Blog Archive

Saturday, September 21, 2019

எதிர்பாராமல் நடந்தது 6

வல்லிசிம்ஹன்


எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
எதிர்பாராமல் நடந்தது 6

+++++++++++++++++++++++++++++



அடுத்த நாள் அதிகாலையில் கொட்ட ஆரம்பித்த மழை 

கடுமையான மலைச்சரிவுகளை  ஏற்படுத்தி இருந்தது.
சீக்கிரமாக எழுந்து  பஸ்  நிலையத்துக்கு விரைந்தவர்களுக்கு  இன்னும் பல பேருந்துகள் கிளம்பாமல் இருந்தது அதிசயமாக இருந்தது.

பஸ்  போகும் வழியில்  பாறைகள்  விழுந்திருந்தன .
மழை  அதிகமாகப் பெய்ய ஆரம்பித்தது .

மாதவனும்  அவனது நண்பர்களும் திகைத்தார்கள்.
மெயின்  திட்டம் சினிமா பார்ப்பதுதான்.
பிறகுதான் தாத்தா பாட்டி வீடு.

அதுவும் வந்திருப்பதோ 

Image result for Kadhalikka Neramillaiஇந்தப் படம்.  சென்னை தோழர்கள்  மிகவும் சிலாகித்த படம்.   நகைச்சுவை, காதல், புத்தம்புதிய நடிக நடிகையர்.

"என்னடா இந்த மாதிரி  ஆச்சு  நாம் போய் பஸ் கண்டக்டரைக் கேட்கலாம்" என்று விரைந்தனர்.

கோடைக்கானல்னா வசந்தம் ,குளீர்னு நினைத்துக் கொண்டு 

வந்தோமே.  சே ஒரு நாள் வீணாகிறதே" என்றான் பிரசாத்.

 BUS கண்டக்டர்  கையை விரித்தார்.
எப்பொழுது அங்கே க்ளியர் செய்வாங்கன்னு  தெரியாது சார். மதியம் 2 மணி ஆகலாம். 
மழை எல்லா இடங்களிலும் வலு த்திருக்கிறது.

நல்ல வேளை  நீங்கள் நடுவில் மாட்டிக் கொள்ளவில்லையே என்று சந்தோஷப்படுங்கள்.// என்றார்.
இன்னும் இருட்டிக் கொண்டு வருகிறது . உங்கள் விடுதிக்குச் 
செல்லுங்கள். மஞ்சு சூழ ஆரம்பித்துவிடும் என்றார்.

என்னது மஞ்சுவா, என்று வியந்தவர்களிடம், மேகக்  கூட்டம் பாதையை மறைக்கும், சின்னப் பசங்களா   நீங்க போங்க என்று விரட்டாத 
குறையாக அனுப்பினார் அவர்.

தங்களுக்குள் மழையை ரசித்துக் கொண்டு,
 விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தவர்களை நிறுத்தினான் பிரசாத்.

நாம எத்தனை பேர் இருக்கோம் ?
5 பேருடா .
ஹே  மாதவா, உங்க அத்தை வீட்டுக்குப் போகலாமா.

இதமா டீ குடித்து விட்டு விடுதிக்குப் போலாம் என்றான்.
மாதவன் தயங்க. "டே சாப்பாடெல்லாம் வேண்டாம் . நல்ல 
டீ  மட்டும் போதும்டா " என்றான்.

தீவிர மழையிலிருந்து தப்பிக்க நல்ல வழி என்று 

மாதுவும் சம்மதித்தான்.

நடனம் ஆடாத குறையாக  அவன் சிநேகிதர்கள் 
அத்தையின் வீட்டை அடைந்தனர்.

அங்கே வராந்தாவில் மழையை ரசித்த வண்ணம் தேநீர் பருகிக் 
கொண்டிருந்த  பொன்னா , மாலா ,கோகிலா எல்லோரும் திகைத்துப் 
போனார்கள்.

முதலில் எழுந்தது பொன்னா  தான்.
"என்ன ஆச்சு பசங்களா . இந்த மழையில் எப்படி மாட்டிக் கொண்டீர்கள்" என்று கேள்விகளை அடுக்கினாள் .

