Blog Archive

Friday, October 11, 2019

சங்கீதம் இணைக்கும் சப்த ஸ்வரங்கள் 4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

சங்கீதம் இணைக்கும்   சப்த ஸ்வரங்கள் 









ஏதுக்கித்தனை மோடி தான் உமக்கு எந்தன் மீதய்யா."

இந்தப் பாடலுக்கு அபிநயித்தது  தன்யாவும்  ,மாநசியும் .

பழைய சாகித்தியங்களை எடுத்துக் கையாள்வதில் இருவருக்கும் மிக ரசனை.
அவர்களின் குரு இந்தியாவிலிருந்து ஸ்கைப்பில்  சொல்லிக்கொடுப்பதையும்,
உள்ளுரிலேயே கற்றுக்கொள்ளும்   வசதியும் இருவருக்கும் இருந்தது.

ஆர்வமும் , இளவயதிலிருந்தே  கற்று வந்த கலை யும் அவர்கள் 
நடனத்தை   சிறக்கச் செய்தன.

சபையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த 
மஹி,ரகுநந்தன்,ஹரன் ,பரணி,நிகிதா  அனைவரும் அசந்துதான் போனார்கள்.

அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி  ஒரு கவலை வந்தது.
தங்கள் தங்கள்  கலையை எப்படிக் காப்பாற்றி முன்னேறுவது.

அதற்கு எந்த வித ஆதரவு பெற்றோரிடமிருந்து கிடைக்கும்.?

எல்லோருக்கும் இப்போதே அவர்களது  திருமணம் 
பற்றிய  ஒரு வித தீர்மானம் வந்து விட்டது.

அதிலிருந்து தங்கள்  முன்னேற்றம் பாதிக்கப் படுமா.

மனம் செய்து கொண்டபிறகு தன்னையும் தன்  கலையையும் 

ரசிக்கும் ,ஆதரிக்கும் துணைவனோ, துணைவியோ கிடைப்பாளா.

அவர்களது  தீவிர சிந்தனைக்கு ஒரு சுருதி சேர்ப்பது போல 
நிகிதாவின் வீணைக் கச்சேரி   தொடங்கியது.




நிகிதாவுக்கு மிகவும் பிடித்த குரு  திரு ராஜேஷ் வைத்யா.

அவரது  திரை இசை ஆல்பம்  அனைத்தும் அவளிடம் இருந்தன.
அவளது அமெரிக்க  ஆசிரியை,  திருமதி ராஜேஸ்வரி பத்மநாபன் 
திருமதி கீதா பென்னட்டின் மாணவி.

அவளுக்கு கர்நாடகம், மெல்லிசை எல்லாவற்றிலும் பாண்டித்யம் பெற ஆவல்.
இந்தியா செல்லும்போது  திரு ராஜேஷ் வைத்யாவைச் சந்திக்காமல் வரமாட்டாள்.



அவர் அவளுக்குச் சொல்லும் அறிவுரை, சங்கீதத்தை இரண்டு வகையிலும் அனுபவிக்க வேண்டும். உனக்கும், கேட்பவர்களுக்கும் 

ஆனந்தம் தர வேண்டும். அதே சமயம் பாரம்பரியத்தையும் கைவிடக் கூடாது.
இரண்டுக்கும்  முக்கியத்துவம் நீ தர வேண்டும் என்பதே.

கலை விழாவின் இரண்டாம் நாள் 
அனைவரும்   ஒன்று  சேர்ந்து   உரையாட அமர்ந்தார்கள்.

அவர்களது சிந்தனை எதிர்காலம்., அதை  எப்படிக் கொண்டு செல்வது.

இசையைத்தவிர, நடனத்தைத்தவிர வேறு  உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தர 
முடியுமா. அதில் ஆர்வம் வந்தால் ஏதாவது  ஒன்றை தியாகம் செய்ய வேண்டுமா.

இரண்டுக்கும் முழு மனதோடு ஈடுபாடு காட்ட முடியுமா 
என்பதில் அவர்களது உரையாடல் இருந்தது.

மஹியும் ஹரனும் முதன் முதலாக  ஒரு தயக்கத்தை உணர்ந்தனர்.

