வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்னையிலிருந்து வரும் அக்கம்பக்க செய்திகள் தண்ணீர்க் கொடுமையைப் பற்றித்தான்.
இதுவரை எங்கள் குடி நீர் மட்டும் வராமல் இருந்தது. இப்போது உள்ளே இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் வரவில்லையாம். மெட்ரோ வாட்டர் லாரிகளும் 15 நாட்கள் கழித்து வருகின்றதாம்.
நம் வீட்டில் கிணறு இருக்கிறது. ஊற வைத்து மோட்டார் போட்டுக் கொள்கிறார்கள் காவலுக்கு இருப்பவர்கள்.
போர்வெல் நான் இருக்கும் போதே இயங்க மறுத்தது. பழுது பார்க்க நேரமில்லாமல் கிளம்பி வந்து விட்டேன் .
இப்போது 90 அடிக்கு மேல் சென்றால் தண்ணீர் கிடைப்பதாகவும் புது போர் போடவேண்டும் என்றும்
சொல்கிறார்கள்.
இதுவே அதிசயம் தான்.
எட்டடுக்கு க்கு மாளிகைகள் பல வந்து விட்டன.
அவர்கள் ஆறு வருடங்களுக்கு முன்பே 300 அடிக்கு
நாலு மூலைகளில் இறக்கி நீச்சல் குளமும்
கட்டிவிட்டார்கள்.
ஒரு அபார்ட்மெண்ட் 8 கோடி.
திரைப்படத் துறைக்காரர் கட்டினார்.
மரங்களுக்குப் பதில் கட்டிடங்கள் வந்த போது
மழை எப்படி வரும். இறைவன் மனம் வைக்க வேண்டும்.
++++++++++++
இங்கே பல குழந்தைகள் பள்ளிப் படிப்பை முடித்துப் பட்டப் படிப்பை நோக்கிச் செல்கிறார்கள்.
ஊரே கோலாகலம் கொண்டு விருந்து வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
எனக்கும் விருந்துக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது.
அற்புதமான சமையல்,அன்பு நட்புகள் விசாரிப்பு,
எண்ணெய் போலவே இங்கு வந்திருக்கும் பாட்டிகளுடன் அரட்டை என்று நேரம் போனதே தெரியவில்லை.
++++++++++++
நான்கு நாட்களுக்கு முன்னால் போலீஸ் வண்டி எதிர் வீட்டுக்கு வந்தது.
சுமார் 3 மணி நேரம் நின்று கொண்டிருந்தது.
அந்த வீட்டு செல்லம் காணாமல் போயிருக்குமோ என்பதிலிருந்து அந்த வீட்டில் தனியாக இருக்கும் 60 வயது அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லையா
என்பது வரை பல ஹேஷ்யங்கள்.
அடுத்த நாளைக்கு அந்த அம்மாவே நம் வீட்டுக்கு வந்தார்.
முகம் வீங்கி இருந்தது. அந்தப் பெண்ணின் அம்மா 86 வயதில் இரண்டு வருடங்களுக்கு முன் காலமானதிலிருந்து
இவருக்குத் தனிமை வாழ்க்கை. டிப்ரஷன்.
முதல் நாள் காலை பல் வைத்தியம் செய்து கொண்டு அந்த க்ளோராஃபார்ம்
மயக்கம் தீரும் முன்னரே வண்டி எடுத்ததால்
சந்தேகத்தின் அடிப்படையில் காவல் வந்துவிட்டது.
அவருக்குத் தெளிவு வரும் வரை இருந்து விட்டுப் போனார்கள்.
எங்களிடம் பேசித் தன் வருத்தங்களை பகிர்ந்து கொண்டு
,ஒரு மாதத்துக்கு தன தோழியின் வீட்டுக்குப் போவதாகவும்
பிறகு ஐரோப்பாவில் தம்பி வீட்டுக்குப் போவதாகவும் சொன்னார்.
அவர் அம்மா இறந்த போதே அடக்கம் செய்ய போலந்து நாட்டுக்குத் தான் சென்றார்கள். பார்க்கவே மிக வருத்தமாக இருந்தது.
