வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
வருத்தம் ,குழப்பம் தீர இறைவனே துணை
ராமேஸ்வரம் மங்கலான வெளிச்சத்திலும் கலகலப்பாக இருந்தது . இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்த யாத்திரிகர்கள் , அவர்களின் பேச்சு,
ஆடி மாத விழாவிலே பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடு.
என்று இருந்த மெயின் ரோடு, உற்சாகம் கொடுத்தது.
அகிலத்தின் அம்மா சொன்னபடி தம்பதிகள் இருவரும் நீராடி,
பட்டுடை உடுத்திக் கோவிலுக்குச் சென்றனர்,
அங்கிருந்த 32 தீர்த்தக் கிணறுகளில் நின்று
அங்கு நின்றவர்கள் வாளியால் இறைத்த நீரில்
குளித்து, மனம் முழுக்க இறைவன் நினைவில் மூழ் க
அகிலம் கணவனுடன் அருள்மிகு ராமநாதர் சுவாமிகளின் சந்நிதியில் வந்து நின்றாள் .
அகிலத்தின் மனமெல்லாம் ஈசனிடம் இறைஞ்சியது.
எனக்கு என்ன வழி காட்டப் போகிறாய் ஈசா 🙏🙏
என்று கண்ணில் நீர் வழிய நின்றாள்.
இதைக் கவனித்த பெற்றோருக்கு மனம் சஞ்சலப் பட்டது.
அவர்களை அழைத்துக் கொண்டு அருள்மிகு பர்வத வரத்தினை அம்மன் சந்நிதிக்கு வந்த பொது
தரையில் அமர்ந்து நமஸ்கரிக்க அகிலம் அப்படியே சரிந்துவிட்டாள் .
அங்கிருந்த அனைவரும் பதறிப் போக
மகாதேவன் அவளுக்கு இந்த அலைச்சல் எல்லாம் தாங்காது.
விடுதிக்குச் செல்லலாம் என்றான்.
அவனை அமர்த்திய ராமலிங்க குருக்கள்.
முகத்தில் அபிஷேக ஜலத்தைத் தெளித்து,
அம்மா மனம் வருந்தாதே, அம்பாள் உன் குறை தீர்ப்பாள்
என்று ஆதரவு சொல்லி அபிஷேகப் பாலை அருந்தும்படி கொடுத்தார்.
மீண்டும் எழுந்த அகிலம் மனத்தெளிவுடன் அம்பாளின் திருமுகத்தின் அழகைப் பருகியபடி இருந்தாள்.
அம்பாளும் ஈஸ்வரனு ம் உலா வரும் காட்சியைத் தரிசித்தபடி வெளி வந்து , தனுஷ்கோடி சென்று வந்தனர்.
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
வருத்தம் ,குழப்பம் தீர இறைவனே துணை
ராமேஸ்வரம் மங்கலான வெளிச்சத்திலும் கலகலப்பாக இருந்தது . இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்த யாத்திரிகர்கள் , அவர்களின் பேச்சு,
ஆடி மாத விழாவிலே பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடு.
ஆடி மாத அம்பாள் உலா |
என்று இருந்த மெயின் ரோடு, உற்சாகம் கொடுத்தது.
அகிலத்தின் அம்மா சொன்னபடி தம்பதிகள் இருவரும் நீராடி,
பட்டுடை உடுத்திக் கோவிலுக்குச் சென்றனர்,
அங்கிருந்த 32 தீர்த்தக் கிணறுகளில் நின்று
அங்கு நின்றவர்கள் வாளியால் இறைத்த நீரில்
குளித்து, மனம் முழுக்க இறைவன் நினைவில் மூழ் க
அகிலம் கணவனுடன் அருள்மிகு ராமநாதர் சுவாமிகளின் சந்நிதியில் வந்து நின்றாள் .
அகிலத்தின் மனமெல்லாம் ஈசனிடம் இறைஞ்சியது.
எனக்கு என்ன வழி காட்டப் போகிறாய் ஈசா 🙏🙏
என்று கண்ணில் நீர் வழிய நின்றாள்.
இதைக் கவனித்த பெற்றோருக்கு மனம் சஞ்சலப் பட்டது.
அவர்களை அழைத்துக் கொண்டு அருள்மிகு பர்வத வரத்தினை அம்மன் சந்நிதிக்கு வந்த பொது
தரையில் அமர்ந்து நமஸ்கரிக்க அகிலம் அப்படியே சரிந்துவிட்டாள் .
அங்கிருந்த அனைவரும் பதறிப் போக
மகாதேவன் அவளுக்கு இந்த அலைச்சல் எல்லாம் தாங்காது.
