Blog Archive

Friday, May 24, 2019

வண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட கதை 😆😆😆😆😆😆😆

வல்லிசிம்ஹன்

😆😆😆😆😆😆😆                                  #  நேயர் விருப்பம்

  எங்கள்  ஃபியட்டும்  நாங்களும்.
1972 இல் திருச்சிக்கு மாற்றலாகி வந்த போது , எங்கள் புழக்கத்துக்கு என்று வண்டி ஒன்றும் இல்லை.
இவருக்கும் வொர்க்ஸ் மானேஜர் என்ற பதவியில்
இருக்கும் போது பைக் ஓட்டுவது அனுமதிக்கப் படவில்லை.
அதனால் வண்டி ஒன்று வாங்க வேண்டிய கட்டாயம்.

எங்கள் எல்லோருக்கும் பிடித்த வாகனம் ஃபியட்.
எங்கள் சேமிப்பைக் கணக்கில் கொண்டு
5000 ரூபாய்களுக்கு ஒரு பழைய 1100 என்று அறியப்பட்ட
ஃபியட் வண்டியை வாங்கி, அதைப் புதுப்பித்து அழகான டெசர்ட் சாண்ட் என்று அழைக்க படும்
வண்ணம் அடித்து  மேற்கொண்டு 2000 கையை விட்டுப் போனது.

1973 ஆவணி மாதம் ஒரு நாள் வீட்டுக் கொண்டு வந்தார்
எஜமானர். குழந்தைகளின் குதூகலத்துக்கு எல்லையே இல்லை.

திடீரென்று சிங்கத்துக்கு நான் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டால்
சௌகரியமாக இருக்கும். என்று தோன்றிவிட்டது.

மனைவி எல்லாவிதத்திலும் மாடர்னாக இருக்க அவ்ருக்கு ஆசை.

அது ஒரு ஞாயிறன்று பொன்மலை சந்தை போகும்போது,
வண்டியை நிறுத்தி என்னை ஓட்டுனர் இடத்தில் உட்கார வைத்து, இது க்ளட்ச், இது
ப்ரேக், இது ஆக்சிலேட்டர் ,ஃபர்ஸ்ட் கியர்,செகண்ட் ,கியர்,தேர்ட் கியர் எல்லாம் சொல்லி
திருப்பி என்னை சொல்லச் சொல்லி திருப்திப்
பட்டார்.
சாவியைக் கொடுத்து ஆன் பண்ணு.கியர் போடு என்றார்.
சாவியை நடுங்கிக்கொண்டே வைத்துத் திருப்பினேன்.

வண்டி ஒரு குலுங்கு குலுங்கியது.
க்ளட்சிலிருந்து காலெடும்மா என்று சத்தம்.
நான் எடுத்தேன் வண்டி தவ்விப் பாய்ந்தது.
ப்ரேக் ல காலை வை. ஓகே பட்டென்று நின்றது.

பின்னாலிருந்து மகள். இந்த வண்டிக்கு ஃப்ராகின்னு பேர் வச்சுடலாம் என்றாள் சிரிப்புடன்.
நான் சாலையைப் பார்த்தேன். மதிய வேளை. போக்குவரத்து ஒன்றும் இல்லை.
மீண்டும் தைரியமாக ஆரம்பித்து
தவ்வித் தவ்வி முன்னேறியது வண்டி.

எதிர வண்டி வருது லெஃப்ட்ல ஒடிம்மா என்றார்.
அதாவது ஸ்டீரிங்கைதிருப்ப வேண்டும்னு அர்த்தம்.
நானும் ஒடித்தேன். சாலை ஓரத்துக்கு ஓடிவிட்டது வண்டி.
 ரைட் ரைட் என்றதும் ஒரே திருப்பு வண்டி  அடுத்த பக்கத்துக்கு

ஓடிவிட்டது. வீ என்று குழந்தைகள் கத்தல்.
பொறுமையாக ஸ்டீரிங்கைப் பிடித்து சரி செய்தார்.
எனக்குப் படபடப்பு.
ஆக்சிலேட்டர்ல இருந்து காலெடுமா.
நிதானமாக் கத்துக்கோ.ஒரு கால் க்ளட்ச், ஒரு கால் ப்ரேக் வைத்தால் வண்டினின்னிடும். பிறகு ஆக்சிலேட் பண்ணலாம்.30 மைல் போனாப் போதும் என்று சொல்லி மீண்டும் வண்டியை ஸ்டார்ட்
செய்தோம். கொஞ்ச தூரம் சமாதானமாகச் சென்றது.

சாலையோடு வந்த கான்ஸ்டபிள் எங்களை வேடிக்கை பார்த்தார்.
உடனே கவனம் மாறிய நான் வண்டியை இடது பக்கம் திருப்ப
அது வயலில் இறங்கி ஒருமரத்தின் மீது மோதுவதற்குள்
சிங்கம் ப்ரேக் போட்டார்.
சின்ன வண்டி யாக இருந்ததால் இருவர் உதவியோடு வண்டி மேலே வர சுலபமானது.
சற்றுத் தொலைவு சென்ற கான்ஸ்டபிள்.
திரும்பி வந்து ஐய்யா அவ்வ்வளவு நல்லா வண்டி ஓட்டுவாரே
 அவரே ஓட்டட்டும் என்று ஆசி சொல்லிவிட்டுப் போனார்.

