Blog Archive

Thursday, February 27, 2020

நம்ம ஏரியாவில் சந்தோஷ இல்லம்

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்   சந்தோஷ இல்லம் 

  பெண் இருக்கும் ஊரில் இது போல , ஆனால் இன்னும் வெளிச்சமாக ,
ஒரு தனி வீடு ஒன்று இன்னும் உண்டு. அது மாறிய கதைதான் இது.
அங்கே ஒரு 85 வயது  தாத்தாவும் அவரது செல்லம் 
ஒரு கோல்டன் ரெட் ரீவர் 
  ஒன்றும்  விளையாடியபடி  காட்சி கொடுப்பார்கள்.
தாத்தா ரொம்பத் தனிமைப் படுத்தப் பட்டதாக உணர்வேன் 

பெண்  நான் பேசுவதை மறுத்துவிடுவாள்.
நம்  ஊர் மாதிரி இல்லைம்மா இங்கே.
இவர்கள் மனவலிமை  கொண்டவர்கள்.
கவலைப் படாதே ''  என்பாள்.

இரண்டு வாரங்ள் கழித்துப் போன பொது 
அங்கே ஆம்புலன்ஸ்  நிற்பதை பார்த்தோம்.

நான் நினைத்தேன் ,தனியா இருக்காரே, என்ன ஆச்சோ என்று நான் கவலைப் பட மகள் 
இந்த ஊர் மனிதர்கள் திடமானவர்கள் மா ஒன்றும் கெடுதல் இருக்காது என்றபடி சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

ஆம்புலன்சில் இருந்து ஒரு  முகம்  பெண்ணைப் பார்த்துக் கை 
காண்பித்துச் சென்றது.
''ஓஹோ, நம்ம ரஞ்சனி மா, தாத்தா ராஷ் காப்லி  மருத்துவ மனைக்குப் போகிறார்  என்றாள்  பெண்.
ரஞ்சனி எங்கள் சப் டிவிஷனில் இருக்கும் பெண்தான்.

அவளிடம் தொலைபேசிய பொது ,
தாத்தா மயக்கமாகி விழுந்து விட்டதாகவும்  எப்பொழுதும் கழுத்தில் அணிந்திருக்கும் அலார்ம் ஹாஸ்பிடலில் ஒலித்ததால் உடனே 
வந்ததாகவும் சொன்னாள் .
கால்  கணுக்கால்  பிசகி நினைவு தப்பி இருக்கிறது.
ரத்த அழுத்தம் அதிகமாகி,  
சின்ன ரத்த அடைப்பு இருப்பதாகவும். அவருக்கு,
அறுவை சிகித்சை செய்யப்பட்டு,
அடுத்த நாள்  முதல் பத்து நாட்கள்.
அவர் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும் 
என்றும் 
அவர் மகன்  நியூயார்க்கில் இருந்து  வருவார் என்று செய்திகளை 
பகிர்ந்து கொண்டாள் .






.

'' நீ தான் அந்தப் பக்கம் அடிக்கடி போவியே 
இரண்டு வாரத்தில்  தாத்தா வெளியில்  உட்கார்ந்திருப்பார் பார் "
என்று பேசி முடித்தாள்  ரஞ்சனி.

பேரனின் இசை குழு பங்கேற்கும் நிகழ்ச்சிக்குப்  போகும் வழியில் 
ரஞ்சனி  சொன்னது போலவே தாத்தா வெளியில் 
காலை நன்றாக நீட்டிக் கொண்டு  
உட்கார்ந்து , தன்  செல்லத்தின் 
 தலையைத் தடவிக் கொடுத்தபடி உட்கார்ந்திருந்தார்.

முகம் தெளிந்திருந்தது .
உள்ளிருந்து  ஒரு  பெண்  அழகாக மூடப்பட்ட தட்டில் 
ஏதோ  ஒரு பழச்சாறு கொண்டுவந்து கொடுத்ததைப்  பார்த்தபடி கடந்தோம்.

Image result for old house with trees around
ஆம் .வசந்தம் வந்தே விட்டது. Image result for Old man with dog

தாத்தாவுக்குப் பணம் பிரச்சினை இல்லை.