விடுதிக்குச் செல்லலாம் என்றான்.
அவனை அமர்த்திய ராமலிங்க குருக்கள்.
முகத்தில் அபிஷேக ஜலத்தைத் தெளித்து,
அம்மா மனம் வருந்தாதே, அம்பாள் உன் குறை தீர்ப்பாள்
என்று ஆதரவு சொல்லி அபிஷேகப் பாலை அருந்தும்படி கொடுத்தார்.
மீண்டும் எழுந்த அகிலம் மனத்தெளிவுடன் அம்பாளின் திருமுகத்தின் அழகைப் பருகியபடி இருந்தாள்.
இரண்டு சமுத்திரங்கள் கலக்கும் இடம் தனுஷ்கோடி |
ஆக்ரோஷமாக அரபிக்கடல் மோத , சாத்விகத்துடன்
வங்காளக்கடல் இருக்க ,அந்தக் காட்சியை தன் வாழ்க்கையாகப் பார்த்தாள் அகிலம்.
திரும்பி வந்து சாப்பிட்டதும் வெளியே போய்விட்டான் மஹாதேவன்.
//என்ன ஆச்சு உங்கள் இருவருக்கும். நீ மயங்கி விழுந்ததைக் கூட மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே வெளியேறி
விட்டாரே.
என்ன மனஸ்தாபம் என்று வினவிய அம்மாவைக் கண்டவள் மெதுவாக அவர் மனம் இங்கே இல்லை அம்மா. ஊரில் அவரது காதலியுடனும் மகனுடனும் இருக்கிறது
என்றதும் தூக்கி வாரிப் போட்டது பெற்றோருக்கு.
நடந்த விஷயங்களை சொன்னதும்
அசந்து உட்கார்ந்து விட்டனர். //நான் என்ன முடிவெடுக்கட்டும் அம்மா. பொறுமையாக இதே
வாழ்க்கையையில் இருக்கட்டுமே.இல்லை பிறந்த வீடு திரும்பி விடட்டுமா. என்னால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.
இந்தக் கடலில் குளித்தால் எங்கள் பிரச்சினை தீருமா.
மனம் மாறுமா //சொல்லுங்கள் என்றாள் .
அம்மா விசித்து அழ ஆரம்பிக்க, தந்தை அவளை அதட்டினார்.
ஆறுதல் சொல்லாமல் அழாதே என்ற தந்தையை வியப்புடன்
பார்த்தாள் அகிலம்.
நீங்கள் ஆண்கள் அனைவரும் அடக்குவது என்று ஈடுபட வேண்டாம் அப்பா. அவளுக்கு எத்தனை அதிர்ச்சி.
அழட்டுமே.//
இல்லை அம்மா மாப்பிள்ளை தப்பாகப் புரிந்து கொள்ளப்
போகிறாரே என்று நினைத்தேன் என்ற தந்தையை
நம்ப முடியாமல் பார்த்தாள் .😔
தவறு செய்தவர் அவர் அப்பா.
இப்போது சொல்கிறேன் கேளுங்கள் என் முடிவை.
நாளை புதுக்கோட்டை திரும்புகிறோம். வண்டியை எடுத்துக் கொண்டு குளித்தலை செல்கிறோம்.
எனக்கு அப்படியே வீட்டைவிட்டுக் கிளம்ப எண்ணமில்லை.
என் குழந்தைகளுக்கு அங்கே உரிமை இருக்கிறது.
அவர்களுக்கு தந்தையின் ஆதரவு வேண்டும்.
எனக்கு என்னை ஏமாற்றிய கணவனின் உறவு வேண்டாம் .
ஆனால் அந்த வீட்டில் எனக்கும் பாத்தியதை இருக்கிறது.
அவர் மனம் மாறி அந்த உறவை விட்டுவிட்டால் சந்தோசம்.
இல்லை அந்தக் குடும்பமும் வேண்டும் என்றால் எனக்கு சம்மதம் இல்லை.
இதை நான் மாமனாரிடமும் சொல்லப் போகிறேன்.
வெறும் உடல் மட்டுமே தாம்பத்தியம் இல்லை.
மனம் இணையாவிட்டால் அங்கே பொருள் இல்லை.
நாலு குழந்தைகளின் தாயாக அங்கே தொடருவேன்.
என்று தெளிவான முகத்துடன் பெற்றோரைப்
பார்த்தாள் .
கேட்டுக் கொண்டே வந்த மஹாதேவன் ,தூங்கச் சென்று
விட்டான்.