நண்பர்களாக அன்புடன் பழகுவது வேறு, திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வீட்டுக் கொடுத்து வாழ எத்தனை 
தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்  கணவறையே இழந்த முன்னணிப் பாடகியும் நினைவும் வந்து அவர்களைத் திகிலில் ஆழ்த்தியது.

தொழிலை  

  ஒரு ஆத்ம அர்ப்பணமாகச் செய்யும்  பாக்கியம் இதுவரை கிடைத்திருக்கிறது.

அது தொடர வேண்டுமானால்  ,நாம் எந்த மாதிரி முடிவெடுக்க வேண்டும்.
இன்னும் இரண்டு முயன்று வருடங்களுக்குள் 
பெற்றோர் ,தங்கள் திருமணத்துக்கு முயற்சி ஆரம்பிப்பார்கள்.

திடீரென்று வந்த செய்தி  கதிரி ஸ்ரீ கோபால்நாத் இறைவனடி  சேர்ந்தார் என்பது அவர்களை 
திசை திருப்பியது.
அவர்களது தோழி சிகாகோவில்  அவரிடம்  சாக்ஸபோன் கற்று வருவதும் தெரியும்.

என்ன இது ஏன்  இது போல ஆச்சு  என்று வருந்தியபடி அவருக்கு மனமார அஞ்சலிகள் செலுத்தினர்.


ஒரு உன்னத கலைஞருக்கு நம் அஞ்சலிகளை ச் செலுத்தலாம்.

ஐயா நீங்கள் வழங்கிய இசை எங்கள் மனதை 
 அமைதி அடையச் செய்து குதூகலிக்க வைத்தது.
உங்கள் இசை  என்றும் நிலைத்திருக்கும் .நன்றியுடன்.














26 comments:

KILLERGEE Devakottai said...

தொடருக்கு பொருத்தமான காணொளிகள் கேட்பதற்கு ரசனையாக இருக்கிறது.

ராஜேஷ் வைத்யாவின் கச்சேரிகள் விரும்பி பார்ப்பேன் அம்மா.

நெல்லைத்தமிழன் said...

என்னது.... அவங்க கதை, நிகழ்காலக் கதையோடு பயணிக்குது.. இது தொடரை பாதிக்குமே... நீங்க சொல்லப்போறது, முன்னால நிகழ்ந்ததா இருக்கும், ஆனா கத்ரி கோபால்நாத் இன்றைக்குத்தானே மறைந்தார்?

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, நன்றி மா. எனக்கும் மிகவும் பிடிக்கும் . நவ நவமாக. இசை. மனம் லேசாக விடும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, இந்தக் கதை இப்போது நடப்பதுதான் மா. அண்மையில். பாதிக்கப்பட்ட. கலைத்து தம்பதிகள் வைத்தே ஆரம்பித்தேன். மா.

Thulasidharan V Thillaiakathu said...

மனம் செய்து கொண்டபிறகு தன்னையும் தன் கலையையும்

ரசிக்கும் ,ஆதரிக்கும் துணைவனோ, துணைவியோ கிடைப்பாளா.//

இது மிக மிக மிக மிக மிக மிக என்று இன்ஃபினிட் மிக வைச் சேர்த்துக் கொள்ளலாம். இசை என்றில்லை எந்தத் துறையில்ம் கொஞ்சம் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கும் பெண்ணிற்கு...

அம்மா மிக மிக ரசிக்கிறேன். நானும் பானுக்காவும் எழுதிய போது எனக்கு வேறொரு கதை மனதில் தோன்றியது. ..வழக்கம் போல் பாதியில் ஹிஹிஹிஹிஹி....

கீதா

துரை செல்வராஜூ said...

கத்ரி கோபால்நாத்..
இறைநிழலில் இன்புற்றிருக்கட்டும்...

உன்னத கலைஞருக்கு நம் அஞ்சலி..

ஸ்ரீராம். said...

ரொம்பப் பக்கத்து  நிகழ்வுகளைத் தொட்டுப் பயணிக்கிறது கதை.  பிரபல பாடகியின் கணவர் மறைவே புதிய செய்தி என்று நினைத்தால் கத்ரி கோபால்நாத் செய்தி இன்னும்.....

