Blog Archive

Thursday, September 26, 2019

எதிர்பாராது நடக்கும் அருள்கள் 9

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும் 
எதிர்பாராது  நடக்கும் அருள்கள் 9
++++++++++++++++++++++++++++++++++++



மாதவன், கோபி, பிரசாத்  இன்னும் இரண்டு மூன்று  மாணவர்கள் தமிழ் நாட்டிலிருந்து 

அகமதாபாத்  இந்தியன் இன்ஸ்டிடியூட் மானேஜ் மென்டில் 
இரு வருட  மேல் படிப்புப் படிக்கத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,
மதராஸை வி ட்டுக் கிளம்பினார்கள்.


சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த பாட்டி,
மாதவா, மனசை அங்கே இங்கே அலைய விடாதே. 

ஆறு மாதம் கழித்துத்தான்  உன்னைப் பார்க்க முடியும்னாலே வருத்தமா இருக்கு.
சுருக்க படிப்பை முடித்து வேலை தேடிக்கொள்.

அதுவரை  பாட்டி பொறுமையாகக்  காத்திருப்ப்பேன் என்று 
கண்ணில் வருத்தம் இருந்தாலும் 
சிரித்தபடி வழி அனுப்பினார்.
அம்மா,அப்பா,பாட்டி அனைவருக்கும்  கையசைத்தபடி 
ரயிலில் ஏறினான் ,மாதவன்.


Image result for ahmedabad IIM
அஹமதாபாத் கல்லூரி
வண்டி நகர ஆரம்பித்ததும்
எல்லோர் எண்ணமும் படிப்பை நோக்கி நகர்ந்தன.
தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எழுதின
தேர்வுகளும், நேர்காணலும் ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்தன.

இப்பொழுது  கிட்டத்தட்ட 20 லட்சங்களுக்கு
பெற்றோரிடம் இருந்து   செலவாகிறது என்று நினைக்கிறேன். 50 வருடங்களுக்கு முன் அப்படி இல்லை. மாணவர்களின்
படிப்புத் திறமைக்கும், ஐக்யூ  தரத்துக்கும் ஏற்றவாறு
உதவித்தொகைகளும் கிடைத்தன.

இருபத்து ஐந்து
ஆ யிரம்  ருபாய்களில் படிப்பை முடிக்க முடிந்தது. சிங்கத்தின்  ஒன்றுவிட்ட தம்பி அங்கே படித்தார். அதை ஒட்டி இந்த செய்தியைச் சொன்னேன்.
அந்தப்  பணத்தில் தங்குமிடம், படிப்பு எல்லாம் அடங்கும்.
மாதவனுக்கு இதுதான் மனதில் வந்து கொண்டிருந்தது.
முழுக் கவனமும்  படிப்பில் செலுத்தி  வெற்றி பெறத் தானும் நண்பர்களும்   முயற்சி  செய்ய வேண்டும் .

இதை பற்றி பேசியபடி பம்பாய் வந்து, அஹமதாபாத்துக்கு ரயில்
மாறினார்கள்.
மும்முரமான  கல்வி மாலா கோகிலாவுக்கும் ஆரம்பித்தது.
லேடி டோக் கல்லூரியில்   பொருளாதாரம்  பிரிவில்
இடம் கிடைத்தது.

கோடைக்கானலிலிருந்து மதராஸ் திரும்பின
காவிச்செரி  ஜோஸ்யர், பாட்டிம்மாவையும், வைதேஹியையும் ,
பார்க்க
 மாதவன் படிக்கச் சென்ற இரு வாரங்கள் கழித்து வந்தார்.

அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற பாட்டி,
மாதவன் படிக்கப் போயிருக்கும் விஷயத்தை சொல்ல,அவரும் 
ஆனந்தப் பட்டார்.
நல்ல பையன் நன்கு   முன்னுக்கு வருவான். நல்ல எதிர்காலம் இருக்கு. அப்பழுக்கில்லாத
ஜாதகம் அவனுடையது. நம் மாலா ஜாதகம் போல என்று சொன்னார்.

இதோ காப்பி  கொண்டு வருகிறேன் என்றவாறு உள்ளே சென்றாள்
வைதேஹி.




நிலைமை சாதகமாக இல்லையோ என்றார் காவிசேரி .
பாட்டிற்கு காலையிலிருந்து அசதியாக இருந்தது. செல்லப் பேரனின் 
பிரிவு வருத்தத்தான் செய்தது .

