Blog Archive

Friday, August 23, 2019

கண்ணா வா

வல்லிசிம்ஹன்  கண்ணா வா 


Image result for Sri Krishna
Add caption

கண்ணன் வரும் நாள்   நலமாகட்டும்
 இடையே புகுந்து

கண்ணன் வரும் நாளுக்கு வாழ்த்துகள் சொல்கிறேன்.
அமைதியையும், ஞானத்தையும் கொடுக்க வேண்டும்.

கிளம்பும்பொழுது முழங்காலுக்குக் கீழே அடிபட்டதைச் சொன்னேன்.
அது ஒருவாரம் கழித்து ஒருவித கறுப்பு, நீல சிவப்பு
வரிகளாக நேற்றுக் காலை
பயமுறுத்தியது.
ரத்த ஓட்டம் தளர்ந்திருக்கிறது.
சரி இந்த மாசம் வைத்தியருக்குக் கொடுக்க வேண்டியதைக்
கொடுக்க  வேண்டிய நாள்  என்று நினைத்துப் போனோம்.

அவரை காலை  அழுத்திப் பார்த்து  நாடித்துடிப்பு நன்றாக இருக்கிறது.
கால் பற்றிப் பயம் இல்லை.


3 வாரத்தில் வடுக்கள் மறைந்து விடும் என்று சொல்லி , டயபெடிஸ்
 இப்படித்தான் செய்யும் என்று விட்டார்.

அத்தோடு விட்டாரே சாமி வணக்கம் என்று வந்து விட்டோம்.

அதனால் தான் நேற்று ,இந்தத் தோட்டப் பதிவு சுருங்கி விட்டது.

ஆடத்தெரியாமல் மேடை சரியில்லை என்று சொன்ன அம்மையார்
நினைவு வந்தால் அடியேன் பொறுப்பில்லை.ஹாஹ்ஹா.


18 comments:

KILLERGEE Devakottai said...

இன்றைய நாளில் அற்புதமான பாடல் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

மருத்துவர் சொன்னாலும், உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா...

காணொளி காப்புரிமை பெற்றது போல... அதன் இணைப்பு

https://www.youtube.com/watch?v=uPdzO1jxXkM

இந்தப் பாடல் எனது அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும்...

Geetha Sambasivam said...

நீங்க கொடுத்திருக்கும் வீடியோ வரவில்லை. வீடியோ அன் அவைலபில் என வருகிறது. கால் பத்திரம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குக் காலில் பிரச்னை என்றாலே பயம் வருகிறது. கவனமாக இருக்கவும். மெதுவாக எழுதிக் கொள்ளலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.
உங்கள் கருத்துக்கு மிக நன்றி மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்.
கண்டிப்பாகக் கவனமாக இருக்கிறேன்.
நான் சங்கடப் பட்டால் ,உடனே என் மக்களும் நீங்களும்
கவலைக் குள்ளாகிறீர்கள்
என்பதே வருத்தமாகிறது.
என்னை மீறிச் சில சமயம் தொந்தரவாகிறேன்.
இறைவன் காப்பான். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
உண்மைதான். நானே ஒரு நாள் கழித்துதான் அவரைப் பார்க்கச் சென்றேன்.
அடி பட்ட இடத்தில் நல்ல வலி. அதையாவது பொறுத்துக் கொள்ளலாம்.
இந்த பல வண்ண வரிகளைப் பார்த்ததும்
பயமாகி விட்டது.
ஒரு எக்ஸ்ரேயூடன் முடிந்தது விஷயம்.

கவனமாக இருக்கிறேன். பாடல் வரவில்லையா.
எனக்கு மிகவும் பிடிக்கும்.
பத்மினிதான் எத்தனை பாந்தம் மா.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா உங்கள் காலில் பயப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார்..உங்கள் காலில் ஒன்றுமில்லை. எல்லாம் சரியாகிவிடும். விரைவில். பிரார்த்தனைகள் எல்லோரும் மகிழ்வுடன் இருக்க வேண்டும்...

கீதா

Thenammai Lakshmanan said...

வல்லிம்மா உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்கும் டயபடிஸ் வந்திருக்குன்னு போனமாசம்தான் தெரிஞ்சிது. எல்லாம் கண்ணனுக்கேன்னுதான் ( என் கணவர் பெயர் :) இருக்கேன் :)

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன். உண்மைதான் அம்மா.
கண்ணன் கருணை புரிந்தான்.

இன்று மீண்டும் காண்பித்து விட்டு வந்தேன்.

ரத்த ஓட்டம் சரியாக நானும் நடக்கணும்னு சொன்னார்.
சரின்னு சொல்லிட்டு வந்தேன்.
நன்றி ராஜா. கவலை கொடுப்பவனும் அவனே. தீர்ப்பவனும் அவனே,

வெங்கட் நாகராஜ் said...

கண்ணன் அருளால் உங்கள் கால் வலியும் பிரச்சனையும் சரியாகட்டும்.

இனிமையான பாடல். எனக்கும் பிடிக்கும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உடல் குணமடைய வாழ்த்துகள். நன்னாளில் கண்ணனைப்பற்றிய பதிவு. இதே நாளில் தஞ்சாவூரில் உள்ள யாதவ கண்ணன் கோயிலைப் பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் புதிய பதிவினை (Yadhava Kannan Temple, Thanjavur) நான் ஆரம்பித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா ரங்கன் மா.,
இறைவன் எப்போதும் துணை இருப்பார்.
மகளும் மிகப் பரிவுடன் கவனித்துக் கொள்கிறார்.

சதா நாமாவளிதான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மா. சுகமா ராஜா.
நிறைய நடக்கணும்மா. கவனமாக இருங்கள். கண்ணனையும் நீங்க தானே பாத்துக்கணும்.
நன்றி ராஜா. நன்றாக இருக்கணும்.

கோமதி அரசு said...

கண்ணன் திருவடி நினைந்து இருப்போம்.
இந்த பாடல் அன்பு தங்கச்சிக்கு என்று முன்பு பகிர்ந்தீர்கள்.
மீண்டும் .youtube. போய் கேட்டு மகிழ்ந்தேன். எனக்கு பிடித்த பாடல் என்று சொன்ன போது பகிர்ந்தீர்கள் . அந்தக்காலங்கள் இனிமையானது.

உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வயது ஆக ஆக லேசாக இடித்துக் கொண்டாலே இரத்தம் கட்டிக் கொள்ளும். நிறமாக இருக்கும் போது கரும், பச்சை கலரில் பயமுறுத்தும். வெந்நீர் ஒத்தடம், உப்பு சூடு செய்து ஒத்தடம் கொடுங்கள்.ஜஸ் ஒத்தடம் நல்லது உடம்புக்கு ஒத்துக் கொண்டால் கொடுக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
மிக மிக நன்றி மா. கட்டாயம் கவனிக்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,
மனம் நிறை வாழ்த்துகள். தமிழுக்கு எவ்வளவு தொண்டு புரிகிறீர்கள்.
700 பதிவுகள் என்றாலே மலைப்பாக இருக்கிறது. கட்டாயம் சென்று படிக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கை கோமதி,
ஏற்கனவே பதிந்திருக்கிறேனா.
சில பாடல்கள் நம்மை விடாமல் சுற்றி வரும்.
உங்கள் நினைவு,திறன் அதிசயமாக இருக்கிறது.
மிக நன்றி மா. இந்த அன்புக்காகத்தான் நானும் எழுதுகிறேன்.
வாழ்க வளமுடன்.

மாதேவி said...

கண்ணன் காப்பான் நலமே இருங்கள்.