பெல் ஹார்பர் மெரீனா Pier 66 Seattle. |
Add caption |
Add caption |
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்.
பயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.
பயணத்தின் மூன்றாம் நாள், சியாட்டில் நகரம் சுற்றி வரலாம்
என்று திட்டம்.
காலை உணவுக்கு நானும் சின்னப் பேரனும் முதலில் வந்து விட்டோம்.
எனக்குத் தேவையான ஓட்ஸ் கஞ்சி, பழங்கள் நிறைய இருந்தன.
சியாட்டில் காஃபிக்கு பெயர் பெற்றது.. தெர்மாஸ் எடுத்துப் போய்
இரண்டு மூன்று கப் எடுத்துக் கொண்டேன்.
பேரன் வாஃபிள்+ மேபிள் சிரப் , என்று அவனுக்குப் பிடித்த
மற்ற வகை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தான்.
நமக்கு அதெல்லாம் ஒத்துக் கொள்ளாதே.. என்று சுற்றிப் பார்த்தால், சுடச்சுட
சாதம் கொண்டு வந்து வைத்தார்கள். கூடவே நிறைய வேகவைத்த
காய்கறிகள்.
இண்டியன் ஃபூட் மாம் என்று சிரித்தாள்
அந்த உணவுக்கூடப் பெண்.
நான் பார்த்துக் கொண்டே இருக்கும் போதே ,இந்த ஊர்க்காரர்கள்
நிறைய டப்பாக்களில் எடுத்துச் சென்றனர் .
காலை உணவு ஃப்ரி என்பதால் சீக்கிரமே காலியாகிவிட்டது..
நானும் எங்கள் அறைக்கு இரண்டு டப்பாக்கள் நிறைய எடுத்து
வந்தேன்.
15 comments:
ஆஹா, நல்ல சுற்றுப் பயணம். நன்றாக இருக்கிறது. இம்மாதிரிக் காலை உணவு இலவசம் என்றால் எடுத்துக் கொண்டு போவது நம்ம ஊரில் எல்லாம் நடக்காது. அங்கே எல்லாம் எடுத்துச் செல்வார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. ரங்க ராட்டினத்தில் சுற்றியதே இல்லை. ஊஞ்சலில் ஆடினால் கூட எனக்குத் தலை சுற்றும்.
காலை உணவை டப்பாக்களில் எடுத்துக்கொள்ளலாமா? காபியையும் ஃ்ப்ளாஸ்கில் எடுத்துக்கொள்ளலாமா? பொதுவா அதுக்கு அனுமதிக்க மாட்டாங்களே
காலை வணக்கம் மா..
பரவாயில்லையே... இந்திய உணவு வகைகள் அங்கு நன்றாகக் கிடைக்கின்றன போலவே...
ரங்கராட்டினத்தில் ஏறினீர்களா? எனக்கு பயம்!!!!
ரங்கராட்டினம் என்றதுமே என் மனதுக்குள் SPB பாட ஆரம்பிக்கிறார்... "ஒரு மல்லிகை மொட்டு..."
,//இந்த ஊர்க்காரர்கள்
நிறைய டப்பாக்களில் எடுத்துச் சென்றன.
காலை உணவு ஃப்ரி என்பதால் சீக்கிரமே காலியாகிவிட்டது..
நானும் எங்கள் அறைக்கு இரண்டு டப்பாக்கள் நிறைய எடுத்து
வந்தேன்.//
அங்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும், அறைக்கு எடுத்து செல்ல கூடாது என்பார்களே!
எடுத்து செல்ல அனுமதிப்பது நல்ல விஷயம்.
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
உங்கள் படம் அழகு.
காணொளி கண்டு வியந்தேன்.
நல்லதொரு அனுபவம் அம்மா...
காஃபி சாப்பிட்டீர்களே?.. இங்கேயும் ஸ்டார் பக்ஸ் தானா?
சியாட்டில் ஒரு துறைமுக நகரம் என்று இப்பொழுது தான் தெரிந்தது. எதையாவது புதுமையாகச் செய்வதில் இவர்கள் கில்லாடிகள். ஸ்பேஸ் நீடில் அதற்கு ஒரு உதாரணம்.
அன்பு கீதாமா,
நாங்கள் தங்கி இருந்த விடுதியில் முக்கால் வாசி சியாட்டிலில்
வேலை செய்யும் இளைஞர்கள் யுவதிகள்.
