வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
காலமகள் கண் திறப்பாள்
எத்தனையோ இடர்களைத் தாண்டி வர உதவியாய் இருந்தவள்
அன்னை காமாட்சி.
மக்கள் திருமணங்கள், பேரன்,பேத்திகள்
அம்மா,அப்பா,தம்பிகளுக்கான வேண்டுதல்கள்
வாழ்க்கையில் எந்த ஒரு துயரோ இடரோ
வரும்போதும் சரி, நேர்த்திக்கட னை
நிறைவேற்றவும் அணுகுவது இவளைத்தான்.
வருடங்களுக்கு இருமுறை காஞ்சீபுரம், இருமுறை
மாங்காடு என்று வரவழைத்து விடுவாள்.
இவளை ஒருதடவை பார்த்து அருள் வாங்கி கொண்டால்,
அடுத்த தடவை திருமலை திருப்பதி பயணம் உண்டு.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
காலமகள் கண் திறப்பாள்
எத்தனையோ இடர்களைத் தாண்டி வர உதவியாய் இருந்தவள்
அன்னை காமாட்சி.
மக்கள் திருமணங்கள், பேரன்,பேத்திகள்
அம்மா,அப்பா,தம்பிகளுக்கான வேண்டுதல்கள்
வாழ்க்கையில் எந்த ஒரு துயரோ இடரோ
வரும்போதும் சரி, நேர்த்திக்கட னை
நிறைவேற்றவும் அணுகுவது இவளைத்தான்.
வருடங்களுக்கு இருமுறை காஞ்சீபுரம், இருமுறை
மாங்காடு என்று வரவழைத்து விடுவாள்.
இவளை ஒருதடவை பார்த்து அருள் வாங்கி கொண்டால்,
அடுத்த தடவை திருமலை திருப்பதி பயணம் உண்டு.
அம்மா வழிகாட்டிய சந்நிதி. |
இவர்கள் எல்லோரும் இருக்கும்போது நாம மனதில் சந்தேகம் அண்டக்கூடாது. யாரோ செய்த தவறுக்கு நாம் அனுபவிக்க வில்லை. நாம் இயற்கைத் தாயை வதைத்தோம். அவள் வலுவிழுந்து போனாள் . இனிய மனத்துடன் நற்செயல்களையே செய்வோம் எல்லாம் மாறும் என்று பெரியவர் ஒருவர் சொன்னதைக் கேட்டோம். இங்கே அமெரிக்காவில் உயிர் சேதங்கள் அதிகமாகி வரும் நேரம். அரசியல்வாதிகள் எதோ பேசட்டும். இன்னும் இரண்டு வாரம் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படும் யூகங்களையும் தாண்டி, நம் குழந் தைகளையும்,பெரியவர்களையும் வீட்டு தலைவன் தலைவியையும் காக்க இறைவனிடம் வேண்டுவோம். வரும் செய்திகள் சஞ்சலப் படுத்துகின்றன. பெண்ணின் தோழி,( பள்ளியில் ஒன்றாய்ப் படித்தவர் ) இங்கே நியூ ஜெர்சி மாகாணத்தில் அவரது கணவன் (பெண்ணின் திருமணத்துக்காக அலைந்து,} நோய்த் தொற்று வந்து ஒரே வாரத்தில் இறைவனடி அடைந்துவிட்டார். வீட்டிலேயே இருக்கச் சொல்லி அலறுகிறது எல்லா செய்திகளும். கேட்கத்தான் வேண்டும். நலம் பெறுவோம். |
16 comments:
எல்லாம் நலமாகும் நம்புவோம் அம்மா.
நல்லதே நடக்கட்டும்....
நல்லதே நடக்க வேண்டும்...
அகிலம் விரைந்து இந்த இடரிலிருந்து மீள இறைவனைப் பிரார்த்திப்போம். நட்பின் இழப்புக்கு அனுதாபங்கள்.
என் பாஸின் சித்தப்பா பையன் யு கே யில் தனியாக இருக்கிறான். இரண்டு நாட்களாக ஜுரம், தொண்டைப் பிரச்னை என்று சொல்லி பயப்படுகிறான். கவலையாக இருக்கிறது.
எல்லோரையும் இறைவன் காப்பான்.
பொறுத்து இருப்போம். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
நல்லதே நடக்கும்
மனதுக்கு வேதனை தரும் செய்தி வல்லி. எங்கள் குடும்பத்தில் ஒரு பெண் இந்த மாதம் திருமணம் ஆகவேண்டும். நியூ ஜெர்சியில் இருக்கிறாள். திருமணம் ஒத்திப் போட்டிருக்கின்றனர். மனதுக்கு வேதனை! எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். வேறென்ன முடியும் நம்மால்?
தெரிந்தவர்களின் இழப்பு மனதுக்கு பாதிப்பு ஆறுதல் கொள்ளுங்கள்.
அனைத்தும் நலமாக வேண்டுவோம்.
நன்றி அன்பு தேவகோட்டைஜி.
உண்மையே. நம் வலிமை மனதில் இருந்தால் போதும்.
அன்பு வெங்கட், நல்லதே நினைப்போம்.
அன்பு தனபாலன், நடக்கும் ராஜா.
அன்பு ஸ்ரீராம்,
யு கேயில் இருக்கும் குழந்தை நலம் பெறட்டும்
பெறுவான்.
தோழியின் கணவர் இவ்வளவு அலைந்திருக்க வேண்டாம்.
பாவம் அந்தக் குடும்பம். நன்றி ராஜா.
உண்மையே அன்பு கோமதி.
அனைவரையும் இறைவன் காக்க வேண்டும்.
அன்பு கரந்தை ஜெயக்குமார், நலமாக
இருங்கள்.
அன்பு கீதாமா,
மகளின் தோழி,மைலாப்பூரில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் தான் குடி இருந்தாள் ரொம்ப அடக்க சுபாவம்.
நியுஜெர்சி ரொம்பப் பாதிக்கப் பட்டிருக்கிறது.
அவர் அட்லாண்டாவுக்கும், ஜெர்சிக்கும் போய்ப் போய்
வந்திருக்கிறார்,
என்னவோ விதிதான்.
நீங்கள் சொல்லும் குழந்தையும் பத்திரமாக
இருக்கட்டும். எல்லாம் பகவான் கைகளில்.
நன்றி மா.
ந்ல்லது நடக்க வேண்டும் அம்மா. பல காரியங்கள் தடை. உலக உடல் நலன் மற்றும் பொருளாதாரம் பயமுறுத்துகிறது. ஒவ்வொருவரும் ஏதேதோ சொல்கின்றனர். நல்லதே நடக்க வேண்டும்.
கீதா
Post a Comment