மாலாவும் கோகிலாவும்  கள்ள  புன்னகையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,  வத்தலகுண்டு என்னாச்சு என்று சிரிக்காமல் கேட்டார்கள்.
வரேன்  வரேன் என்று மழைக் கோட்டுகளைக் களைந்த  

மாதவன், மாலாவைப் பார்த்து  புன்னகைத்தான்.

வருண பகவானுக்கு நாங்கள் சினிமா போவது பிடிக்கவில்லை 
என்று சொல்லிக் காரணத்தையும் விளக்கினான்.

நல்லா வேண்டும் உங்களுக்கு, எங்களையும் அழைத்திருந்தால் மழையே வந்திருக்காது.

என்றாள்  கோகிலா .

தோழர்கள் விழித்தார்கள்.
எங்களை என்றால் எங்களை மட்டும் இல்லை. மொத்த குடும்பமும் உங்களை பெரிய வண்டியில் அழைத்துப்  போயிருப்போம் என்று விளக்கினாள் :} மாலா .

அனைவரையும் உட்கார வைத்த பொன்னாவும் அவர்களது நாத்தனார்களும் 
உள்ளே தேநீர்  தயாரிக்க விரைந்தார்கள்.

மாலாவையும், கோகிலா, அவள் சகோதரி எல்லோரும் உள்ளேயிருந்து 

அழைக்கப் பட்டார்கள்.
ஸ்தம்பித்து உட்கார்ந்திருந்த சிநேகிதர்களிடம், சின்னப் பெண்களடா. 

மன்னித்து விடுங்கள். கலகலப்பு மதுரைப் பெண்களுக்கு அதிகம் .

நாம்  வாய் திறக்க வேண்டாம் " என்று கேட்டுக் கொண்டான்.

ஆஹாஆஆஆ...என்று தோழர்கள் புரிந்த  கொண்ட விதத்தில் தலையாட்ட,
தேநீர்  சுமந்தபடி அனைவரும் வந்தனர்.
கூ டவே பிஸ்கட், முறுக்கு ,  என்று குறிக்கும் வகைகளும் வந்தனர்.
தேநீர் மனம்  நாசியைத் துளைக்க, மழை வெளியே தாளம் போட 

ஒரு புதிய அனுபவம் தொடங்கியது.



மழை நிற்பதாகத் தெரியவில்லை.
பெண்கள் அனைவரும் சேர்ந்து  வந்திருக்கும் இளைஞர்களுக்கு மத்திய சாப்பாடு தயார் செய்யலாம் என்று தீர்மானித்து அவர்களை அணுகி 

இரண்டு மணி நேரத்தில் சமையல் தயாராகிவிடும் சாப்பிட்டு விட்டு விடுதிக்கு நீங்கள் செல்லலாம் என்றனர் .
மாதவன் மிகத்  தயங்கினான்.

பிரசாத் , மாதவா, நாம் விடுதியில் லஞ்சுக்குச் சொல்லவில்லை என்று நினைவு படுத்தினான். அவனுடைய நண்பர்களும் மிக்க கட்டுப்பாடான 

வாலிபர்கள் தான்.
அத்தையைப் பார்த்த மாதவன், எளிமையாக ஏதாவது செய்தால் போதும் அத்தை.

ஸ்பெஷல் ஒன்றும் வேண்டாம். மழை நின்றதும் கிளம்ப வேண்டும். நாளைக்குள் நிலைமை சரியாக வேண்டும். அம்மா அப்பா கவலைப் படுவார்கள் என்றான்.

நீ இப்போதே மெட்றாசுக்குப்   பேசு.

சாலை நாளை சரியாகிவிடும்.
கவலை  வேண்டாம்ப்பா  என்று ஆறுதல் சொன்னாள் .

இதோ நான் டிரங்க் கால் புக் செய்கிறேன் என்று எழுந்தாள் மாலா.
இன்னும் ஒரு மணி நேரத்தில் மெட்ராசுக்கு  நீ பேசலாம் மாது 
என்று நல்ல செய்தியுடன் வந்தவளை பார்த்து நன்றி சொன்னான்.


உள்ளேயிருந்து சீட்டுக்கட்டு, காரம் போர்ட் என்று கொண்டு வந்து வைத்துவிட்டு பெண்கள் தாயாருக்கு உதவி செய்ய உள்ளே சென்றனர்.