அவர்கள் குழப்பம் தீரட்டும்.  நல்ல முடிவு அமையட்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

பொருத்தமான பாடல்கள்,...

ராஜேஷ் வைத்யா எனக்கு மிகவும் பிடித்த இசைக்கலைஞர்.

என் மகன் வீணை கற்றுக் கொண்டான். அவனும் ஒரு சினிமா பாடல் (கொஞ்சம் ராகம் பேஸ்ட் பாடல்) கேட்டால் உடனே வீணையில் ஸ்வரம் எடுத்துவிடுவான். கீதம் கற்ற போது. மைன்ட் பாடி கோஆர்டினேஷனுக்கு அவனுக்கு மிகவும் உதவியது. நாங்கள் அடையாரில் இருந்தப்ப ராஜேஷ் வைத்யாவும் அங்குதான் அப்போது இருந்தார். அப்போது எங்கள் ஏரியாவில் நம்ம மூதாதையரின் நடமாட்டம் அதிகம் என்னைக் கூட ஒரு முதாதையர் காலில் ஆழமாக கடித்து..ரேபிஸ் ஊசி போட்டுக் கொண்டு ட்ரீட்மென்ட்.ஹா ஹா ஹா அது ஒரு நிகழ்வு...அப்புறம் வைல்ட் லைஃப் டிப்பார்ட்மென்டிலிருந்து கூடு வைத்தார்கள் பிடிக்க. அவர் சிக்குவாரா...ஹா ஹா...அப்புறம் ஒரு வி ஐ பி வீட்டில் கூண்டு கேட்கிறார்கள் என்று கூண்டு வைத்த பணியாளர் வந்து சொல்ல மகனும் அவருமாக அந்த வி ஐ பி வீட்டுக்குக் கொண்டு வைக்கச் சென்றார்கள்....பார்த்தால் ஆஹா அது ராஜேஷ் வைத்யா....மகனுக்கு ஒரே சந்தோஷம்...நாம் தேடிக் கொண்டிருந்தவர் எங்கிருக்கார்னு தெரிஞ்சு போச்சு...அவரிடம் போய்க் கேட்கலாம் கற்றுத் தருவாரா என்று நினைத்து இவன் பரீட்சைகள் முடிந்ததும் போய்க் கேட்கப் போனால் அவர் வீடு மாறியிருந்தார்!!!!!!!! இவன் ஹம்ஸத்வனியிலேயே வகுப்புகளை 12 ஆம் வகுப்பு வரும் வரை தொடர்ந்தான் அப்புறம் முடியவில்லை...

கீதா

Geetha Sambasivam said...

மிக அருமையாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள். ஸ்விட்சர்லாந்து கிளம்பும் முன்னர் முடிந்து விடுமா? ஓர் கலையில் முழுமையாக ஈடுபட்டவர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சரியாக அமைவது என்பது அவர்களுக்குக் கிடைக்கும் வாழ்க்கைத்துணையின் மனோபாவத்தைப் பொறுத்து இருக்கிறது. இங்கே யார் யாருக்கு எப்படி வாய்க்குமோ?

கதையோடு கூடவே கத்ரி கோபால்நாத்துக்கும் அஞ்சலி செலுத்தியது இன்னும் சிறப்பு.

Thulasidharan V Thillaiakathu said...

அட! அம்மா இப்போதைய நிகழ்வும் சேர்த்துவிட்டீங்களே!! சூப்பர்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா நீங்க இப்ப பயணத்துக்கான ஏற்பாடுகளில் இருப்பீங்களே அதுக்காகக் கதையை அவசர அவசரமாக முடிக்கக் கூடாது சொல்லிப்புட்டேன் ஹா ஹா ஹா ஹா

இப்போதுள்ள யுவ யுவதிகள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலும் முடிவுகள் எடுப்பதிலும் நன்றாகச் சிந்திக்கின்றார்கள். பிடிக்கவில்லை ஒத்துவரவில்லை என்றால் தைரியமாக முடிவும் எடுத்துவிடுகிறார்கள். அவர்களின் சிந்தனைகள் வேறு லெவலில் இருக்கின்றன..

