Blog Archive

Tuesday, June 04, 2019

எட்டுக்குடி,சிக்கில்,என்கண் முருகன்

வல்லிசிம்ஹன்,
எல்லோரும் இனிதாக  வாழ வேண்டும்.

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_07.html

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_08.html


http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_09.html
http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_8297.html  அன்புத் தோழி  கீதா சாம்பசிவம்  பதிவுகள்இல்  
இன்னும் விரிவாக  விவரங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.  நன்றி  கீதாமா.





சிக்கில் சிங்காரவேலா பாடலைக் கேட்டதும் நினைவு வந்ததென்னவோ,
 நம் ஷண்முகசுந்தரமும் , மோஹனாம்பாளும் தான்.

பிறகுதான் பொதிகையில் முன்னம் ஒரு காலம்
எப்பொழுதோ ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் கேட்ட தல வரலாறு நினைவுக்கு
வந்தது.
எட்டுக்குடி வேலவனில் ஆரம்பித்து
சிக்கில் முருகன், எங்கண் முருகன் என்று விளக்கமாகச் சொன்னவர் பெயர் நினைவில்லை.
ஏனெனில் குரல் மட்டுமே பின்னணியில் ஒலித்தது.

ஆலய செய்திகளும்,படங்களும் காணக்கிடைத்தது 2012 இல் என்று நினைக்கிறேன்.
இப்பொழுதும் அது போல ஒளிபரப்பாகிறதா என்று தெரியவில்லை.

அப்போது கேட்ட வரலாறு.
எட்டுக்குடி முருகனை வடிவமைத்த சில்பியின் முருகனின் அருள்
நிறைந்த மனத்துடன் இரவு பகல் என்று பார்க்காமல்
 வடித்த முருகன்,வள்ளி, தெய்வயானை
 மயிலில் அமர்ந்த கோலம் பார்த்தவர் மனமெல்லாம்
அருள் வெள்ளம் பாய்ந்தது. அதிசயத்திலும் அதிசயம்
சிற்பி வடித்த மயில் உயிர் பெற்றுப் பறக்க ஆரம்பித்ததாம்.

உறைந்து போன மக்கள் எட்டிப்பிடி எட்டிப்பிடி என்றதும்\
உடனே சிலர் உடனே பிடித்து உரித்தான இடத்தில்
அமர்த்தி முருகன் அதன் மேல் அமர,
 தேவியர் விக்கிரகங்களையும் இருபக்கலிலும் இருத்தினராம். இந்தக்
கோவிலில் மட்டுமே  மயில் இடப்பக்கம்
முகம் திருப்பிப் பார்ப்பது போல இருக்குமாம்.
எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என்று மறுவியதாம்.
இந்த ஆச்சரிய நிகழ்வைக் கேட்டு வந்த மன்னன், வேறு எந்த இடத்திலும் இது
போல அழகு முருகன் இருக்கக் கூடாது என்ற
உத்தரவில் சிற்பியின் வலது கட்டை விரலை எடுக்கச் சொல்ல
அப்படியே நடந்தததாம்.

இதற்குப் பிறகு திருமுருகன் கனவில் தரிசனம்
கொடுத்து சிக்கிலிலும்  தன்னை எழுந்தருளச் சொன்னதால்
ஒரு கட்டை விரலும் ,முருகன் துணையும் இருக்க
சிக்கிலில் முருகப்பெருமான் விக்கிரகத்தை வடித்தார் அந்த
அதிசயச் சிற்பி.
இந்தத் தடவை அவரின் கண்கள் பறிக்கப் பட்டதாம்.

மூன்றாம் தடவையும் கனவில் வந்த முருகனார், இன்னோரு
சிலையும் இதே போல் வடிக்கச் சொல்ல
மகளின் துணையுடன் தெய்வத்தை வடிக்க ஆரம்பித்த போது
மகளின் சிற்பியின் உளி மகள் கையில் பட  ரத்தம் பீறிட்டதாம்.
அது சிற்பியின் கண்ணில் பட அவருக்கு உடனே
கண்ணில் ஒளிவர் மீண்டும் பார்வை பெற்றாராம்.
என் கண் என் கண் என்று கதறி
கந்தனைப் பாட,அந்த ஊருக்கு எங்கண் என்றே பெயர் வந்ததாம்.
பங்குனி மாதத்தில் காவடி பிரசித்தம் இந்த மூன்று
ஊரிலும் என்று சொல்லி முடித்தார் அந்த நிகழ்ச்சியை.
முருகன் திருவருள் எங்கும் நிறையட்டும்.
உங்களில் பலருக்கும் இந்தத் தகவல் தெரிந்திருக்கும்
என் மன திருப்திக்காக இங்கு பதிகிறேன்.
அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும்.

.

எட்டுக்குடி வேலவன்.





18 comments:

துரை செல்வராஜூ said...

காலையில் எட்டுக்குடி முருகப்பெருமானைப் பற்றிய தகவல்..

முருகன் திருவருள் முன்னின்று காக்க!...

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!...

KILLERGEE Devakottai said...

எட்டுக்குடி வரலாறு தந்தமைக்கு நன்றி அம்மா.

கோமதி அரசு said...

அக்காவும் முருகன் பதிவா!
தங்கை நேற்று போட்டாள் பழமுதிர்சோலை முருகனை.

