Friday, June 07, 2019

திருக்கண்ணமுது

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும்.
திருக்கண்ணமுது

புதுக்கண்ணன் பிறந்ததை ஒட்டி
பெருமாளுக்கு நிவேதனம் செய்ய இந்தப் பால் பாயசத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
நாங்கள் திருப்புல்லணை ஆதி ஜகன்னாதன் கோவிலுக்குச் சென்ற போது
 காலை மணி பதினொன்று இருக்கும்.
அமிர்தமான பாயசப் பிரசாதம் கிடைத்தது அவன் அருளாக.
அந்த மாதவ பட்டாச்சார்...அப்போது அங்கே இருந்த அர்ச்சகர்

இந்த கண்ணமுதைச் செய்யும் விதம் சொன்னார்.

பச்சரிசியை வறுத்துக் கொண்டு ஒன்றுக்கு மூன்று
என்ற விகிதத்தில் நீர் சேர்த்து
 நன்றாகக் குழைய வேகவைத்து,
ஒரு முழுத்தேங்காயின் பால் இரண்டு தடவையாக எடுத்துக் கொண்டு

இரண்டாவது பாலையும், ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வெல்லத்தூள்
இரண்டையும் கொதிக்கும் சாதத்தில் கலந்து ஒரு கொதி
வந்தபின்னால்,
முதலாவதாக எடுத்த பாலையும் கலந்து அதுவும் ஒன்று சேரக் கொதித்த பின்னர்
இறக்கி,
ஏலக்காய் பொடி தூவி, முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துக் கலந்து
கண்ணனுக்குப் படைக்க வேண்டும்.
குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் செய்தது.
இனி நாமகரணத்துக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறேன்.
Add caption
Add caption
என்றும் வாழ்க வளமுடன்.
ஸ்ரீனிவாச பெருமாள்  சிகாகோ
படத்தில் இருப்பது கூகிள் குழந்தை.


32 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இல்லக்கண்ணனுக்கு நல்வரவு.

ஸ்ரீராம். said...

அம்மா... வாழ்த்துகள் மறுபடியும்.

திருக்கண்ணமுது செய்முறை குறித்துக் கொண்டுள்ளேன். பாஸிடம் கொடுத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

இந்தச் செய்முறையை எபி திங்கக்கிழமைக்கு அனுப்பி இருக்கலாமே அம்மா..

உங்களிடமிருந்து எந்த படைப்பும் நீண்ட நாட்களாய் வராதது ஒரு குறை எனக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,வணக்கம்.
வெகு நாட்கள் கழித்து இறைவன் கொடுத்த வரம்.
உங்கள் அனைவரின் ஆசிகளும் அவனுக்கு
பலம் கொடுக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

இது எல்லோருக்கும் தெரிந்த உணவு தானே ராஜா.
புதிதாக கதை எழுதினால் அனுப்புகிறேன்.
தயக்கமாக இருக்கிறது.
குட மிளகாய் கட்லட் அனுப்பட்டுமா.
மீண்டும் சொன்ன வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி மா.


என்றும் பகவத் சங்கல்பத்தில் நீங்கள் அனைவரும்
செழிப்பாக இருக்கணும்.

ஸ்ரீராம். said...

அனுப்புங்கள் அம்மா. புதுசு என்று என்ன.. சிறு மாறுதல்களுடன் ஒவ்வொரு வீட்டு சமையலும் ஒவ்வொரு முறையாகக்கூட இருக்கலாம். குடமிளகாய் கட்லெட் புதுசாகத்தான் இருக்கிறது அனுப்புங்கள்.

துரை செல்வராஜூ said...

கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா...
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..

கேட்கவே சந்தோஷம்...

என் மருமகன் இல்லத்திலும் கண்ணன் பிறக்க
பெரியோராகிய தாங்களும் ஆசீர்வதிக்க வேண்டும்!...

கோமதி அரசு said...

திருக்கண்ணமுது செய்து கண்ணனின் வரவை கொண்டாடிய அத்தை பாட்டிக்கு வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி இனிமை எல்லாம் நிறைந்து இருக்கட்டும்.
வாழ்க வளமுடன்.

KILLERGEE Devakottai said...

புதிய வரவுக்கு எமது ஆசீர்வாதங்களும் அம்மா...

எங்கள் குடும்பத்திலும் புதுவரவு ஒரு மாதமாகிறது பெயர் நிலாலினி

திருப்புல்லாணி ஆதி ஜகன்னாதன் கோவில் இங்குதான் எனது அப்பா-அம்மாவுக்கு விவாஹம் நிகழ்ந்தது.

துரை செல்வராஜூ said...

அன்பின் நல்வாழ்த்துகள்...

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் மா.....

திருக்கண்ணமுது சுவைக்க ஆவல் வந்து விட்டது. :)

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி...

வாழ்த்துகள் அம்மா...

மாதேவி said...

இனிபபுடன் கலகலக்கட்டும் இல்லம்.

நெல்லைத்தமிழன் said...