மழை நின்றதென்னவோ மாலையில் தான். பிறகென்ன நடந்தது என்று பார்க்கலாமா.












13 comments:

Geetha Sambasivam said...

//கலகலப்பு மதுரைப் பெண்களுக்கு அதிகம் .// நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை. கல்யாணம் ஆகும் வரை இப்படிக் கலகலப்பாகவே இருந்த நான் இப்போ எப்படி மாறி விட்டேன் என நினைக்காத நாளே இல்லை. ஆனால் இப்போவும் என் பிறந்த வீட்டு மனிதர்களைப் பார்த்தால் பழைய கலகலப்புக் கொஞ்சம் திரும்ப வரத்தான் செய்கிறது.

Geetha Sambasivam said...

நல்ல சுவாரசியமாகச் செல்கிறது நிகழ்வுகள் எல்லாம். மனம் என்னமோ மாலாவுடன் மாதவன் இணையப் போகும் நாளுக்காகக் காத்திருக்கிறது.

ஸ்ரீராம். said...

மிகவும் சுவாரஸ்யமான நாளாய் இருந்திருக்கும் அது!   மழைக்கு நன்றி சொல்லி இருப்பார்கள்.   பொருத்தமான பாடல்கள் வழக்கம் போல.

ஸ்ரீராம். said...

சொல்ல மறந்து விட்டேனே அம்மா...    முன்பு எங்கள் தளத்தில் நீங்கள் இந்த 'அன்பு மனம் கனிந்த பின்னே" பாடலைத்தான் பாடி அனுப்பியிருந்தீர்கள் இல்லை?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, உங்க ஊர் மழை இங்கே வந்து விட்டது.
ஆமாம் நானும் உலக மஹா வாயாடி என்று பேரெடுத்தவள்.
எல்லாம் அடங்கிப் போயாச்சு.

நீங்கள் சொல்வதைப் போல பிறந்தகத்து மனிதர்களைக் கண்டால் ,சமுத்திரம் தான்.

நல்ல் முடிவை நோக்கித்தான் நகர்கிறார்கள் மாலாவும் மாதவனும். கூடவே கோகிலாவும் பிரசாதும். தடைகளை மீறட்டும். நன்றி மா. இனிய இரவுக்கான வணக்கம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

பாடல்கள் எல்லாம் பழையவைதான். உங்களுக்குப்
பிடித்தது மகிழ்ச்சி. பெரியவர்கள் தடை போடாமல்

இருக்க வேண்டும். நல்ல படியே நடக்கட்டும்.
இவர்கள் மனமும் இணைய வேண்டூம் உறுதியோடு.

மாதேவி said...

மழையும் மீண்டும் அவர்களை சந்திக்க வைத்ததோ...

கோமதி அரசு said...

''அன்பு மனம் கனிந்த் பின்னே'' உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இல்லையா?
கடைசி பாடலும் மிக நல்ல பாடல்.இளம் காதல் தோன்றும் நேரம் வந்து விட்டதோ! கதையிலும்.
அருமையான உரையாடல்.
கதை மிக் அருமையாக போகிறது.

வல்லிசிம்ஹன் said...

மாம் ஸ்ரீராம். ரொம்ப வருஷங்களுக்கு முன்னால்
பாடி அனுப்பியது நினைவுக்கு வருகிறது.
ஞாபகம் வைத்திருக்கிறீர்களே நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே மாதேவி,
இயற்கையெல்லாம் நம்மிருவரையும் சேர்த்துப் பாக்குது// பாடல் நினைவுக்கு
வருகிறது. மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்.

கோமதி. மிகப் பிடித்த பாடல்.
உண்மையான ரசனையோடு கூடிய பாடல்.

அந்த நாட்களின் இசையும் கௌரவமும் இப்பொழுது பார்க்க முடியவில்லையேமா.
கூடவே வந்து ரசிப்பதற்கு மிக மிக நன்றி என் தங்கச்சி.
காதல் மலர உள்ளம் தயாராகிறது.சின்னவர்கள் தானே.

வெங்கட் நாகராஜ் said...

மழை வந்ததால் இப்படி.... மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். மழை மனங்களை இணைக்க
முயற்சிக்கிறது.
பெரியவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்