அகிலம் முடிவு செய்த படியே வாழ்க்கை தொடர்ந்தது.
அவளின் சந்நியாச வாழ்க்கையை உறுதி படுத்த
அந்த நவநீதத்துக்குப் பெண் குழந்தையும்
பிறந்தது.
மாமனார், நிலபுலன் சொத்துக்களைப் பேரக் குழந்தைகள்
கைக்கு வருவது போல
உயில் எழுதினார். அகிலத்தை அவர்களுக்கு காப்பாளராக வைத்து ஏக்கம் நிறைந்த மனதுடன் மறைந்தார்.
நாங்கள் சேலம் மாறி வந்த பிறகு அங்கே சென்று பார்த்து வந்தோம். மனத்தெளிவுடன் இருந்த
அகிலம் என் கண்ணுக்கு கன்யாகுமரியாகத்தான் தோன்றினாள் .
இவ்வளவு மன திடம் யாருக்கு வரும்.✌✌✌✌✌✌
அகிலத்தின் பெற்றோர் மகளின் வீட்டுக்குப் பிறகு வரவில்லை.
பேரன் பேத்திகள் மட்டும் விடுமுறைக்குத் திருச்சி சென்று வந்தனர்.
தெளிவான மனமுடன் வாழ்ந்து
தன மக்களின் திருமணங்கள் நடந்து பத்து வருடங்களில்
அகிலமும் தன் விருப்ப தெய்வமான அகிலாண்டேஸ்வரியின் பாதங்களைச் சேர்ந்தாள் .
அந்தக் கால எண்ணங்கள் படி அவள் தீர்மானம்
தவறாக இருக்கலாம். எனக்கு அவள் புதுமைப்பெண்.
அனைவரும் வாழ்க வளமுடன்.✌
21 comments:
அகிலத்தின் முடிவு எதிர்பார்த்ததே என்றாலும் அதற்கும் ஒரு திடமான மனம் வேண்டும். மஹாதேவனிடம் ஏமாந்த அந்த இன்னொருபெண்ணின் கதி என்னாயிற்றோ...
மனத்திடம் என்பது ஒரு சிலரிடத்தில் மட்டுமே இருப்பதைக் காணமுடியும்.
தண்டனை என்னமோ அகிலத்துக்குத் தானே! அவள் கணவன் கடைசிவரை மனசு மாறவே இல்லையே! மனதை மிகவும் பாதித்து விட்டது! என்ன இருந்தாலும் அகிலம் கணவன் ஆதரவு இல்லாமல் நடைப்பிணம் தானே! அவன் தவறை உணர்ந்திருந்தாலாவது பரவாயில்லை. ஆனால் தொடர்ந்திருக்கிறான் கள்ள உறவை! :( ஆண்கள் எப்போதும் ஆண்கள் தான்.
மனஉறுதியுடன் முடிவுகளை எடுத்தவர் அகிலம்.
வீட்டு விஷயம் வெளியே தெரியாமல் இருக்க இந்த முடிவு எடுத்து குழந்தைகளுக்காக வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார்.
பாடல் பகிர்வு அருமை.
//மனம் இணையாவிட்டால் அங்கே பொருள் இல்லை//
உண்மை அம்மா இந்த திடமான முடிவுகள் எல்லோராலும் எடுக்க முடியாது.
மனம் இளகி விட்டதம்மா...
இப்படிப்பட்ட மாதரசிகளும் வாழ்ந்த மண் இது.. எனும் போது
பெருமிதத்துடன் வேதனையும் மேலிடுகின்றது...
அன்பு ஸ்ரீராம்,
இத்தனை நேரம் இண்டர்னெட் இல்லை. ஆனால் சொன்ன நேரத்தில்
வந்துவிட்டது.
அகிலம் இந்த முடிப்பார் என்று தெரிந்ததா.
ஆஹா. You are very astute.
நான் அவரைப் பார்த்த போது தெளிவாக இருந்தார்.
சுயமரியாதை,நான் கடைசியாகப் பார்த்தது 2003 இல்.
அதே உபசாரம்,அதே கனிவு. கணவர் அதே ஆர்ப்பாட்டம்.
அவரது வாழ்க்கையில் வேறு நிலை எடுக்கவில்லை.
மனம் விரும்பிய பெண்ணுடன் நல் வாழ்வு வாழ்ந்தார்.
இன்னும் நலமுடன் இருக்கிறார்.
அந்தக் குழந்தைகளுக்கும் தாத்தா நிலம் எழுதி வைத்தார்.
அகிலாவின் இழப்பு இழப்பு தான்.
