Blog Archive

Tuesday, March 03, 2020

வரும்போது .........

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.
  வரும்போது   , அதுவரை இருந்த  சிநேகமும் தோழமையும்  விடைபெற்று ஓடிவிட்டன.
 மோப்ப நாய் பர பரவென்று சுற்றி வர, சக்கர நாற்காலியில் நான் அமர ,மகன்  பின் தொடர்ந்தான். அழைத்துப் போனவர் அண்டை நாட்டு நல்ல பெண்மணி.
 மம், மம்  என்று அன்புடன் விசாரித்தபடி,
பச்சைக் கணினி முன் எங்களை நிறுத்தி 
படபட வென்று இமிக்ரேஷன் விவரங்களை பூர்த்தி செய்ய வைத்தார்.
அட இத்தனை சுலபமாக ஆகிவிட்டதே என்று நிமிரும் முன் ஒரு 
ஆப்பீசர்  முன் நாங்கள் இருந்தோம்.
எள்ளு கொள்ளு எல்லாம் வெடிக்க அவர் மகனைச் சாட ஆரம்பித்தார்.
''எத்தனை நாள் ''
மகன் 
''4. நாட்கள்.''
''நீயும் உங்க அம்மா போல இங்கே இருக்கப் போறியா ''

''இல்லை என் நாடு வேறு.''

''என்னிக்கு திரும்பப் போற.''

''இத்தனாம் தேதி.''

''நம்பமுடியாது உங்க அம்மா இப்படி வந்துதான் அட்டை வாங்கிவிட்டாள் ''

''எனக்கு அவசியம் இல்லை.
என் குடும்பம் வேலை எல்லாம்  அந்த நாட்டில் தான்.''
அவர் மேலும் 
இந்த ரீதியில்   அவர்  கடுமை காட்டப் 
பொறுமையாக  நின்ற மகனைக் காண சகிக்கவில்லை.

எனக்காகத் தான் இத்தனை பாடுபடுகிறார்கள் இந்தக் குழந்தைகள்.:(

இவர்களுக்கு சீக்கிரமே என்னிடமிருந்து விடுதலை கொடு 🙏🙏🙏🙏
என்று  இறைவனை வேண்டத்  தோன்றியது .

எல்லாம் நன்மைக்கே.
இனி  பயணம் கூடாது.
நம்பிக்கையோடு  எதற்கும் ஆசைப் படாமல் ,
குழந்தைகள் வாழ்வு சிறக்கவும், அவர்கள் மக்கள் வாழ்வு சிறக்கவும் மட்டுமே 
நம் பிரார்த்தனைகள்   இருக்க வேண்டும் 
 என்ற நிலைக்கு 
என்னைச் சிந்திக்க வைத்த
 அந்த வேற்று  கிரக வாசிக்கு 
 (ஆப்பு ஈசருக்கு)
மனத்தால் நன்றி சொல்லி வெளியே வந்து 
இந்த    ஊர்க்   குளிரைச்  சந்தித்தோம்.

இயற்கை தன வேலையைச் செய்வது போல் அந்த மோப்ப நாய் தன்  வேலையைச் செய்ததைப்  போல  அந்த மனிதரும் தன்  வேலையைச் செய்தார்.

என்னைத் திட்டி இருக்கலாம்.

அப்பாவி மகனைச் சினந்து  சொற்கள்  சிந்தி இருக்க வேண்டாம்.

''நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க''




கொரோனா பயமுறுத்தலில்   வால்மார்ட்டும், செர்மாக்கும் 
பொருட்களை  விற்றுக் குவிக்கின்றன. மக்கள் 
வாங்கி குவிக்கிறார்கள். ஒரு தும்மல் சத்தம் கேட்டால் 
காத தூரம் ஓடுகிறார்கள்.  பார்க்கலாம் எப்போ விடிவுகாலம் என்று.

20 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

குழந்தைகள் வாழ்வு சிறக்கவும், அவர்கள் மக்கள் வாழ்வு சிறக்கவும் மட்டுமே
நம் பிரார்த்தனைகள் இருக்க வேண்டும்

உண்மை

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு ஜெயக்குமார். மக்களுக்காகத் தான் நம் வாழ்வு இல்லையாமா. நீங்களும் உங்கள் குடும்பமும் நல்வாழ்வு பெருக நன்றாக இருக்க வேண்டும்.

ஜீவி said...