அவர்களுக்கு ஒரு அறை ஒரு டாய்லெட் என்ற
விகிதத்தில் கூகிள், அமேசான், மைக்ரோசாஃப்ட்,முகனூல் என்று பல்வேறு கம்பெனிகளில்
வேலை செய்யும் இந்தியர்கள் அதிகமாக இருந்தார்கள்.
அவர்களுக்கு ஏதுவாக இந்த ஏற்பாடு. இரவு உணவு கம்பெனிக்கணக்கு.
எல்லோருக்கும் எடுத்துச் செல்ல அனுமதி இருந்தது.
நாங்கள் தங்கின மூன்று விடுதிகளிலும் இந்த வசதி இருந்தது.
காப்பி எப்பொழுதுமே அறைக்கு எடுத்து செல்வோம்.
மிக மிக ருசியான ஹாஃப் அண்ட் ஹாஃப்.
பிறகு கேட்பானேன். எனக்கு அவஸ்தை இல்லாமல் வாய்த்த பயணம். எனக்கு இந்த ஜெயண்ட் வீல் ரொம்பப் பிடிக்கும். நம் ஊரில்
வெறும் கம்பி மட்டும் தானே இருக்கும்.
தம்பியுடன் போன போது கண்களை மூடியபடியே ஏறி இறங்கினேன்.
இவருக்குப் பிடிக்காது.
நாங்கள் இத்தனை விடுமுறை சென்ற இடங்களிலும் அனுமதிக்கப்
பட்டிருக்கிறது முரளி மா.
சில வயதானவர்கள் கீழே வரமாட்டார்கள்.
அவர்களுக்காகக் கூட வந்தவர்கள்
எடுத்துப் போவதும் உண்டு.
குழந்தைகளுக்கு நல்ல பால். அதுவும் சியாட்டிலில் ருசியாகவே இருந்தது.
இங்கு அனைவரும் கறுப்புக் காப்பியே குடிப்பதால் அதில் தடை ஒன்றும் இல்லை.
ஒரு மல்லிகை மொட்டு. எஸ்பிபியின் மதுரக் குரல்.
எனக்குக் கூட நினைவுக்கு வரவில்லை. ஸ்ரீராமுக்கு நினைவு
வந்துவிட்டதே.
இதில் பயமில்லாமல் போகலாம்மா. கூண்டுக்குள் பாதுகாப்பு. உயரத்திலிருந்து தெரிந்த
காட்சிகள்.இனிமை.
நன்றி கோமதி மா. பேரனுக்குப் படங்கள் எடுக்க மிகப் பிடிக்கும்.
இங்கே தான் சாப்பாடு எடுத்து போவதைக் கண்டேன்.
சாண்ட்விச், பேகல், பால் எல்லாம் எடுத்து வந்திருக்கிறேன். காலை 10.30
வரை அனுமதி உண்டு.
ஸ்பேஸ் நீடில் மிக அழகு. அவ்வளவு பந்தோபஸ்து செய்திருக்கிறார்கள்.
அந்த Virtual reality கண்ணாடி போட்டுப் பார்த்ததுதான் எனக்கு மிகப்
பிடித்தது..தொடர்ந்து படிப்பதற்கு மிக நன்றி.
நன்றி தனபாலன். ஆமாம் கண்களுக்கு விருந்து மா.
அன்பு ஜீவி சார் வணக்கம்.
ஸியாட்டில் போர்ட் ஹார்பர் என்றார்கள்.
எனக்குப் புரியவில்லை.
அங்கே சாப்பிட்டது சியாட்டில் பெஸ்ட் என்கிற காப்பி.
ஸ்டார் பக்ஸ் தான் வீதிக்கு மூன்று இருக்கிறதே.
ஆமாம் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்.
பணம், இடம் எல்லாம் இருக்கிறது.
பிரமிப்பாக இருக்கிறது....
உணவை எடுத்துச் செல்வது - இங்கேயும் சில தங்குமிடங்களில் சுற்றுலாப் பயணிகள் எடுத்துக் கொள்வார்கள் - ஆனால் தங்குமிட நிர்வாகம் உன்னிப்பாகக் கவனித்து தடுப்பார்கள்.
நல்லதொரு சுற்றுலா... தொடர்கிறேன்.
வாவ்!
Post a Comment