தலைப்பே இப்படி ஈர்க்கிறதே... செய்துபார்க்கணும் என்ற ஆசையும் வந்துவிட்டது. தேங்காய் அரைத்துப் பாலெடுக்கணும்... இது பெரிய வேலை. பேசாமல் தேங்காய்பால் பொடியை உபயோகப்படுத்தலாம்னு நினைக்கிறேன்.

செய்து எபிக்கு சில வாரங்களில் அனுப்பறேன் (இங்க கடை தேங்காய்பால் பொடியை உபயோகப்படுத்த முடியாது)

நெல்லைத்தமிழன் said...

ஐயோ.... ஸ்ரீராமின் பின்னூட்டத்தை இப்போதுதான் பார்த்தேன்...

நீங்களே அனுப்பிடுங்கோ வல்லிம்மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை செல்வராஜு,
மனம் நிறை நன்றிகள். இறைவன் கருணை மிக்கவன்.
நல் நெஞ்சங்களை அதிகம் சோதித்தாலும்
அருள்வான். தங்கள் மருமகனுக்கும் கூடிய சீக்கிரம்
கண்ணன்,கந்தன் இருவரும் அருள என் மனமார்ந்த ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி.
கண்ணன் அனைவரின் நெஞ்சங்களிலும் ஆறுதல் சொல்ல வந்திருக்கிறான்.
அவனும்,அவன் அக்காவும், பெற்றோர்கள் ,பாட்டிகள்,தாத்தா
அனைவருக்கும் தெளிந்த இன்பத்தைக் கொடுப்பான்.
வாழ்க வளமுடன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
உங்கள் பெற்றோர் விவாகம் ஆதி ஜகன்னாதர் கோவிலில் நடந்ததால் தான் உங்களை மாதிரி சத் புத்திரர் ,ராமன் போலே
பெற்றிருக்கிறார்கள். சந்தேகமே இல்லை.

பேத்தி நிலாலினிக்கு என் மனமார்ந்த ஆசிகள்.
அமோகமான வாழ்வு பெற்று, இருக்கும் இல்லம் இன்னும் செழிக்க வழி வகுப்பாள்.
இந்த இனிப்பு சேதி பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறை நன்றி.
என்றும் வளமுடன் வாழ்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, உங்கள் வாழ்த்துகளுக்கு நிறை நன்றிகள் மா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் உங்களைப் போல பெரியப்பாக்கள் ஆசிகள் அவனுக்கு வேண்டும்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், திண்டுக்கல் வெள்ளை வினாயகர் ஆசிகளாக உங்கள் வாழ்த்துகளைச் சேமிக்கிறேன். நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத் தமிழன்,
உங்களுக்குத் தெரியாத கண்ணமுதா.
சுலபமாகச் செய்யலாமே.
மிக்சியில் போட்டால் தேங்காய்த்தூள் எடுக்கலாம். அதே மிக்சியில் பால் எடுத்துக் கொள்ளலாம்.
பிறகென்ன. ஈசிபீசி தான்.

செய்து செய்முறை,படங்களோடு அனுப்புங்கள் மா
எனக்குப் படம் எடுக்க வசதி இல்லை.
இணையத்தை நம்ப வேண்டி இருக்கிறது.

வேணுகோபாலனை நம்பி செயல் படுங்கள்.
ஜம்முனு வரும்.

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா ஆஹா திருப்புல்லாணி பாயசமா சூப்பர் உங்கள் குறிப்புகளையும் நோட் பண்ணிக் கொன்டேன்.

என் மாமா, மாமி அப்புறம் குடும்பத்தினர் அனைவரும் எங்கள் குடும்பம் தவிர, எல்லாரும் இராமேஸ்வரம், திருப்புல்லாணி என்று மாமிக்கு தீராத வயிற்றுவலிக்காக ஏதோ பரிகாரம் செய்யச் சென்றார்கள். அப்போது பாட்டி தெரிந்து கொண்டு வந்து வீட்டில் திருப்புல்லாணி பாயாசம் என்று செய்திருக்கார். அவர் செய்தது மூன்றாவ்து பாலில் அரிசியை வறுத்துப் போட்டு வேக வைத்து அப்புறம் வெல்லம் கரைதத்து வடிகட்டி கொதிக்க வைத்து வெந்த சாதத்தோடு கலந்து கொதித்ததும் இரண்டாம் பால் விட்டு ஒரு கொதி வந்ததும் முதல் பால் விட்டு ஒரு லைட் கொதி வந்ததும் அவ்வளவுதான் அப்பறம் அலனாரங்கள். ஓடாமல், ரொம்ப கெட்டியாக இலாமல் இருக்கும் ரொம்பப் பீடிக்கும் அம்மா. இதுப்புல்லாணி திருக்கண்ணமுது ஃபேமஸ் ஆச்சே...

குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துக்ள்!! நீங்கள் அத்தைப்பாட்டி!! ப்ர்மோஷன்!!!

