வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் .
தவம் 4 தொடர் கதை ஜனவரி 2020
செய்தி கேட்டதும் மனம் கலங்கியது என்னவே உண்மைதான்.
மாலதி உடனே எழுந்தாள்.
அண்ணா எனக்கு தஞ்சை செல்ல வேண்டும் . உதவி செய்வாயா.
என்றாள் .
அவசரப் படாதே மா.
நாளை காலை அவனை நான் சந்திக்கிறேன். ஒரு நாள் பொறு .
தகப்பனுக்கும் மகனிடம் உரிமை உண்டு "
என்று சொன்னதும் மாலதி சீறினாள் .
''அம்போன்னு விட்டுட்டுப் போனாரே .
அப்போ இந்தக் கடமை காணமப் போயிருந்ததோ ?
இப்போ உரிமை வந்து திடீர்னு எப்படி வந்தது?"
என்று க் கூறிய தங்கையின் முகத்தைப் பார்த்துப்
பயந்து போனான் அண்ணா.
"ஆத்திரப் படாதேம்மா. அவன் அப்போது சட்டப்படி ஒத்துக்கொண்டான். பையன் மைனர் என்பதால். இப்போதும் அவனுக்கு 18 வயது ஆனாலும் '
தந்தையாக ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.
பையனாக இஷ்டப்பட்டால் அது வேறு வழி.
நம் குழந்தை அப்படிப்பட்டவன் இல்லை.
பதறாத காரியம் சிதறாது. ''
என்ற அண்ணனை கண் சிமிட்டாமல் பார்த்தாள் .
அண்ணா அந்த மனிதனைப் பற்றி உனக்குத் தெரியாது.
குழந்தை வசந்துக்கு இரண்டு வயதாகும் போது வந்தாரில்லையா.
குழந்தையைத் தூக்கி வைத்துக் கொஞ்சக் கூட இல்லை.
இன்னொரு காரியம் செய்தார்.
எனக்குத் தெரியாமல் , தனக்கு இனிமே குழந்தை வேண்டாம் என்று
சர்ஜரியும் செய்து கொண்டார்.
எனக்கு அப்போது தெரியவில்லை.
அதே ஆஸ்பத்திரிக்கு வேறு ஒரு செக்கப்புக்குப்
போன பொது எனக்குத் தெரிந்த ஆயா , ஏம்மா ஒத்தை பிள்ளையோடு இப்படி செய் து கிட்டீங்க.என்று ஆதங்கப் பட்டுக் கொண்டாள் .
வாய் பேசாமல் வந்துவிட்டேன்.
அதன் பின் கடிதம் எழுதுவதையும் விட்டு விட்டேன்.
இப்போது அங்கேயும் பிள்ளை இருக்காது,.
திடிரென்று பிள்ளை மேல் பாசம் வந்து ,
உன்னை நான் அமேரிக்கா அனுப்பறேன்னு சொன்னால் கூட
நான் ஆச்சரிய பட மாட்டேன். அவன் ஒத்துக்க கொள்வான் என்று
நான் நம்பவில்லை. 18 வருடங்களாகத் திரும்பிப் பார்க்காத பிள்ளையின் மீது திடீர் பாசம் ஏன் "
எனக்கு என் பிள்ளைக்கிட்டப் பேசணும் அண்ணா.
அதுவும் இந்த ஆரம்ப காலத்தில் அவன் மனம் கலங்கக் கூடாது.
அவன் முழுமனதுடன் படிக்க வேண்டும்.
என் பையன் என்னை விடப் பெரிய தியாகி. ஊரில் எத்தனையோ முறை கேள்விகளுக்கு ஆளாகி இருக்கிறான்.
குமரன் அவனைப் பார்க்க வேண்டும் என்றால் என்னுடன் தான்
பார்க்க வேண்டும். என்று திட்ட வட்டமாகப் பேசியவளின் உடல் நடுங்கியது.
