வல்லிசிம்ஹன்
என்ன சத்தம் (அரவம்) இந்த நேரம்.
காணாமல் போன பதிவு.
முந்தைய பதிவில் எழுதிய ஒரு 60 வரிகள், பாடலை இணைத்ததும் காணாமல் போயின.
நாம் தான் எடுத்த வேலையை முடிக்க நினைப்பவர்கள் ஆயிற்றே.
இதோ வேதாளம் வலைப் பதிவில் ஏறிவிட்டது.
எங்கள் ப்ளாக் , அரவ அரட்டை புதனன்று நடந்தது இல்லையா.
அந்தப் பெயர் சொல்லாத ஜந்துவைப் பற்றிப் பேரனிடம் கதை நேரமாகச் சொன்னேன்.
அவனுக்கு எல்லாமே போரடித்த வேளையில்,
அமர்சித்ரா தவிர ஏதாவது ரியல் லைஃப் ஸ்டோரி சொல்லு பாட்டி என்றான்.
சரிடா, என்று அவனுக்குச் சிரிப்பு வரும் விதத்தில் இந்த நிகழ்வைச் சொன்னேன்.
பாட்டிக்கு எட்டு வயதாக இருக்கும்போது
அம்மா அப்பா தம்பிகளுடன் திருமங்கலம் என்ற கிராமத்தில்
இருந்தோம். கோடைகாலத்துக்கு எப்பொழுதும்
பந்தல் போடச் சொல்வார் கொள்ளுத்தாத்தா
மெயின் ரோடிலிருந்து வீடு ஆரம்பிக்கும்.
திண்ணைக் கதவை அடைத்துவிட்டால் அது தனி சாம்ராஜ்யம்.
உள்ளுக்குள் நீளத்திண்ணைகள் இரண்டு பக்கம் இருக்கும்
சின்ன வீடு. பெரிய ஹால், உள்ளே அடக்கமாகப் படுக்கை அறை, அதை ஒட்டி
சாமிப் படங்கள் மாட்டிய வராந்தாவும், பின்னால்
சமையல் அறை, முற்றம் கிணறு என்று இருக்கும்.
உள்வீட்டின் வாசலில் பந்தல் அடியில், கோடைக்கால இரவை
காற்றோட்டமாகக் கழிப்போம். பாய் விரித்துப் படுத்தால் நிம்மதியான
உறக்கம்.
அது போல இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் அப்பாவின் கதையைக் கேட்டபடி உறங்க ஆரம்பித்தோம்
திடீரென்று ஒரு ஹிஸ்ஸிங்க் சத்தம். திறக்க முடியாத கண்களைத் திறந்து
பார்த்த போதுதான், அந்த பழுப்பு நிறத்துடன் படமெடுக்கும், சீறும் பாம்பை
திண்ணையின் மேலிருந்த லிப்டன் டீ பெட்டியின் மீது பார்த்தேன்.
நா எழாமல் அதையே பார்த்தபடி,திடீரென்று சத்தம் போட்டபடி
அம்மாவை எழுப்பினேன்.
பாதி அழுகையில் நான் சொன்னதைக் கேட்டு
அம்மா அதிர்ந்துவிட்டார்.
உடனே அப்பா எழுந்திருக்க, உடனே டார்ச் எடுத்துக் கொண்டு
பின் தோட்டம் வரை போய்வந்தார்,
உடனே உள்ளே வந்து கதவை சாத்தி விட்டோம்.
காய்ச்சல் வந்து விட்டது எனக்கு.
காலையில் எழுந்ததும், நான் , இது கனவா,அம்மா ஒரு வேளை
கனவோ என்றதும், அம்மா பிரமித்தார்.
நாகர்கோயிலுக்கு, சங்கர நாராயணர் கோவிலுக்குப்
பணம் அனுப்பினார்....இரவாகிவிட்டது.
நாளை பார்க்கலாம்.
என்ன சத்தம் (அரவம்) இந்த நேரம்.
காணாமல் போன பதிவு.
முந்தைய பதிவில் எழுதிய ஒரு 60 வரிகள், பாடலை இணைத்ததும் காணாமல் போயின.
நாம் தான் எடுத்த வேலையை முடிக்க நினைப்பவர்கள் ஆயிற்றே.
இதோ வேதாளம் வலைப் பதிவில் ஏறிவிட்டது.
எங்கள் ப்ளாக் , அரவ அரட்டை புதனன்று நடந்தது இல்லையா.
