வல்லிசிம்ஹன்
எல்லோரும். வளமாக வாழவேண்டும்.
பரமாத்மாவை விட்டு ஜீவாத்மா பிரிய மாயை ஒரு காரணம்
எல்லோரும். வளமாக வாழவேண்டும்.
மானின் மேல் ஆசை வைத்து மாயையில் சிக்கிய மாது.. |
ஸ்ரீராமனின் கோபப் புருவ நெரிப்பும் அழகாக இருக்கிறதே.!!!!!!! |
அரங்க ராமன் மணந்த சீதை எனும் கோதை |
மேலே உள்ள சித்திரங்கள் அனைத்தும் கோபுலு அய்யாவின் கைவண்ணம்.
இந்தப் படகு படலத்தில் ஒரு கதை படித்தது
நினைவுக்கு வந்தது.
கைகுவித்து நிற்பது குகன்.
இந்தப் படகு இல்லாமல் , காலில் பாதுகை இல்லாமல் ராமன் ,தன் படகில் ஏறி க் கொள்வதற்கு
அந்தப் படகோட்டி மறுத்தானாம்.
சாமி கால் பட்டு கல்லிலிருந்து ஒரு அம்மா
வந்துட்டாங்களாம்.
என் கிட்ட இருப்பது இந்த ஒரு ஓடம் தான். சாமி கால் பட்டு அதுவும் மாறிவிட்டால் நான் பிழைப்புக்கு என்ன செய்வேன் என்றதும்,
ராமன் ,சீதை எல்லோருமே சிரித்துவிட்டார்களாம்.
ராமர் ,சீதையின் கரத்தை ப் பற்றியபடி ஏறி க் கொண்டு,
இந்தப் பெண்ணைத் தவிர வேறு ஒரு பெண் ,என் வாழ்க்கையில் இல்லை என்றாராம்.
ஸ்ரீராம் ஜெயராம் சீதாராமா.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
13 comments:
படங்களும் விளக்கமும் அருமை.
ஸ்ரீராம் ஜெயராம் சீதாராமா.
கோபுலு அவர்களின் கைவண்ணத்தில் ஓவியங்கள் வெகு அழகு. இங்கே பார்க்கத் தந்தமைக்கு மிக்க நன்றிம்மா...
ஓவியத்தோடு கூடிய கதை நன்று.
அருமையான ஓவியங்கள். அழகான விளக்கம்.
கோபுலு அவர்கள் கைவண்ணத்தில் அழகிய படங்கள் விளக்கங்கள் அருமை.
ஸ்ரீராம் ஜெயராம் சீதாராம் .
கோபுலு தான் என்றாலும் கடைசி கறுப்பு-வெள்ளை படம் சித்ரலேகாவோ?
1. பரமாத்வாவை விட்டு ஜீவாத்மா பிரிவதாக மாயை -- என்று கொள்ளலாமா?..
2. எனக்கு கோபப்பார்வையாகத் தெரியவில்லை. 'ப்பூ' என்று ஊதித்தள்ளி விடுகிற லாவகத்தோடு குறிபார்ப்பதாகவே தோன்றியது.
3. இரண்டு பேரிடமும் காணப்படும் அந்த மென்மை -- அடடாவோ!
4. குகனொடும் ஐவரானோம்
5. 'சேதி என்ன சொல்வாயே!'
உண்மைதான் ஜீவி சார். கடைசிப் படம் கோபுலு சார்.
ராமனின் கதை தொடராக அந்தப் படத்தைச் சேர்த்தேன்.
கூர்மையான கவனத்துக்கு பாராட்டுகள்.
மென்மையும் அன்யோன்யமும் இழைந்த தமபதி ராமனும் சீதையும்.
மிக அழகு.
ராமனுக்குக் கோபம் வந்தது என்றுதான் படித்தேன்.
அந்தத் தாமரை முகத்துக்கு கோபமும் அழகு.
நன்றி ஜி.
அன்பு கோமதி, நேற்றிலிருந்து ஶ்ரீமத் ராமாயணம் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.அதையே படங்களாகப் பகிர்ந்து கொண்டேன் மா. நன்றி.
அன்பு வெங்கட். நன்றி மா.
நன்றி அன்பு தேவகோட்டை ஜி.
நன்றி. கீதா மா.ராம நாமம் மட்டுமே நம்மை வரும் இடர்களிலிருந்து காக்கும்.
அன்பு மாதேவி, மிக மிக நன்றி மா.
அழகான ஓவியங்கள்...
Post a Comment