மதுரை சென்று வரலாமோ என்று கூட யோசித்தார்.
"நீங்கள் சொல்லுங்கள். சொன்னபடி கும்பகோணம் எல்லாம் போய் வர முடிந்ததா" என்று கேட்டார் பாட்டி.

எல்லாம் கண்ணன்  கருணை. நல்லபடியாக நடந்தது. என் குரு  நாதரையும் பார்த்து மாலா ,மாதவன் ஜாதகங்களையும் காண்பித்தேன்.
என்றார் .
பாட்டி ஆவலுடன் பார்த்தார். நீங்கள் சொன்னது சரிதான். 
நல்ல பொருத்தம் இருக்கிறது இருவருக்கும். குரு  பலன் 
அடுத்த வருடமே வருகிறது. அடுத்த தையில் 
பொருத்தம் பார்த்து வைகாசியில் திருமணம் நடத்தலாம் என்று குரு சொன்னார் " என்று அவர் சொல்லி முடிப்பதற்கும் வைதேஹி வருவதற்கும் சரியாக இருந்தது.

எனக்கும் கேட்டது மாமா. இப்பதானே படிப்பு ஆரம்பித்திருக்கிறது.

அதற்குள் இந்தப் பேச்சு எனக்கு ஏதுவாகப் படவில்லை.
மேலும் மாலாவைத் திருமணம் செய்ய நாங்கள் இருவருமே சம்மதிக்க மாட்டோம். 
அவளுக்கும் நல்ல இடம் கிடைக்கும் இவனுக்கும் நல்ல பெண் கிடைப்பாள்.

நம்பிக்கை பற்றி பேசவில்லை. அபாயம் என்று தெரிந்த பிறகு 
இதில் பிரவேசிக்க இஷ்டம் இல்லை மாமா. அம்மாவின் ஆசையை எங்களால் நிறைவேற்ற முடியாது. என்று திட்டவட்டமாகப் பேசினாள் .

பாட்டிம்மாவுக்கத் திடீரென்று தலை சுற்றுவது போல் இருந்தது.
மாத்திரைகள் எடுத்துக் கொண்டேனே என்று நினைத்தவள் அப்படியே தரையில் சரிந்தாள்.
அதிர்ச்சி அடைந்த மாமா, பால் கொண்டு வாருங்கள் வைதேஹி, அப்படியே கோவிந்தனையும் அழையுங்கள் என்றார்.
பதட்டத்துடன் ஓடியவள்  கணவனையும் ,அழைத்து குடும்ப டாக்டரையும் அழைத்தாள் .
உடனே வந்தவர்  இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது  டாக்டர் கேவி தி கிளினிக்குக்கு உடனே போகலாம் என்று  மாமாவும் அவருமாகப் பாட்டியை நாற்காலியில் உட்கார வைத்து காரில் ஏற்றிக் கொண்டு விரைந்தனர்.

காவிச்செரி  மாமா, பாட்டியைத் தன சிறு வயதிலிருந்தே அறிவார். அவர் மனமே கலங்கி விட்டது.

ராமஜெபத்தைச் செய்தபடி ,,மயங்கி இருந்த பாட்டியை,மாம்பலம் டாக்டரின்  வைத்தியசாலைக்கு கொண்டு வந்தனர்.
மகா கெட்டிக்காரரான  கேவிடி  
சர்க்கரையும், ரத்த அழுத்தமும் அளவுக்கு மேல் இருக்கிறது.
பாட்டிம்மா இங்கே இரண்டு நாட்கள்  இருக்கட்டும். இதய பரிசோதனை  செய்ய வேண்டும்.
என்றபடி எமெர்ஜென்சி ஊசியைச் செலுத்தினார்.
ரொம்ப  அமைதியானவராச்சே. எப்படி இந்த அதிர்ச்சி என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தார்.
சலனமின்றி 

வெளியே வந்த மாமா, கோவிந்தன் விரைவதை பார்த்தபடி 
அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
மனம் ஜபித்துக் கொண்டே இருந்தது.

அரைமணி நேரத்தில் வெளியே வந்த கோவிந்தனின் கண்கள் கலங்கி  இருந்தன. வெளியே வந்தன.

அம்மாவுக்கு ஏன் இவ்வளவு தீவிர ஆசை.?

