Blog Archive

Monday, June 10, 2019

பிறந்த நாள் நினைவுகள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்

ஜூன் பத்தாம் நாள், 1952 ஆம் ஆண்டு.
அம்மாவுக்கு மிகப் பிடித்த நாள். அம்மாவுக்கு
எண்கள் ,நியுரமாலஜி
மிகவும் பிடிக்கும். அதற்காகவே பல
புத்தகங்கள் படிப்பார். இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
ஞாயிறு அன்று வெளியாகும் சண்டே ஸ்டாண்டர்டில் முதலில் அவர் படிப்பது பீட்டர் விடாலின் அந்த வாரத்துக்கான  ஜோசியக்குறிப்புகள் தான்.

1 ஆம் நம்பர் சூரியனுக்குரியது. அதில் பிறந்தவர்கள்
எல்லாவற்றிலும் ,துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.
என்றெல்லாம் சொல்வார். அவரது பிறந்த நாள் 9 ஃபெப்ரவரி
என் பிறந்த நாள் நம்பர் 9..ஏப்ரில்.தனக்கும் எனக்கும் உள்ள வேறுபாடுகளையும்
சொல்வார். உனக்கு சாலஞ்சஸ் இருந்தால் தான்
நீ பிரகாசிப்பாய். இல்லாவிட்டால் ஒடுங்கி விடுவாய் என்று என் முயற்சிகளுக்கு
ஊக்கம் கொடுப்பார்.

அவர் அப்பாவின் வார்த்தைகளுக்கு மறு வார்த்தை சொல்லி நான் பார்த்ததில்லை.
நானோ சவால் என்றால் சரி என்று வருவேன்.
தம்பிகள் இருவரும் 1 ஆம் எண்ணின் ஆதிக்கம் இருந்தாலும்
 எல்லோருடனும் ஒத்துப் போவார்கள். ஆனால்
நினைத்ததை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக
இருப்பார்கள்
அம்மா நினைத்தபடி தம்பிகள் இருவரும் அவரவர் துறைகளில்
 முனைப்போடு இருந்து வெற்றி பெற்றார்கள்.
கடின வேலைகளுக்கு அஞ்சியதில்லை.
அம்மா மனம் கோணும்படி எதுவும் செய்ய மாட்டார்கள்.
அப்பாவின் வார்த்தைக்கு என்றும் கட்டுப்படுவார்கள்.
அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பிடித்த மாப்பிள்ளை சிங்கம்.
5 ஆம் எண்ணுக்குரியவர்.
அம்மாவின் கணிப்புப்படி இந்த எண்ணுக்குரியவர்கள்
எல்லோரிடமும் தராசுபோல நியாயம் பார்த்து
அனுசரித்துப் போவார்கள்.
சிங்கம் என்னைக் கவனித்துக் கொண்ட அழகில் பூரித்துப்
போவார்.
அவரது செல்ல மகன் என் பெரிய தம்பிக்கு அவனது 42 வயதில்
மாரடைப்பு வந்த போது அவன் அந்தப் பூட்டுக்குத் தப்பிவிடுவான் என்பதில் திடமாக இருந்தார்.
நான் விஜயா ஹாஸ்பிடலே கதி என்று இருக்க
அம்மா அங்கு வரவே மறுத்தார்.
சின்னத்தம்பி நான் அப்பா மூவரும் ஆஸ்பத்திரி வராந்தாவே
வீடு போல இருந்தோம்.
சாப்பாடு மட்டும் வண்டியில் வந்துவிடும்.
அப்பா மனம் தளரக் கூடாது என்பதில் கவனமாக
இருந்தார் அம்மா.
அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. தம்பி  பைபாஸ் சர்ஜரியும்
முடித்து நலமே வீட்டுக்குத் திரும்பினான்.

அவனுக்கு அடுத்து வந்த மூன்று மாதங்களும்
என் பெற்றோர் நம்பிக்கையுடன் வாசித்த சொல்லிய பிரபந்தமும்,சுந்தரகாண்டமும் அவன் ஆயுளை நீட்டியது.
அவன் மனைவியின் சலிப்பில்லாக் கவ்னமும்
அந்த வெற்றிக்குக் காரணம்.
எங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தில்
என் தம்பிகள் காட்டிய அக்கறை அளவிட முடியாதது.

யாரையிம் வன்சொலால் தாக்கி அறியாத மென்மை
படைத்தவன் முரளி.
அவன் பிறந்த அதே ஜூன் மாதம் அவனுக்குப் பேரனும் பிறந்து விட்டான்.
அன்பு முரளி,
உன்னுடைய சந்தோஷ நாட்களை நான் அனுபவிக்கிறேன்.
உன் மகன் ,அவனுடைய மகளுடனும்,மகனுடனும்,
அன்பு மனைவியுடனும் பல்லாண்டு நிறை வாழ்வு வாழ வேண்டும்.