அங்கு வளரும் குழந்தைகள் பெரும்பாலும் நட்பு வட்டத்தில்தான் இல்லையா நெருங்கிய உறவுகள் என்று இல்லாததால் அவர்களுக்குச் சில வம்புப் பேச்சுகள் க்ரிட்டிசிசம் எட்டுவதில்லை...இந்தியாவுக்கு வரும் போது அபூர்வமாக வரும் குழந்தைகள் என்று இருக்கும் சில நாட்களில் உறவினர் கொண்டாடிவிடுகிறார்கள். எனவே அவர்களுக்கு உறவுகளின் வம்புப் பேச்சுக்குள், கமென்டுகளுள் சிக்குவதில்லை. அதனால் இருக்குமோ அம்மா? முந்தைய பதிவில் நீங்கள் அங்கு வளரும் குழந்தைகள் பற்றி சொல்லியிருந்தீங்கல்லியா அதனால் தோன்றியது

ஆனால் இங்கு வளரும் குழந்தைகள் உறவுகளின் கமென்ட்ஸ், வம்பு, க்ரிட்டிசிசம் இவற்றில் சிக்கி சிலர் உறவுகளிடம் இருந்து விலகி இருக்கும்படியாகவும் நேரிடுகிறது...நாம் வளரும் போது அப்படி இல்லையே பலரும் பலதும் பேசினாலும் நாம் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்று பக்குவப்பட்டு உறவையும் மெய்ன்டெய்ன் செய்கிறோம் இல்லையா...

கீதா

டிபிஆர்.ஜோசப் said...

ஸ்கைப்பில்  சொல்லிக்கொடுப்பதையும்,
உள்ளுரிலேயே கற்றுக்கொள்ளும்   வசதி//

விஞ்ஞான வளர்ச்சி இதுபோல் எத்தனையோ வசதிகளை கலைஞர்களுக்கு பெற்று தந்துள்ளன.

அருமையாக வளர்கிறது கதை..

தொடர்கிறேன்.

டிபிஆர்.ஜோசப் said...

கதையோடு கூடவே கத்ரி கோபால்நாத்துக்கும் அஞ்சலி செலுத்தியது இன்னும் சிறப்பு.//

ஆமாம். அவருடைய இசைக்கு மயங்காதவர்கள் இருக்கமுடியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இசையால் இணைந்தாலும் அவர்கள் வாழ்வும் குண நலன் களைப் பொறுத்தே அமையும் இல்லையா.

தாராள மனம் இருந்தால் மனைவியப் பாராட்டும் கணவன்
அவள் முன்னேற்றத்தையும் வரவேற்க வேண்டும்..
சேரும்போது இருந்த சுருதி, கலைந்தால் வாய் மூடி மௌனியாகவே இருக்கு வேண்டியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு துரை. அவர் ஆத்மாவுக்கு என்றும் அமைதி கிடைக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
கணவர் மறைந்த சோகத்திலிருந்து மீண்டு வந்த இசைக்கலைஞர் பற்றியே அவர்கள் விவாதம். இறுதியாக வந்த செய்தி ஸ்ரீ.கத்ரி கோபால் மறைவு.
எல்லோரையும் பாதிக்கும் நிகழ்வு.
என் பதிவிலும் அதைப் பதிய ஆசை கொண்டு பதிந்து விட்டேன். நமக்கு வரலாறு வேண்டுமே.
நன்றி மா. சந்தோஷமாக இருக்க வேண்டும் இந்தக் குழந்தைகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா கீதா மா. உங்கள் பையன் தான் எவ்வளவு டாலண்ட்டட்.
ஆமாம் ராஜேஷ் வைத்யா ஒரு யுனீக் காரக்டர்.
விரலெல்லாம் சங்கீதம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாம்மா,
நீங்கர் இவ்வளவு ரசித்துப் படிப்பதே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
எந்தத் திருமணத்திலும்
விட்டுக் கொடுத்தல் இருந்தால் வாழ்க்கை.
நீங்கள் சொல்வது போல பெண்ணுக்குக் கணவன் சப்போர்ட்,
கணவனுடைய இசையில் மனைவிக்கு ஈடுபாடு.
போட்டி இல்லாமல் இருப்பது.

