Blog Archive

Tuesday, April 28, 2020

என் உயிர் நின்னதோன்றோ!

வல்லிசிம்ஹன்

எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
ஏதோ  ஒரு  வீரன்  நிற்பது  போல ஒரு தோற்றம் இந்த நிழல்
படம் எனக்கு பிரமை கொடுத்தது.
பாஹுபலி   தொடர்ந்து பார்ப்பதின்  விளைவோ என்று நினைத்தேன்.
அது இல்லை .என் நிஜ வாழ்வின்  கதா நாயகன், கண் முன்னே 

நிகழ்த்தி  ,என்னை அதிர வைத்த  கதை.
சிங்கம்  இப்படித்தான் உயரத்தில் நின்று  போகன்வில்லாக் கிளைகளை வெட்டுவார்.

வீட்டின் மரம்  போகிறவர் வருகிறவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று வெளியே ஏணியை வைத்து 
ஏறும்போது நடைப்பாதையில் இருக்கும் பள்ளங்கள் சில சமயம் 
ஏணியை ஆட்டம் கொள்ள வைக்கும்.

போகிற வர நண்டு சுண்டு ,மாமிகள் மாமாக்கள் எல்லாம் 
என்ன ஹார்ட் வொர்க்  என்று பாராட்டிவிட்டுப் போவார்கள்.

சற்று ஆடினாலும்,
வருகிற பஸ் ,கார் இடித்துவிடப் போகிறதே என்று பயமாக இருக்கும்.

 இந்த நிழல் அந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

10 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான நினைவுகளிலும் திகில் கலந்த நினைவுகள். அப்படிச் செய்திருக்க எவ்வளவு மனோதிடம் வேண்டும். மிகவும் குறுகிய, ஆனால் பரபரப்பான சாலை அது.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம்.

நான் வாசல் க்ரில் பக்கத்தில் நின்று. போதுமேப்பா. உள்ள வாங்கோன்னு
சொல்வேன்.
அதிகமாகச் சொன்னால் உள்ளதும் கெடும்.:)
இப்போது அந்த சாலைதானான்னு தோன்றுகிறது வெறிச்சோடி கிடக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

திகில் நினைவுகள்.

நெய்வேலியில் இருந்த வரை இப்படி நிறைய வேலைகள் செய்ததுண்டு. தலைநகர் வந்ததிலிருந்து அவை அனைத்தும் போனது.

திண்டுக்கல் தனபாலன் said...

பயமாக தான் இருக்கிறது அம்மா...

கோமதி அரசு said...

//.என் நிஜ வாழ்வின் கதா நாயகன், கண் முன்னே
நிகழ்த்தி ,என்னை அதிர வைத்த கதை.
சிங்கம் இப்படித்தான் உயரத்தில் நின்று போகன்வில்லாக் கிளைகளை வெட்டுவார்.//

பதிவின் தலைப்பு அருமை.

உயிரில் உணர்வில் கலந்தவரை மறக்க முடியுமோ!

Thulasidharan V Thillaiakathu said...

நினைவலைகள். நினைவலைகள் எப்போதுமே ஸ்வாரஸ்யம்தான். இங்கு எங்கள் வீட்டில் இப்படியான வேலைகள் செய்வது நான் என்பதால் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது வல்லிம்மா

துளசிதரன்

அம்மா கொஞ்சம் வயதான பிறகு ஏணி ஏறி செய்யும் வேலை என்றால் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கும். நினைவுகள் சில சம்யம் நிஜம் போல் நம்மைப் பல உணர்வுகளுகு உள்ளாக்கும் இல்லையா...

கீதா

வல்லிசிம்ஹன் said...

ஓ.நீங்களுமா வெங்கட். நெய்வேலியில் தோட்டம் நிறைய இருந்ததா.
உடலுக்கும் மனதுக்கும் நல்லது தோட்ட வேலை.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
கடைசி வரை தோட்டத்தை விடவில்லை.
இப்பொழுது பெரிய மகன், நல்ல தோட்டக்காரரை நியமித்திருக்கிறான்.
அப்பா ஏற்படுத்திய தோட்டம் நன்றாக இருக்கணும் என்று.

மழை இப்போது பெய்கிறதே. பூமி வளம் பெறட்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா. என்னைப் புரிந்து கொண்டதற்கு மிக நன்றி.
அங்கே இங்கே சுற்றி ரங்கனைச் சேர் கதைதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
கைகளுக்கு வேலை எப்பொழுதும் மனதுக்கு நல்லது என்று சொல்வார்.
நான் எப்பவுமே தொழிலாளி என்று சொல்லும் வீடியோ கூட இருக்கிறது.நன்றி மா.

அன்பு கீதாமா,
இதையும் விட மூன்றாம் மாடியில் ஏறி
கைகாலில் எல்லாம் முள்கீறிக் காயம் பட்டுக் கொண்டால்
எனக்கு மகாக் கோபம் வரும்:) நன்றி மா.