அடுத்த பிறவி என்று உண்டெனில் உனக்கு
நான் எல்லாவிதத்திலும் உதவி உறுதுணையாக இருக்கக்
கடவுள் அருள் வேண்டும்.
ஏனெனில் சில கடன்கள் அடைக்க முடியாதவை.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா.

24 comments:

Geetha Sambasivam said...

எங்கிருந்தாலும் தன் மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை வாழ்த்துவார் உங்கள் தம்பி. என்னதான் இருந்தாலும் உடன் பிறந்தவர்கள் அதிலும் நம்மை விட இளையவர்களைப் பிரிந்து இருப்பது என்பது கொடுமையிலும் கொடுமைதான். ஆனாலும் அவர்களுடன் கழித்த இனிய நினைவுகள் என்றென்றும் உங்களைப் பாதுகாக்கும், தொடர்ந்து வந்து ஆறுதல் கொடுக்கும். தன் பிறந்த நாளில் பேரனுக்கு நிறைந்த ஆசிகளைத் தருவார் உங்கள் தம்பி.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பானதோர் பிறந்த நாள் வாழ்த்து....

எங்கள் சார்பிலும் வாழ்த்துகள்....

கோமதி அரசு said...

அன்பு அன்பு அது தரும் தெம்பு!
அன்பே அனைத்தும்.
தம்பி மீது உள்ள பாசப் பதிவு அருமை.
படம் நன்றாக இருக்கிறது.

தம்பி பேரன் உங்கள் எண்ணப்படி பல்லாண்டு நிறை வாழ்வு வாழ இறைவன் அருள்புரிய வேண்டும்.வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சகோதரரின் மீதான உங்களின் அன்பு நெகிழவைத்தது. கடைசி பத்தியில் உள்ள வரிகள் என் பணிநிறைவு நாளை நினைவுபடுத்தின. அன்று நான் பேசியவற்றில் ஒன்று..மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால் அப்பிறவியிலும் என் மனைவியே மறுபடியும் மனைவியாக அமையவேண்டும் என்று..

ஸ்ரீராம். said...

பீட்டர் விடால்... சிறுவயதில் படித்திருக்கிறேன். நானும் ஒன்றாம் எண்தான்!

தம்பி பேரன் பற்றிய செய்திகள் நெகிழ்வைத்தருகின்றன.உறவுகள் மாறாமல் மறுபிறவிகள் நடந்து கொண்டிருந்தால்....

KILLERGEE Devakottai said...

எனது வாழ்த்துகளும் அம்மா...

துரை செல்வராஜூ said...

சில கடன்கள் அடைக்க முடியாதவை...
இதன் காரணமாகவே -
இனிமையோ கடுமையோ - எல்லா பந்தங்களும் தொடர்கின்றன..

அன்னை அபிராமவல்லி ஆதரித்து அருள்வாளாக...

துரை செல்வராஜூ said...

ஓ.. நீங்களும் எண் ஒன்று தானா!..
அப்போ - கொஞ்சம் சீக்கிரமாகவே கண்ணாடி போடும்படியாக இருந்திருக்கும்...எண் எழுத்து அலங்காரம், சமையல் ( ஆர்வம்) எல்லாம் கைவரப் பெற்றவர்... மற்ற அம்சங்களைப் பொறுத்து கொஞ்சம் போல கோபம் இருக்கலாம்... சர்க்கரைப் பொங்கல் பிரியர்....

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய வாழ்த்துகள் அம்மா...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்காக சொல்லப்பட்ட கருத்து இது...

ஓ.. நீங்களும் எண் ஒன்று தானா!..
அப்போ - கொஞ்சம் சீக்கிரமாகவே கண்ணாடி போடும்படியாக இருந்திருக்கும்...எண் எழுத்து அலங்காரம், சமையல் ( ஆர்வம்) எல்லாம் கைவரப் பெற்றவர்... மற்ற அம்சங்களைப் பொறுத்து கொஞ்சம் போல கோபம் இருக்கலாம்... சர்க்கரைப் பொங்கல் பிரியர்..

தனியாக வெளியாகியுள்ளதால்
குழப்பம் தீர்வதற்கு மீண்டும் இங்கே!..


வாழ்க நலம்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, மிக ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி.
கட்டாயம் அவன் ஆதரவு ,ஆசிகள் அவன் குடும்பத்தைப் பாதுகாக்கும்.
பெரியவர்கள் இருக்கும்போது இளையவர்கள்
இறைவனிடம் செல்வதுதான் ரசிக்கவில்லை. இப்படித்தான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. இறைவன் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்.