அந்தப் பெயர் சொல்லாத ஜந்துவைப் பற்றிப் பேரனிடம் கதை நேரமாகச் சொன்னேன்.
அவனுக்கு எல்லாமே போரடித்த வேளையில்,
அமர்சித்ரா தவிர ஏதாவது ரியல் லைஃப் ஸ்டோரி சொல்லு பாட்டி என்றான்.
சரிடா, என்று அவனுக்குச் சிரிப்பு வரும் விதத்தில் இந்த நிகழ்வைச் சொன்னேன்.
பாட்டிக்கு எட்டு வயதாக இருக்கும்போது
அம்மா அப்பா தம்பிகளுடன் திருமங்கலம் என்ற கிராமத்தில்
இருந்தோம். கோடைகாலத்துக்கு எப்பொழுதும்
பந்தல் போடச் சொல்வார் கொள்ளுத்தாத்தா
மெயின் ரோடிலிருந்து வீடு ஆரம்பிக்கும்.
திண்ணைக் கதவை அடைத்துவிட்டால் அது தனி சாம்ராஜ்யம்.
உள்ளுக்குள் நீளத்திண்ணைகள் இரண்டு பக்கம் இருக்கும்
சின்ன வீடு. பெரிய ஹால், உள்ளே அடக்கமாகப் படுக்கை அறை, அதை ஒட்டி
சாமிப் படங்கள் மாட்டிய வராந்தாவும், பின்னால்
சமையல் அறை, முற்றம் கிணறு என்று இருக்கும்.
உள்வீட்டின் வாசலில் பந்தல் அடியில், கோடைக்கால இரவை
காற்றோட்டமாகக் கழிப்போம். பாய் விரித்துப் படுத்தால் நிம்மதியான
உறக்கம்.
அது போல இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் அப்பாவின் கதையைக் கேட்டபடி உறங்க ஆரம்பித்தோம்
திடீரென்று ஒரு ஹிஸ்ஸிங்க் சத்தம். திறக்க முடியாத கண்களைத் திறந்து
பார்த்த போதுதான், அந்த பழுப்பு நிறத்துடன் படமெடுக்கும், சீறும் பாம்பை
திண்ணையின் மேலிருந்த லிப்டன் டீ பெட்டியின் மீது பார்த்தேன்.
நா எழாமல் அதையே பார்த்தபடி,திடீரென்று சத்தம் போட்டபடி
அம்மாவை எழுப்பினேன்.
பாதி அழுகையில் நான் சொன்னதைக் கேட்டு
அம்மா அதிர்ந்துவிட்டார்.
உடனே அப்பா எழுந்திருக்க, உடனே டார்ச் எடுத்துக் கொண்டு
பின் தோட்டம் வரை போய்வந்தார்,
உடனே உள்ளே வந்து கதவை சாத்தி விட்டோம்.
காய்ச்சல் வந்து விட்டது எனக்கு.
காலையில் எழுந்ததும், நான் , இது கனவா,அம்மா ஒரு வேளை
கனவோ என்றதும், அம்மா பிரமித்தார்.
நாகர்கோயிலுக்கு, சங்கர நாராயணர் கோவிலுக்குப்
பணம் அனுப்பினார்....இரவாகிவிட்டது.
நாளை பார்க்கலாம்.
28 comments:
சொன்ன நிகழ்வு சுவாரஸ்யம்...
முந்தைய பதிவும் எனது படிப்பானில் (Reader) வந்தது அம்மா...
பேரனுக்கு பாம்புக் கதை பிடித்ததோ என்னவோ... ஆனால் நம் முன்னோர்களின் வீட்டின் அமைப்பு, வாழ்ந்த விதம் போன்றவை பிரமிப்பை உண்டாக்கும். படங்கள்லாம் (அந்தக் கால வீடுகள்) காண்பித்திருக்கிறீர்களா?
மதுரையில், யாரோ எந்தப் பெண்ணையோ தொடர்ந்தால், அங்கிருப்பவர்களே கேள்வி கேட்பார்கள், பாதுகாப்புக்கு வருவார்கள் என்பதெல்லாம் ஒரு கனவுக் காலம் என்றே தோணுது.
அரவத்தின் திடீர் விஜயம் காய்ச்சல் வரை போய்விட்டது
அடாடா ..காய்ச்சல் வசந்துடுச்சா மா ..