வித விதமான கவலைகள் விதவிதமான நிவர்த்திகள்.
பணம் மட்டும் போதாது என்பது கண்கூடு.
27 comments:
அக்கம் பக்க செய்திகள் எழுதுவது ரிப்போர்ட்டர் திருமதி.வல்லிசிம்ஹன்
நலமா துரை. ஆமாம் இந்த வாரம் கிடைத்த செய்திகள் இவை.
இன்னும் இருக்கிறது. எழுதத்தான் தெம்பு இல்லை. ஹாஹ்ஹா.
தண்ணீர் பஞ்சம் தீர ஏதாவது செய்ய வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
நட்புகளுடன் பொழுது போனது மகிழ்ச்சி.
தனிமையான முதுமை கொடுமைதான், தம்பி வீட்டுக்கு போய் மகிழ்ந்து இருக்கட்டும்.
வித விதமான கவலைகளை போக்க வேண்டும் முருகன்.
முருகன் பாடல் பகிர்வுக்கு நன்றி.
ஆமாம். பூமியில் ஆழம் வரை துளையிட்டு இருக்கும் தண்ணீர் சேமிப்பைக் காலி செய்து வருகிறோம். இது நம் எதிர்காலச் சந்ததியினருக்குச் செய்யும் துரோகம். தண்ணீரை வீண் சிவத்தில் தமிழகத்துக்கு முதலிடம் என்று நினைக்கிறேன்.
// பணம் மட்டுமே போதாது என்பது கண்கூடு//
ஆம். இதுமுதல் செய்தியாக தண்ணீச் செய்திக்கும் பொருந்தும். ஓராறு முகமும் இனிமையான பாடல்.
எங்கு இருந்தால் என்ன? கவலைகளும், வருத்தங்களும் பொதுவானவையே! பாவம் அந்த எதிர்வீட்டு அம்மா, போகும் இடத்திலாவது சௌக்கியமாக இருக்கட்டும். பட்டப்படிப்புக்குச் செல்லும் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்.
சென்னைத்தண்ணீர்க் கஷ்டம் பற்றி விதம் விதமாகச் செய்திகள் வருகின்றன. இதிலே 20 மாடி எல்லாம் கட்டி விற்கின்றனர். எங்க சொந்தக்காரர் ஒருத்தர் பள்ளிக்கரணையில் 20 மாடிக் கட்டிடம் ஒன்றில் பதினேழாவது மாடியில் வீடு வாங்கி விட்டு இப்போது அவதிப்படுகிறார். அதே போல் 20 மாடிகளுடன் 4,5 ப்ளாக்குகளாம். மின்சாரமும் இல்லை! லிஃப்ட் இயங்காமல் மாட்டிக்கொண்டு அவதி! ஜெனரேட்டர் வேலை செய்யாமல் பதினைந்து மாடிகள் ஏறி இறங்க வேண்டி இருக்குனு வருத்தப்பட்டாங்க!
குடும்பம் மட்டுமல்ல உலகமே பிரச்சனைகளை அள்ளி தலையில் போட்டுக் கொள்கிறது அம்மா.
எங்கள் பகுதியில் தண்ணீர் 180 அடியைத் தாண்டி கீழே சென்று விட்டது
அன்பு கோமதி,
கவலைகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சூழ்ந்து கொள்கின்றன. இந்த அம்மா,விவாகரத்து ஆனவர். மகன் 18 வயதிலியே தனியாகப் போய் விட்டான். தோழியுடன் இருக்கிறான். அவனை அழைத்தும் வந்து பார்க்கவில்லை.
இனியாவது நன்றாக இருக்கட்டும்.
எங்கள் காலனிக்குள்ளும் எல்லோரும் பணத்தைக் கொட்டிக் கொடுக்க தயார். தண்ணீர் எங்கிருந்து வரும்.
கண்ணன் கடைக்கண் காட்ட வேண்டும்.