வைதேகியும் தான் பொறுமையாக இருக்கக் கூடாதா என்று புலம்பிக் கண்ணீர் வடித்தான்.

"நான் நன்மையை நினைத்து இந்த நல்ல வேலையில் புகுந்தேன்.
கோவிந்தா இனி என் குறுக்கீடு இருக்காது. அம்மா மனம் கோணாமல் நடந்துக்கோ.  மாற்றத்தை பகவானிடம் விடு. பொன்னாவை வரச்சொல்.
அவளைப்  பார்த்தால் அமைதி கூடும் "என்று சொல்லிவிட்டு,
டாக்டரைப் பார்க்க உள்ளே போனார்.

நம்பிக்கை வெல்லட்டும்.










20 comments:

நெல்லைத்தமிழன் said...

நாளென் செய்யும் பாடல் ரொம்ப அருமையா பாடியிருக்கிறார். மனதை மயக்கும் பாடல்.

நெல்லைத்தமிழன் said...

மாலாவைத் திருமணம் செய்வது அபாயம் - இது புரியலை. ஒருவேளை முதல் பகுதிகளில் சரியாக இது சொல்லப்பட்டிருக்குமோ? படித்துப் பார்க்கணும்

நெல்லைத்தமிழன் said...

எங்கள் பிளாக்லேர்ந்து இடுகைக்கு வந்தா error காண்பிக்கிறது. சரி செய்துவிடுங்கள்.

நெல்லைத்தமிழன் said...

சீர்காழியின் காணொளியை மிகவும் ரசித்தேன். நல்ல பாடல். இப்போதான் காணொளில பார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

எதிர்பாராத திருப்பம். படிக்கும் எனக்கே மனம் கலங்குகிறது. பாட்டிக்கு எப்படி இருந்திருக்கும்! என் மாமனார், மாமியாருக்கு, என் பெரிய நாத்தனாருக்கு எல்லாம் ஜாதகமே பார்த்ததில்லை என்பார்கள். என் புக்ககத்து உறவுப் பெண் ஒருத்திக்குக் கேட்டை நக்ஷத்திரம் என்றாலே அலர்ஜி. பார்க்கிறவர்களிடம் எல்லாம் கேட்டை நக்ஷத்திரப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைக்காதீங்க! எங்க வீட்டுக்கு ஒரு கேட்டை நக்ஷத்திரம் வந்திருக்கு! அது போதும் என்பார். இத்தனைக்கும் அந்தக் கேட்டை நக்ஷத்திரப் பெண்ணால் தான் இந்தப் பெண்மணிக்குக் கல்யாணத்திற்கான எல்லா உதவிகளும் கிடைத்தது. கேட்டை நக்ஷத்திரப் பெண் சொந்த மன்னி! ஆனாலும் கொஞ்சம் கூட யோசிக்காமல் கேட்டை நக்ஷத்திரம் வேண்டாம் என்பார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா, இனிய காலை வணக்கம்.

பாடல்கள் என் மனதை சமாதானப்படுத்தும்.
உங்களுக்கும் பிடித்தை எண்ணி மகிழ்ச்சி.

முதல் பகுதியிலேயே மூல நட்சத்திரம்( மாலாவின் நட்சத்திரம்)
பற்றி எழுதி இருந்தேன். அதுதான் தடை என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

மனித மனங்கள் கலங்கும் தன்மை கொண்டவைதானே.
வைதேகியைக் குற்றம் சொல்ல முடியாது.
எங்கள் ப்ளாகிலிருந்து என்னால் வர முடிகிறதே.
இதற்கு என செய்தால் சரியாகும் என்றும் தெரியவில்லை.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா.என்ன வினோதமான உலகம் பார்த்தீர்களா.
உதவியையும் வாங்கிக்கொண்டு
கெடுதலாகவும் பேசும் அந்த உள்ளத்தை என்ன சொல்வது.
என் அப்பாவின் அம்மா ஆயில்யம் தான்.
தாத்தா பாட்டிக்கு ஜாதகம் கிடையாது.
மனப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள் தாத்தா சதாபிஷேகம் செய்து
கொண்ட பிறகுதான் மறைந்தார்.
இன்னோரு அத்தை கேட்டை. அத்திம்பேரும் அவரும்
தீர்க்காயுசுடன் இருந்தே மறைந்தார்கள்.

ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்து வைத்தால் மட்டும் சந்தோஷமாக இருக்கிறார்களா.
வித விதமாகப் போகிறது வாழ்க்கை.

