வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிமையாக வாழ வேண்டும்.
எதிர்பாராமல் நடந்தவை 10
+++++++++++++++++++++++++++++++++
அதிகாலை வானொலியில் தெற்கு ஆசிய ஒலி பர ப்பைக் கேட்டுக்கொண்டே காலை வேலைகளை செய்து கொண்டிருந்தாள் பொன்னா . வரதன் அலுவலகம் கிளம்பும் நேரம் . மத்ராஸிலிருந்து
டிரங்க் கால்.
வாரத்துக்கு ஒரு முறை அம்மாவுடன் பேசும் வழக்கம் இருந்ததால்
உற்சாகமாக எடுத்தால். அம்மா குரலுக்குப் பதிலாகத் தம்பியின் குரல்.
மனதில் எதோ அச்சம் தோன்ற என்னப்பா. என்று கேட்டால்.
பொன்னா , பயப்படாமல் கேளு.
அம்மா கிளினிக்கில் சேர்த்திருக்கிறது.
நேற்று திடிரென்று மயக்கம் வந்து விட்டது.
டாக்டர் ,பரிசோதனைக்காக இருக்கச் சொல்லி இருக்கிறார்.
இன்று காலை கண் விழித்ததும் உன்னை தான் கேட்டாள் .
நீயும் வரணும் வரமுடியுமா. எனக்கும் அம்மாவுக்கும் தைரியமாக
இருக்கும் என்றதும், குரல் படபடக்க வரதனை அழைத்தாள் .
விஷயத்தைக் கேட்டதும், வரதனே கலங்கி விட்டார்.
கல்லூரிக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்த மாலா கலவரத்துடன் அருகில் வந்தாள் . பாட்டிக்கு என்னம்மான்னு கேட்பதற்குள் அவள் கண்களில் கண்ணீர்.
உடனே சுதாரித்துக் கொண்ட பொன்னா ,
மருந்து எதோ எடுத்துக் கொள்ள மறந்து விட்டாளாம்.
இப்போ டாக்டர் அதற்கு வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்.
நான் ஒரு நடை பார்த்து விட்டு வரலாம்னு தோணுகிறது
நீ என்ன சொல்கிறாய் என்று சொன்னதும் நானும் வரட்டுமா
அம்மா என்று தயங்கியபடியே கேட்டாள் .
வரதன் குறுக்கிட்டு, பயப்படாதே கண்ணா, நீ உன் அத்தையகத்தில்
இருந்து கொள் , நாங்கள் இரண்டு நாட்களில் வந்து விடுவோம்.
என்றான்.
மாதுகிட்ட சொல்லி இருப்பார்களா அப்பா,
பாவம் ரொம்பக் கவலைப் படுவான் என்று
கம்மியாகிவிட்ட குரலில் சொன்னாள் . இப்போது பொன்னா வுக்கே ஒரு குரல் அழவேண்டும் போல இருந்தது.
நீ இரண்டு நாட்களுக்கு வேண்டும் என்கிற துணிமணிகளை
எடுத்துக்கோ, நானும் அப்பாவும் உன்னைக் கப்பலூரில் இறக்கிவிட்டு,
மதராசுக்குக் கிளம்புகிறோம். என்று இதமாகச் சொன்னாள்
மறுப்பு சொல்லாமல் கிளம்பிவிட்டாள் மாலா. ஏனோ
மாதவனிடம் பேச வேண்டும் போலத் தோன்றியது.
வரதன் ,மாலாவை அக்கா வீட்டில் இறக்கி விட்டு வண்டி யை மதராஸை
நோக்கித் திருப்பினான்.
நடுவில் நிறுத்தி கலங்கி உட்கார்ந்திருந்த
மனைவிக்கு காப்பியும், இட்லியும் வாங்கி சாப்பிட வைத்தான்.
இந்தப் பொண்ணு இவ்வளவு பாசம் வைத்திருக்கே
என்ன செய்யப் போகிறோம். என்று சொல்வதற்குள் கண்ணீர் வழியத் தொடங்கியது.
அவசரப் படாதே மா. எல்லாப் பிரச்சினைகளும் தானாகாத் தீரும். நீ
வேணுமானால் பாரு" என்று அனைத்துக் கொண்டான்.
கப்பலூரில் இறங்கி அத்தை வீட்டில் நுழைந்த மாலா முகத்தைப்
பார்த்து அதிர்ந்து போனாள் கோகிலா.
அழாதே மாலு,
ஒண்ணுமே இருக்காது. என்றவளைப் பார்த்த மாலா, எனக்கு மாதுவுடன் பேசணும்னு
தோன்றுகிறது கோகி .
என்றதும் அவளைத் தன்
அறைக்கு அழைத்துப் போனாள் .
கோகிலா. உள்ளே சென்றதும் மாலு என்னிடம் பிரசாத் நம்பர் இருக்கிறது. அவனிடம் கடிதம் எழுதி வாங்கினேன். தப்பென்று எனக்குத் தோன்றவில்லை.
மாலா திகைத்துப் போனாள் . அவர்கள் படிக்கப் போயிருக்கிறார்கள்.
அவர்களை நாம் தொந்தரவு செய்யக் கூடாது இல்லையா.
நான் அவனுடன் இன்னும் பேசவில்லை.
உனக்காக கேட்கிறேன்.
மாமா பையன் தானே . ஒரு தோழனிடம் பேசுவதில் என்ன தப்பு சொல்லு.
அவர்கள் அறைக்கே போன் இருக்கிறதா."
இல்லை அவர்கள் ஹாஸ்டல் மொத்த அறைகளுக்கும்
ஒரு தனி ஃ போன் இருக்கும்.
அவர்களிடம் சொன்னால் இவர்களை அழைப்பார்கள்."