கற்பகாம்பாளும்,முண்டகக்கண்ணி அம்மனும் மனம் வைக்க வேண்டும்.
உண்மை அன்பு ஸ்ரீராம். எத்தனையோ வில்லன் கள் கையில்
மண்மாதா அகப்பட்டுக் கொண்டாள். நெடுஞ்சாலையில்
பார்த்த வயல்களேல்லாம் மறைந்தாச்சு. திண்டிவனம் வரை கட்டிடங்கள் தான்.
இங்கே காடுகள் காக்கப் படுகின்றன. ஒவ்வொரு சப்டிவிஷனுக்கும் ஒரு ஃபாரஸ்ட் ஏரியா.
நான்கு ஐந்து நீர்ப்பிடிப்பு நிலைகள்.
சில இடங்களில் மட்டும் பண்ணை செய்ய முடியாதவர்கள் விற்றுவிட்டார்கள். அதுவெ
நன்றாக இல்லை.
நிறைய தேசங்களிலிருந்து அடைக்கலம் புகுந்தவர்களுக்கு
வீடுகள் தயாராகின்றன. அவ்ர்கள் ரெடிகாஷ் கொடுப்பதனால் மேலும் வீடுகள்.
நம் ஊருக்கு ஜூன் மாதமாவது மழை வரட்டும்.
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள்
எல்லோருக்கும் பொதுதான். ஸ்ரீராம்
நம் ஊரில் பெற்ற மக்களை நம்பலாம். இங்கே எல்லோரும் சுதந்திரப்
பறவைகள்.
பாட்டியின் பேரன் பாட்டி இருக்கும் வரை
அடிக்கடி வருவான். அம்மா தனியானதும் அவ்வளவாக வரவில்லை.
முருகன் பாடல்கள் எனக்கும் மிகப் பிடிக்கும். அழகான தமிழ்
அன்பு கீதா, பிரச்சினைகள் எல்லோருக்கும் பொதுதான்.
இங்கே பூதாகாரமாகத் தெரிகின்றன.
இந்த அம்மாவின் அம்மா என்னிடம் வெகு இனிமையாகப் பழகுவார்.
இண்டியன் ஃபாமிலியில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறீர்கள் என்று
சந்தோஷப்படுவார்.
போலந்திலிருந்து மகனும் வந்து தாயாருடன் இரண்டு மாதங்கள் இருந்து விட்டுப்
போவார்.
இந்த ஈவா, ரிடயரானதும் கொஞ்சம் பேதலித்துப் போய்விட்டார்.
கம்பெனியில் மீண்டும் வேலைக்கு அழைத்தனர்.
போகவில்லை.
20 மாடிக்கட்டிடத்தில் மின்சாரம் இல்லையானால்
தண்ணீருக்கு இன்னும் சிரமப்படுவார்களே.
ஒரு செய்தியும் நல்லதாக இல்லை.
எங்கே போய் நிற்கப் போகிறதோ மா.
அன்பு தேவகோட்டைஜி,
தீதும் நன்றும் பிறர் தரவேண்டியதில்லை.
நாமே காரணம். உண்மையான வார்த்தைகள். புரிந்து யாரும் செயல் படவில்லை.
அன்பு ஜெயக்குமார். தஞ்சை பூமியிலா இப்படி. 180 அடிக்குத் தண்ணீர்
இறங்கி விட்டால் எதிர்கால நிலை என்ன.
தண்ணீர் திண்டாட்டம்.... ரொம்பவே கடினம் தான். இயற்கைக்கு எதிராக மனிதர்களாகிய நாம் செய்யும் செயல்களின் விளைவு இப்படி மோசமாகிக் கொண்டே போகிறது. எங்கே சென்று முடியுமோ என்று தோன்றுகிறது. வறண்டு கிடக்கும் சென்னை ஏரிகளைப் பார்க்கும்போது மனதில் வலி.
அக்கம் பக்க செய்திகள் உங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது... எதிர் வீட்டு பெண்மணி - சோகம்...