அடுத்து படிக்க ஆவல்
பாட்டிக்கு எட்டு வயதாக இருக்கும்போது என்று பேரனுக்கு கதை சொல்ல ஆரம்பித்த ஜோரை ரசித்தேன். நாங்களும் கதை கேட்க ரெடியாயிட்ட உணர்வு.. :)
//லிப்டன் டீ பெட்டியின் மீது பார்த்தேன்.../
நேச்சுரலான நினைவுத் தூண்டல்.. அந்த லிப்டன் டீ
பெட்டியே, லிப்டன் டீ சின்னத்துடன் கண் முன் வந்து விட்டது.. ஓ! ஒண்டர்புல்!..
படம் எடுக்கும் பாம்பு...அய்யோ.
சிறியவயதில் எங்கள் வீட்டிலும் பகலில் பாம்புகள் வருவதுண்டு சாரை,கோடாலி இவை ஆபத்து அற்றது.
இது மாதிரி கண்ணில் பட்டால் உடனே அம்மா சங்கரன்கோவில் , சங்கர நாராயணனுக்கும், கோமதி அம்மனுக்கும் வேண்டிக் கொள்வோம்.
நாகர்கோவில் நாகராஜ கோவிலுக்கு சிறு வயதில் போனது.
சிறு வயதில் இப்படி அரவத்தைப் பார்த்தால் பயந்து போய் காய்ச்சல் வரும் தான்.
உங்கள் படம் அழகு.
தொடக்கம் ரசனையோடு இருக்கிறது...
அன்பு தனபாலன் , முந்தைய பதிவு வந்ததா! ஏதோ தவறான செட்டிங்ஙக் வைத்து இருக்கிறேன்
போல இருக்கு . தங்கள் படித்தது மகிழ்சசி மா
அன்பு முரளிமா பேரனுக்குச் சொல்லும் போது கொஞ்சம் மசாலா சேர்ககணும்மா. அவனுக்கு இப்படி எல்லாம் நடப்பது வேடிக்கை தான்! How can this happen அப்படின்னு கேட்டுக் கொண்டே. இருந்தான். உங்களுக்காக எப்பவும் வரைந்த படத்தை அடுத்த பதிவில் இணைக்கிறேன் பாருங்கள். ரொம்ப அழகான வீடு.
ஆமாம் அன்பு ஜெயக்குமார்.பயம் அதன் காரணம்.
அன்பு அனுப்ரேம்் சின்ன வயது . பயம் சேரக் காய்ச்சல் வந்தது .:)
அன்பு ஜீவி சார். ரொம்ப மகிழ்ச்சி. நீங்க சொல்வது போல்தான் மனதில் பதிந்த இமேஜ்! அந்தப் பெட்டி பாத்திர பண்டங்கள் pack செய்ய எடுத்து வந்த பெட்டி. பொம்மைகளை அடுக்கி அதில் வைத்திருந்தோம்.
என அவங்க பாயிண்டே மறக்க முடியாமல் இருப்பதுதான் நன்றி சார்.
அன்பு மாதேவி. அங்கேயும் அவை வருமா? கடவுளே. அந்தப் பேரே நமக்கு நடுக்கம்.
அன்பு கோமதி. அம்மாவுக்கு சங்கரன் கோவில் தெய்வத்திடம் அத்தனை நம்பிக்கை. அது வீண் போனதே இல்லை. உடல் நடிங்க வைத்த சம்பவம் . என் படம் துபாயில் எடுத்தது. நன்றி மா.
நன்றி ம. அன்பு தேவகோட்டை ஜி.
ஆவ்வ்வ்வ் வல்லிம்மா அது கனவோ இல்லை நிஜமோ என்பது எப்போ சொல்லுவீங்கள்? உங்கள் வீட்டின் வர்ணனை பார்க்க , அப்படி ஒரு வீட்டில் இப்போ இருக்கோணும் எனும் ஆசை வருது...
அது எங்கே இருக்கிறீங்க, சூப்பராக இருக்கிறீங்க... படமெடுத்தவர் சிங்கப்பாவோ? அப்போ எடுத்த படம்தானே இது.. அழகிற சாறி, கையில் இருப்பதும் அழகு...
அன்பு அதிரா,
அந்த வீடு அங்குவிலாஸ் புகையிலை ஓணர் வீடு.
நாங்கள் வாடகைக்கு இருந்தோம்.
என் பெற்றோர் எங்கே போனாலு
ம் ,செம்பருத்தி, நந்தியாவட்டை, நித்திய மல்லி,
புடலை அவரை எல்லாம்
பதியன் போட்டு அழகாக்கி விடுவார்கள்.