அதிர்ச்சியுடன் தங்கையைப் பார்த்த அண்ணன்
செந்தில், தங்கையை ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
இதெல்லாம் ஏன் அம்மா மறைத்தாய் என்று கேட்டதும்,
மாமனாருக்குத் தெரியும் அண்ணா.
அவர்தான் என் பெயரையும், வசந்த் பெயரையும்
நம் அப்பா பெயருடன் இணைத்தார்.
நான் மாலதி மகாதேவன்,
அவன் வசந்த் மஹாதேவன் என்று முடித்தாள்.
அப்பாவுக்குத் தெரியுமா என்ற போது
தலையை அசைத்தாள். பெயர் மாற்றத்துக்கு அவர் சம்மதித்துதான் இது நடந்தது.
மற்றது தெரியாது என்றாள் .
நான் எங்கே போயிருக்கேன்மா. இப்படி ஒரு
சமாச்சாரம் நடந்ததே தெரியாமல் போச்சே என்று கலங்கிய அண்ணனைப் பாசத்துடன் பார்த்தாள் தங்கை .
ஞாபகம் இல்லையா அண்ணா, 'அண்ணி வீட்டில் அவள் தந்தைக்கு வரக்கூடாத நோய் வந்து நீங்கள் எல்லோரும்
போராடிக் கொண்டிருந்தீர்களா.
நல்ல வேளையாக அந்த மாமா பிழைத்தெழுந்தார்.
உனக்கு அனாவசிய அழுத்தம் தரவேண்டாம் என்று தான்
சொல்ல வில்லை. ''
தங்கையின் பெருந்தன்மையையும், தன் கவனக் குறைவையும்
யோசித்தான். இது போல சுதந்திரமாகச் சிந்திக்கும்படி வளர்த்த தன் பெற்றோரையும் நினைத்துப் பெருமைப்பட்டான்.
அண்ணா, வா என்னுடன் சாப்பிடு என்று வலுக்கட்டாயமாக அவனை உட்கார வைத்தாள்
மாலதி.
உனக்குப் பழக்கப் பட்ட கணேஷ் டிராவல்ஸ் வழியாக நான் போகிறேன் அண்ணா.
நீ உன் வேலையில் என்ன ஏற்பாடு செய்ய வேண்டுமோ அதை
செய்துவிட்டு வா. இரண்டு நாளில் திரும்பிவிடலாம்.
லட்சுமி ஹோட்டலில் உனக்கு அறை , பதிவு செய்கிறேன் அம்மா
நானும் தங்க சவுகரியமாக இருக்கும்
என்றபடி அவன் சாப்பிட்டு முடித்த போது
மணி எட்டு ஆகி இருந்தது.
தந்தைக்கும் மனைவிக்கும் தொலைபேசிவிட்டு,
டிராவல்ஸ்க்கும் ஒரு நல்ல அம்பாஸடர் வண்டியும்
வண்டி ஓட்டியாக செல்வம் என்பவரையும் கேட்டுக் கொண்டான்.
அவர்கள், அவனது அவசரத்தை உணர்ந்தவர்களாக
ஒரு மணி நேரத்தில் அனுப்பினார்கள்.
கவலையோடு தங்கையைப் பார்த்தவனை
மாலதி ஆறுதல் சொன்னாள் .
இன்னும் ஏழு மணி நேரத்தில் அங்கே இருப்பேன்.
முருகன் துணை. என்று பழனி தண்டாயுதபாணியின் படம் முன் நின்று வணங்கினால்.
கண்களோரம் கண்ணீர் சேர்ந்தது.
"என் குழந்தையை என்னுடன் நீ வைப்பாய் என்று
தெரியும் முருகா. என்னைச் சலனம் அண்டாமல்
அருள்."
என்று திருநீற்றை நெற்றியில் இட்டுக் கொண்டாள் .
இரண்டு நாட்களுக்கான துணிமணிகள் அடங்கின சிறு பெட்டியும்
கைப்பையில் மற்ற எல்லாம் பணம் உட்பட எடுத்துக் கிளம்பும் தங்கையைப் பெருமையுடன் பார்த்தான்.