அக்கம் பக்கசெய்திகள் .... நமதுநாட்டிலும் பிரச்சனைகளால் வெளிநாடு சென்று வசிக்கும் பிள்ளைகள்.தன்னந்தனியே வீடுகளில் ஒருவர்.பலகுடும்பங்களிலும் இதுதான்.
எமக்கு பக்கத்தில் ஒரு அம்மா.
தண்ணீர் ....தொடரும் சோகம்.
அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்மா. ஆதியும் குழந்தையும் கிளம்பிச் சென்றது வெறிச்சோடி இருக்கும்.
இந்த எதிர் வீட்டு அம்மா, தனிமை என்னைச் சங்கடப் படுத்தியது. போலீஸார்
வந்து மூன்று மணிகள் தங்கியும் மகன் வரவே இல்லை.
யாருடனாவது இருந்தால் தான் அவர் வாழ முடியும். நலமே இருங்கள்.
அன்பு மாதேவி,
ஊரை விட்டுப் பிரியும் போதே,
உறவுகள் விட்டுப் பிரிகின்றன.
நம் இன மக்களே இப்படி என்றால்
இங்கேயே வளர்ந்தவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.
உங்கள் வீட்டுப் பக்கத்திலும் ஒரு அம்மாவா. ஏக்கம் தான்.
அம்மா ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை. நாம் ஆழ்ந்து நோக்கினால் வாழ்க்கை மிகவும் எளியதுதான்...ஆனால் நாம் தான் அதை மிகவும் காம்ப்ளிகேட் ஆக்கிக் கொள்கிறோம் என்றே தோன்றுகிறது அம்மா. யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல.
life is very beautiful and simple. but we human make it very very complicated by our desires, decisions and actions....பணம் உட்பட...
இது நானும் மகனும் அடிக்கடி பேசிக் கொள்வது...
பாவம் அந்த அம்மா...அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். அட் த எண்ட் ஆஃப் த டே எல்லோரும் விரும்புவது அதுதானே. பட்டப்படிப்பு செல்லும் குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
கீதா
தண்ணீர் வறட்சி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லைம்மா. தண்ணீர் வறட்சி என்பதை விட மேலாண்மை சரியில்லை. யாருக்கும் அதைப் பற்றி விழிப்புணர்வும் இல்லை. பல இடங்களில் தண்ணீய்ர் வீணாக்கப்படுவதைப் பார்க்கும் போது மனம் வேதனைப்படும். இப்பிரச்சனையும் நாமே வரவழைத்துக் கொண்டதுதான்.
கீதா
உங்கள் எதிர் வீட்டு பெண்மணியின் நிலை சோகம்தான். அவருக்கு மன நிம்மதி கிடைக்க வேண்டுகிறேன்.
சமீப சென்னை விஜயத்தின் பொழுது சில பேரிடம் தண்ணீர் கஷ்டமான பற்றி விசாரித்த பொழுது, எங்கள் அபார்ட்மெண்டில் லாரி தண்ணீர் வருகிறது என்று கொஞ்சம் கூட கவலை இல்லாமல் கூறினார்கள். மக்கள் இப்படி இருந்தால் என்ன செய்ய முடியும்?
தண்ணீர் பிரச்னைக்கு இன்றைய மக்களே காரணம்... நதிக்கரையில் தோன்றிய சமுதாயம் நதிகளை அழிக்கத் துணிந்தது....
நாகரிகக் கல்வி நல்லொழுக்கத்தை அகற்றியது... அத்துடன் நல்லறிவையும் நீக்கியது...
முன்பெல்லாம் பள்ளிக்குச் சென்று படிக்காதவர்கள் கூட ஏதோ ஒரு வகையில் அறிவுடையவராக இருந்தார்கள்..
ஆனால் இப்போதோ ஏது ஒன்றும் சொல்வதற்கு இல்லை...
களவாணித்தனம் பெருத்துப் போனதே..
கையூட்டு இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை என்றால் மனித நேயம் எங்கே போனது?....
