வல்லிசிம்ஹன்
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
இந்த மாதம் கல்யாண மாதம்
என் பெற்றோர் திருமண நாள்
என் முரளியின் மே 14
என் தம்பி ரங்கனின், மே 31
என் நாத்தனார் கல்யாணி ஹேமா இவர்களின் திருமண நாட்கள் மே 23
எல்லாவற்றையும் கொண்டாடும் விதமாக
அவர்களுக்குப் பிடித்த பாடல்களை பதிவிடுகிறேன்.
முரளி வசந்தி தம்பதியருக்கு
தம்பி ரங்கன் வைதேஹிக்கு
என்னால் அவர்களுக்குக் கொடுக்க முடியும் வான் வழி பரிசு.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.
இந்த மாதம் கல்யாண மாதம்
என் பெற்றோர் திருமண நாள்
என் முரளியின் மே 14
என் தம்பி ரங்கனின், மே 31
எல்லாவற்றையும் கொண்டாடும் விதமாக
அவர்களுக்குப் பிடித்த பாடல்களை பதிவிடுகிறேன்.
முரளி வசந்தி தம்பதியருக்கு
என்னால் அவர்களுக்குக் கொடுக்க முடியும் வான் வழி பரிசு.
19 comments:
திருமண நாள் நல்வாழ்த்துகள்
அர்த்தமுள்ளா வான்வழி பரிசுகள். நாங்களும் ரசித்தோம். நன்றி.
அவர்களுக்கும் வாழ்த்துகள் அம்மா...
நீங்காத நினைவுகள்.
சாந்தி நிலவ வேண்டும், ஹரி தும் ஹரோ - இரண்டு மிக அருமையான பாடல்கள்.
திருமண நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும்.
சாந்தி நிலவ வேண்டும்... அமைதியான, அருமையான பாடல்... என்ன ஒரு கோரிக்கை..இல்லை?
ஹரிதுமாரோ பஜனும் ரசிக்கும் ஒன்று.
ஆங்கிலப் பாடல்(கள்) கேட்டதில்லை.
ஒரு ராஜா ராணியிடம் ஓகே... இந்தப் படத்தில் இன்னொரு 'பாவை யுவராணி கண்ணோவியம்' எனக்கு மிக மிகப் பிடித்த பாடல்.
அன்பு ஜெயக் குமார் மிக நன்றி மா.
மனம் நிறை நன்றி ஜீவி சார்.
பெற்றோருக்குப் பிடித்த பாடல்களும், பெரிய தம்பிக்குப் பிடித்த ப்பாட்டும், பதிவு செய்த பிறகு,
சிவாஜியின் பரம ரசிகனாக இருந்த சின்னத் தம்பிக்காக
சிவந்தமண் படத்திலிருந்து பாட்டையும் இணைத்தேன்.
பாட்டை அவர்களும் வானத்திலிருந்த படி கேட்டு இருப்பார்கள்.🙏
அன்பு தனபாலன், அவர்கள் என்னை விட்டுச் சென்றாலும்
நான் மறக்கவில்லை என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.
மனமார்ந்த நன்றி மா.
அன்பு மாதேவி, ஆமாம் மா.
அவர்களே என் வழிகாட்டிகள்.
டி கே பட்டம்மாளின் ஒரிஜினல் பாடல் கிடைக்க வில்லை.
அப்பாவுக்குப் பிடித்த பாடல். எல்லாமே பொருள் நிறைந்த பாடல்களாக
அவர்கள் பாடி இருக்கிறார்கள்.
இறை பக்தியும் ,தேச பக்தியும் அவசியம் தான் இல்லையாமா.
நன்றி நெல்லைத் தமிழன்.
அன்பு ஸ்ரீராம், சின்னத்தம்பி சிவாஜியின் எல்லாப்
பாடல்களுக்கும் ரசிகன். அவனுக்காக பாடல் போடணும்னால்
ஒரு இருனூறு பதிவுகளாவது போட வேண்டும்.
பார்வை யுவராணி கண்ணோவியம் மிக அருமையான பாடல்.
நன்றி ராஜா.
அன்பானவர்களின் நினைவுகள் அவர்களுக்கு பிடித்த பாடல்கள் பகிர்வு. எல்லாம் அருமை.
பாடல்கள் கேட்டு மகிழ்ந்தேன்.
அருமையான பாடல் பரிசுக்கு வாழ்த்துகள், நன்றி. இன்னமும் மறக்காமல் அவர்களை நினைப்பதில் இருந்து உங்கள் அன்பின் ஆழம் தெரிகிறது.
ஆமாம் கோமதி. இது இணைய வழி அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லாமே அவர்களுக்குப் பிடித்தது தான். நன்றி மா.
இனிய திருமண நாள் வாழ்த்துகள் கீதாமா.
பாடல்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே மாதிரி
சுவை. அதையே பதிவிட்டு விட்டேன்.
நன்றி மா. இந்த நாள் இனிய நாளாகட்டும்.
நீங்கள் குறிப்பிட்டிருப்பவர்களில் சிலர் இப்போது இவ்வுலகில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் அவர்களின் திருமண நாளை மறக்காமல் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது உங்களின் அன்பின் ஆழம் புரிகிறது. வாழ்க வளமுடன்.
அன்பின் பானுமா, இருப்பவர்கள் தம்பிகளின் மனைவிகள்.
நாத்தனார் ஹேமாவும்.
இல்லாதவர்கள் தம்பிகளும் பெற்றோரும், நாத்தனார் கல்யாணியும்.
வருடா வருடம் வாழ்த்தியே வழக்கமாகிவிட்டது.
எப்படி மறப்பேன். நாத்தனார் முடிச்சு போட்டவளாச்சே.
நன்றி மா.
Post a Comment