Blog Archive

Sunday, January 12, 2020

மார்கழி 27,கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.


திருப்பாவை 27 ஆம் நாள் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!


கோதையும் கோவிந்தனும் நேருக்கு நேர்  பேசிக்கொள்ளும் பாவனையில் அமைந்திருக்கும் பாசுரம். 
கோவிந்தா உன்னை 
வந்து அடைந்திருக்கிறோம் .
அப்படி உன்னை அடையாதவர்களை நீ வென்று விடுகிறாய்.

சீருடைய  ,சீலம்  நிறைந்த  கண்ணா,
உன்னைப் பாடி ,பறை மற்ற  வாத்தியங்கள் கொண்டு நாங்கள் செய்த துதிக்கு நீ  சம்மான மாகச் செய்ய வேண்டியது என்ன தெரியுமா.

ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதர் நினைவு வருகிறது.
ஆனந்த  லஹரி யில் 
அம்பாளை வர்ணிக்கும்  அற்புதமாக  வார்த்தைகள் காதில் விழும்.அம்மா  ,உங்கள் நெற்றியில் காஷ்மீராக குங்குமம், பாதங்களில் ரத்தின  பதித்த கொலுசு, இடையில் தங்க ஒட்டியாணம்,
கைகளில்  மரகதம், சிகப்பு கற்கள்  அமைந்த கங்கணங்கள் ,
வாயில் தாம்பூலம் , இடுப்பில் பட்டாடை,கண்களில் மை  என்று 
மனமுருகச்  சொல்வார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அது போல நம் ஆண்டாளும் கண்ணனிடம்  கைகளுக்கு,கால்களுக்கும் ஆபரணங்கள் , தோள்வளை , தோடுகளும் ,செவியில்  அதன் மேல்  அணியும் செவிப்பூக்களும் வேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.
பலவகை  அலங்காரங்களும்  நாங்கள் செய்து கொண்டு 
புத்தாடையும்  உடுத்தி  வருவோம்.அதன்  பின் பாலில் செய்த 
சர்க்கரைப் பொங்கல் , அதில்  சேர்த்த நெய்  ,கைகளில் வைத்து மூடினால் உடன் உருகி முழங்கை வரை   வழிய  
உன்னுடன் சேர்ந்து கூடியிருந்து  மகிழ வேண்டும் .

இதுவே  எங்கள்   விருப்பம். நீ நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறாள்.
கோவிந்த நாம சங்கீர்த்தனம்  கோவிந்தா கோவிந்தா.
  









15 comments:

Geetha Sambasivam said...

வருஷா வருஷம் மூட நெய் பெய்து முழங்கை வழிவாரும். இந்த வருஷம் பண்ண முடியாது. நேற்றுத் திருவாதிரைக்களி அதோடு மாட்டுப்பெண் பௌர்ணமி பூஜைக்குச் சர்க்கரைப் பொங்கல்னு செய்தாச்சு. அடுத்து போகி, பொங்கல் வரதால் வேண்டாம்னு வைச்சுட்டோம். :))))

ஸ்ரீராம். said...

சிறப்பு அம்மா...   இப்போதுதான் அனந்தராம தீக்ஷிதர் பற்றி கீதா அக்கா பதிவில் நினைவுகூர்ந்து விட்டு வருகிறேன்...    நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள்.

நெல்லைத்தமிழன் said...

சர்க்கரைப் பொங்கலை விளக்கி, பக்திக்கு முன்னால் உணவு ஆசை வரச் செய்துவிட்டீர்களே வல்லிம்மா

துரை செல்வராஜூ said...

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் அருளால்
கோடி என நலங்கள் கூடி வரட்டும்...

தைப்பொங்கலுக்கு கட்டியம் இன்றைய நெய்ப்பொங்கல்...

கோவிந்தோ கோவிந்த...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், கீதாமா, சர்க்கரை மிகுந்த நாட்களில் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும்.
இங்கே என்ன ,யோசித்து வைத்திருக்கிறாரோ கோவிந்தன். அவன் மட்டும் எனக்குப் போதும்,மற்றபடி எதுவும் வேண்டாம் என்று நினைக்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் ,கீதா பதிவுக்கு இன்னும் போகவில்லை.

இன்று எல்லாம் தாமதம். ஸ்ரீ சேங்காலிபுரம் சொன்ன, ஆதி சங்கரரின் ஆனந்த லஹரி, ராமாயணம், குருவாயுரப்பன் பாடல்கள்,நாராயணியம் எல்லாம் அவ்வளவு சுகமாக இருக்கும்.
வீனஸ் காலனியில் நடக்கும் காலாட்சேபத்துக்கு Salem மாமியார் அழைத்துச் சென்றீருக்கிறார்.
நன்றி மா.

KILLERGEE Devakottai said...

காணொளி கேட்டேன் நன்று அம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா. விரிவாகக் கூட எழுதவில்லையே.
அக்கார அடிசிலை விளக்கத்தான் முடியுமா.
நன்றி மா. எல்லோரும் நன்றாக உண்டு சுகமாக இருக்க என் பிரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு துரை. வரும் நாட்களில்
பால் போன்ற தெளிவான நிம்மதி
துன்பம் எல்லாம் அகன்று நிம்மதி நிலவ பிரார்த்திப்போம்.

கோமதி அரசு said...

பாடலும் விளக்கமும் அருமை.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தன் எல்லோருக்கும் மனம், உடல் ஆரோக்கியம் தர வேண்டும்.
கோவிந்தா கோவிந்தா!

வெங்கட் நாகராஜ் said...

நெய் முழங்கை வழிவார... ஆஹா... என்ன ருசி! :)

சிறப்பான விளக்கம். பாசுரமும் கேட்டு ரசித்தேன் மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு தேவகோட்டை ஜி.
நலமுடன் பொங்கல் விழா சிறக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,
மார்கழியின் இனிய பாடல்.
உடலில் இனிப்புத் தங்கிவிட்டால்
ருசிக்க முடியாவிட்டாலும் பாசுரத்தின் மகிமை கோவிந்தனுடன்
ஒன்று சேர வைக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இந்தப் பாசுரமே,
அக்காரக்கனி என்று திருப்பாவை உபன்யாசகர்
சொல்லுவார்.
வெல்லம் உருகிப் பாலுடன்,அன்னத்துடன் கலந்து நெய் மழை பொழிந்தால், முழங்கை வரை ஓடத்தான் செய்யும் மா. நன்றி. வாழ்வு இனிக்க கோவிந்தன் துணை.

மாதேவி said...

இனிய பாடல்.