பாட்டி மனம் சரியாகட்டும். தெய்வ நம்பிக்கை நிறைந்தவர்.
நல்லதே நடக்கும்.

ஸ்ரீராம். said...

மிக பொருத்தமான பாடல்...     ஒருவேளை அவ்வப்போது இந்தப் பாடல்கள் எல்லாம் கேட்கும்போது நினைவுக்கு வந்த சம்பவங்களைத் தொகுக்கிறீர்களோ என்றுகூட தோன்றுகிறது!!

ஸ்ரீராம். said...

பாட்டியின் அதிர்ச்சி உடனடி!  அதனாலேயே நல்லது நடக்கும்போலும்.

ஸ்ரீராம். said...

மாதவன் படிக்கப் போகும்போது மாலாவின் நினைவு வரவில்லையா?    அந்த இடத்தில் கற்பனையாக ஒரு டூயட் வைத்திருக்கலாமே...!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். பாடல் வந்த பிறகு நினைவுகள் வருவது மிக சகஜம். ஆனால் இந்தக் கதைக்குப் பொருந்தாது. இதற்காகத் தேடி எடுக்கும் பாடலையே பதிவேன்.
என் பாடல்,என் நினைவு மாலா மாதவனுக்குப் பொருந்தாதே:)

பாட்டிக்கு கட்டாயம் அதிர்ச்சி தான். எத்தனை நாட்களாகக்
கோட்டை கட்டுகிறார் பாவம்.
மாதவன் ராமன் மாதிரி என்று பாட்டி சொல்வார்.
படிப்பு என்றால் படிப்பு மட்டும். நினைவு வராமல் இருந்திருக்காது.
இப்போது நடந்த சம்பவங்களில்
அது விட்டுப் போய்விட்டதுமா.
அடுத்த பதிவில் நல்ல பாடல் பதியலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

MURALI MA,
நாளென் செயும் திருப்புகழ் எங்க பாட்டு டீச்சருக்கு மிகப் பிடித்தது.
நாங்களும் கற்றோம்.
இதுதானே உண்மை. இறை அருள் இருந்தால் மட்டுமே
நன்மை நடக்கும்.

கோமதி அரசு said...

கதை நன்றாக உண்ற்ச்சி பூர்வமாக இருக்கிறது.
பாட்டியின் விருப்பம் நிறைவேற வேண்டும்.

பாடல்கள் மிக அருமை. கேட்டு மகிழ்ந்தேன்.
திருப்புகழ் பாடல் அடிக்கடி சொல்லும் பாடல்.

யாருக்கு யார் என்பதை இறைவன் முடிவு செய்து விட்டால் நாம் என்ன தடுத்தாலும் நடக்கும்.

துரை செல்வராஜூ said...

அருமையான திருப்பாடல்களுடன் இன்றைய பதிவு..

பாடல்களைக் கேட்டு மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைகின்றது..

வாழ்க நலம்...

KILLERGEE Devakottai said...

சீர்காழியின் அற்புதமான பாடலை கேட்க தந்தமைக்கு நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா.
இந்த்ப் பாடலும் வாரியார் சொல்லும் முருகன் பாடல்களும்
மனதுக்கு இதம். இதே போல் தனம் தரும் .அபிராமி பாடலும்.
கண்ணபுரம் பாடல் பதிந்து விட்டுப் பார்க்கிறேன், மகம் கண்ணபுரம் சொற்பொழிவு அனுப்பி இருந்தான்.
தெய்வ அருள் துணை இருக்கும்போது எதையும் கடக்கலாம்.
நம் கர்மவினை நல்லதாக இருக்கணும்.
நல்லதே நடக்கட்டும் மா.நன்றி.நலமுடன் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
இறைவனை மறக்காத என்னாளும்
திரு நாளே. இவர்களுக்கும் இறைதுணை இல்லாமல் எதுவும் நடவாது
என்பதே நிதர்சனம்.
நன்றி மா.

ஜீவி said...

'நாள் என் செயும்?..' போன்ற பாடல்கள் பிடித்துப் போவதற்கு உள ரீதியான காரணங்கள் உண்டு.

வெங்கட் நாகராஜ் said...

அடடா..... பாவம் பாட்டி...

மாதேவி said...

பாட்டியின் விருப்பம் நிறைவேறுமா....