ஸ்ரீராம். said...

//அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்காக சொல்லப்பட்ட கருத்து இது...//

நினைத்தேன்... ஆனாலும் சந்தேகமாயிருந்ததால் கம்மென்றிருந்து விட்டேன்! சொல்லி இருப்பவை அனைத்தும் பொருந்துகின்றன!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
உங்கள் ஆசிகள் குழந்தைக்கு வந்து சேர்ந்தது
அருமை.

அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், புதுக்குழந்தைக்குத் தங்கள் வாழ்த்துகள்
போய்ச் சேரட்டும்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தங்கள் கருத்து உன்னதமானது. நல் உறவுகள்
எப்பொழுதும் நம்முடன் இருக்க வேண்டும். அடுத்த ஜன்மத்திலும் இவர்களே நம்முடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் பிரார்த்திப்பதும் நம் கடமையே.
தாங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்களா.
நல்வாழ்வு செழிக்க வேண்டும். தங்களுக்கும் தங்கள் மனைவிக்கும்

என் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நீங்களும் படித்திருக்கிறீர்களா.
அன்பு துரை செல்வராஜுவும் 1 ஆம் நம்பர்க்காரராம்.
அவர் உங்களுக்குத் தனி மெசஜ் கொடுத்திருக்கிறார்.
ஆமாம் சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் பாட்டுப்
போல இந்த எண்ணமும் தொடர்கிறது.
முடியுமா முடியாதா தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி,தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி மா.

ஸ்ரீராம். said...

அம்மா... துரை செல்வராஜூ சாருக்கு காலையிலேயே பதில் அளித்திருந்தேன். அது இன்னும் வெளியிடப்படவில்லையே...

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
அன்னையிடம்,தந்தையிடம் பட்ட கடன்கள்
பிறகு சகோதரர்களின் அளவில்லாத அன்பு
இவைகளுக்கு இந்தப் பிறவியில் பதில் சொல்ல முடியாவிடில் அடுத்த பிறவியிலும் தொடரும் என்பது கர்ம வினை.
நாம் அவற்றை ஏற்பதே முறை.

நன்மை செய்து உய்வோம்.அபிராமியே வழிகாட்டுவாள்.
நன்றி மா.

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: மனதை நெகிழ்த்திய ஒரு வாழ்த்துப் பதிவு! அருமையான உறவுகள் வல்லிம்மா. இறைவன் துணை இருப்பாராக!

கீதா: அம்மா பதிவு வாசித்ததும் ஏனோ என்னை அறியாமல் கண்ணில் நீர் வந்துவிட்டது. அழுகை வந்தது என்றே கூடச் சொல்லலாம். அதுவும் இந்த வரி...அருமையான அன்பான உறவுகளுடன் ஆன குடும்பம். இதுதான் ஒரு குடும்பத்தைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம். பதிவு மிக மிக அருமை அம்மா.

//யாரையிம் வன்சொலால் தாக்கி அறியாத மென்மை// இந்த வரி என்னை மிகவும் புரட்டிப் பார்த்தது என்றே சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த வரி....என்னென்னவோ எண்ணங்கள் மனதில் வந்தது வருகிறது..

அருமையான பதிவு அம்மா. அன்பான உறவுகள் அமைந்துவிட்டால் அதைப் போன்ற ஒரு சந்தோஷம் வேறு எதுவுமே இல்லை. பணம் கூட இரண்டாம்பட்சம் தான். உங்கள் மருமகப் பேரன் நிச்சயமாக உங்கள் தம்பியின் சிங்கத்தின், அவரது கொள்ளுப்பாட்டி, கொள்ளுத்தாத்தா ஆசிகள் பெற்று சிறப்புடன் வாழ்வார்...உங்கள் அன்பான ஆசிகளும் சேர்ந்துதான்....குழந்தைக்கு வாழ்த்துகள்!

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, நன்றி ராஜா.
எல்லாக்குடும்பத்திலயும் நடக்கின்ற அன்பு நிகழ்வுகள் தான்.
நம் விருப்பம் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நினைப்புதானே.
அப்படியே இறைவன் நடத்திச் செல்லட்டும்.

அன்பு கீதாமா,
ரொம்ப இளகின மனசு உங்களுக்கு.
நானும் இந்த இரு தம்பிகளைப் பற்றி எழுதவேண்டாம்னு நினைப்பேன்.
என்றென்றும் கடமைப் பட்டவள்.

ஒரு க்ஷணம் நான் சிரமப்பட்டால் பொறுக்க மாட்டார்கள்.
அப்படி ஒரு பந்தம் எங்களுக்குள்.
அதுவும் சின்னவன் இருக்கானே ,உருகிவிடுவான்.
நன்றி டா கீதாமா.