பசங்களா என்னா ஆகும் தெரியும் இப்ப என்றார் சிங்கம்.
என்னப்பா.
அம்மாவுக்கு இன்னிக்கு அனேகமா ஜெயில் தான் என்றதும் அச்சச்சோ.
என்றனர்.
பரவாயில்லை ஜங்க்ஷனுக்குப் போயி காமிக்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு
ஜெயிலுக்குப் போய் அம்மாவுக்கு ப்ரெட் கொடுத்துட்டு வரலாம்
என்றவரை முறைப்பதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.
குழந்தைகள் சிரித்துக் கொண்டார்கள்.
அதெப்படிம்மா நீ ஆக்சிலேட்டர் ப்ரேக் ரெண்டுலயும் கால் வச்சே என்று குபீரென்று சிரித்தாரே பார்க்கணும். இதுதான் நான ஸ்டீரிங்கைப் பிடித்த முதலும் கடைசியுமான் நிகழ்ச்சி.
பியட் 1100

16 comments:

KILLERGEE Devakottai said...

ஆஹா அப்படினா உங்களுக்கு டிரைவிங் தெரியாதா அம்மா ?

ஸ்ரீராம். said...

ஒரே நாளிலேயே எப்படி அம்மா வந்திருக்கும்? நீங்கள் இன்னும் முயற்சி செய்து பார்த்திருக்கவேண்டும்! ஆனாலும் சிரிப்புதான். நல்ல சுவாரஸ்யமான அனுபவம்.

நன்றி அம்மா... கேட்டதும் பகிர்ந்ததற்கு.

வல்லிசிம்ஹன் said...

தெரியாது மா அன்பு தேவகோட்டைஜி. அவசரத்துக்கு ரிவர்ஸ் செய்திருக்கிறேன் சென்னையில்.ஹாஹா. இவருக்கு ஏக வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம். அவர் சொல்லி நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சாத்தியம்.
அந்தப் பேச்சை எடுத்தாலே ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சாவூர் என்று பேச்சை மாற்றிவிடுவேன். விடுமுறை நாட்களில் அச்சரபாக்கம் வந்து பெற்றோரோடு தங்கி விட்டுப் போவோம்.
நல்ல வண்டி அது

கரந்தை ஜெயக்குமார் said...

நினைவுகள் இனிமையானவை

Geetha Sambasivam said...

ஏற்கெனவே படித்துச் சிரித்திருக்கேன். இப்போவும் படித்துச் சிரித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தையாருக்கு மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, அப்போ எழுதியது கிடைக்க வில்லை.
அதனால் புதுசா எழுதிட்டேன்.
இவர் அப்போ கேட்டாற். ஏம்மா அந்தப் புளிய மரம் தெமேன்னு நின்னுண்டிருந்தது. அதைப் போய் மோதினயே என்று.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய நினைவுகள் அம்மா...

கோமதி அரசு said...

அருமையான நினைவலைகள்.

சார் பேசியது, குழந்தைகள் பேசியது எல்லாம் கண் முன் வந்து காட்சியாக விரிகிறது.

சாரும் கார் வாங்குவது நீ ஒட்டத்தான் என்று சொல்லி விட்டு அவர்கள் கற்றுக் கொண்டு சாலையில் போகும் போது வரும் இடையூருகளைப் பார்த்து, உனக்கு எதற்கு டென்சன்? 'எங்காவது போவது என்றால் ஆட்டோவில் நிம்மதியாக போ' என்று சொல்லி விட்டார்கள்.

யாரும் சாலை விதியை கடைபிடிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்வார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன், மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அருமை கோமதி,
இதே தான் இவருக்கும் இருந்த பிரச்சினை.
ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக சாலை விதிகள்
கடை பிடிப்பார்.
மற்றவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டும் போது
சலித்துக் கொள்வார்.
கடைசிகாலங்களில் கோவிலுக்குப் போவதற்கு எல்லாம் அவரைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.
ட்ராவல்ஸ் வண்டி எடுத்துக் கொண்டு விடுவேன்.

எங்கள் சாலையில் வண்டியை எடுப்பது மிகக் கஷ்டம். பஸ்களும்,கார்களும் விரைந்து கொண்டே இருக்கும். எனக்கு தைரியம் போதாது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்றும் நினைவில் உள்ள பதிவு. அருமை.

நெல்லைத்தமிழன் said...

படித்துச் சிரித்தேன். நல்லா எழுதியிருக்கீங்க.

கற்றுக்கொடுக்கணும்னு நினைத்திருக்கிறாரே... பாராட்டுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லை,
இரண்டு மூன்று தடவை என்னைப் பழக்கப் பாடுபட்டார்.
எனக்கு மனம் ஈடுபடவில்லை.
புளிய மரமே இல்லாத சாலையாகப் பார்த்துப் போகலாம் என்று கூடச் சொல்லிப் பார்த்தார்,
ம்ஹூம். நடக்கலை.
ரசித்ததற்கு மிக நன்றி மா.

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா அம்மா நீங்க அன்னிக்கோட விட்டுட்டீங்க...ஒரே நாள் ல வரவே வராதே. அதுவே பரவால்ல நீங்க கொஞ்ச தூரம் ஒழுங்கா ஓட்டியிருக்கீங்களே. இன்னும் கொஞ்சம் ஒரு வாரம் நீங்க முயற்சி செஞ்சிருந்தா கண்டிப்பா கத்துட்டுருக்கலாம். அதுவும் முதல்ல பக்கத்துல ஃப்ரீயா இருக்கற க்ரவுன்ட் அல்லது பெரிய ரோடு ஏரியாவுல கற்றுக் கொண்டிருந்தீங்கனா...நன்றாக ஓட்டியிருக்கலாம் அம்மா மிஸ்ட் எ குட் ஆப்பர்சுனிட்டி!!!!!!!!!!!!!!!!!!

சிரித்துவிட்டேன் பல இடங்களில் ...