Blog Archive

Sunday, August 04, 2019

பொறுமை வாழவைக்கும் 4

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

பொறுமை வாழவைக்கும் 4
++++++++++++++++++++++++++++++++
ஆடி வெள்ளியும் வந்தது. புதிதாக வாங்கிய ஸ்டுடிபேக்கர் வண்டியில் தம்பிகள் குடும்பத்துடன்
வந்தனர்.
மைதிலியும் உப்பிலியும் வண்டியைப் பாராட்டி மெச்சினர்.
மாமாக்கள் குடும்பம் வரும்போதெல்லாம் தாவி வந்த அணைத்துக்கொள்ளும்
வாரிஜா வண்டியையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஏய், வாவா நாம் ஒரு ரவுண்டு வரலாம் ரிஜாக்குட்டி
என்று பெரிய மாமா அழைத்ததும் சரி என்று ஏறிக்கொண்டாள்.
மைதிலியும், உப்பிலியும் மற்றவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

தன் தம்பி மனைவிகளை உபசாரம் செய்து, அவர்களோடு
மற்ற ஏற்பாடுகளைப்
பற்றிப் பேசி அறிந்து கொண்டாள்.
மகன் ராஜ கோபாலனைத் தேடினால், அவனும் ராமசாமி மாமாவுடன்
சென்றிருப்பது புரிந்தது.
புதுக்கார் மோகம் குழந்தைகளுக்கு இருப்பது சகஜம் தானே அக்கா
என்று பரிந்தாள் தம்பி மனைவி  சாரங்கா.
எல்லாம் நீங்கள் கொடுக்கும் செல்லம் தான் என்று சிரித்தாள்
மைதிலி.
அப்பா எப்படி இருக்கார். என்றதும், வைதீகக் காரியங்கள்
கச்சிதமாக நடக்க வேண்டும் என்பதில் அம்மா அப்பா
இருவரும் மும்முரமாக இருக்கிறார்கள்.
 பந்தல்குடியைச் சுற்றி எத்தனை வேத விற்பன்னர்கள் இருக்கிறார்களொ
அவர்களை உங்கள் தம்பிகள் அழைத்து விட்டார்கள். இது சின்னவனின் மனைவி
செங்கமலம்.

அக்கம்பக்கம் வீடுகளைச் சேர்த்து பந்தல் போடப் போகிறோம்.
எங்கள் பெற்றோரும்  இரண்டு நாட்கள் முன்பே வரப் போகிறார்கள்.
சின்னக் கோமளம், பெரிய கோமளம் இரண்டு அத்தைகளும்
வந்துவிடுவார்கள். இதைச் சொன்னபடி இருவரும் நாத்தனாரைப் பார்த்தார்கள்.

நீங்க அவர்களிடம் ஜாக்கிரதையாகப் பேசும்படி அம்மா சொல்லச் சொன்னார்.
நல்ல வார்த்தைகள்  அவர்களிடம் பலிப்பதில்லை.

என்றதும்மைதிலி தலை ஆட்டினாள். தெரியும் .இங்க வந்திருந்த போது
வாரிஜாவின்  மனசைக் கலைத்துவிட்டுப் போனார்.
அதற்கு மேல் சொல்ல விருப்பமில்லாமல்
சாப்பிட்டு விட்டு நாம் கடைகளுக்குப் போகலாம்
ஆண்கள் வேஷ்டி ,சட்டை விஷயங்களைக் கவனிக்கட்டும்.
நாம் நகை, புடவைகளைப் பார்த்துக் கொள்ளலாம்
என்றாள்.... அன்று இரவு  எல்லோரும் சேர்ந்து பார்த்த
இந்தித் திரைப்படப் பாடல் கீழே.













17 comments:

Geetha Sambasivam said...

அருமையான பாடல். ராஜ்கபூர், நூதன், இந்தப் படம் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். மாமாக்களுடன் போயிருக்கும் வாரிஜாவுக்கு மாமாக்களிடமாவது துடுக்குப் பேச்சு இல்லாமல் இருக்கட்டும். நல்ல அருமையாகத் தொடர்ந்து எழுதுகிறீர்கள். இது முற்றிலும் புதியது.

கோமதி அரசு said...

பிடித்த பாடல் அண்ணனிடமிருந்து தொற்றிக் கொண்ட பழக்கம் இந்தி பாடல்கள் கேட்பது.
பிடித்த பாடல்.

கதை மிக அருமையாக செல்கிறது.

கோமளம் மாமியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது தான். வாரிஜாவின் மனது இப்போது எதை கண்டாலும் ஆசைபடும் மனது.

தொடர்கிறேன் அக்கா.

ஸ்ரீராம். said...

மனத்தைக் கலைக்கும்படி பேசுபவர்களும், புண்படும்படி பேசுபவர்களும் எல்லா குடும்பத்திலும் உண்டு போல...

மாதேவி said...

"அம்மா ஜாக்கிரதையாக பேச சொன்னார்" முன் எச்சரிக்கை வந்துவிட்டது.

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் அருமை அம்மா...

KILLERGEE Devakottai said...