நான் குமரனைக் கவனித்துக் கொள்கிறேன் அம்மா. நீ கவலையில்லாமல் கிளம்பு.
நான் கொடுத்த பெட்டியையும் எடுத்துக்கொள்
என்று அவள் வாசலை அடைந்ததும்
வீட்டுக் கதைவை சாத்திப் பூட்டினான்.
சரியாக நாலு மணிக்கு இன்னும் இருள் பிரியாத காலையில்
லட்சுமி விடுதியில் இறங்கினாள் மாலதி.
பணம் கனக்குப் பார்க்க, வண்டி ஒட்டி செல்வத்தைப் பார்க்க, வேண்டாம் அம்மா.
மீண்டும் சென்னை திரும்பும் வரை உங்களுடன் இருக்கச் சொன்னார் உங்கள் அண்ணன் .என்கிறார் அவர்.
சட்டென்று ஒன்றும் சொல்ல முடியாமல் ,தலை அசைத்த, நீங்கள் சிறிது ஓய்வெடுங்கள்.
எட்டு மணி அளவில் மருத்துவக் கல்லூரிக்குச் செல்வோம்
என்ற படி விடுதிக்குள் புகுந்தாள் மாலதி.
.

13 comments:
பதற்றமாக இருக்கிறது.
நல்ல முடிவாக வர வேண்டும்.
மாலதி பாவம்.
மாலதியின் மனம் போல நல்லதே நடக்கும் என நம்புவோம். இன்னொரு குழந்தை வேண்டாம் என அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக மாலதி கூறுகிறாள். இது எப்போனு தெரியலை. குமரன் வேறொரு பெண்ணுடன் வாழ்வது தெரிந்த பிறகா? அப்படி எனில் மாலதியே அவனை விரும்பி இருக்க மாட்டாளே! அறுவை சிகிச்சைக்கு அவசியமே இல்லாமல் போயிருக்கும்!
முடிவு சுபமாகட்டும் அம்மா.
அன்பு கோமதிமா, நன்மையே நோக்கியே நாம் நகருவோம். வரும் தடைகளை நீக்க, தெய்வ அருளும் தக்க யுக்தியுமே தேவை.
அன்பு கீதாமா,
அவள் ஏதோ சரி இல்லை என்று சந்தேகித்தாள. இதுதான் என்று தெரியவில்லை. அவன் துபாயில்
ஆரம்பித்தது இதற்குப் பிறகே. இந்தப் பொய் ஒரு ஆரம்பம்.. மாலதியின் தணிவு அவளைக் காக்கும். நன்றி மா.
அன்பு தேவகோட்டை ஜி. அப்படியே நடக்கட்டும்.
உடனே எடுத்தாலும் தீர்க்கமாகமுடிவு எடுக்கும் மாலதி. பாசமான அண்ணன். அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளக்காத்திருக்கிறேன். வசந்த்தின் ரீயாக்ஷனேன்னா என்று அறியவும் ஆவல்.
அனைத்துக் குறிப்புகளுக்கும் மிக நன்றி கீதா மா.
அன்பு ஸ்ரீராம்,
இனிய மனைபுகு விழாவுக்கு வாழ்த்துகள்.
குடியரசு தின வாழ்த்துகள்.
புலி விரட்டினாலும் தாய் மான் தன் குட்டியைக் காக்கப் போராடுவது சகஜம்தானே.
அவளுக்குக் கணவனையும் தெரியும்,
தன் குழந்தையும் தெரியும்.
வெற்றி பெறுவாள் மா.
நல்ல முடிவாக அமையட்டும்.
நன்மையே விளைந்தது அம்மா. மாதேவி.
நல்லதொரு முடிவு எடுத்தார் - உடனடியாக மகனைப் பார்க்க வேண்டும் என்று.
நல்லபடியே நடந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. தொடர்கிறேன்.
நல்லதே நடந்தது மா அன்பு வெங்கட்.
Post a Comment