வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
பாட்டுடன் ஆரம்பித்தது அவர்கள் உறவு.
அதுவும் சென்னையிலிருந்து ஒருத்தியும்,
மைசூரிலிருந்து ஒருவனுமாக ரசனையுடன்
பரிமளிக்க நட்பு.
ஹரனுக்கு இந்துஸ்தானியில் பிடித்தம்.
மஹிகாவுக்கு கர்நாடகம். இருவருமே அவரவர் இசை உலகத்தில்
முன்னேறிக் கொண்டிருப்பவர்கள்.
ஒரு குளிர்ந்த மார்கழியில் இசை விழாவின் போது
ராக தேவதைகளின் சஞ்சாரத்தில்
சென்னையே மிதந்திருக்கும் பொது
மீண்டும் மீண்டும் பல சபைகளில் சந்திக்கும்
வாய்ப்பு கிடைக்க, சங்கீத சங்கதிகளை பரிமாறிக் கொண்ட போது
மனங்களும் நெருங்கின.
ஜுகல் பந்தி போல மஹி வீட்டுக்கு அவன் வந்த போது
இருவரும் பாடல்களில் உள்ள ஒற்றுமை வேற்றுமை எல்லாம் பாடி அவர்களும் மகிழ்ந்து, குடும்பத்தினரையும் மகிழ்வித்தனர்.
மைசூருக்குத் திரும்பும்போது ,மஹியின் மனதையும் எடுத்துக் கொண்டே சென்றான்
ஹரன் .
இருவருமே முதுகலை ப் பட்டம் அந்த வருடம் முடித்திருந்தனர்.
இசை ஆர்வம் அவர்களது இதயத் துடிப்பாக இருந்தது.
இசைத்துறையில் இன்னும் பலவித வகைகளில்
முன்னேற ஆவல் இருந்தது.
இருவரின் பெற்றோர்களுக்கும் இவர்களது அன்பு
தெரிந்திருந்தது. அவர்கள் மறுப்பு சொல்லவில்லை.
தொழில் முறையில் வாழ்க்கை இணையுமா. இரு வேறு துருவங்கள் போல வேறு வேறு
இடங்களுக்குச் செல்லுபவர்கள்.
இப்போதிருக்கும் அன்பும் காதலும் திருமணம் வரை செல்லுமா .
திருமணத்திற்குப் பிறகு நிலைக்குமா என்றெல்லாம் கவலை .
சம்பந்தப்பட்ட ஜோடி எதிர்காலத்தைப் பற்றி நினைக்கவில்லை.
இசைக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள்
இப்படி ஒரு ஒற்றுமையான நட்பு கிடைத்ததையே கொண்டாடினார்கள்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் திருமணத்துக்கு இடம் இல்லை.
பிறகு பார்க்கலாம் என்ற எண்ணம் இருவருக்குமே இருந்தது.
இந்த நிலைமையில் தான் இருவருக்குமே அமெரிக்க சான்ப்ரான்ஸிஸ்கொ இந்தியன் இசைவிழாவுக்கு
அழைப்பு வந்தது.
ஹரனுக்கு கர்நாடக இசையிலும் பரிச்சயம் இருந்ததால்
தயாராகவே இருந்தான். அங்கு வசிக்கும் பல இந்தியர்களுடன் அவனுக்குத் தொடர்பும் நட்பும் இருந்தது.
மஹிக்கு இது முதல் வெளிநாட்டுப் பயணம்
அவள் அம்மாவும் ஆவலுடன் கிளம்பினார்.
அவர்களின் உறவினர் ராமச்சந்திரன் குடும்பமும் ஒரு இசைக் குடும்பம் .
திரு ராமச்சந்திரன் மகன் பரணி குமார், இளங்கலை முடித்து,முதுகலை பட்டத்திற்கு ஸ்டான்ப்போர்டில் சேர்ந்திருந்தான் .
அவனும் தங்கையும் சிறு வயதிலிருந்தே., பாடுபவர்கள்.
தீபாவளித்த திரு நாளுக்கு முன்னதாக
சென்னையிலிருந்து புறப்பட்ட மஹியும் அம்மாவும் மும்பை வந்து ஹரன் குடும்பத்தினருடன்
சிறிது நேரம் செலவழித்து நீண்ட பயணத்துக்குத் தயாராகினர்.
மீண்டும் தொடரலாம்.

17 comments:
மிக அருமையாக ஆரம்பித்திருக்கிறீர்கள். அடுத்து என்ன என ஆவல்! பரத்குமாரா? ஹரனா? யார் மஹியின் வாழ்க்கையில் இடம்பெறப் போகிறார்கள்?
கீதாமா, இங்கே. சரஸ்வதி பூஜை பண்டிகை. தேவி உபாஸகர் வீட்டுக்குப் போய் வந்தோம். வீடு கிரி ட்ரேடர்ஸ் போல இருந்தது. அவர்கள் விட்டுப் பெண்ணின் வீடியோ உங்களுக்கு அனுப்பி இருந்தேன் . அங்கே கேட்ட விஷயம் கதைக்குக் கருவானது. நன்றி மா.விஜய தசமிக்கான வாழ்த்துகள் .
தொடக்கம் அமர்க்களம் தொடர்கிறேன் அம்மா.
மஹிமா என்று பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். மஹிகா புதுசு! மேலும் ஆரம்பம் கீதா ரெங்கன், பானு அக்காசேர்ந்து எழுதிய கதையை நினைவூட்டுகிறது!
காதல் திசை மாறும் சாத்தியக்கூறு?
அன்பு தேவகோட்டைஜி,
இனிய காலை வணக்கம். ஆர்வத்துடன் படித்ததற்கு மிகவும் நன்றி.
நல்ல படியாக எழுத வேண்டும்..
அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
எழுதும்போது அந்தக் கதையும் நினைவுக்கு வந்தது.
அதுபோல இல்லை. கண்டது கேட்டது ,ஊரில் நடந்தது
எல்லாம் கல்லந்து எழுதுகிறேன் மா. எப்படிப் போகிறது என்று பார்க்கலாம்.
அருமையான துவக்கம். நிச்சயம் தொடர வேண்டும். தொடர்கிறேன்.
அன்பு ஜோஸஃப் ஜி,
தாங்கள் வந்து படித்தது நிறைவு.
சுவை கூட்டி எழுதப் பார்க்கிறேன். நன்றி.
அம்மா ஆஹா தொடர் கதையா வாவ்!! சூப்பரா இருக்கும்மா...செமையா என்ன அழகா எழுதறீங்க...ம்யூஸிக்கல் தீம் போல!! செம செம தொடக்கம்..அசத்தலா இருக்கு. ரொம்ப ரொம்ப ரசித்தேன்...
ரெண்டு ஹீரோ வராங்க போல...ம்ம் ரெண்டுபேருமே பாடுறாங்க..ம்ம் மஹிமாவுக்கு யாரோ?!!!
சீக்கிரம் அடுத்த பகுதியும் போடுங்கம்மா...இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும் அழகன் பாட்டு!!
கீதா
அன்பு கீதா மா. இனிய காலை வணக்கம்.
இசையின் ரசிகை தான் மா. இலக்கணம் தெரியாது.
அதனால் இசைவாக எழுதுவதற்குக் கதையை மட்டுமே நம்பி இருக்கிறேன்.
மஹிகா, ஹரனின் சினேகிதி.
அந்த பரணி குமார் அவளுக்கு சிறுவயதிலிருந்தே தெரிந்த தோழன். போட்டி இங்கே
இல்லைமா.
ஒரு கட்டுப்பாடுக்குள் அடங்குகிறதா.
இல்லை கட்டுக்கடங்காமல் போகிறதா என்று பார்ப்போம்.
இசைபோல இனிதான ஆரம்பம். ரசித்திடுகிறோம் .
வல்லிம்மா.. நல்ல தொடக்கம். இது மாதிரி மட்டும் எழுதிட்டு, என்னைத் தொடரச் சொன்னால் நல்லா எழுதுவேன்.. புதுசா கதை எழுதுவதை விட. ஸ்ரீராம் இதைச் செய்ய மாட்டேங்கறாரே.
1. ஹரன் மஹி திருமணம். பிறகு பிரிவு.. பரணியுடன் மீண்டும் திருமணம்.
2. மஹி பரணியைத் திருமணம். ஆனால் பிறகு பரணி, அவள் ஹரனுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று மெதுவாக அவள் இசை வாழ்க்கை சிதைவுறுகிறது. நல்ல உறவு இருந்தபோதும் பரணியின் சந்தேகம் அவள் வாழ்க்கையைச் சிதைக்கிறது.
3. பரணி மஹி திருமணம் நடக்கவேண்டும் என்று இருவர் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். பரணி, அப்படி நடந்தால் அவளுடைய இசை வாழ்க்கை நன்றாக வளராது, ஹரனுக்கே திருமணம் செய்துகொடுங்கள் என்று முன்னின்று முனைந்து அவர்கள் திருமணம் நடந்து இருவரும் பெரிய நிலைக்கு வர உதவுகிறான்.
4. திருமணம் ஆகும்வரை ஹரன் மஹி மனதால் இணைந்தது, திருமணத்துக்குப் பின், தான் இசையில் மேலே வரணும்னா நீ வீட்டைப் பார்த்துக்கணும் என்று சொல்லி, மஹியின் இசை வாழ்வை முடித்துவைக்கிறான் (இதுக்கு மஹாராஜபுரம், கிருஷ்ணா உதாரணம் இருக்கு)
இப்படி நிறைய யோசிக்கலாம்
அன்பு மாதேவி.
கதை என்பதால் மாற்றம் வேண்டும். நீங்கள் ரசிப்பதே
எனக்குப் பெருமை. இசை எல்லோருக்கும் பிடித்த பகுதி இல்லையா.
அப்பாடி! முரளிமா எத்தனை அணுகு முறை ஒரு கதைக்கு.
so many angles in a life.
உங்கள் எண்ணங்களும் பல சிறகுகளை விரித்திருக்கின்றன.
இப்படியா அப்படியா என்பதற்கு நிறைய உதாரணங்கள் நம் கண் முன்னே நடமாடுகின்றன.
நடமாடிய இசை தெய்வங்களும் உண்டு.
திருமணம் வேண்டாம் என்று இசையையே பற்றிக் கொண்டவர்களும் உண்டு.
இத்தனை விரிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்
நீங்களே ஒரு கதை இந்த ரீதியில் எழுதலாம். நாம்
ஸ்ரீராமையே கேட்கலாமா. ஒவ்வொரு வாரமும் ஒருவர் எழுதினால்
வேற வேற ரசனை கிடைக்கும்.
கதையும், பாட்டும் அருமை அக்கா.
திருப்பங்களுடன் கதை பயணிக்க போகிறதா?
நீரோடை போல தேமே என்று போக போகிறதா? தொடர்கிறேன்.
அன்பு கோமதி மா, நன்றி மா.ஊருக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகள் நடுவில் எழுத ஆரம்பித்து விட்டேன். திருப்பம் இருந்தால் சுவாரஸ்யம் இல்லையா!
நல்லதொரு ஆரம்பம்.
இப்போது தான் தொடரின் பகுதிகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுவரை வெளியிட்ட பகுதிகளைப் படிக்க வேண்டும்.
தொடர்கிறேன்.
Post a Comment