு said...

மிக நன்றாக இருக்கிறது பார்க்கவே . காய்கறி தோசை.
அக்கி ரொட்டி.

Angel said...

இந்த தோசைரொட்டி செய்யணும்னு ரொம்ப நாள் ஆசை .செய்து பார்த்து சொல்றேன்மா .

ராஜி said...

வெறும் அரிசி மாவிலா?! கடினமா இருக்காதோ?!

பிலஹரி:) ) அதிரா said...

அந்தக் காலத்திலேயே உங்கள் மாமியார் “பிட்ஷா” செய்து மகனுக்குக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லுங்கோ வல்லிம்மா:))

நெல்லைத் தமிழன் said...

படத்தில் உள்ள தோசையில் வெங்காயம் தெரிகிறதே...

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
காய்கறிகளை வதக்கிச் சேர்க்க வேண்டும் .
இப்போது அந்த வார்த்தையைச் சேர்த்து விட்டேன்.

செய்த கையோடு அதைப் பதிவிட்ட அவசரம், முக்கிய
வார்த்தை விட்டுப் போனது .நன்றி மா. இது சுலபம் வயிறும் நிறையும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, கட்டாயம் வதக்க வேண்டும்.
மாமியார் நிறைய நெய்யும் எண்ணெயும் சேர்ப்பார்.
அம்மா அவர் செய்த வாணலியில் மிகுந்த எண்ணெயை
குழம்பு தாளிக்க எடுத்துக் கொள்வார். தினசரி நடக்கும் வேடிக்கை.

இந்தத் தோசை என் பக்கம் வராது. குழந்தை பிறந்த புதிது என்பதால்
,அம்மாவிடம் கெஞ்சினாலும் கொடுக்க மாட்டார்.
இப்போது தவறைத் திருத்தி விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், முரடாக இருக்காது.
பிள்ளைக்குப் பாசமாக செய்வதாயிற்றே.
வென்னீர், வெண்ணெய் சேர்க்கும் போதே மாவு வளைந்து கொடுக்கும்.
சட்டுப் புட்டுன்னு மூன்று தோசை செய்து விடுவார்.
செய்து பாருங்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நண்பர் ஜெயக்குமார் சந்திரசேகரன் அவர்களுக்கு
வணக்கம்...தோசைக்கரைத்த மாவு பீட்சா ஆகலாம். இது வெறும் மெஷினில் அரைத்த அரிசிமாவு:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் ,
நலமுடன் இருங்கள். பொழுது இருக்கும் போது செய்து பார்க்கவும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி மா.
கடினமாகவே இருக்காது. வேகவைத்தக் காய்கறி,
வெண்ணெய் வென்னீர் எல்லாம் சேர்ந்து
மோர்க்களி பதத்தில் இருக்கும்.
இதையே உருண்டை பிடித்தும் செய்து வேக வைக்கலாம்.
தோசைக்கல்லில் தட்டிப் போட்டு
கட்லட் மாதிரியும் செய்யலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா சூப்பர்மா...

இதுதான் இங்கு அரிசிரொட்டி/அக்கி ரொட்டி நு செய்யறாங்க. நம் வீட்டில் மாதத்தில் ஒரு முறையேனும்..

ரொம்ப நல்லா வந்திருக்கும்மா...சூப்பர்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
மாமியார் பம்பாயில் குடித்தனம் செய்தவர்.
பலவிதப் பலகார வகையறாவும்
கற்றவர்.
மகனுக்குச் செய்வதில் உற்சாகம்.
ஆமாம் பீட்சா மாதிரி தான் இருக்கு.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா சூப்பர்மா...

இதுதான் இங்கு அரிசிரொட்டி/அக்கி ரொட்டி நு செய்யறாங்க. நம் வீட்டில் மாதத்தில் ஒரு முறையேனும்..

ரொம்ப நல்லா வந்திருக்கும்மா...சூப்பர்.

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
இரண்டு பக்கமும் வாட்டி எடுத்தால் பீட்சா மாதிரி இருக்காது.

எனக்கு பீட்சா அவ்வளவு பிடிப்பதில்லை.
நன்றி மா. உங்களுக்கெல்லாம் தெரியாத பலகாரமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார், நலமாப்பா.
நன்றாகவே இருந்தது. கட்லெட்
மாதிரி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
பார்க்க அப்படி இருந்தாலும் ,சுவை உள்ளூர் மாதிரிதான்.
அரிசி மாவாயிற்றே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
சுவையாக இருந்தது.
செய்து ரசித்து ருசி பார்க்கவும்.

வல்லிசிம்ஹன் said...

நானும் நினைத்தேன் அன்பு கீதாமா.
அக்கி ரொட்டியாகத் தான் என்று.
மாமியார் செய்யும்போது கேட்கவில்லை.
சில பேர் செய்து சொன்னதும் இது நினைவுக்கு வந்தது.
மாமியார் இன்னும் முறுகலாக எடுப்பார். இங்கே எண்ணெய்
செலவழிப்பது குறைவு.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
மாமியார் செய்ததில் வெங்காயம் கிடையாது.
இங்கு பேரன் திருத்தி இந்தத் தோசையின் மீது
சேர்த்துவிட்டான்.