Blog Archive

Tuesday, March 10, 2020

British Airways – The Welcome of Home

வல்லிசிம்ஹன்
Home is where the heart lives,

மீண்டும் இன்னோரு பயணம்.
ஆனால் அலுக்காத பயணம். இந்தத் தடவை துணையோடு செல்வதால். கிருத்திகாவின் மனம் பூரித்தது.

கிரீஷ் போல மாப்பிள்ளையை
பாட்டிம்மா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
ஏற்கனவே காதல் அவளை ஏமாற்றி இருந்ததால்
பாட்டிம்மாவின் கடிதங்கள் அன்பும் பாசமும்
தொலைவில் கனடாவில் இருக்கும் பேத்தியைத்
தேடி வரும்.

இன்னும் தபால் துறையையும்,
பேப்பர், பேனாக்களையும் பாட்டி ,செல்லம்மா
விடவில்லை.
வித விதமான தபால் தலைகளை சேகரித்தவண்ணம்
இருப்பார்.

தினம் நடக்கும் செய்திகளை,திருமண அழைப்புகளை,
வந்து போனவர்கள் விவரங்களைத்
தூது அனுப்புவது போல அனுப்பி ,''நீ எப்போது வரப் போகிறாய்?"
என்ற கேள்வியுடன் அனுப்புவார்.

பாட்டியின் கேள்விகளுக்குப் பின் தொக்கி இருக்கும் மற்ற கேள்விகளும்
கிருத்திகாவுக்குத் தெரியும்.
தோல்விகளைப் பாட்டியுடன் மட்டும் பகிர்ந்து கொள்வாள்.
பெற்றோரின் பாசம் அவளுக்கு நன்றாகவே புரிந்தாலும்,
அவள் தனிமையை அவர்கள் தங்களுடைய தண்டனையாக
நினைத்தார்கள்.
கடிதங்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்துவிடும்படி
வேறு ஒரு மணமகனைத் தேர்ந்தெடுக்கும்படி
புத்திமதிகள் தாங்கி வரும்.
கிருத்திகாவையும் சேர்த்து ஐந்து குழந்தைகள் அவர்களுக்கு.

அதிசயமான குடும்பம். இந்தக் காலத்தில் இத்தனை குழந்தைகள்
பெற்றுக் கொள்வது அபூர்வம்.
மிகப் பழமையில் ஊறிய வட இந்தியக் குடும்பத்தில்
கருத்தடைக்கு  அவ்வளவு ஆதரவு இல்லாத காலத்தில்
கடைசிக் குழந்தையாகப் பிறந்தவள் கிருத்திகா.

படிக்க கனடா வந்து, உத்தியோகமும் பார்த்துக் கொண்டு,
காதலித்து ஏமாந்து இருந்த வேளையில்
ஒரு நயாகராப் பயணத்தின் போது,
தன்னைப் போலவே தனியாக நின்று நயாகராவை
வெறித்த வண்ணம் இருந்த கிரீஷைச் சந்தித்தாள்.

கிருத்திகா இருப்பது டொரண்டோவில்.
கிரீஷ் அலுவலக நண்பர்களுடன்
வாங்கூவரில் இருந்து வந்திருந்தான்.
அவனும் சண்டிகாரைச் சேர்ந்தவன் என்று
புரிந்து மகிழ்ந்தாள் கிருத்திகா.
'We will be in touch'  என்று சொல்லிப் பிரிந்தனர்.

கிருத்திகாவின் மனம் கிரீஷையே
சுற்றி வந்தது. அவன் கம்பீரமும், மென்மையும்,
அழகிய புன்முறுவலும்,
இதமான மரியாதையும் மிகப் பிடித்திருந்தது.

ஏற்கனவே அடிபட்டிருந்த இதயம் கவனமாக
இருக்கச் சொல்ல,மீண்டும் புதிதாக இன்னொரு ஆண்மகனைத் தொடர
தயங்கினாள்.

அவளுக்கு ,தயக்கம் இருந்தது போல அவனுக்கு இல்லை,
ஒரு இனிய வெள்ளி மாலையில்
தன்னை இரவு சாப்பாட்டுக்குச் சந்திக்க முடியுமா
என்று அழைப்பு வந்ததும் ,உடலும் மனமும் பூரித்ததை
அவளால் தடுக்க முடியவில்லை.
உடனே யெஸ் சொல்லிவிட்டாள். தொடரலாமா.....

14 comments:

ஸ்ரீராம். said...

புதிய தொடரா?  தொடர்கிறேன் அம்மா.  கிருத்திகா மறுபடியும் ஒரு ஏமாற்றத்தைச் சந்திக்காமல் இருக்கவேண்டும்.