கொஞ்ச நேரம் கொடு. என்று பாட்டி பற்றிய கவலையில் ஆழ்ந்தாள்.
அங்கே மத்ராஸில் பாட்டி மிகச் சோர்வாக உறங்கி கொண்டிருந்தார்.
அவர் நினைப்பு மாதவனையும் மாலாவையும் சுற்றியே வந்தன.
இப்படி ஆகிவிட்டதே.
இனி எல்லாம் கண்ணன் விட்ட வழி. நான் யார் அவர்கள்
வாழவைத் தீர்மானிக்க.
இத்தனை வயதில் எனக்கு என் இந்த ஆசை. மற்றவர் மனங்களை மதிக்க வேண்டாமா. என்று தன்னை வருத்திக் கொண்டதில் அவள் இரத்த அழுத்தம் குறையவில்லை
டாக்டர் இசிஜி, மானிட்டரைப் பொருத்தி இருந்தார்.
அவருக்கே கவலையாகிவிட்டது.
காவிசேரி மாமா, பொன்னா , கோவிந்தன்,வைதேகி எல்லோரிடமும் அவளை அமைதியாகப் பேசி
என்ன தொந்தரவு என்று கேட்கச் சொன்னார்.
பொன்னாவைப் பார்த்ததும், மாலா எங்கே என்றுதான்
கேட்டார்.
வரச்சொல் லி சொல்கிறேன் அம்மா. அதிகமாகப் பேசாதே என்றதும், நான் பேசிப் பயனில்லை. தெரிந்துவிட்டது.
நான் பேசவில்லை." என்று கண்களை மூடிக் கொண்டார்.
பொன்னாவின் துயரம் அதிகரித்தது.
டாக்டரிடம் பேசும்போது, இங்கே இருந்தால் இதயத்தை மானிட்டர் செய்வது சுலபம்.
உடல் நிலை சரியாக இல்லை.
உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் என்று அகன்று விட்டார்.
நலமே நடக்கும்.

16 comments:
பாட்டியின் நிலை கவலைக்கிடம் என்று கவலையாகப் படிக்கும்போது இறுதி வாரியாகநலமே நடக்கும் என்று உறுதி கொடுத்திருக்கிறீர்கள். நம்புகிறேன். காத்திருக்கிறேன். இரண்டு பாடல்களும் நல்ல பாடல்கள்.
எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது..
கண்ணன் காட்டிய வழி...
எங்கும் நலமே நடக்கட்டும்....
//இத்தனை வயதில் எனக்கு என் இந்த ஆசை. மற்றவர் மனங்களை மதிக்க வேண்டாமா. என்று தன்னை வருத்திக் கொண்டதில் அவள் இரத்த அழுத்தம் குறையவில்லை //
வயதான காலத்தில் கிருஷ்ணா, ராமா என்று இருக்காமல் எல்லோரையும் நினைத்து மனது கலங்கி இரத்தம் அழுத்தம் அதிகமாகி விட்டது பாட்டிக்கு.
குருவாயூர் கண்ணன் மாதவனை வரவழைத்து மாலாவோடு சேர்த்து வைப்பார், பாட்டி மகிழ்ந்து எழுந்து உட்கார வேண்டும்.
இரண்டு பாடல்களும் அருமை. கேட்டு மகிழ்ந்தேன்.
அன்பு ஸ்ரீராம்.
தான் வரம்பு மீறிவிட்டோம் என்று கவலை பாட்டிக்கு. தெளிவு கிடைக்கட்டும்.
அன்பு துரை செல்வராஜு,
நல்லதுதான் நடக்கப் போகிறது. நம்பினார் கெடுவதில்லை.நன்றி மா.
அன்பு தேவகோட்டைஜி நல்லதே நடக்கும். நன்றி மா.
அன்பு கோமதி.
நாம் விலகக் கற்று வருகிறோம். 50 வருடங்களுக்கு முந்தைய பாட்டி.
ஆசைப் படுவதை விடவில்லை.
பிரச்சினைகள் தாமே தீரும். நன்றி மா.
பாட்டியை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கிறது. ஆனால் கடைசியில் மாலா மாதவனைக் கல்யாணம் செய்து கொண்டு விடுவாள் என்பது தெரிந்ததால் கொஞ்சம் ஆறுதல். மஹாராஜபுரம் எனக்குப் பிடித்த பாடகர். ஆடியோ தான் என்னோட கணினியில் சரியாக இல்லை. பாட்டி நலம் பெற்று எழப் பிரார்த்தனைகள்.
//நாம் விலகக் கற்று வருகிறோம்.// உண்மை தான். எத்தனைக்கெத்தனை விலகி இருக்கோமோ அத்தனைக்கு அத்தனை உறவு பலப்படும் இப்போதெல்லாம்.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை கீதாமா.
எங்கள் கல்யாண காலத்திலேயே
பாட்டிகள் முடிச்சுப் போடுவதில் மும்முரம் காட்டுவார்கள். எனக்கு பதிமூன்று
வயதாகும் போது மைலாப்பூர் அத்தை மறைந்தார்.
அவருடைய பிள்ளைக்கு என்னை மணமுடிக்க வேண்டும் என்று பாட்டி பேசினார். என்னைவிட 10 வயது மூத்தவர் அந்தப் பிள்ளை. நல்ல வேளை நடக்கவில்லை.
பாட்டி உடல்தேறி வரட்டும்.
பாட்டியின் நிலை கண்டு வருத்தம் தான் மிஞ்சுகிறது.
நல்லதே நடக்கும் - நடந்திருக்கும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பகுதிக்கு இதோ செல்கிறேன்.
அன்பு வெங்கட்,
எல்லாம் நல்லதாகவே நடக்கும். நன்றி மா.
Post a Comment