ஆலய தரிசனம் நிகழ்ச்சியில் கேட்ட தலவரலாறு சூப்பர்.

இப்போதும் தொலைக்காட்சியில் காலை, மாலை ஆலயதரிசன்ம் செய்து தலவரலாறு சொல்கிறார்கள்.
ரேடியோவிலும் உண்டு. இன்று திருவேதிக்குடி கோயிலைப்பற்றி சொன்னார்கள்.
அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி.
முருகன் நலங்களை எல்லோருக்கும் அருளவேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா அருமையான முருகன் தரிசனம். இந்தக் கதைகள் எல்லாம் கேட்டதில்லை அம்மா. இப்போதுதான் தெரிந்து கொண்டேன்

விரல் வெட்டுவது, கண் பறிப்பது எல்லாம் என்ன ஒரு ஆணவமிக்க செயல் இல்லையா...

கீதா

நெல்லைத்தமிழன் said...

தெரியாத கதை..... இந்த ராஜாக்களுக்கே இது என்ன குணமோ... சிற்பி நல்லா சிலை செய்துவிட்டால் அவன் கண்ணைப் பறிப்பது இல்லைனா கையை உடைப்பது..

குகன் தரிசனம் அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல் அருமை அம்மா...

Geetha Sambasivam said...

இதை விளக்கமான கதையாகப் பகிர்ந்திருக்கேன் வல்லி. கடைசியில் மட்டும் நீங்க சொல்வது போல் இல்லைனு நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_07.html

http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_08.html


http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_09.html
http://sivamgss.blogspot.com/2008/11/blog-post_8297.html பத்து வருஷங்கள் முன்னர் எழுதினவை. படிக்காதவர்கள் படிக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு
செவ்வேள் என்றும்
நம்மை எந்த இடரிலும் பாதுகாக்கட்டும்.
காப்பான் முருகன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ,
தேவகோட்டைஜி ,அனைவரின் மனக்கவலைகளுக்கும் அருமருந்தாய் அவன் இருப்பான்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
இருவரும் முருகனைத் துதிக்கிறோம் ஒன்றாக.

அவன் பன்னிருகரங்களும் நம்மைக் காக்கட்டும்.
இனிதான் படிக்க வேண்டும் அம்மா.
என்றும் ஆரோக்கியத்துடனும் ,மன சந்தோஷத்துடனுடனும்
இருக்க என் ஆசிகள். எனக்கு மருந்து முருகன் பாடல்கள். அதிலிருந்து
விளைந்ததே இந்தப் பதிவு.ஆலய தரிசனம் இன்னும் வருவது ஆனந்தமே. நல்ல செய்திகள் எப்போதும் காதில் விழ வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,

கோவையில் மருதமலை சென்றதிலிருந்து எனக்குப் பிடித்த குழந்தை தெய்வங்களில் முருகனும் சேர்ந்து கொண்டார்.
உடல் நலத்துக்கு மாமருந்து ,மன பலத்துக்கும் அவன் மருந்து.
இந்தக் கதையை கேட்ட போது எனக்கும் அதிசயமாக
இருந்தது.
புரவலன் என்ற பெயர் வைத்துக்கொண்டு இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா
என்று தோன்றத்தான் செய்தது.

எழுதியவர் யாரோ ,சொன்னவர் யாரோ.
எனக்கு இதில் நினைவு இருந்தததே அதிசயம் தான்.
அதுவும் அவன் அருள் தான்.
மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி,
எனக்கும் அது புரியவில்லை. அவ்வளவு க்ரோதம் கொண்டவன் மன்னனாக
எப்படி இருக்க முடியும்.

தெய்வம் நின்று கேட்டிருக்குமோ என்னவோ.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
நலமா ராஜா. முருகன் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

என் பதிவிலேயே உங்கள் பதிவுகளின் லிங்க்
கொடுத்துவிட்டேன். இனிமேல்
யாராவது வந்தால் அங்கே போய்ப் பார்க்கட்டும். விவரங்கள்
சரியாகக் கொடுத்திருப்பீர்கள்.
எங்கண் முருகன் செய்தி இங்கிருப்பவர் ஒருவர்
சொன்னார்.
உங்கள் பதிவுகளைப் போய்ப் படிக்கிறேன். மிக மிக நன்றிமா.

ஸ்ரீராம். said...

அரைகுறையாகக் கேள்விப்பட்ட கதைகள்.

எட்டுக்குடியிலோ அல்லது வேறு ஏதோ கோவிலிலோ எங்களுக்குக் கட்டளை இருந்தது. அதன் அருமை தெரியாமல் அதைத் தொடராமல் விட்டோம். இப்போது வருத்தமாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்.
வருந்த வேண்டாம்மா.
1970இல் வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை,
என் அன்புத்தோழி நிர்மலா வழியாக இரு வருடங்களுக்கு முன்
மருதமலையில் செய்யச் சொல்லி நிறைவேற்றிக் கொண்டேன்.

அது போல உங்களுக்கும் நல்ல நேரம் பிறக்கட்டும். முருகன் அழைப்பான் அம்மா.

மாதேவி said...

எட்டுக்குடி தரிசனுமும் வரலாறும் அறிந்துகொண்டோம்.