வாசித்தேன். அந்த ஷணம் மனம் கசந்து போயிருக்கிறது அவ்வளவு தான். அதனால் தானோ என்னவோ சிலேட் எழுத்துக்கள் மாதிரி பளிச்சென்று வழக்காமாக இருக்கும் வரிகள் அங்கங்கே கலங்கியிருக்கின்றன.

'இங்கேயே வந்து விடுங்கள்' என்று பையன் சொன்ன பொழுது இரு வருடங்களுக்கு முன் உங்கள் வழியில் தான் தொடர்வதாக இருந்தோம். திரும்பி இங்கு வந்தோமா? இங்கேயே இன்னும் கமிட்மெண்ட்கள் கூடுகின்றன. அங்கே வரும் பொழுது அதற்கேற்ற மாதிரி எண்ணங்கள் ஓடும்..

'இங்கே இருப்பதா, அங்கே வருவதா, மங்கள நாயகியே சொல்லம்மா?' என்று மாமியார் மெச்சிய மருமகள் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

சிகரம் பாரதி said...

நல்ல பதிவு. சிறப்பு. தொடருங்கள், தொடர்வோம். வலைப்பூக்களை மணக்கச் செய்வோம்...

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஒன்பது வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்கள் வலைத்தயம் உள்ளிட்ட ஐந்து வலைத்தளங்களின் பதிவுகளை ஐந்தும் ஐந்தும் – 03.03.2020 (2) பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்,
அந்த நேரத்தை நினைக்கும் போது
இப்போதும் கலக்கமாகவே இருக்கிறது.
உங்கள் புரிதலுக்கு என் மனம் நிறை நன்றீ.
நீங்கள் சொல்லும் பாடல் ,எனக்கு மிகவும் பிடித்ததே.

எனக்கு பச்சை அட்டை கிடைத்தது ஒரு அதிசயமே.
இப்பொழுது அத்தனை சுலபமாக நாட்டின் முதல்வர்
கொடுப்பதில்லையாம்.

எவ்வளவு தூரம் இது உண்மை என்று தெரியவில்லை.
நீங்களும் இங்கே வந்து விட்டால் நன்மைதான்.
இறைவன் நல்லதே நடத்துவான்.
என் கணவர் இருந்திருந்தால் இந்த அட்டை விஷயம் நடந்திருக்காது.
எல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தால் கதையே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சிகரம் பாரதி,
தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

என் வலைத்தளத்தையும் இணைத்தது.
மிக மிக மகிழ்ச்சி.
உங்கள் தளத்திலேயே என் விவரத்தை
அனுப்பி இருக்கிறேன்.

மிக மிக நன்றி. வாழ்க வளமுடன்.

Geetha Sambasivam said...

மனதைக் கலங்க வைத்த பதிவு வல்லி. எங்களுக்கு அங்கே வரும்போது அத்தனை சிரமங்கள் இருந்ததில்லை. அந்த அலுவலருக்கு அன்று என்ன மனக்கஷ்டமோ? உங்கள் பிள்ளை மாட்டிக்கொண்டிருக்கார். நீங்கள் சமீபத்தில் தான் பச்சை அட்டை வாங்கியதால் அவருக்குக் கடுப்பு. எங்க குழந்தைகள் 2011 ஆம் ஆண்டில் இருந்தே தொந்திரவு செய்கின்றனர். ஆனால் நாங்கள் இன்னமும் ஒத்துக்கொள்ளவில்லை. இங்குள்ள சுதந்திரம் அங்கு இல்லை என்பதே எங்கள் நினைப்பு. என்ன செய்வது? குழந்தைகளை, அதிலும் பேரக்குழந்தைகளைப் பார்க்கிறது ஸ்கைப் மூலம் தான் என்பது மனதை உறுத்தத் தான் செய்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

ஆறு மஆத விசிட் வரும்போது கேள்விகள் நிறைய எழவில்லை. இந்த அட்டை கிடைத்த பிறகு, இப்போதுதான் வெளியே போய் வருவதால்
இந்த சங்கடம். என்ன செய்யலாம். குழந்தைக்கு அன்று ஷஷ்டாஷ்டகம். நன்றி மா.

கோமதி அரசு said...

பதிவை படிக்கும் போது மனம் கனத்து போகிறது.
கவலை படாதீர்கள். குழந்தைகளின் நலனுக்கு வேண்டிக் கொள்ளவது மட்டும் தான் நம்மால் செய்ய முடியும்.

பாடல் பகிர்வு அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்க்கையே அவர்களுக்கு தானே அம்மா...

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.