அன்று பார்த்த திரைப்படம்கூட நினைவில் இருக்கிறதே...
பழைய பாடல் கேட்டேன் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஊரில் பந்தல் போட்டு//

என் பெரிய மாமாவின் மூத்த பெண்ணின் கல்யாணம் எங்கள் வீட்டில் முதல் கல்யாணம் அதுவும் ஊரில் இருந்த போது எனவே 4 வீடுகளை உள்ளடக்கி பந்தல் போட்டுத்தான் கல்யாணம் நடந்தது. எல்லாமே வீட்டிற்குள் இருந்து...இன்னொரு மாமா வீட்டில் மாடியில் மாப்பிள்ளை விட்டார் இறங்கினர் வருடம் 1980..பாட்டியும் பாட்டியின் தங்கையும் சேர்ந்து அடுத்த வீடு பெரிது என்பதால் அங்கு பக்ஷனம் எல்லாம் செய்தார்கள் சீர் பட்ஷணம் முதற்கொண்டு. நாங்கள் எல்லாம் எடுபிடி வேலை செய்தோம். நான் அப்போதுதான் முறுக்கு சுற்ற கற்று வராமல்...அப்புறம் அப்பா வழிப் பாட்டி சொல்லித் தர கற்றுக் கொண்டேன்...

அந்தக் கல்யாணம் நினைவுக்கு வந்தது...அம்மா

இங்கும் பிரச்சனைகள் எதுவும் எழாமல் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும். வாரிஜா மனம் கலையாமல் கலைந்தாலும் விரைவில் மாறிவிட வேண்டும் என்றும் தோன்றுகிறது..

அன்பான குடும்பம். அந்தக் கால சினிமா பார்ப்பது போலவே இருக்கிறது அம்மா ஆர்வமாக இருக்கிறது அடுத்து என்ன என்று அறிய...
தொடர்கிறோம் அம்மா..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாட்டு அப்புறம் தான் கேட்க முடியும் போல...நெட் பிரச்சனையால் வீடியோ வரவில்லை...கேட்டுவிட்டு சொல்கிறேன் அம்மா..

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. 1950 களில் பாடல்களைத்தேடிய போது
இந்த அழகான பாடல் கிடைத்தது.
நல்ல கதை.
மைதிலி அம்மா வழிப் பெரியம்மா.
வாரிஜா என்னைவிட பத்து வயது மூத்தவள்.
திருமணங்களில் பார்க்கும் போது அவள் உடைகள்,
நடை பாவனைகளைக் கண்டு அதிசயப் பட்டிருக்கிறேன்,.

ஆமாம் போகும் இடத்தில் யாரிடமும் வம்பில்லாமல்
இருக்க வேண்டும்.
பாட்டி கவனித்துக் கொள்வார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா,
தங்கள் அப்பா நிறைய சம்பாதிக்கவில்லை என்ற குறை தீர அவளுக்கு
நல்ல வாழ்வு அமையட்டும்.

மற்றபடி நல்ல பெண் தான். கேட்பார் பேச்சைக் கேட்டுப்
பிறகு தெளிவடையும் மனம். நல்லது நடக்கட்டும் மா. நன்றி

வல்லிசிம்ஹன் said...

மனத்தைக் கலைக்கும்படி பேசுபவர்களும், புண்படும்படி பேசுபவர்களும் எல்லா குடும்பத்திலும் உண்டு போல.//
அன்பு ஸ்ரீராம், வெட்டிப் பேச்சு பேச ஆளா இல்லை.
அண்மையில் சிங்கத்தின் பெரியப்பா மகன்
தவறி விட்டார்.

சென்னைக்கு நான் பேசும்போது இன்னோரு உறவினர்
சம்பந்தமே இல்லாமல் ,
நோய் வந்தாலும் செலவழிக்கப் பணம் இருந்தது. என்னை மாதிரீயா
என்று சொல்கிறார் இன்னோருவர்.
ஃபோனை வைத்து விட்டேன்.
இது போல மனிதர்கள் தாங்களும் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்.
மற்றவர்களையும் விடமாட்டார்கள்.
நாம் ஒதுங்கி விடவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே மாதேவி துஷ்டரைக் கண்டால் தூர விலகு
என்று சொல்வது வெறும் வார்த்தை இல்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். அந்தக் காலத்துக் கௌரவமான பாடல். அன்பு மட்டுமே மிளிரும்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
இந்தத் திரைப்படம் என் கற்பனையில் சேர்த்தி.
50களில் வந்த திரைபடங்களைத் தேடி இந்தப் பாடலைப் பதிவிட்டேன்.
கேட்டு ரசித்ததற்கு மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

பிடித்த பாடல் அண்ணனிடமிருந்து தொற்றிக் கொண்ட பழக்கம் இந்தி பாடல்கள் கேட்பது.
பிடித்த பாடல்.// Dear Gomathy, thank you ma.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாரங்கன்,
1980இல் இப்படி ஒரு திருமணமா.
எவ்வளவு சந்தோஷமா இருக்கிறதுமா.
எத்தனை நட்புகள்,எத்தனை உறவுகள், எத்தனை கலகலப்பு.
அந்த ஒற்றுமை மகத்தானது. நீங்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்.

வாரிஜாவும் மாறினாள்.

It was just a phase.
நன்றி கீதா மா.

வெங்கட் நாகராஜ் said...

அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்த்து பந்தல் போட்டு கல்யாணம் - இனிமையான நாட்கள் அவை. இன்றைக்கு பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதே தெரியாமல் அடுக்கு மாடி வீடுகளில் பலரும்... என்னையும் சேர்த்து!

வாரிஜா காரில் சென்றிருக்கிறாரே... என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். எல்லாம் நல்லபடியாகவே நடந்திருக்கும் என்ற நம்பிக்கை உண்டு!

தொடர்கிறேன் மா...