நெல்லைத் தமிழன் said...

கதை ஜம்முனு ஆரம்பித்திருக்கிறது.... ஆனால் கிரீஷ் நல்லவனா இருக்கணுமே என்று மனசில் தோணுது...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம் கதை எழுதிப் பார்கக ஆசை விடவில்லை. சரியாக முடிக்க நினைக்கிறேன் நன்றி மா.:)

வல்லிசிம்ஹன் said...

நல்லதே நடக்கட்டும் கதை சுவாரஸ்யமாக இருக்கணும் முரளி மா.

கோமதி அரசு said...

முதல் வாழ்க்கை தோல்வி எனும் போது அடுத்த வாழ்க்கையை மிக கவனமாக தேர்ந்து எடுக்க வேண்டும்.

கிருத்திகா, கிரிஷ் நட்பு இணையுமா? நல்லதே நடக்கட்டும் என்று மனம் விரும்புது.
தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

நீங்க எ.பில கேவாபோ கதை எழுதணும். அதற்கு நான் படங்கள் செலெக்ட் பண்ணி ஸ்ரீராமுக்கு அனுப்பறேன். நீங்க நிறைய பேரைச் சந்திப்பதாலும், பலரில் வாழ்க்கைக் கதைகள் (அவலங்கள்) உங்கள் காதில் விழுவதாலும் நீங்கள் எழுதும்போது அதில் ஒரு ஜென்யுவினிட்டி இருக்கு.

மாதேவி said...

''அவளுக்கு தயக்கம் இருந்தது போல் அவனுக்கு இல்லை ' ..... அடுத்து காத்திருக்கிறோம்.

Geetha Sambasivam said...

கதை நடக்கும் இடமும், சம்பவங்களும் இதுவும் ஓர் உண்மைக்கதை என்பதைச் சொல்கின்றனவோ? தொடருங்கள். விறுவிறுப்பாகப் போகிறது கதை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
பெண்களுக்கே உண்டான முன் ஜாக்கிரதை
கிருத்திகாவிடம் உண்டு. எத்தனையோ நபர்களிடம் தப்பியும் ,ஏற்கனவே திருமணம் ஆனவரிடம், காதலில் விழுந்து அடிபட்டு விட்டாள்.
இனி எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும்.
நன்றி மா.நன்மை எங்கும் நிலவட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அச்சோ!! பாராட்டுக்கு மிக நன்றி.
இடத்தை தான் மாற்றி இருக்கிறேன்.

நடந்ததுக்கு கொஞ்சம் மசாலா சேர்த்து
கதை வந்துவிட்டது.
இங்கிருக்கும் 20,25 குழந்தைகள் என்னிடம் கொஞ்சம் சுதந்திரமாகப் பேசுவார்கள்.
வட இந்திய பாரம்பரியக் குடும்பங்கள்
எங்களைச் சுற்றிலும் இருக்கின்றனர்.
நல்ல மந்தர்கள்.
கடவுள் பக்தி நிறைய உண்டு. உழைப்பும் உண்டு.
கல்வியில் மிகக் கவனம் வைத்து முன்னேற்றம் காண்பவர்கள்.

பெண்கள், ஆண்கள் அனைவரும் ஒரு வயதுக்கு மேல் வீட்டில் இருப்பதில்லை.
சீக்கிரமே ஜாகை மாற்றி வேலை செய்யும் இடத்துக்குப் போய்விடுகிறார்கள்.

காதலில் ஏமாறுவதும் இந்த நேரத்தில் தான்.
அப்பா,அம்மாவே காதலித்துத் திருமணம் செய்த குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்
தானும் அது போலத் துணை தேட முனைகிறாள்.
யம்மாடி.....பின்னூட்டம் கதையை விட நீண்டு விட்டது.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
கேவாபோ ,நம்ம ஏரியாவுக்கு
கௌதமன் ஜி படங்களுக்கு கதை எழுதி இருந்தேனே.


வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி

நலமாப்பா. ஆமாம் நம் நாட்டுப் பெண்களுக்கு
தயக்கம் வருவது இயல்பு தான்.
நமை விளைந்தால் சரி மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

கொஞ்சம் உண்மை, கொஞ்சம் கற்பனை. செய்தி கிடைத்தாள் அதை விருத்தி செய்வது எளிது தானே.
இன்று அல்லது நாளை அடுத்த பகுதியை எழுதிவிடுகிறேன்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஆரம்பம். நல்லதே நடக்கட்டும்.

அடுத்த பகுதியும் படிக்கிறேன் மா.