மருத்துவ மனையில்  படுத்திருந்த போது ,
தன மன
 நிலையையும் மேம்படுத்திக் கொண்டார். இரண்டு வருடங்களுக்கு முன் மனைவி மறைந்தது அவரை  இந்த  உயிர்ப்பில்லாத வாழ்க்கையில் அமர்த்தி விட்டது.

அவரது  தமக்கை அவருடன் வந்து இருந்தார்.
அவரும் தன இடத்துக்குத் திரும்பி விட்டார்.
ஒரே மகன், 45 வயதில்  மறு  மணம்  முடித்து  
தன வாழ்க்கையை,அனுபவத்துக்கு கொண்டிருந்தான்.
அவனைப் பொறுத்தவரை, 
'அப்பா   வலிவுள்ளவர். வாழ்வை சமாளித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை.
அவனுக்கிருந்தது. 'அதற்கு மேல் அவன் வாழ்வு அவனுக்கு 
முக்கியமானது.

மருத்துவ மனையில் இருக்கும்போது   வீட்டுக்கு வேண்டும் 
எது மாற  வேண்டும்  என்றெல்லாம்  யோசிப்பது அவருக்குப்  பிடித்த பொழுது போக்கானது.
உடனே செயலில் இறங்கினார்.

அவருக்குத் தெரிந்த மெக்சிகன் தோட்டக்காரரை 
வரவழைத்து 
அந்தப் பெரிய தோட்டத்தை ஒழுங்கு படுத்த சொன்னார்.
உடலில்  தெம்பு ஏற ஏற 

அவரது சிந்தனைகளும்  சுறு சுறுப்படைந்தன .
அவரைப் பார்க்க வந்த செல்லத்தின் அன்பும் 
அவரை ஊக்கப் படுத்தியது.

அடுத்து என்ன என்று யோசிக்க வைத்தது.
வீட்டுக்குப் புது  மேக் ஓவர் எனப்படும் ,வெளிப்பூச்சு, புது ஜன்னல் 
கதவுகளுக்கு வர்ணங்கள், புது சிட்  அவுட் ,

வீட்டுக்குப் பின்னால் மக்காச்ச்சோளம்  பயிரிடப் பட்டது.

அவருக்கு உதவியாக வந்த  கரேன்  ,
தன்  முனைப்போடு   கவனம் செலுத்தி  
பல பூக்கும் செடிகளை  வண்ணங்களின் கோலாகலமாகப் 
பாதை எங்கும் நட  வீடே  பளபளப்பாகியது.

ஏப்ரில் சென்று மே  வந்ததும்,
மகன்  பார்க்க 
வந்தான்.  பேய்ப்பங்களா என்ற  பெயர்  மறைந்து 
சந்தோஷ இல்லம்  என்ற பெயரைத் தரித்து நிற்கிறது 
இப்போது அந்த வீடு.

பகல் வேலைக்கு கரேன்  உதவியும் ,இரவில் 
 பிலிப்  என்ற  40 வயது மனிதரும் துணை 
இருக்க, அங்கே நர்சரி  ஒன்றை ஆரம்பிக்கப் 
போகிறாராம் தாத்தா ஜேகப் .

Image result for CORN FIELDவாழ்க வளமுடன்




















6 comments:

ஸ்ரீராம். said...

பாராட்டுகள்...  பாசிட்டிவாக ஒருகதை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஶ்ரீராம். அந்த ஜேகப் தாத்தா உண்மையாகவே சோளம் பயிரிட்டிருக்கிறார்.

நலமாக இருக்கட்டும்.

கோமதி அரசு said...

அருமையான கதை.

இப்படி வயதானவர்கள் எல்லாம் மனதிடமாக இருக்க வேண்டும்.
சந்தோஷ இல்லம் மகிழ்ச்சியை அள்ளித்தரட்டும்.
செல்லத்தோடு, மற்றும் வந்து பார்த்துக் கொள்ளும் உறவுகளுடம் மகிழ்ந்து இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
பேய்க்கதை எழுத தெரியவில்லை.:)
சரி தெரிந்ததை எழுதலாம் என்று பதிவிட்டேன்.
இந்த தடவை அவரைப் பார்த்தால் நன்றாக இருக்கும்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

பேய் பங்க்ளாவினை சந்தோஷ இல்லமாக மாற்றிய கதை.

அங்கேயும் இப்போது தான் படித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மாதேவி said...

சந்தோச இல்லம் மகிழ்ச்சி.