Blog Archive

Wednesday, March 18, 2020

எல்லோரும் நலமாக வாழவேண்டும்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  நலமாக வாழவேண்டும்.
நல்  வாழ்வு சிறக்கட்டும் 



இந்தக் கிருமி, வந்திறங்கிய நாளிலிருந்து 
காதுகள் புளித்துப் போகும் விவரங்கள்.

பள்ளிக்கூடப் பிள்ளைகள் ப்ளே டேட் வைக்கக் கூடாது.
தினப்படிப் பாடங்கள்.
அடிக்கடி பள்ளியிலிருந்து வரும்  ஈமெயில்.
லீவும் இல்லாமல், விளையாடவும் 
முடியாமல் அடக்கி வைக்கப் படும் சக்தியை இந்தக் குழந்தைகள் 
என்ன செய்யும்.?

கைகளில்  அலைபேசியைப் பார்த்துப் பார்த்து 
அசராமல் விளையாட்டு.
இரண்டுங்கெட்டான் வயசு.
இதமாகச் சொன்னாலாவது கேட்கும்.
முரட்டுத்தனம் அவர்களிடம் எடுபடாது.
இளங்கன்று அல்லவா.

பக்கத்து வீட்டில் ஏற்கனவே உடல் முடியாத
கணவனும் மனைவியும். ஒரு பாட்டியும்,
இரண்டு பதின்ம வயதுப் பெண்களும்.
அதற்கு அடுத்த வீட்டில் கலகலப்பான  இன்னோரு குடும்பம்.

எல்லாரும் இந்த சமயத்தில் வெய்யில் அடித்தால் 
போதும் ,சைக்கிளில் வலம் வருவார்கள்.
இன்று இந்தக் கிருமி எல்லோர் வாழ்க்கையையும்
புரட்டிப் போட்டு விட்டது.
வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் பாடும் சிரமம்.
கவனமாகக் கை கழுவ வைத்து,
ஊட்ட சாப்பாடு கொடுத்து, 
அவர்கள் மூட் ஸ்விங்கைச் சமாளித்து,

அப்பப்பா என்று அசர வைக்கிறது.
நம் ஊரிலும்,கண் நோய் வந்திருக்கிறது, பொன்னுக்கு வீங்கி வந்திருக்கிறது,
அம்மாவின் பார்வை விழுந்திருக்கிறது.
இந்த நோய் பரப்பும் பயம் போல் அப்போது இல்லை.
இடைவிடா தியானம், இறைஅருளில் நல்ல நம்பிக்கை
எல்லாம் பொறுமையைக் கொடுத்தது.
இப்பொழுதும் என் வரையாவது அந்தப் பாடங்களைப் பின் 
பற்ற வேண்டும்.
எத்தனையோ மருந்துகள் சொல்லி இருக்கிறார்கள்.
மனதுக்கு ஔஷதம் இறை நாமம்.
உடலுக்கு மஞ்சள் தண்ணீர்.
குடிக்க.
சுத்தம் சுத்தம் சுத்தம்.
இதையும் கடப்போம். அத்தனை கடவுளர்களும் வைத்தியர்களாக
 நம்மைக் கரையேற்றுவார்கள்.

17 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

நல்ல எண்ணங்கள் நம்மை சுற்றி இருக்கும் தீமைகளை வதம் செய்து நம்மை காக்கும் என்பது குறித்த பதிவு அருமை.

தங்களின் கூற்று உண்மைதான்.. குழந்தைகள் பாவம்...! எதையும் புரிந்து கொள்ள இயலாமல் வீட்டிற்குள் சிறையாக நாட்களை கடத்துகிறார்கள்.

/இதையும் கடப்போம். அத்தனை கடவுளர்களும் வைத்தியர்களாக
நம்மைக் கரையேற்றுவார்கள்./

ஆம்.. கடவுளின் நாமாவளிகள் இந்த கொனோரா கிருமியிலிருந்து அனைவரையும் காப்பாற்றும் என மனப்பூர்வமாக நம்பிக்கை கொள்வோம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Angel said...

மகளுக்கும் யூனிவர்சிட்டி மூடிட்டாங்க .வீட்டுக்கு வந்துட்டா ஏப்ரல் எக்ஸாமுக்கு படிக்கிறா .அதுவும் ஆன்லைன் எக்ஸ்சாமாம் .அடிக்கடி வாக் போகும் என்னை வீட்டில் இருக்க சொல்லிட்டார் கணவர் .ஜன்னல் வழியே  பறவைகளையும் அணில்களையும் ரசித்துக்கொண்டிருக்கின்றேன் வல்லிம்மா .எல்லாருக்கும் பிரார்த்திப்போம் . இதுவும் கடந்து போகும் .

ஸ்ரீராம். said...

இது மாதிரி ஒன்றை இதுவரை பார்த்ததில்லை.   இன்று வந்திருக்கும் கூகுள் அழிக்கும் முன் படியுங்கள் என்கிற பார்வேர்ட் பயமுறுத்துகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலா ஹரிஹரன்,
நமக்கு இறையைத் தவிர வேறு ஏது கதி.
மிக அவசரம் என்றால் ஒழிய டாக்டரிடம்
வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
அவசரம் வரக்கூடாது என்றே வேண்டிக் கொள்கிறேன்.

