வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
டொரன்டோ நகரம்.
எல்லோரும் நலமாக வாழவேண்டும்.
டொரன்டோ நகரம்.
இரவு உணவுக்கான. விடுதியில் கேட்ட பாடல். கிரீஷ் தனியாக வரவில்லை. தன் சகோதரியையும் அழைத்து. வந்திருந்தான். இந்து, கனேடியர் ஒருவரைத் திருமணம் செய்து டொரன்டோவில் வேலை,வீடு இரண்டு குழந்தைகள் என்று இருப்பவர்.
இவர்கள் சந்தித்த சிஎன் டவர் மிக நல்ல ரெஸ்டரான்ட். அங்கிருந்து நகர் முழுவதும் பார்த்துக் கொண்டே உணவு உண்ணலாம். மொத்தத்தில் அந்த இரவு மகிழ்ச்சியாகச் சென்றது.
அக்கா தன் வண்டியில் ஏறிச் செல்லும் வரை. காத்திருந்த கிரீஷ் புன்னகையோடு கிருத்திகா
பக்கம் திரும்பினான். “உடனே போக வேண்டுமா, இல்லை சிறிது தூரம் நடந்து விட்டு வரலாமா.”என்று வினவினான்.
மணி 9 தானே ஆகிறது. நடக்கலாம் உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்று
சொன்னபடி நடக்க ஆரம்பித்தாள்.
கிரிஷ் சந்தன் , ஒரு மஹாராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்தவன்.
பெற்றோர் வெகு நாட்கள் முன்பே கனடா வந்தவர்கள்.
கிரிஷ் பிறந்ததே இங்கே தான்.
அதனால் இந்த நாட்டு பிரஜை ஆனவன்.
குடும்பத்தில் அவனும் ,அக்காவும் தான்.
பெற்றோர் இருவரும் மருத்துவர்கள்.
அவனும், ஃ பார்மசூட்டிக்கல்ஸ் முடித்து , மேலாண் மை க்
கல்வியும் படித்து நல்ல மருந்துகள் செய்யும்
தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். வயது 30ஐ நெருங்குகிறது.
சொல்லி முடித்தவன் அவளை பார்க்க,
இயல்பாக தன்னை ஈர்க்கும் அவன் புன்னகையை ரசித்தவளாகத்
தன்னைப் பற்றிய அத்தனை விவரங்களையும் சொன்னாள் .
சங்கடமாக இருந்தாலும் எதையும் மறைக்க விரும்பவில்லை.
தான் காதலித்தவன் ஏற்கனவே திருமணமானவன்
என்று தெரிந்தபோது, தனக்கு ஏற்பட்ட கசப்பை,
அவள் முகம் இப்போதும் காட்டியது.
ஒரு நிமிடம் கிரிஷ் அவள் கைகளைப் பற்றி,
விடுவித்தான்.
''மன்னிக்கணும் கிருத்திகா , அதை மறந்து விடுங்கள்.''
"நாம் நம்மையே மன்னிக்காவிடில் வாழ்வதே பாரமாகிவிடும்,
இனி வரும் காலம் நன்றாக இருக்கட்டும்''
என்று சொன்னவன் நாம் திரும்பலாமா ,
நாளை மதியம் நாம் மீண்டும் சந்திக்கலாம்.
வேறு சிந்தனை இல்லாமல் தூங்குங்கள்,
என்று மென்மையாக அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான்.
உணர்ச்சி மிகுதியில் கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள்,
மிக மிக நன்றி,
நாம் திரும்பலாம் . சீ யு ,என்று கைகளை அசைத்தவாறே
தன் வண்டியில் ஏறி நிதானமாக ஓட்டிச் சென்றாள் .
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிரிஷ்
சட்டென்று தன கைபேசியில் ,அவளுக்கு இரவு வணக்கம் என்று
செய்தி அனுப்பினான்.
வண்டியில் ஒளிர்ந்த அந்த செய்தி ,மனதை லேசாக்க
அவள் வாய் ,சென்ற வருடம் தான் பார்க்க வாய்ப்பு கிடைத்த ஒரு ,
படப்பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தது .
்
நன்மை தந்த நயாகரா |
16 comments:
நல்லதொர் காதல் கீதமாக இருக்கும் போல... இரண்டு பாடல்களும் கேட்டேன் நன்றி அம்மா.
இரண்டு பாடல்களும் அருமை.
கிரிஷ் ஆதரவான தோழமையாக இருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.
பாகுபலியில் இதன் தமிழ்ப் பாடல் கேட்டிருக்கிறேன். பலஹபிப் பாடல் கேட்கவில்லை.
கிரிஷ்- கிருத்திகா நல்லஜோடியாய் இருக்க பிரார்த்திக்கிறேன்,
//பலஹபிப் பாடல்//
பஞ்சாபிப் பாடல் என்றிருக்க வேண்டும்!
இனிய காலை வணக்கம். அன்பு தேவகோட்டைஜி.
பாடல்களைப் போலவே கதையும் இனிமையாக முடியட்டும். நன்றி மா.
கதை இனிமையாக முடியுமா இல்லை மற்றுமொரு ஏமாற்றத்தைத் தந்துவிடுமா?
இனிய காலை வணக்கம் கோமதி மா.
நல்ல படியே நடந்தது. கொஞ்சம் உறவுகளில்
சங்கடம் இருந்தது.
அன்பு ஸ்ரீராம், இங்கே நிறைய இந்தியக் கடைகளில் கேட்டதால் பதிந்தேன்.
பிரச்சினையில்லாமல் திருமணம் நடக்கட்டும். நன்றீ மா.
எழுத்துப் பிழைகள் எனக்கும் ஏகத்துக்கு வருகிறது.
அதனால் புரிகிறது மா.
அன்பு முரளிமா
நல்லதையே நினைக்கலாமே. நடந்து முடிந்ததால்
நம்பிக்கையோடு சொல்லலாம். நன்றி மா.
கிரிஷ் - கிருத்திகா நலமுடன் வாழட்டும்...
இனிய ஜோடிதான். மகிழ்ச்சியாக வாழட்டும்.
கிரீஷும், கிருத்திகாவும் இணைந்து மகிழ்வோடு வாழுவார்கள் என எண்ணுகிறேன். பாடல்களைக் கேட்கவில்லை. பின்னர் கேட்கிறேன்.
அன்பு துரை,
நல்ல உள்ளங்கள் இணைவதில் தடை இருக்கக் கூடாது.
நன்மை பொலியட்டும்.
அன்பு மாதேவி நன்றி மா.
நல்லதே எழுத நன்மையே விளையும் என்று நம்புவோம்.
அன்பு கீதாமா,
பாடல்கள் எனக்குப் பிடித்ததால் போட்டேன்.
பாஹுபலி பாடல் மிக நல்ல இசை மா.
இருவரும் இணைவது உறுதி.
நன்றி மா.
காணொளி என்னால் பார்க்க முடியவில்லை. மாலை மடிக்கணினியில் தான் பார்க்க வேண்டும்.
நல்லதே நடக்கட்டும் மா.
Post a Comment