அவனே மறந்து விட்டான். நமக்குதான்
நம் குழந்தைகளுக்குத் துன்பம் என்றால்
தாங்க முடியவில்லை.
ஆமாம் நீங்கள் சொல்வது போலப் பிரார்த்தனை ஒன்றே
நமக்குத்தெரிந்த வழி.நன்றி

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
அதுதான் நம் வாழ்க்கையின் முக்கிய நோக்கம்.
நன்றி மா..

Angel said...

அந்த அதிகாரி அத்தனை வெறுப்பு வார்த்தைகளை உமிழ்ந்திருக்க வேண்டாம் .ஆனால உங்கள் மகன் அவரை சிறப்பா பொறுப்பா பொறுமையாய் சமாளித்திருக்கிறார் .தாய் மனமல்லவா  அதான் உங்க மனம் மகனுக்காக மிகவும் வருத்தப்பட்டிருக்கு .வல்லிம்மா எங்கள் அனைவர்க்கும் இப்போல்லாம் அதீத பொறுமை வந்துவிட்டது .நம் போன்ற வேறிடத்தில் கிளை பரப்பி வாழ்பவர்கள் முக்கியமா செய்யவேண்டியது கடைபிடிக்க வேண்டியது  பொறுமை .உங்கள் மகனாருக்கு பாராட்டுக்கள் .இதுவும் கடந்து போகும் என்ற மனப்பான்மையுடன் இருப்போம் வல்லிம்மா .

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல் இதில் வேடிக்கை என்ன தெரியுமா.்அவரும் , தென் கிழக்குப் பக்கத்திலுருந்து வந்தவர் தான். பெயர்பபலகையில் எழுதி இருந்தது.

இந்த வெறுப்பு அவர்களாக வளர்ததுக் கொண்டது.
நீங்கள் சொல்வது மிகச் சரி. உங்களுக்கெல்லாம். பொறுமையும் கலங்காமல் இருப்பதும். பழகி விட்டது. வெளி நாடு பழக்கி விட்டது.

நலமாக இருங்கள. பத்திரமாக இருங்கள்.

பிலஹரி:) ) அதிரா said...

அது அவர்களின் தொழில்தானே வல்லிம்மா, இப்படி எத்தனையோ நடப்பதாலதான் அவர்களும் அப்படி நடக்கின்றனர், அதனால இதற்கெல்லாம் ஃபீல் பண்ணக்கூடாது, இப்படி எல்ல்லாம் கேட்பினம் என எதிர்பார்த்துக் கொண்டேதான் போகோணும்.. இதற்காக நிறைய யோசிக்கக்கூடாது... இதைவிடக் கொடுமையான சம்பவங்களும் இருக்குதே..

கொரனா தான் இப்போ மிரட்ட்டுது எல்லோரையும், நினைக்கப் பயமாக இருக்குது.. உலகம் அழியத்தான் போகுதோ?:)..

வெங்கட் நாகராஜ் said...

அடடா... சிலர் இப்படித்தான் வார்த்தைகளைக் கொட்டி விடுகிறார்கள். அவர்களுக்கு வருத்தமோ இல்லையோ கேட்கும் நமக்கு ரொம்பவே கஷ்டமாகி விடுகிறது.

உங்கள் மகன் பொறுமை காத்தது நல்லது.

இதுவும் கடந்து போகும். கவலை விடுங்கள்.

மாதேவி said...

'சில நேரங்களில் சில மனிதர்க'ளால் தோன்றும் சங்கடங்கள் மனதுக்கு உடன் வலியைதரும் . மறந்திட வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதிரா,
நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை.
ஆமாம், எதிர்பார்த்து வந்திருக்க வேண்டும்.
மூன்று வருடங்களுக்கு முன் வந்த போது ஒன்றும் சொல்ல வில்லையே.

இப்போதும் என்னைக் கேட்டிருந்தால்
என்ன சொல்லி இருப்பேனோ.
இந்த அட்டை அந்த மனிதரைத் தடுத்து விட்டது.

எங்க மகனைக் கடிந்து கொள்வதில் என்ன லாபம்.
நடந்து விட்டது. இனி மறக்க வேண்டியதுதான்.
மிக ஆறுதலாக வார்த்தைகள் சொன்னதற்கு மிக
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
பெற்ற தாய் இருக்கும் போது
மற்ற தாயை அணுகும் விதி
நம்மை வார்த்தைகள் கேட்க வைக்கிறது.
மறக்கலாம். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
அதுதான் உண்மை. கடக்க வேண்டிய தருணம்
இது. மிக நன்றி மா.