அன்பு முனைவர் ஐயா,
புத்தர் துறவு போல ஒரு மாறுபட்ட துறவு. அதிகப்படியான நகைகள் எல்லாம் கழற்றி விட்டு
சாதாரண நூல் புடவை உடுத்தி, பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டுக் கடமைகளையும் முடித்தார்.. அவ்வளவு வைராக்கியம்.
நன்றி ஐயா.
ஆமாம் கீதாமா,
நஷ்டம் அவளுக்குத் தான். அவள் வழி துறவு என்றாகிவிட்டது. மஹா பெரியவாளிடம் மிகுந்த பக்தி.
தந்தை தாயுடன் அவரைக் கலவையில் தரிசித்து
மௌனமாகவே இருந்துவிட்டு பழங்கள் பெற்று வந்துவிட்டார்.
முடிவில் மாற்றம் இல்லை.
அவள் புகுந்த வீட்டில் அவள் மதிப்பு குறையவில்லை.
திருமணங்கள் முதலிய நல் நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தாள்.
ஊராருக்கு மகாதேவன் விஷயம் முன்பே தெரிந்திருந்தது.
மிராஸ்தார் வீட்டு மருமகள் என்ற மரியாதை கொடுக்கப் பட்டது.
அவள் மனதை விட்டு நீங்காத காயம்
கடைசி நாட்களில் அவளிடம் நீங்கி விட்டது.
கர்மபலன் என்றே ஏற்றுக்கொண்டாள்.
நன்றி கீதாமா. இப்படி எத்தனையோ வாழ்க்கை.
புரியத்தான் இல்லை.
அன்பு கோமதி, உங்களின் அனுமானம் தான் உண்மை.
குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தேசித்தே
அந்த முடிவு.
இடத்தை விட்டுப் போவது சுலபம்.
இருந்து வெற்றி பெற அவள் முயன்று,குழந்தைகளின் வாழ்க்கையை
சீராக்கினாள். மகாதேவனுக்குக் குழந்தைகளிடம் பகை இல்லை.
ஆனால் பரிவும் இல்லை.
அது ஒன்றுதான் அந்தக் குழந்தைகளை அவளிடம் செல்ல வைத்தது.
இப்போது அனைவரும் சுகம்.
ஆமாம் கோமதி மா, அந்தப் பாடலும் படமும் மிகவும் பிடிக்கும்.
நன்றி தங்கச்சி .வளமுடன் வாழ்க,.
அன்பு தேவகோட்டைஜி,
இரு மனைவியரோடு வாழ்ந்தவர்கள் உண்டு.
இந்த அகிலாம்மாவுக்கு அது ஏற்கவில்லை. அவள் மனப்பாடு அப்படி.
கணவனே உலகம் என்று 16 வருடங்கள் இருந்துவிட்டுத் திடீரென்று
இந்த மாற்றத்தை ஏற்க முடியவில்லை.
எல்லாவற்றிற்குமே அதீத பிரேமையே காரணம்.
எப்பொழுதும் நலமுடன் இருங்கள்.
அன்பின் துரை,
அகிலாம்மா மனமும் தளரவில்லை. குழந்தைகள் முன்
தன் வாழ்க்கையில் மாறுபாடு இருப்பதாகவும் காட்டிக் கொள்ள்வில்லை.
பெரியவர்கள் ஆன பிறகு அவர்களே புரிந்து கொண்டார்கள்.
பக்குவப்பட்ட பிறகு துயரம் ஏது அம்மா.
நன்றி ராஜா. என்னாளும் வளமுடன் வாழ ஆசிகள்.
// பக்குவப்பட்ட பிறகு துயரம் ஏது?..//
கோடியில் ஒரு வார்த்தை.. ம்
அருமை...அருமை...
அன்பு துரை ,பக்குவம் வர நாட்கள் ஆகும் தான். மனக்குமுறல் அடங்கினால்
பதப்பட்டுவிடும். நன்றி ராஜா.
இவ்வளவு மனத்திடமா? யார்தான் அவள் கணவனின் நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியும்?
ஏதோ பணம் இருந்தது..தப்பித்தாள். இல்லைனா?
ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் எத்தகைய முடிச்சுகளுடனும் முட்களுடனும் நிகழ்கிறது..
அன்பு முரளிமா,
பணம் மட்டும் இல்லை.
பிறந்த வீட்டிலும் செல்வாக்கு உள்ளவர்கள் தான்.
தன் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்பதில் தெளிவாக இருந்தார்.
அதே சமயம் தன்னைப் புறக்கணித்த கணவனை ஏற்கவும்
மனமில்லை.