மேலிருந்து கீழ் வரை அயோக்கியத்தனம் என்று ஆக்கி விட்டார்கள்....
அராஜகத்துக்கு மக்களே சாமரம் வீசும் போது என்ன சொல்ல முடியும்....
மழை வளம் குன்றியதற்கு என்ன காரணம் என்று - நீதி நூல்களைப் படித்தால் புரியும்!...
அன்பு கீதாமா, போதும் என்ற மனதே காண்பது அரிதாகிவிட்டது.
சென்னையில் 1983 இல் மிகுந்த தண்ணீர்ப் பஞ்சம்.
அதற்குப் பின்னர் மழை நீர் சேகரிப்புத் தொடங்கினோம். இவரே
அதற்கான தொட்டிகள் கட்டி. கிணற்றில் சேருவது போலச் செய்தார்.
குடி நீர் வருவது எப்போதோ நின்று விட்டது.
பக்கத்து வீட்டில் தொட்டி நிரம்பும். என்ன காரணம் என்று பார்த்தால்
குடி நீர்க் குழாயைச் சாலை இணைப்பிலிருந்து
பள்ளம் எடுத்து பத்தடி இறக்கத்தில் அவர்கள் வீட்டுத் தொட்டியில்
இணைத்திருந்தார்கள். இதற்குக் குடி நீர் இலாக்காவும் இதற்கு உடந்தை.
என்ன செய்யலாம். கீழே துரை செல்வராஜு சொல்லி இருப்பது போல மேலிருந்து கீழ் வரை அராஜகம். பேராசை.
நல்ல குணமும்,மனமும் இருந்தால் நாடு செழிக்கும். பார்க்கலாம். மிக நன்றி மா.
வரணும் அன்பு வெங்கட்.,
எதிர்கால சந்ததிகளைப் பற்றித் துளி சிந்தனையாவது இருந்தால் இவ்வளவு ஆக்கிரமிப்புகளும்,
தண்ணீர் வீணாவதும் நிறுத்தப்படும். அவ்வளவு நுண்ணிய சிந்தனை இல்லாத
சமூகம் துன்பப்படுவதுதான் யதார்த்தம்.
எதிர்வீட்டம்மா இப்போது உடல் நலம் பெற்று விட்டார்.
அவர் நிம்மதி இனி அவர்கையில் தான்.
நன்றி மா.
அன்பு பானு மா.
நிறைய அபார்ட்மெண்ட் கதை இதுதான். சென்னை நகரம் விரிந்து எங்கோ போய் விட்டது. என் இளவயதில் தாம்பரம் வரும் வரை வயல்வெளிகள் இருக்கும்.
இப்போது செங்கல்பட்டு,அதையும் தாண்டி அபார்ட்மெண்ட்கள் வந்துவிட்டன. வயல்கள்
போன இடம் தெரியவில்லை.
பூமிதான் எவ்வளவு தாங்கும்.
மிக மிகக் கவலைப் படவேண்டிய விஷயம்.
எதிர் வீட்டம்மா இப்போது நலம்.
மிக நன்றி மா.
அன்பின் துரை செல்வராஜு,
நீங்கள் சொல்வது அனைத்தும் என் மனத்தில் ஓடும் எண்ணங்கள்.
நேர்மை என்பது அணுவளவும் மனிதர்களிடம் இல்லை.
தினசரிகளில் வரும் விஷயங்கள்
அனைத்தும் மன நிம்மதிக்கு ஊறு விளைவிக்கின்றன.
அடக்கம் என்பது தேடிக் கிடைக்க வேண்டிய பொருளாகி விட்டது.
பொய்மை நிரம்பி வழியும் அரசியல்.
தானே கெட்ட ஏமரா மன்னன்,
அவனுக்குத் துணை போகும் ,அதனால் பயனடையும்
மக்கள்,
இவர்களால் பாதிக்கப் படும் நல் உள்ளங்கள்.
எல்லாவற்றுக்கும் இரையான நதிகளும் மண்மாதாவும்.
என்று தணியுமோ இந்தத் தாகம்.
Post a Comment