அது கனவா ,நனவா என்றே தெரியவில்லை மா.
அத்தனை நிஜமாக இருந்தது.
இன்னும் நடுக்கமாக இருக்கிறது.
நன்றி கண்ணா.
கையில் வைத்திருப்பது துபாயில் வாங்கிய பர்ஸ்.
போட்டோ எடுத்தது சிங்கப்பா தான்:)அதிரா மா.
எங்கள் பிளாக் அரவ அரட்டை வியாழனன்று நடந்தது அம்மா!
நெல்லை சொல்லி இருப்பது போல பாம்புக்கு கதையை விட வீட்டின் அமைப்பு கவர்ந்து விட்டது.
நாங்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி குடியிருப்பில் இருந்தபோது எங்கள் வீட்டுக்கும் அடுத்த வீட்டுக்கும் இடையே புதர் மண்டிக் கிடக்கும்.
ஒருநாள் மாலை அங்கு சத்தம் கேட்டு ஜன்னல்வழி பார்த்தால் இரண்டு நாகங்கள் படம் எடுத்தபடி ஒன்றை ஒன்று நோக்கியபடி நிற்கின்றன. சுற்றிச் சுற்றி படம் எடுத்த படியே நகர்கின்றன. சினிமாக்களில் சண்டை போடுபவர்கள் உதார் விடுவார்களே.. அதுபோல...
அவ்வப்போது கொத்துவது போல தலையை கீழ்நோக்கிக் குத்தும். பின்நிமிர்ந்து மறுபடி ஒன்றை ஒன்று நோக்கியபடி...
என் அப்பா உட்பட யாரும் வெளியேயும் செல்லவில்லை, விரட்டவுமில்லை. கண்களை எடுக்க முடியாத கவர்ச்சியில் நீண்ட நேரம் பார்த்துவிட்டு பின் ஜனனல், கதவு எல்லாம் சாத்திவிட்டு இரவை தூங்காமல் கழித்தோம்!
ஸ்வாரஸ்யம்.
எங்கள் நெய்வேலி வீட்டில் இரண்டு மூன்று முறை சுப்புக்குட்டியார் உள்ளே வந்து ரகளை. என் பக்கத்திலும் இது பற்றி எழுதி இருக்கிறேன் மா...
அன்பு ஸ்ரீராம்,
இரண்டு பாம்பு சண்டை போடுவதைப் பார்த்தீர்களா.
சாமீ மெய்சிலிர்க்கிறது.
அந்த வீட்டில் 6 வருடங்கள் இருந்தோம். ஒரு இடத்தில் மண் இருக்காது.
அப்பா அவர்களிடம் பர்மிஷன் வாங்கி
செடி வைத்தார். நல்ல மனிதர்கள். அந்த இடத்துக்கு வாடகை
15 ரூபாயோ என்னவோ. அங்கேதான், தம்பிகளுக்கு அக்ஷராப்யசம் நடந்தது.
ஃப்ளூ வந்தது. கண்டபடி ஏறிச்சாடி அடிபட்டுக் கொண்டேன்.:)
இந்த வீட்டின் படம் முன்பு என் பதிவில் வரைந்து
பதிவிட்டது. அத்தனை ஆசைஅந்த வீட்டின் மேல்.
நன்றிமா.
வியாழன் அரட்டையைப் புதன் என்று எழுதிட்டெனா.
அன்பு வெங்கட் ,
என்னப்பா எல்லாம் அரவ மயமா இருக்கே.
கீதாவைக் கேட்டால் நிறைய சொல்வார்கள் பாவம்.
நம்ம சுப்புக்குட்டிங்க கதையா? இவங்களைப் பற்றி எத்தனை வேண்டுமானாலும் பேசிக் களிக்கலாம். இவங்க துணையோடு ஹோசூரில் குளியல், தோய்த்தல் எல்லாம் நடந்திருக்கு, பக்கத்தில் இவங்க இருக்காங்க என்னும் உணர்வே இல்லாமல். காலடியில் ஏதோ வழவழானு இருக்கேனு பார்த்தால், இஃகி,இஃகி, இவங்க, ஓட்டம் பிடித்தேன் உள்ளே எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு.
அன்பு கீதாமா, உங்களுக்கு இல்லாத அனுபவமா.
அச்சோ காலடியிலா.
கத்தாமல் இருந்தீர்களோ.
அம்பத்தூர்ல இன்னும் சுப்புக்குட்டிகள் உங்களைத் தேடுவதாக
சேதி வந்தது :)
Post a Comment