Blog Archive

Sunday, March 08, 2020

BAJJI by Revathy Shanmugam

வல்லிசிம்ஹன்

Evening Tiffin for Ladies Day:)

17 comments:

நெல்லைத்தமிழன் said...

அட்டா.... பெண் பார்க்கச் செல்லும்போது விரித்த பஜ்ஜி சொஜ்ஜி வலை, இப்போ மகளிர் தின ஸ்பெஷலா ஆகிடுத்தா?

வெங்கட் நாகராஜ் said...

சுடச் சுட பஜ்ஜி!

ஒற்றை ஆளுக்காக செய்வது கடினம் என்பதால் பெரும்பாலும் செய்வதில்லை மா! ஊருக்கு வரும்போது சாப்பிடுவதோடு சரி!

சுவையான செய்முறை. பார்த்து/கேட்டு ரசித்தேன் இப்போதைக்கு!

KILLERGEE Devakottai said...

அடடே ஸூப்பர்...

Avargal Unmaigal said...

ரேவதி அவர்கள் சொன்ன முறைப்படியும் செய்யலாம்... ஆனால் பஜ்ஜி கொஞ்சம் மெத்தென்று வருவதற்கு சோடா மாவு போடுவதர்கு பதிலாக பொரிகடலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து செய்தால் மிக அருமையாக வரும் . நான் பஜ்ஜி செய்ய கடலை மாவு சிறிதளவு அரிசி மாவு பொரிகடலை மாவு மற்றும் மிளகாய் தூள் கொஞ்சம் பெரும்சீரகம் கொஞ்சம் பூண்டு பேஸ்ட் சேர்த்து செய்வேன் மிக நன்றாக வரும்.. நான் செய்த பஜ்ஜியை சுவைத்து மகிழ்ந்து பாராட்டியவர் பதிவர் ரமணி மற்றும் ஆல்பிரட் சார் குடும்பத்தினர்..

நீங்களும் நீயூஜெர்ஸிபக்கம் வந்தால் என் வீட்டிற்கு கண்டிப்பாக வாருங்கள் நான் பஜ்ஜிமட்டுமல்ல நல்ல சைவ உணவையும் தயாரித்து தருகிறேன்.


நான் அரசியல் பதிவுகள் எழுதுவதால் அதிலும் மோடியை பற்றி சற்று அதிக எழுதுவதால் என்னை கண்டு பயப்படவேண்டாம்... பதிவை வைத்து என்னை புரிந்து கொள்வதற்கும் நேரில் வந்து பார்த்த பின் என்னை பற்றி புரிந்து கொள்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
அரசியலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் மா! உங்கள். அன்பும் நட்பும் தான் வேண்டும் பொதுவாக நான் பதிவுகளை முன் போல
படிப்பதில்லை மா. இந்த வைரஸ் பதட்டம் தணியட்டும்.
உங்கள் வீட்டுக்கு. சாப்பிடவே. வருகிறேன்.
நீங்கள் சொல்லி இருக்கும் செய்முறை. மிக அருமையாக இருக்கிறது.
செய்து பார்ககிறேன் மா. உங்கள் மனைவி, அம்மா,மகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்ததுகள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, கேட்கவும் பார்ககவும் நன்றாக இருந்தது.உங்களுக்கும் பிடித்ததே. மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. இந்த செய்முறை மிகவும் பிடித்தது. இன்று. செய்தாச்சு.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்.

ஆதி செய்து தருவார். நீங்கள் உண்டு மகிழுங்கள்.

ஸ்ரீராம். said...

நேற்று பஜ்ஜியும் சொஜ்ஜியும் சாப்பிட்டேன்.  ஆனால் வேறொரு சந்தர்ப்பம்!

மாதேவி said...

சுவை.

Geetha Sambasivam said...

கடலைப்பருப்பு+அரிசி+மி.வத்தல் போட்டு ரிப்பன் பகோடாவுக்கு அரைத்து வைத்திருக்கிறேன். அதிலேயே பஜ்ஜியும் போட்டிருக்கேன். ஆனால் மைதா மாவு சேர்ப்பதில்லை. அன்று அரைத்த இட்லி மாவு இருந்தால் அதிலோ அல்லது அரிசி ஒரு கைப்பிடி+உளுந்து+துவரம்பருப்பு வகைக்கு இரண்டு டீஸ்பூன் ஊற வைத்து மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயத்தோடு அரைத்துக் கொண்டு (நல்ல நைசாக) அதில் கடலை மாவு கலந்து பஜ்ஜி போட்டால் நன்கு உப்பிக் கொண்டு எண்ணெயே குடிக்காமல் பஜ்ஜி வரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி இனிய மகளிர் தின வாழ்த்துகள். என்றும் நலமோடு இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அம்மா விசேஷம் என்று வேறொரு பதிவில் படித்தேன். அம்மாவின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து
சீக்கிரமே நல்ல காரியங்கள் நடக்கணும்.நன்றாக இருங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
எனக்கும் சோடா மாவு போடப் பிடிக்காது.
மைதாமாவுக்கும் அதே தான்.
அரிசி,பருப்பு, கலந்தாலே நல்லதுதான்.
இங்கேபூண்டு செல்லுபடியாகாது.
நீங்கள் சொல்லும் முறை அடுத்த ஞாயிறு செய்யலாம்.
நன்றி மா. இனிய மகளிர்தின வாழ்த்துகள்.

ட்றம்ப் அங்கிள் செகரட்றி அதிரா:) said...

ஆஆஆஆஆ நானும் இவவுடைய வீடியோக்கள் பார்ப்பதுண்டு..

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
ஓய்வு நேரங்களில் சமையல் வீடியோ
பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது.
இதமாக விளக்குகிறார். நன்றி கண்ணா. நலமுடன் இருங்கள்.

கோமதி அரசு said...

கடலை மாவு, அரிசி மாவு , மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், இடலி மாவு இருந்தால் அது கொஞ்சம் கலக்கி செய்வேன் பஜ்ஜி.

இவர்கள் சொல்லுவதும் நன்றாகத்தான் இருக்கிறது.

சோடாபூ சேர்ப்பது இல்லை.