குழந்தைகளுக்கும் நம் சமூகத்தில் இன்னார் வம்சம் என்று
சொல்வதில்
குறை வைக்கக் கூடாது.எல்லாம் சேர்ந்தே ,அவளை அங்கே கட்டிப் போட்டது.
விவாக ரத்து செய்யாமல் கணவன் மனைவி ஒரு வீட்டில் விலகி இருந்தார்கள்.
மிகச் சிரமம்தான் பட்டிருப்பார்.
நன்றி மா.
http://killergee.blogspot.com/2019/06/blog-post_19.html?m=1
துளசிதரன்: அகிலத்தின் மனோதிடம் வியக்க வைக்கிறது. இப்படியானவர்கள் வெகு அபூர்வம். அருமையாகச் சொல்லியிருக்கீங்க வல்லிம்மா
கீதா: வல்லிமா ஹேட்ஸ் ஆஃப் டு அகிலம். புதுமைப் பெண்ணேதான். புரட்சிப் பெண். அந்தக் காலமாவது இந்தக் காலமாவது...இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் லூஸர் என்பார்கள். இல்லை அவள் வெற்றிபெற்றவள் என்பேன் நான். தன் வைராக்கியத்தில்.
அது சரி அந்த மற்ற பெண்மணி என்னானாள்? பாருங்கள் மகாதெவன் கடைசிவரை திருந்தவே இல்லை. அது சரி மகாதேவனின் குழந்தைகளுக்குத் தெரியும் தானே? அவர்கள் கூடக் கேள்வி கேட்கவில்லையோ மகாதேவனை?
அம்மா நீங்கள் கதை பெரிதாகிறது என்று சுருங்க எல்லாம் சொல்ல வேண்டாம் அம்மா. நன்றாக விரிவாகவே சொல்லுங்கள். நீங்கள் பகுதி பகுதியாகத்தானே போடுகின்றீர்கள்...விரிவாகவே சொல்லுங்கள் அம்மா....
ஸ்ரீராம் அண்ட் அம்மா,
எபியில் இதே போன்று மனைவி வைராக்கியமாக இருக்கும் கதை ஒன்று சீதை ராமனை மன்னித்தாள் வந்த போதோ இல்லை கேட்டு வாங்கிப் போடும் கதையாகவோ வந்த நினைவு. யார் எழுதினார்கள் என்று மூளையைக் குடைந்து கொண்டிருக்கிறேன்....டக்கென்று நினைவுக்கு வரவில்லை....ஆனால் கதை வந்தது...அதைக் குறித்து நிறைய கருத்துகளூம் வந்த நினைவு. ஸ்ரீராம் உங்களுக்கு நினைவு இருக்கா ...
கீதா
அன்பு துளசி,
கண்முன் நடந்ததில் இடம்,பெயர் வயது எல்லாம் மாற்றி எழுதினேன். சம்பந்தப்பட்டவர்கள்
குழந்தைகளாக இருந்து இப்பொழுது தங்கள் தங்கள் குடும்பங்களோடு
இருக்கிறார்கள்.
பெயரெல்லாம் கூட எனக்கு மறந்து விட்டது.
இருந்தும் அகிலா அம்மாவை மட்டும் மறக்க முடியவில்லை.
அபூர்வ மனுஷி. மிக மிக நன்றி மா.
அன்பு கீதா ,
பொறுமையாகப் படித்து கருத்தும் சொன்னதற்கு நன்றி ராஜா.
சீதை ராமனை மன்னித்தாள் தலைப்பு நினைவில்
இருக்கிறது. நானும் எழுதி இருப்பேன்.
இதே கதையைச் சொல்லி இருப்பேனா.படபடப்பாக இருக்கிறது.
மறதி வியாதி என்னையும் தொற்றிக் கொண்டதோ என்று.
அப்படி இல்லாமல் இருக்க வேண்டும்.
உங்களுக்கு நல்ல மெமரி பவர். வாழ்த்துகள்.
அகிலா மாவைப் பொறுத்தவரை இன்னும் ஆறாத வடு என் மனதில்.
எனக்கே இது போல் நிகழ்ந்திருந்தால் பொறுத்திருக்க மாட்டேன்.
அதெல்லாம் கண்ணகி மாதிரி இருப்பவர்களுக்கு தகும்.சினிமாக் கதைகள் எடுக்கலாம்.
மஹாதேவன் அந்த மனைவியுடன் நன்றாகவே இருக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை அவர் ,தப்பென்று உணரவில்லை.
அகிலாவின் மனோதிடம் வேண்டும்.எல்லோராலும் முடியுமா? போற்றுவோம் அவரை.
Post a Comment