எந்த நாளும் இறைவனின் கருணைக் கண்கள் நம்மேல்
இருக்கட்டும்.
நீங்களும் பத்திரமாக இருங்கள் அம்மா.
அழகான கருத்துப் பரிமாற்றத்துக்கு மிக நன்றி.
வாழ்க நலமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்., மகள் வந்துவிட்டாளா. நிம்மதி.
நம் கண்முன்னே குழந்தைகள் இருக்க வேண்டும் . தாயின் கவனிப்பு
அவர்களைக் காக்கும்.
எங்கள் பேரன் சான்ஃப்ரான்சிஸ்கோவில் இருக்கிறான்.
அவன் ஒப்பந்தப்படி இன்னும் இரு வாரம் இருக்கிறது.

தனியாக அவனுக்காகப் பிரார்த்தனைகள் செய்கிறேன்.

யுனிவர்சல் வெல் பீயிங்க் நடக்கட்டும். இறை நம்மைக் காப்பார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் படித்தேன். கெடுவான் கேடு நினைப்பான் என்பதில் நமக்கு நம்பிக்கை இருக்கிறது.

பாணாசுரன் கதையாக அழிக்க நினைத்தவர்கள்
அவர்களுக்கு உண்டானதைப் பெறுவார்கள்.

எத்தனை பெரிய அழிவுகள் மா.
இறைவன் காப்பான்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

வல்லிம்மா துணிவே துணை... வருவதை ஆராலும் தடுக்க முடியாது, வராததை ஆராலும் கொடுக்கவும் முடியாது, இதுவும் ஒரு வித்தியாசமாக இருக்கு, எல்லோரும் வீட்டில் இருப்பதுவும் ஒரு மகிழ்ச்சிதானே.. மாத்தி யோசிப்போம் மகிழ்ச்சியாக இருப்போம்ம்.. நல்லதே நடக்கும்..

நெல்லைத் தமிழன் said...

வல்லிம்மா... இந்த வாட்சப் திடீர் டாக்டர்கள் தொல்லை தாங்கலை.

எப்படா எதுடா கிடைக்கும் என்று காத்திருந்து ஏகப்பட்ட மெசேஜுகளைத் தட்டிவிட்டுடறாங்க.

இவங்க மட்டும் ஒழுங்கா தங்கள் வேலையைப் பார்த்தால் நாடு எவ்வளவு முன்னேறும்...

துரை செல்வராஜூ said...

இந்த வைரஸின் கொட்டம் சீக்கிரமே அடங்குவதற்கு வேண்டிக் கொள்வோம்...

இறைவன் அருள் புரிவான்...

கோமதி அரசு said...

இந்த கஷ்டமான வேளை விரைவில் கடக்க வேண்டும் அதிரா சொல்வது போல் குடும்பத்துடன் அனைவரும் இருப்பது ஒரு மகிழ்ச்சி.

எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்த்னை செய்வோம், வந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுவோம்.
நம்மால் முடிந்தது அதுதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா,
நமக்குத் துணிவே துணை. நடுங்கிக் கொண்டிருந்தால் வேலை நடப்பது எப்படி.
இதை நேர்கொண்டு எதிர் நோக்கும் வைத்தியர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.
அவர்கள் நலத்துக்காகவாவது நாம்
கவனம் வைக்கணும்னு தோன்றுகிறது.
நம்ம ஊரின் நெருக்கடி அறிந்ததே. ஏகப்பட்ட மக்கள் கூடுவது வழக்கம்.
அதை எல்லாம் தவிர்த்தால் சீக்கிரமே விரட்டி விடலாம்
இந்தக் கொடூரத்தை. நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
அதுவும் இந்த மூச்சி இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்.
வைடரஸ் இருக்கா இல்லியான்னு தெரிஞ்சுடும்னு சொல்றதைப் பார்த்தால்
இர்ரிடேட்டிங்கா இருக்கு.
ப்ராணாயாமம் செய்யுங்கோன்னு சொன்னால்
பரவாயில்லை.
தடி தண்டல் ஞாபகம்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.,
நீங்கள் சொல்வதுதான் உண்மை.

அனைவரும் வீட்டில் இருப்பாதால்
போக்குவரத்தில் சிக்குவது நின்று விட்டது.
இப்பொழுது குளிரும் நிறைய இருப்பதற்கு,
கூடி இருந்து நிதானமாக உண்டு,
வேலைகளைச் செய்வதும் இனிமை.

இப்படியே தொந்தரவில்லாமல் கடக்க வேண்டும்.
கட்டுப்பாட்டுக்குள் இருப்பது நமக்குத் தெரிந்த விஷயம் தானே.
நன்றி மா. குழந்தைகள், அனைவரும் நலம் பெறட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
இது போல சமயங்களில் நாம் நம் எல்லைத் தெய்வங்களை வணங்குவோம்.
இறை வணக்கம் என்றும் பொய்த்ததில்லை.
நன்றி ராஜா.
அம்பிகை காப்பாள்.

மாதேவி said...

இதுவும் கடந்து போகும் என நம்பிக்கை கொள்வோம். திங்களில் இருந்து இங்கும் ஆபீஸ் வேலையை வீட்டில் இருந்து செய் என்றாகிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
நல்ல செய்திதான். வீட்டில் இருந்தே
செய்ய முடியுமானால் அதுவே உசிதம்.
பத்திரமாக இருக்கவும்.

வெங்கட் நாகராஜ் said...

இதுவும் கடந்து போகும்.

நலமே விளையட்டும். விளைய வேண்டும். ஆண்டவன் துணை இருக்கட்டும்.