கத்ரி கோபால் நாத் சிடி எல்லாம் சென்னையில் இருக்கு.:(
திடீர்னு கேட்டதும் வருத்தமா இருந்தது.

அவர் நாங்கள் இருக்கும் வீதியில் ஒரு மாணவி அகத்துக்கு வருவார்.
அவருக்கு அமைதி கிடைக்கட்டும். நன்றி கீதா மா. ஸ்விஸ் கிளம்பும் முன்னால்
முடிப்பதா அங்கே போய் முடிப்பதான்னு தெரியவில்லை.

நாளை பெண்ணின் சினேகிதிகள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.
மூன்று நாட்கள் இருப்பார்கள்.
பிறகு வைத்தியர் செக் அப். அடுத்த நாள் சின்னவன் வந்துவிடுவான் என்னை அழைத்துப் போக.
பார்க்கலாம். இன்னும் முடிஸ்சுகள் அவிழ்க்கணும். ஒரு முடிச்சாவது போடணும்:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. சீக்கிரம் முடிக்க முடியாது. பலவித வேலைகள் இருக்கின்றன.

விஷ்ணு,கிருஷ்ணவுக்கெல்லாம், அங்கே வந்தால் பலருடைய லேள்விகளுக்குப் பதிலே தெரியாது.

நீங்கள் சொல்வது மிக உண்மை. உறவுகளின் குறுக்கீட்டால்
எங்கள் குழந்தைகள் கூட மனம் நொந்திருக்கிறார்கள்.

விலகியும் விட்டார்கள்.அவர்கள் அன்பாகக் கேட்கிறார்களா ,குதர்க்கமாகப் பேசுகிறார்களா என்று தெரியாது.

இங்கே அப்படி இல்லை. சுதந்திரம் ஜாஸ்தி.

we are more mature . we do adjust. but youngsters feel the pinch.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் திரு. ஜோஸஃப் சார்.
தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுவது மிக மகிழ்ச்சி சார்.
கதிரி சாரைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
அவர் ஆன்மா அமைதி அடையட்டும்.

மாதேவி said...

ராஜேஷ் வைத்யா எனக்கும் ரொம்ப பிடிக்கும்.

இசை பயணத்தில் தொடர்ந்து செல்வோம்.இணையப் போவது.....யாரோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி. வருகைக்கு நன்றி மா.
மனம் இசைந்தால் மணம் நடக்கும். பார்க்கலாம்.

Bhanumathy Venkateswaran said...

கதை,பொருத்தமான பாடல்கள், சமீபத்திய நிகழ்வுகளின் இணைப்பு என்று கலக்குகிறீர்கள். 

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா. நல்வரவு.
சமீபத்தில் இந்தியாவில் கேள்விப்பட்ட சங்கதியே இந்தக் கதைக்கு ஒரு காரணம்.
உங்களுக்குப் பிடித்திருக்கிறது இன்னும் ஆனந்தம். நன்றி மா. நலமாக இருங்கள்.

கோமதி அரசு said...

கதை மிகவும் நன்றாக போகிறது அக்கா.

//அவர்களின் குரு இந்தியாவிலிருந்து ஸ்கைப்பில் சொல்லிக்கொடுப்பதையும்,//

நிறைய விஷயங்கள் இப்போது உள்ள ந்டைமுறைகளை கதையில் சேர்த்தது அருமை.

//கதிரி ஸ்ரீ கோபால்நாத் இறைவனடி சேர்ந்தார்//

அவருக்கு அஞ்சலிகள்.

வெங்கட் நாகராஜ் said...

கதிரி கோபால்நாத் மரணம் - வருத்தம் தந்த நிகழ்வு தான் மா...

அவர்களுக்குள் பலவித யோசனைகள்... என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

பதிவு மட்டுமே படிக்க முடியும். இணைத்திருக்கும் காணொளிகளை இப்போது பார்க்க இயலாது என்பதால் பிறிதொரு சமயம் தான் பார்க்க வேண்டும்.