Blog Archive

Sunday, August 04, 2019

கோடைவிடுமுறை குழந்தைகளோடு

வல்லிசிம்ஹன்
 Vancouver.https://youtu.be/_xMz2SnSWS4

கோடைவிடுமுறை குழந்தைகளோடு
இப்பொழுதுதான் அவர்களின்  விடுமுறை கிடைத்திருக்கிறது.
இன்னும் இரண்டு நாட்களில்
இங்கிருந்து கிளம்பி  ஒரு வாரம்  வரை சில  ஊர்களை சுற்றிப் பார்க்க முடிவு.
என் மெது நடைக்கும் மற்றவர்களின் உற்சாகத்துக்கும் கொஞ்சம் சம்பந்தமில்லாமல்
இருக்கும் தான்.

வெளி உலகத்தைப் பார்க்கும்  சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்றே நானும் கிளம்புகிறேன்.

வாரிஜாவுக்கு ஒரு வழி சொல்லாமல்  போக்க கூடாது இல்லையா.
இன்று பூர்த்தி செய்து விடலாம்.

16 comments:

KILLERGEE Devakottai said...

அருமையான காட்சிகள் அம்மா தேவகோட்டை போலவே...

துரை செல்வராஜூ said...

விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியே நிறையட்டும்....

வாழ்க நலம்...

ஸ்ரீராம். said...

ஆஹா... விடுமுறையை உற்சாகமாக பல இடங்களுக்கும் சென்று கொண்டாடி விட்டு வாருங்கள். மனதுக்கு உற்சாகம் தரும் பயணங்கள்.

கோமதி அரசு said...

வெளி உலகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்றே நானும் கிளம்புகிறேன்.//

ஆமாம் , அக்கா போய் வாருங்கள். மகிழ்ச்சியாக குழந்தைகளுடன் அழகிய காட்சிகளை ரசித்து வாருங்கள்.

காணொளி மிக அருமை.

Geetha Sambasivam said...

பயணம் சிறப்பாக அமையட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

பயணம் சிறக்க வாழ்த்துகள் மா...

காணொளி மிக அழகு. சாலைப் பயணம் எனக்கும் பிடித்த விஷயம். அந்தச் சாலைகளில் அப்படியே வாகனங்கள் அப்படியே வழுக்கிக் கொண்டு போவது போல ஒரு உணர்வு...

மாதேவி said...

விடுமுறை இனிதாகட்டும்.

ஜீவி said...

அருமையான டெக்னிக்.. பேசும் படம் என்றால் இது தான்... மறுபடியும் அமெரிக்கா வரும் ஆசை வந்து விட்டது...

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, அப்படியே தான். நம் ஊர் அழகு வேறெங்கே கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு துரை செல்வராஜு. ஒருவாரத்துக்குப் பதிவுகள் படிக்க. முடியாது.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி ஶ்ரீராம். அலுப்பில்லாத பயணம் வாய்ககட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இந்தக் காணொளியை விட இயற்கை நன்றாகவே இருக்கும். எத்தனை மணிப பயணம் என்று தெரியவில்லை.. வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா அன்பு கீதா. யாருக்கும் தொந்தரவில்லாத. பயணம் ஆக அமைய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் உங்களைப் போல் பயணிகளுக்கு சொர்க்கம் இந்த சாலைகள். வழி நெடுக உணவகங்கள். ரெஸ்ட்ரூம்ஸ். இனிமை தான். மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி. அப்படியே அம்மா. நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜீவி சார். கிளம்பி வாருங்கள்.