கீதா

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரி

சின்னக் கண்ணனின் வரவுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் அத்தைப் பாட்டியாக பதவி உயர்வு பெற்றதற்கும் வாழ்த்துக்கள். அரிசி பாயசம் செய்முறை மிகவும் அழகாக உள்ளது. மிகவும் ரசித்தேன். சிகாகோ
ஸ்ரீநிவாசனை என் மகன் தரிசித்து இருக்கிறான். படம் அற்புதம். நானும் தரிசனம் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, உங்க பாட்டி செய்தது இன்னும் சூப்பராக இருக்கே.
அசல் தேங்காய் வாசனையோடு ஆடித் தேங்காய்ப் பால் பாயசம் மாதிரி நன்றாக
சுவை கூட்டும்.
ஒரு வேளை இந்த பட்டாச்சார், தன் மனைவி செய்ததை
பார்த்து சொன்னாரோ.

நான் செய்தது கொஞ்சம் நெகிழத்தான் இருக்கும்..
கொஞ்சம் தான் செய்தேன்.
ஒருவரும் இனிப்பு சாப்பிடுவதில்லை இங்கே.
இப்போ வந்திருக்கும் கண்ணனின் அப்பா
திக்கம் என்று சொல்வான் கண்ணமுதை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சகோதரி கமலா. முதல் தடவை அத்தைப் பாட்டி ஆனது 2010இல்.
இது இரண்டாம் தடவை. பகவான் அருள்.

எத்தனை அழகாகப் பின்னூட்டம் இடுகிறீர்கள்.
படித்ததை மனதில் இருத்திப் பதில் சொல்லும் கலை எல்லோருக்கும் வந்து விடாது.
நம் கீதா ரங்கன் பின்னூட்டங்களைக் கண்டு அதிசயித்திருக்கிறேன்.
மனதாரப் பாராட்டவும் ஒரு நல்ல மனமும், நேரமும் வேண்டுமே.
உங்கள் எல்லோரின் ஆசியில் கண்ணன் வளமாக வளர்வேண்டும். நன்றி அம்மா.

Geetha Sambasivam said...

குழந்தைக்கு எங்கள் ஆசிகள் வல்லி. உங்கள் மன மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக்கொண்டது. பாயசம் அருமை. கிட்டத்தட்ட இப்படித்தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சம் தி/கீதா சொன்ன மாதிரியில் அம்மா பண்ணுவா! நானும் அப்படித் தான் பண்ணுவேன். தேங்காய்ப் பால் விட்ட பாயசத்தில் சாதாரணப் பால் சேர்க்கக் கூடாது என்பார்கள். பாயசம் ருசி அருமையா இருந்திருக்கும் என்பது நீங்கள் எழுதி இருக்கும் விதத்திலேயே புரிந்தது.

Geetha Sambasivam said...

வாட்சப் விசாரணைக்கு நன்றி. வந்தவங்க நேற்றிரவு ராக்ஃபோர்ட்டில் தான் கிளம்பிப் போனாங்க. அவங்களுக்கு இங்கே இருக்கும் தண்ணீர், காற்று மற்ற வசதிகளைப் பார்க்கப் பார்க்க ஆச்சரியம். அதோடு நான் தொலைக்காட்சி பார்க்க மாட்டேன் என்றால் நம்பவே இல்லை. சும்மாச் சொல்றே! நாங்க இல்லைனா காலை தொலைக்காட்சியைப் போட்டால் இரவு வரை ஓடும் என்றார்கள். சரி, அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டோம். :))))) வீட்டு வேலைகளை யார் பார்ப்பாங்க, சமையல், சாப்பாடு இதெல்லாம் பத்தி யோசிக்கலை! சீரியல் பார்த்துக் கொண்டே பொழுதைக் கழிக்கிறாய் போல எனக் கற்பனை செய்து கொண்டனர். சிப்புச் சிப்பாய் வந்தது.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துகள்
நல் வரவு

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
இப்படிக்கூடவா சொல்வார்கள். சே.என்ன மாதிரி மனுஷா மா
எனக்கும் ஒரு கசின் ,ஒன்றுவிட்ட முறை.
அவளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆகிவிட்டது.
மதுரைக்குப் போனபோது என்னைப் பார்க்க வந்தாள். நீ தலைகீழாக நடப்பதாகக் கேள்விப்பட்டேன் என்று சொன்னாள்.
அதாவது இவர் என்னை அப்படிக் கொண்டாடுவதாக
யாரோ சொன்னார்களாம்.
நானும் சொன்னேன். நான் காரைக்கால் அம்மையார் இல்லையென்னு.

எப்பொழுதும் கேலிதான்.போனாப் போகிறது சௌக்கியமாக இருக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா. மனசுக்கு இதமாக இருந்தது இந்த செய்தி.
மாமியார் எப்பொழுதும் இது போலப் பாயசம்
செய்வது வீட்டுக்கு நன்மை தரும். பகவானுக்குக் கண்டருளப் பண்ணிவிட்டு எல்லோருக்கும் கொடுக்கணும்னு சொல்வார்.
அவருடைய மாமியாருக்கு//ஆஜிப் பாட்டி// இதில் நம்பிக்கை கிடையாது.
மாப்பிள்ளைகள் வந்தால் ஹல்வா செய்வார். ஹாஹா.

தேங்காய்ப் பாயசம் வாசனை நிறைய. அப்படியே செய்யலாம். நன்றி மா.