வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்ததுகள்.
எந்நாளும். இறை நாளாகக் கடக்க வேண்டும். இறைவன் அருள்
இவ்வருடமும். எவ்வருடமும் என்றும் இனிமையோடு நிறைந்திருக்க வேண்டும்
மிக மிக முக்கியமான நாயகனாய் நின்ற நந்தகோபன் பாசுரம்
இத் தனை நாட்களும் பாவைப் பாட்டு பாடி பத்துத் தோழியரையும் அழைத்துக் கொண்டு,
ஆயர்பாடியாக வில்லிபுத்தூரையே நினைத்துக் கொண்டு
வடபத்ர சாயி கோவிலையே நந்தகோபன் மாளிகையாக வரித்துக்,
கொண்டு.
சென்று கோவில் காக்கும் ஜெய விஜயர்களை விளிக்கிறாள்.
ஆயர்பாடியில் தலைவன் நந்தகோபன் .
தங்கள் கிராமத்தையும் கண்ணனையும் காப்பதற்காக
எப்பொழுதும் தயாராக இருப்பானாம்.
அதனால் அவனுடைய மாளிகைக்கு காவலர்களும் ஈ ,எறும்பு கூட உள்ளே நுழையமுடியாமல் கண்ணும் கருத்துமாகக் காப்பார்களாம்.
நம் கோதை அண்ணாந்து கோவில் கொடிமரத்தைப் பார்த்து வணங்கி,
காப்பானையும் அணுகி இதமாக வேண்டுகிறாள்.
அழகிய மணிகள் அலங்கரிக்கும் கதவுகளைக் காப்பவரே,சற்றே
கதவைத் திறவுங்கள். நாங்களோ ஆயர் சிறுமியர் ,எங்களால் கண்ணனுக்கு ஒரு தீங்கும் நேராது..
எங்களுக்கு பரிசுகள் கொடுப்பதாகக் கண்ணன் நேற்றே
வாக்கு கொடுத்துவிட்டான்.
குள்ளக் குளிர நீராடித் தூய்மையாய் வந்திருக்கிறோம்.
அவனைத் துயிலில் இருந்து எழுப்பவே வந்திருக்கிறோம்.
அன்பினாலும் பக்தியாலும் வந்த எங்களை மறுத்துப்
பேசாதே அம்மா என்று காப்போனிடம் சொல்லி,
அளவிறந்த அன்பினால் கண்ணனைப் பாதுகாக்கும் இந்தக் கதவுகளைத் திறப்பாய் என்று வேண்டுகிறாள்..
அன்னை கோதை காட்டிய வழியில் நாமும் கோவிலுக்குள் செல்வோம்.
இன்று அக்கார அடிசில் செய்வார்கள்.
கண்ணனை ப் போலவே அதுவும் இனித்து இருக்கும்.
அனைவர் வாழ்வும் இனிமை பொங்க இருக்கட்டும்.
தாயே சரணம்.

6 comments:
அருமையான பாசுரம். நல்லதொரு எளிமையான விளக்கம். அழகான மனதைக் கவரும் காணொளி. நன்றி.
அன்பு கீதாமா.உண்மையிலேயே மிகச் சிறந்த பாசுரம் சென்னையில் புத்தாண்டு பிறந்து விட்டது.:)
அன்பு வாழ்ததுகள்.
அழகிய விளக்கம்.
புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா.
பாடலின் விளக்கமும் பாடல் காணொளியும் அருமை.
என் நாளூம் இறைநாளாகட்டும் படித்து மனம் குளிர்வோம்.
அக்கார அடிசில் போல இனிப்பான பாசுரம்.
உங்கள் விளக்கமும் சிறப்பு. தொடரட்டும் பாசுரச் சுவை. நானும் தொடர்கிறேன் மா...
Post a Comment